Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ராதிகா சிற்சபேசன் யாழில் கைதா?

Posted: 31 Dec 2013 11:01 PM PST

radika

radikaகனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யவோ வீட்டுக் காவலிலோ வைக்கப்படவில்லை என பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளார்.

ராதிகா சிற்சபேசன் கைது செய்யப்படவில்லை என பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் அசங்க கரவிட்ட அத தெரண தமிழிணையத்திடம் தெரிவித்தார்.

எனினும் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் யாழ். அலுவலகம் இது குறித்து தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது. யாழ். அலுவலக பொறுப்பதிகாரி ரூகாந்தவிடமே இதுபற்றி கேட்க வேண்டும் என கூறப்பட்டதை அடுத்து அவருடைய தொலைபேசிக்கு அத தெரண அழைப்பை ஏற்படுத்தியபோது தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

உத்தியோகபூர்வமற்ற விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்றிரவு வீட்டுச்சிறைப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் சிறைப்படுத்தப்பட்டதாக கனேடிய ஊடகமான ´டொரொன்டோசன்´ தெரிவித்துள்ளது.

ராதிகா சிற்சபேசன் வடக்கில் பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்துவிட்டு ஹோட்டலில் தங்கியிருந்த வேளை, நேற்று மாலை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அவரை சந்தித்து விசாரித்ததாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை நாடுகடத்தும் நடவடிக்கைகள், இலங்கைக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று இலங்கை அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சுற்றுலா விசாவில் இலங்கை வந்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டதாகவும் கூறி, நியூசிலாந்தின் கிறீன் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர், அவுஸ்ரேலியாவை சேர்ந்த அனைத்துலக ஊடக அமைப்பு பிரதிநிதிகள், கவிஞர் ஜெயபாலன், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் போன்ற பலர் அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்தநிலையில் கடந்த 28ம் திகதி சுற்றுலா விசாவில் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் இலங்கை வந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ரில்கோ விடுதியில் தங்கியுள்ள அவர், அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசி வருகிறார்.

அவரது நடவடிக்கைகளை இலங்கை புலனாய்வுத் துறையினர் உன்னிப்பாக அவதானித்து வருகின்ற போதிலும், சுற்றுலா விசாவில் வந்து அரசியல் நவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி நாட்டைவிட்டு அவரை வெளியேற்ற இலங்கை அரசாங்கம் தயக்கம் காட்டுவதாக தெரியவருகிறது.

அவ்வாறு அவர் நாடுகடத்தப்படுவதை, புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் விரும்புவதாகவும், அதனை இலங்கைக்கு எதிரான பரப்புரைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வர் என்றும் இலங்கை அரசாங்க அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொரிய தீபகற்பத்தில் போர் உருவானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கமுடியாது

Posted: 31 Dec 2013 10:54 PM PST

vadakoriya

 vadakoriyaகொரிய தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழ்நிலை உருவானால் அங்கு அணு ஆயுதங்களால் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் அமெரிக்கா எவ்விதத்திலும் பாதுகாப்பாக இருக்கமுடியாது என்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

புத்தாண்டையொட்டி அந்நாட்டு தொலைக்காட்சியில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தாங்கள் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அதன் மூலம் வீரர்களுக்கிடையேயான சிறு மோதல்கூட போருக்கு வழிவகுக்கும் என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைதிக்காக தாம் யாரிடமும் கெஞ்சப் போவதில்லை, எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவே அணு ஆயுதங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தனது மாமாவான ஜாங் சாங் தேக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றபட்டது பற்றி கூறும்போது அவர் மிகவும் அழுக்கான நபர் என்றார்.

தேக் குறித்த விமர்சனங்களை தற்போதுதான் முதல் முறையாக கிம் வெளிப்படையாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்

Posted: 31 Dec 2013 10:29 PM PST

phillipines_blast_002

phillipines_blast_002பிலிப்பைன்சில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 261 பேர் படுகாயமடைந்தனர்.

புத்தாண்டை வரவேற்கும் முகமாக உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று பிலிப்பைன்சில் கொண்டாட்ட நிகழ்வின் போது சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 261 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து மீட்புப்பணி அதிகாரிகள் கூறுகையில், அதிக சப்தம் வாய்ந்த வெடிபொருள்களை வெடிப்பதன் மூலம் நம்மை சுற்றியுள்ள தீய சக்திகள் விலகி, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பிலிப்பைன்ஸ் மக்கள் நம்புகின்றனர்.

இதனால் ஆபத்துகள் ஏற்படும் என்பதால், அதிக சப்தம் வாய்ந்த வெடிபொருள்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அதையும் மீறி கள்ளச் சந்தைகளில் துப்பாக்கியை வாங்கும் மக்கள், கொண்டாட்டங்களின் போது அதை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு செபு மாகாணத்தில் நடத்தப்பட்ட புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது, சக்தி வாய்ந்த வெடியை வெடித்த 8 வயது சிறுவன் வலது கையை இழந்தான்.

அதேபோல் மணிலாவில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டதில் 40 வயது பெண்மணி ஒருவர் காயமடைந்தார்.

இதுவரையில் 253 பேர் வெடிவிபத்தாலும், 8 பேர் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்தும் காயமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக, மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் 400 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

புத்தாண்டு தினத்தில் வெடித்தது நட்புக்கான வாத்து

Posted: 31 Dec 2013 10:23 PM PST

rubber_duck_001

rubber_duck_001நெதர்லாந்து கலைஞரான ஃபிலாரென்டிஜின் ஹாப்மென் கடந்த 2007 ஆம் ஆண்டில் 16.5 மீட்டர் உயரமுடைய பிரம்மாண்டமான மஞ்சள் வாத்து ஒன்றினை உருவாக்கி மக்களிடையே நட்புறவை வளர்க்கும்வண்ணம் ஒவ்வொரு நாட்டின் கடற்பகுதியிலும் மிதக்கவிட்டார்.

பிரேசில், அவுஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற ஒன்பது நாடுகளில் உள்ள 13 நகரங்களில் இந்த வாத்து மிதக்கவிடப்பட்டு பெரும்பான்மையான மக்களின் வரவேற்பையும் பெற்றது.

தற்போது மீண்டும் 2013 ஆம் ஆண்டில் தைவானைச் சேர்ந்த மூன்று நகரங்களின் கடற்பரப்புகளில் 18 மீட்டர் உயரத்தில் செய்யப்பட்ட புதிய வாத்து மிதக்க விடப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் மோசமான வானிலை காரணமாக இந்த கண்காட்சி நிறுத்தப்பட்டது.

செப்டம்பர் மாதம் கவோசியுங் நகரத்தில் ஒரு மாதம் இந்த வாத்து மிதக்கவிடப்பட்டபோது நான்கு மில்லியன் மக்கள் இதனைக் கண்டு களித்தார்கள். அப்போது ஏற்பட்ட உசாகி புயலிலிருந்து பாதுகாக்க வேண்டி இந்த வாத்து வெளியே எடுக்கப்பட்டது. கடந்த மாதம் டவோயுவான் நகரக் கடற்பகுதியில் இந்த வாத்து மிதக்கவிடப்பட்டிருந்தபோது 6.3 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டு மின்சாரம் தடைப்பட்டது. இதனால் இந்த வாத்திற்கு காற்று செலுத்தும் குழாய் செயல்படாமல் இந்தக் கண்காட்சி பாதியில் நிறுத்தப்பட்டது.

நிலைமை மீண்டும் சீரானதும் மிதக்கவிடப்பட்டபோது ஏற்பட்ட காற்றின் தாக்கத்தினால் வாத்தின் பின்புறம் உடைந்தது. அதன்பின்னர் நிகழ்ச்சியாளர்கள் வேறொரு வாத்தினை வைத்து இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

தற்போது கீலங் துறைமுகத்தில் மிதக்கவிடப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டமான வாத்து புது வருட இரவான இன்று பெரிய கூட்டத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்த்த நிகழ்ச்சியாளர்கள், இன்று நள்ளிரவு வரை இதனை மிதக்க விட திட்டமிட்டிருந்தனர். ஆனால் இன்று மதியம் எதிர்பாராதவிதமாக இந்த ரப்பர் வாத்து வெடித்தது.

இதனைப் பார்க்கவந்த பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஹுவாங் ஜிங் டை, இதற்கான காரணத்தை ஆராய இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கழுகுகள் இந்த வாத்தின் மீது அமர்ந்திருந்ததைப் பார்த்ததாகக் கூறிய பார்வையாளர் ஒருவர், அதுகூட வாத்து உடைந்ததற்கு ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை வீரர்களை மிரட்டிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்

Posted: 31 Dec 2013 10:20 PM PST

PAKISTHAN

PAKISTHANஇலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், தமது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி ஒரு விக்கட்டை இழந்த நிலையில் 46 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இனிங்சிற்காக சகல விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் 204 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 91 ஓட்டங்களை பெற்றார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பாகிஸஸ்தான் அணி சார்பில் ஜுனைட் கான் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

புத்தாண்டில் மகிழ்ச்சி! உலக சாதனை படைத்தார் ஆண்டர்சன்

Posted: 31 Dec 2013 10:16 PM PST

James-Anderson-300_1

James-Anderson-300_1மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் 36 பந்தில் சதம் அடித்த உலக சாதனை படைத்தார்.

நியூசிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. இரண்டாவது போட்டி மழையால் ரத்தானது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி குயிண்ஸ்டவுனில் நடக்கிறது. மழை குறுக்கிட்ட காரணத்தினால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து போட்டி 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் டுவைன் பிராவோ, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணிக்கு கப்டில் (1) ஏமாற்றினார். தொடர்ந்து வந்த மெக்கலம் (33) நிலைக்கவில்லை. டெய்லர் (9) தாக்குபிடிக்கவில்லை. பின் ரைடருடன் இணைந்த கோரி ஆண்டர்சன் புயல் வேகத்தில் ஓட்டங்களை குவித்தார். அவர் 36 பந்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார்.

இதற்குமுன் கடந்த 1996ல் பாகிஸ்தான் வீரர் சயிட் அப்ரிடி 37 பந்தில் சதம் அடித்தே உலக சாதனையாக இருந்தது.

எதிர்முனையில் இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த ரைடர், 45 பந்தில் சதம் அடித்தார். இவர் 104 ஓட்டங்களை எடுத்த போது ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.

கோரி ஆண்டர்சன் தொடர்ந்து அதிரடியாக துடுப்பெடுத்தாட 21 ஓவர் முடிவில், நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 283 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 21 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சந்திரனை வேவு பார்க்கும் சீனாவின் விண்கலம்

Posted: 31 Dec 2013 10:12 PM PST

article

articleசீனா தனது விண்வெளித் திட்டங்களில் ஒரு முக்கிய மைல்கல்லாக 'ஜேட் ராபிட்' என்ற புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய விண்கலத்தை நிலவுக்கு முதல் முறையாக அனுப்பியது.

150 சென்டி மீட்டர் அகலமுடைய சக்கரங்களை கொண்ட இந்த 'ஜேட் ராபிட்' கருவியானது, நிலவில் இறங்கி மேற்பரப்பு மற்றும் மண்ணின் தன்மை பற்றி ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 14ம் திகதி நிலவின் மேற்பரப்பபில் மழைக்கடல் என்றழைக்கப்படும் 'மெரெ இம்ப்ரியம்' பகுதி அருகே இந்த ரோவர் கருவியும் அதன் துணை கருவியும் ஆராய்ந்துக்கொண்டிருக்கும் காட்சிகளை நிலவை பற்றி ஆராயும் நாசாவின் செயற்கைக்கோள் (எல்.ஆர்.ஓ.) படம்பிடித்து வெளியிட்டுள்ளது.

சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த இரண்டு கலன்களும், நிலவின் இருண்ட மேற்பரப்பில் வெள்ளையாக தெரிவதையும், அதன் நிழல் மிக நீளமாக தெரியும் காட்சிகளையும் நாசாவின் புகைப்படம் காட்டுகிறது.

இந்த ஜேட் ராபிட் திட்டத்தையடுத்து, ரோபாவை நிலவில் இறக்கி ஆராய சீனா திட்டமிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

குரோதங்கள் அற்ற அரசியலே என் எதிர்பார்ப்பாகும்: சனத் ஜயசூரிய

Posted: 31 Dec 2013 09:59 PM PST

jeyasuriya02

jeyasuriya02வைராகக்கியம் மற்றும் குரோதங்கள் அற்ற அரசியல் பயணமே தனது எதிர்பார்ப்பு என தபால் சேவைகள் பிரதி அமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

தபால் சேவைகள் பிரதி அமைச்சர் சனத் ஜயசூரியவை வரவேற்பதற்காக, மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இவர் இதனை தெரிவித்தார்.

நிகழ்வில் கலந்து கருத்து வெளியிட்ட சனத் ஜயசூரிய,

"தென் மாகாண சபை தேர்தல் மீண்டும் அண்மித்துள்ளது.பொது மக்களுக்கு பல்வேறு விடயங்களை கூறும் காலமே இது.

இந்த விருப்பு வாக்கு முறைமை காரணமாக எனது தொகுதியிலும் பலர் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிப்பார்கள். தற்போது இந்த நிலை பல இடங்கில் நடைப்பெறுகின்றது. இது தொடர்பில் நான் கவலைப்பட போவதில்லை.

வைராக்கியத்துடனும் குரோதத்துடனும் பார்க்கும் போது எந்த வகையிலேனும் வாக்குகளை பெற்றுக் கொள்பவர்களும் உள்ளார்கள். கிடைக்க வேண்டியதிருந்தால் அது கிடைக்கும்" என தெரிவித்தார்.

மாத்தறை பிரதான தபால் அலுவலகத்தில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் தபால் ஊழியர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரபாகரன் நாய்க்குட்டி மாதிரி எங்ககிட்டதான் செத்தான் தெரியுமா?

Posted: 31 Dec 2013 09:55 PM PST

tamil_prabakaran_CI

tamil_prabakaran_CIதிடீர் பதற்றத்துக்குக் காரணமாகிவிட்டார் பத்திரிகையாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன். அண்மையில் அவர் இலங்கை சென்று இருந்தார். 'இராணுவ முகாமைப் படம் பிடித்தார் என்பதால் அவரைக் கைது செய்துவிட்டார்கள் என்று செய்தி பரவியது.

சுற்றுலா விசாவில் வந்தவர், அதற்கான விதிமுறைகளை மீறிவிட்டார். அவரை பயங்கவாத தடுப்பு இராணுவம் விசாரணை நடத்துகிறது என்று தகவல் வந்தது.

உடனடியாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ கடிதம் அனுப்பினார். கருணாநிதி பேட்டி கொடுத்தார். ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார்.

பத்திரிகையாளர் சங்கங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தங்களது கோரிக்கை அறிக்கைகளை ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் முதல் இந்திய, இலங்கைத் தூதரகம் வரை அனுப்பிவிட்டுக் காத்திருந்தார்கள்.

இந்த நிலையில் இரண்டு நாட்கள் இடைவெளியில் மகா.தமிழ்ப் பிரபாகரனை விடுவித்து விட்டது இலங்கை அரசு!

டிசம்பர் 21-ம் தேதி இலங்கைக்கு அங்குள்ள மக்களின் இன்றைய நிலைமையை அறிவதற்காக சென்றேன்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வாகனத்தில் கிளிநொச்சி கிராமங்களுக்குச் சென்றேன்.

ஓர் இடத்தில் சிறீதரன் பங்கேற்ற கூட்டம் நடந்தது. நான் அதில் கலந்து கொள்ளவில்லை. அந்த வழியாகச் சென்ற இராணுவத்தைப் படமெடுத்தேன். நான் படம் எடுத்தது அவர்களுக்குத் தெரியும். என்னை அவர்கள் பார்த்துக் கொண்டே அமைதியாகச் சென்றனர்.

பின்னர் நாங்கள் வலைப்பாடு என்ற கடற்கரைப் பகுதிக்குச் சென்றோம். அங்கு பாதிரியார் ஒருவரை சிறீதரன் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். நான் பிரதேச உறுப்பினரான பசுபதிப்பிள்ளை என்பவரோடு கடற்கரை ஓரத்துக்குச் சென்று படம் எடுத்தேன்.

பிறகு, நாங்கள் வந்த வாகனத்தை நோக்கி நடந்தேன். அப்போது ஒரு வாகனத்தில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் வந்து என்னைச் சுற்றி வளைத்தனர். கையில் வைத்திருந்த கமராவையும் பறித்துக்கொண்டனர்.

துப்பாக்கி முனையில் எனது இரண்டு கைகளையும் முறுக்கி இறுகப் பிடித்துக்கொண்டனர். இராணுவத் தளபதி அங்கே வந்த பின்னர் என்னை போலீஸிடம் ஒப்படைத்தனர்.

நாச்சிக்குடா காவல் நிலையத்தில் சீறிதரனையும் என்னையும் விசாரித்தனர். கமராவில் இருந்த எல்லா படங்களையும் இராணுவத்தினர் பிரதி செய்துகொண்டனர்.

இராணுவம் சொல்வதை மட்டும்தான் போலீஸ் கேட்டது.

இரவு 10.30 மணிக்கு கிளிநொச்சி போலீஸ் நிலையத்துக்குக் கொண்டுசென்றனர். அங்கே நள்ளிரவு 2 மணி வரை என்னை விசாரித்து வாக்குமூலம் வாங்கினார்கள்.

நான் சொன்னது எதையும் அவர்கள் எழுதியதாகத் தெரியவில்லை. 'நீ சொல்றதைச் சொல்லு. நாங்க எழுதிக்குவோம். நாங்க ஒண்ணும் இந்தியன் போலீஸ் கிடையாது. இது எங்க நாடு. அதை மனசுல வெச்சு நடந்துக்கோ…' என்று சொல்லி, என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள்.

அடுத்த நாள் டி.ஐ.டி-யிடம் (டெரரிஸ்ட் இன்வெஸ்டிகேஷன் டிபார்ட்மென்ட்) ஒப்படைக்கப்பட்டேன்.

அப்போது டி.ஐ.டி. அதிகாரி ஒருவர், 'இதுதான் நீ இலங்கைக்கு வருவது கடைசி முறை. இந்த ஊரோட அழகை போற வழியில பார்த்துக்கோ' என்று சொல்லி, என்னை வெள்ளை வேனில் ஏற்றினார்கள்.

அந்த வேனின் உள் அமைப்பைப் பார்த்தபோதுதான் எனக்குப் பதற்றம் தொற்றியது. அங்கிருந்து என்னை கொழும்பு கொண்டு சென்றனர்.

டி.ஐ.டி. அலுவலகத்தின் ஆறாம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். நான்கு நாட்கள் தொடர்ந்து கிட்டத்தட்ட 30 அதிகாரிகள் என்னை விசாரித்தனர்.

பிரபாகரன் நாய்க்குட்டி மாதிரி எங்ககிட்டதான் செத்தான் தெரியுமா? என சொல்லிவிட்டு என் முகத்தைப் பார்த்தனர்.

நான் அமைதியாக இருந்தேன். 'நீ ஜெனீவா போயிருக்கியா? போகும் திட்டம் ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டனர். அதற்கும் நான் அமைதியாகவே இருந்தேன்.

73 மணி நேரத்துக்குப் பிறகு என்னை குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் என்னை நாடு திருப்பினார்கள் என்று திகிலுடன் விவரித்தார்.

பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதில் இலங்கை நான்காவது இடத்தில் இருக்கிறது. அதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியிருக்கிறது இந்தச் சம்பவம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைக்கு ரஷ்யா ஆதரவு

Posted: 31 Dec 2013 09:45 PM PST

russia

russiaஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு நிபந்தனையற்ற அடிப்படையில் ஆதரவளிக்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள்  சபையில் இலங்கைக்கு எதிராக பல இறுக்கமான பிரேரணைகள் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் ரஷ்யா இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அதன்படி நிபந்தனைகளின் அடிப்படையில் ரஷ்யா இலங்கைக்கு ஆதரவளிப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை. ரஷ்யாவின் நிலைப்பாட்டை அந்தநாட்டு ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்துள்ளார். எனினும் மேற்குலக நாடுகளின் ஆலோசனைகளை ரஷ்யா ஏற்றுக்கொள்ளாது எனவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை , இலங்கையில் இடம்பெற்ற இறுதிகட்ட போரின் போது ரஷ்யா ஆயுத உதவிகளை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™