மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஐக்கிய ஆந்திராவை வலியுறுத்தி புதிய கட்சி தொடங்குவதற்கு கிரண்குமார் ரெட்டி தீவிரம்
- ஆந்திராவில் போடோ அமைப்பினரால் கடத்தப்பட்ட தனியார் நிறுவன பொறியாளர் விடுவிப்பு
- புத்தாண்டு கொண்டாட்டத்தில் மணிப்பூரில் இன்று குண்டு வெடித்தது
- வருமான வரி கணக்கை தவறாக பயன்படுத்துவதா?: அருண்ஜெட்லி மீது வழக்கு தொடருவேன்- வீரபத்ரசிங்
- திருப்பதியில் புத்தாண்டு தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் - ஆர்ஜித சேவைகள் ரத்து
- முஸ்லிம் பெண்களுக்கு திறமையை மேம்படுத்த பயிற்சி: மத்திய அரசு திட்டம்
- கேரள அமைச்சரவை அதிரடி மாற்றம்: ரமேஷ் சென்னிதலா உள்துறை மந்திரியாக பதவியேற்பு
- அரியானாவில் புத்தாண்டு முதல் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம் அறிமுகம்
- லோக்பால் மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது: உடனடியாக அமல்படுத்த முடிவு
- சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற கர்நாடக இளம்பெண் கைது
- பதவியில் இருந்து மன்மோகன் சிங் விலகலா?: மத்திய மந்திரி திட்டவட்ட மறுப்பு
- சத்திஸ்கரில் கண்டதுண்டமாக வெட்டி 10 வயது சிறுவன் படுகொலை: நரபலியா? - கிராம மக்கள் பீதி
- கேளிக்கை விருந்துக்கு பணம் வசூலித்த ஏற்பாட்டாளர்கள் தப்பியோட்டம்: மும்பை வாசிகளின் 'சோக புத்தாண்டு'
- பட்டப்பகலில் துணிகரம்: வங்கிக்குள் புகுந்து ரூ.5 கோடி நகைகளை முகமூடி கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்
- இந்தியாவின் புதிய விமானப்படை தளபதியாக அருப் ராகா பதவி ஏற்றார்
- மும்பை கடற்பகுதியில் சரக்கு கப்பலில் தீ விபத்து
- நிலம் கையகப்படுத்தும் சட்டம் நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது
- புதிய தொடக்கத்துக்கான நேரம்: பிரதமர் மன்மோகன்சிங் புத்தாண்டு வாழ்த்து
- பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி சட்டசபை நாளை கூடுகிறது: மெஜாரிட்டியை நிரூபிப்பாரா, கெஜ்ரிவால்?
- டெல்லி-மும்பை-தஞ்சையில் நாளை முதல் எரிவாயு சிலிண்டர்களுக்கு நேரடி மானியம்
| ஐக்கிய ஆந்திராவை வலியுறுத்தி புதிய கட்சி தொடங்குவதற்கு கிரண்குமார் ரெட்டி தீவிரம் Posted: 31 Dec 2013 11:04 PM PST ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு மசோதா ஆந்திரா சட்டசபையில் தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றப்பட வேண்டும். தற்போது அந்த வரைவு மசோதா ஆந்திரா மாநில அரசின் வசம் உள்ளது. ஆந்திரா சட்டசபையில் அந்த தீர்மானத்தை வரும் 23–ந்தேதிக்குள் |
| ஆந்திராவில் போடோ அமைப்பினரால் கடத்தப்பட்ட தனியார் நிறுவன பொறியாளர் விடுவிப்பு Posted: 31 Dec 2013 10:40 PM PST ஆந்திர மாநிலத்தின் சிராலா நகரைச் சேர்ந்த பட்டுலா அங்கம்மா ராவ் என்ற பொறியாளர் பொல்லினேனி சீனையா என்ற தனியார் நிறுவனத்தின் கட்டுமானப் பிரிவில் பணி புரிந்துவந்தார். இந்த நிறுவனம் அஸ்ஸாம் மாநிலத்தின் பவர் கிரிட் கார்ப்பரேஷனின் கட்டுமானப் பணி ஒன்றின் பொறுப்பை ஏற்றது. அந்தப் பணியினை மேற்பார்வை செய்வதற்காக அங்கம்மா ராவ் கடந்த மாதம் அஸ்ஸாமிற்கு அனுப்பப்பட்டார். |
| புத்தாண்டு கொண்டாட்டத்தில் மணிப்பூரில் இன்று குண்டு வெடித்தது Posted: 31 Dec 2013 10:38 PM PST மணிப்பூர் தநைலகர் இம்பால் அருகே ஷிங்ஜமே நகரம் உள்ளது. அங்கு நேற்று இரவு தொடங்கிய புத்தாண்டு கொண்டாட்டம் இன்று காலை வரை நடந்தது. இந்த நிலையில் காலை 5.30 மணியளவில் அங்கு சக்தி வாய்ந்த 2 குண்டுகள் வெடித்தன. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு போலீசாரும், மத்திய ரிசர்வ் படையினரும் விரைந்து சென்று அந்த |
| வருமான வரி கணக்கை தவறாக பயன்படுத்துவதா?: அருண்ஜெட்லி மீது வழக்கு தொடருவேன்- வீரபத்ரசிங் Posted: 31 Dec 2013 10:14 PM PST இமாசலபிரதேச மாநில முதல்–மந்திரியாக இருக்கும் வீரபத்ரசிங் மத்திய மந்திரியாக இருந்தபோது இமாச்சல பிரதேசத்தில் தனியார் நிறுவனத்தின் மின்உற்பத்தி திட்டத்துக்கு அனுமதி வழங்க ரூ. 3.9 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. அதை தன் பெயரிலும் மனைவி பெயரிலும் காசோலைகளாக வாங்கியுள்ளார். மேலும் அந்த நிறுவனத்தில் வீரபத்ரசிங்கும் அவரது மனைவியும் |
| திருப்பதியில் புத்தாண்டு தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் - ஆர்ஜித சேவைகள் ரத்து Posted: 31 Dec 2013 09:39 PM PST ஆங்கில புத்தாண்டையொட்டி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பு இல்லாமல் இருக்க தேவஸ்தானம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏழுமலையான் சன்னதி மற்றும் திருமலை முழுவதும் பல்வேறு வண்ண விளக்குகள் மற்றும் வண்ணமலர்களால் அலங்காரமும், கட் அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் உள்ள பலி பீடம், தங்ககொடி மரம் போன்ற பகுதிகளிலும் மற்றும் கோவிலுக்குள் செல்லும் மகாதுவாரம் |
| முஸ்லிம் பெண்களுக்கு திறமையை மேம்படுத்த பயிற்சி: மத்திய அரசு திட்டம் Posted: 31 Dec 2013 09:24 PM PST பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்காளர்களை கவரும் நடவடிக்கைகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மத்திய அரசு சிறுபான்மை இன மக்களின் ஓட்டுக்களை குறி வைத்து சில திட்டங்களை அறிவிக்க முடிவு செய்துள்ளது. இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் தங்கள் வாழ்வா தாரத்தை உறுதிப்படுத்த அவர்களுக்கு பல்வேறு சுயதொழில் பயிற்சிகளை அளிக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. அதன்படி பெண்களின் விருப்பத்துக்கு ஏற்ப அழகுகலை பயிற்சி, தையல் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். |
| கேரள அமைச்சரவை அதிரடி மாற்றம்: ரமேஷ் சென்னிதலா உள்துறை மந்திரியாக பதவியேற்பு Posted: 31 Dec 2013 09:12 PM PST கேரள காங்கிரசில் கடந்த சில மாதங்களாக கோஷ்டி பூசல் வெடித்த வண்ணம் இருந்தது. மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கு துணை முதல்–மந்திரி பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர். கோஷ்டி பூசலை சரி கட்டுவதற்காக ரமேஷ் சென்னிதலாவுக்கு மந்திரி பதவி கொடுக்க மேலிடம் முடிவு செய்தது. அதன்படி மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி கேரள காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ரமேஷ் சென்னிதலாவுக் |
| அரியானாவில் புத்தாண்டு முதல் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம் அறிமுகம் Posted: 31 Dec 2013 09:02 PM PST அரியானா மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் புத்தாண்டு முதல் இலவச பஸ் பாஸ் வழங்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் அப்தாப் அகமது கூறுகையில்: அரியானா மாநிலத்தில் அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இன்று முதல் இலவச பஸ் பாஸ் வசதி |
| லோக்பால் மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது: உடனடியாக அமல்படுத்த முடிவு Posted: 31 Dec 2013 08:54 PM PST ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவை கடந்த 2011–ம் ஆண்டு கொண்டு வந்தது. ஆனால் அந்த மசோதா வலுவாக இல்லை என்று கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதைத் தொடர்ந்து லோக்பால் சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. திருத்தப்பட்ட லோக்பால் மசோதா கடந்த மாதம் 17–ந் தேதி பாராளுமன்ற மேல் சபையில் நிறைவேற்றப்பட்டது. மறுநாள் 18–ந்தேதி பாராளுமன்ற மக்களவையிலும் அந்த சட்டம் நிறைவேறியது. இதையடுத்து அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து பாராளுமன்ற சபா நாயகர் மீராகுமார் கையெழுத்திட்டார். |
| சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற கர்நாடக இளம்பெண் கைது Posted: 31 Dec 2013 08:50 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30–ந் தேதி மாலை நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் எருமேலி–பம்பை வழியாக பொதுவழிப்பாதை மற்றும் இடுக்கி, புல்மேடு வனப்பகுதி வழியாகவும் சென்ற வண்ணம் உள்ளனர். மகர விளக்கு பூஜை நாள் நெருங்குவதையொட்டி சபரி மலையில் பலத்த |
| பதவியில் இருந்து மன்மோகன் சிங் விலகலா?: மத்திய மந்திரி திட்டவட்ட மறுப்பு Posted: 31 Dec 2013 04:09 PM PST பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. மன்மோகன் சிங் செயல்படாத பிரதமர் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பல தருணங்களில், 'மீண்டும் பிரதமர் ஆவதை நான் விரும்பவில்லை. பிரதமராக ராகுல்காந்தி |
| சத்திஸ்கரில் கண்டதுண்டமாக வெட்டி 10 வயது சிறுவன் படுகொலை: நரபலியா? - கிராம மக்கள் பீதி Posted: 31 Dec 2013 03:08 PM PST சத்திஸ்கர் மாநிலத்தில் கண்டதுண்டமாக வெட்டப்பட்ட நிலையில் கிடைத்துள்ள 10 வயது சிறுவனின் பிரேதம் உள்ளூர் வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சத்திஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம் ரத்னபூர் பகுதியை சேர்ந்த ஹரிசங்கர் (10) என்ற சிறுவன் |
| கேளிக்கை விருந்துக்கு பணம் வசூலித்த ஏற்பாட்டாளர்கள் தப்பியோட்டம்: மும்பை வாசிகளின் 'சோக புத்தாண்டு' Posted: 31 Dec 2013 01:59 PM PST மும்பையில் உள்ள பிரபல ஓட்டலில் புத்தாண்டை முன்னிட்டு நேற்றிரவு கேளிக்கை விருந்து நடத்துவதாக பணம் வசூலித்த ஏற்பாட்டாளர்கள் தப்பி தலைமறைவாகி விட்டதால் பணம் கட்டி ஏமார்ந்த ஆயிரக்கணக்கான மும்பை வாசிகளுக்கு இந்த '2014' புத்தாண்டு - 'சோக புத்தாண்டு' ஆக தொடங்கியுள்ளது |
| பட்டப்பகலில் துணிகரம்: வங்கிக்குள் புகுந்து ரூ.5 கோடி நகைகளை முகமூடி கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர் Posted: 31 Dec 2013 12:45 PM PST ஒடிசா மாநிலத்தில் உள்ள வங்கிக்குள் பட்டப்பகலில் புகுந்து ரூ.5 கோடி நகைகளை முகமூடி கொள்ளையர்கள் அள்ளிச் சென்ற துணிகர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், நயாகர் மாவட்டத்தை சேர்ந்த தர்ப்பநாராயன்பூர் பகுதியில் தங்க நகைகளை |
| இந்தியாவின் புதிய விமானப்படை தளபதியாக அருப் ராகா பதவி ஏற்றார் Posted: 31 Dec 2013 12:03 PM PST விமானப்படை தளபதியாக இருந்த என்.ஏ.கே.பிரவுனி ஓய்வு பெறுவதையொட்டி, புதிய விமானப்படை தளபதியாக அருப் ராகா நேற்று பதவி ஏற்றார். அவருக்கு வயது 59. அவர் 3 ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார். உயர் அதிகாரிகள் முன்னிலையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது |
| மும்பை கடற்பகுதியில் சரக்கு கப்பலில் தீ விபத்து Posted: 31 Dec 2013 11:45 AM PST மும்பை துறைமுகம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொரியா நாட்டை சேர்ந்த 'சூராங் சாங்' என்ற சரக்கு கப்பல், சரக்குகளை இறக்குவதற்காக மும்பை துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது |
| நிலம் கையகப்படுத்தும் சட்டம் நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது Posted: 31 Dec 2013 11:38 AM PST நிலம் கையகப்படுத்தும் சட்டம், 1894-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதில், நிலம் கையகப்படுத்தியதால், நிலம் இழந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை. எனவே, இந்த குறைபாடுகளை நீக்கி, புதிய நிலம் கையகப்படுத்தும் மசோதா |
| புதிய தொடக்கத்துக்கான நேரம்: பிரதமர் மன்மோகன்சிங் புத்தாண்டு வாழ்த்து Posted: 31 Dec 2013 10:47 AM PST பிரதமர் மன்மோகன்சிங் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் கூறி இருப்பதாவது:- "2014-ம் ஆண்டில் நாட்டு மக்கள் அமைதி, பாதுகாப்பு, மகிழ்ச்சி மற்றும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். இந்த லட்சியங்களை அடைவதற்காக உறுதி பூணும் வகையில் |
| பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி சட்டசபை நாளை கூடுகிறது: மெஜாரிட்டியை நிரூபிப்பாரா, கெஜ்ரிவால்? Posted: 31 Dec 2013 10:00 AM PST டெல்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக நேற்று தனது வீட்டில் ஆலோசனை நடத்திய அவர், அனைத்து குடும்பங்களுக்கும் |
| டெல்லி-மும்பை-தஞ்சையில் நாளை முதல் எரிவாயு சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் Posted: 31 Dec 2013 08:16 AM PST டெல்லி மற்றும் மும்பையில் நாளை முதல் சமையல் எரிவாயு மானியம் நுகர்வோருக்கு ரொக்கமாக வழங்கப்படுகிறது. மத்திய அரசின் நேரடி பணப்பயன் திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை அரசு நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கிறது. இதற்காக ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |