Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அமெரிக்காவை முந்தும் சீனா

Posted: 26 Dec 2013 11:12 PM PST

Flag of the People's Republic of China

Flag of the People's Republic of China2030ம் ஆண்டாகும் போது, ஐரோப்பாவின் மிகச் சிறந்த பொருளாதார பின்னணியை கொண்ட நாடாக இங்கிலாந்து பரிணமிக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

த கார்டியன் இணையத்தளம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் படி, 2028ம் ஆண்டாகும் போது, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, அமெரிக்காவின் வளர்ச்சியையும் கடந்துச் செல்லும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியா, பிரேசில் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் நிலையான பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

This posting includes an audio/video/photo media file: Download Now

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து

Posted: 26 Dec 2013 10:50 PM PST

bus_001.w245

bus_001.w245தாய்லாந்தில் பள்ளத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியாகினர், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் பெட்டாச்பம் மாவட்டத்தில் இன்று காலை 50 அடி ஆளத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இவ்விபத்தில் 32 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுவரை 27 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் தரப்பில் தகவல்கள் கூறப்பட்டது.

மேலும் இதே இடத்தில் கடந்த அக்டோபர் மாதம் சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர் என்பது குறிப்படத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரே நேரத்தில் பல மொபைல்களை சார்ஜ் செய்யும் சாதனம்

Posted: 26 Dec 2013 10:48 PM PST

டேப்லட், ஸ்மார்ட் கைப்பேசிகள் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட சாதனங்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Octafire எனப்படும் இச்சாதனம் 100-240V, 47-63Hz மின்சாரத்தில் செயற்படக்கூடியதாகவும், 2.1A / 5V வெளியிடக்கூடியதாகவும் காணப்படுகின்றது. இதன் மூலம் அதிகபட்சமாக 8 வெவ்வேறு வகையான மொபைல்களை சார்ஜ் செய்ய முடியும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அஸ்வினுக்கு பாலி உம்ரிகர் விருது

Posted: 26 Dec 2013 10:44 PM PST

ash

ashஇந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும், இந்திய அளவில் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து கௌரவித்து வருகிறது.

இதன்படி 2012-13-ம் ஆண்டுக்கான விருது பட்டியலை கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

இதில் பாலி உம்ரிகர் விருதுக்கு சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுக்குரிய காலக்கட்டத்தில் (2012 அக்டோபர் 1 முதல் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் திகதி வரை) அஸ்வின் 43 டெஸ்ட் விக்கெட்டுகளும் (8 டெஸ்ட்), 263 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

இதே போல் ஒரு நாள் போட்டியில் 24 விக்கெட்டுகளும், 20 ஓவர்போட்டிகளில் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருக்கிறார்.

அது மட்டுமின்றி 80 ஆண்டு கால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கடந்த இந்தியர் என்ற சாதனையும் இந்த காலக்கட்டத்தில் அவர் படைத்திருந்தார்.

அவருக்கு பாலி உமர்ரிகர் விருதுடன் ரூ.5 லட்சம் காசோலையும் வழங்கப்படும். இந்த விருதை ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் (2 முறை), ஷேவாக், கௌதம் கம்பீர், ராகுல் டிராவிட், விராட் கோலி பெற்றிருக்கிறார்கள்.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரருக்கு வழங்கப்படும் திலிப் சர்தேசாய் விருதை ரோகித் ஷர்மா (ரூ.5 லட்சம் பரிசு), ரஞ்சி கிரிக்கெட்டில் சகலதுறை ஆட்டக்காரராக ஜொலித்த அபிஷேக் நாயர் லாலா அமர்நாத் விருதையும் (ரூ.2½ இலட்சம்) பெறுகிறார்கள்.

சிறந்த வீராங்கனைக்கான எம்.ஏ.சிதம்பரம் விருதை தமிழகத்தை சேர்ந்த திருஷ்காமினி வாங்குகிறார். அவருக்கு விருதுடன் ரூ.50 ஆயிரம் கிடைக்கும். இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக முன்னாள் வீரர்கள் ஆர்.ஜி. பாபு நட்கர்னி, பரூக் என்ஜினீயர், மறைந்த ஏக்நாத் சோல்கர் ஆகியோருக்கு நினைவுப்பரிசுடன் தலா ரூ.15 இலட்சம் வழங்கப்படுகிறது.

வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதுக்கு கபில்தேவின் பெயர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

விருது வழங்கும் விழா ஜனவரி 11-ம் திகதி மும்பையில் நடக்கிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா

Posted: 26 Dec 2013 10:38 PM PST

Hero Hockey World League 2013 Indian team celebrates after won the match

india-cricket-teamதென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி வலுவான நிலையில் உள்ளது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை பெற்றிருந்தது. டர்பன் நகரில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். காயம் காரணமாக ஆட மாட்டார் என சொல்லப்பட்ட தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் மார்கல், அணியில் இடம்பெற்றிருந்தார்.

துவக்க வீரர்களாக களம் இறங்கிய தவான், விஜய் இருவருமே திறமையாக தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை எதிர் கொண்டனர். துரதிர்ஷ்டவசமாக, மார்கல் வீசிய பந்தில் தவான் 29 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 41 மட்டுமே.

பின்பு களமிறங்கிய புஜாரா, விஜயுடன் இணைந்து கச்சிதமாக சூழ்நிலையைப் புரிந்து விளையாட ஆரம்பித்தார். மறுமுனையில் முரளி விஜய்யும் பதற்றமின்று ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தார். உணவு இடைவேளைக்கு பின்னும் தென் ஆப்பிரிக்காவின் எந்த பந்து வீச்சாளரும் எடுபடாமல் போக 102 பந்துகளில் விஜய்யும், 97 பந்துகளில் புஜாராவும் அரை சதத்தைக் கடந்தனர்.

நேற்றைய முதல்நாள் ஆட்டம் முடியும் முன்னர் முரளி விஜய் சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் 29 ஓவர்கள் மீதமுள்ள நிலையிலேயே நேற்றைய ஆட்டம் முடிக்கப்பட்டது. இன்றைய ஆட்டம் முன்கூட்டியே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்ட நேர முடிவில் விஜய் 91 ஓட்டங்களுடனும், புஜாரா 58 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தாய்லாந்தில் போராட்டம்: பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை

Posted: 26 Dec 2013 10:34 PM PST

தாய்லாந்தில் அரசுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது. பிரதமர் இங்லக் ஷினவத்ரா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் எம்.பி. சுதீப் தாக்சுபன் தலைமையில் கடந்த மாதம் முதல் ஆர்ப்பாட்டங்கள் நடப்பதால் நாடு முழுவதும் அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. போராட்டங்களின் தீவிரத்தைத் தொடர்ந்து காபந்து பிரதமராக ஆட்சிப்பொறுப்பைத் தொடரும் பிரதமர் இன்க்லக், பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். ஆனால் பதவி விலகாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட இந்திய மாணவர்

Posted: 26 Dec 2013 10:04 PM PST

india,pakistan

india,pakistanஇந்திய உளவாளி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மாணவர் ஒருவர் பாகிஸ்தான் பல்கலைகழகத்தில் துன்புறுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலம் பட்காமைச் சேர்ந்தவர் இஷ்ரத் நாவேத்.

இவர் கடந்த 2008ம் ஆண்டில் பி.எச்.டி ஆய்வுக்காக பாகிஸ்தானின் பிரபலமான காயிதே ஆசம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

இந்நிலையில் பல்கலைக்கழக கண்காணிப்பாளருடன் துணை பேராசிரியர் ஒருவரும் இணைந்து தன்னை மிரட்டி துன்புறுத்துவதாக இஷ்ரத் புகார் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், பாகிஸ்தானின் காயிதே ஆசம் பல்லைகழகத்தில் பயோடெக்னாலஜி பிரிவில் ஆய்வுப்படிப்புக்காக சேர்ந்தேன்.

அங்குள்ள கண்காணிப்பாளரும், துணைப் பேராசிரியரும் என்னை இந்திய உளவாளி என கூறி மனரீதியாக துன்புறுத்தி வந்தனர்.

மேலும் நான் சேகரித்த முக்கிய ஆய்வு மாதிரிகளை திருடி மற்றவர்களுக்கு கொடுத்து விட்டனர்.

எனது சகோதரி இறந்தபோதுகூட சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கவில்லை.

2011ல் எனது ஆய்வுக் கட்டுரையை சமர்பித்த பின்பும், என்னை ஊருக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பல்கலைகழக நிர்வாகம் மற்றும் உயர் கல்வி ஆணையத்திடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகிஸ்தானில் அமெரிக்க குண்டு வீச்சில் 4 தீவிரவாதிகள் சாவு

Posted: 26 Dec 2013 09:50 PM PST

பாகிஸ்தானில் உள்ள வடக்கு வசீரிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை வேட்டையாட அமெரிக்கா உளவு விமானங்கள் மூலம் அவ்வப்போது குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதுபோல வடக்கு வசீரிஸ்தானிலுள்ள குதாப் கிஹெல் என்ற இடத்தில் நேற்று அதிகாலை 2 குண்டுகளை வீசியது. இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த 4 பேரும் வெளிநாட்டு இயக்கத்தை சேர்ந்தவர்கள் என பாகிஸ்தான் அதிகாரிகள் கூறினர்.

போக்குவரத்து கடமை இனிமேல் படையினருக்கு இல்லை?

Posted: 26 Dec 2013 09:44 PM PST

police

policeயாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விநியோகம், மணற்கொள்ளை, மரக் கடத்தல் போன்ற சட்டவிரோத மற்றும் சடூகவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கும் பொலிஸாருக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இத்தகைய தொடர்பு காரணமாகவே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் குறித்து பொலிஸாருக்கு பொதுமக்கள் இரகசிய தகவல் வழங்கினால் அது பகிரங்கப்படுத்தப்பட்டு விடுகிறது. இதனால் சட்டவிரோதிகளும் இலகுவில் தப்பித்துக் கொள்கின்றனர்.

மக்களும் தகவல் கொடுக்க அஞ்சுகின்றனர். இவ்வாறான நிலையில் பொலிஸார் - பொதுமக்கள் உறவும் மேலும் விரிசலடைகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பொலிஸார் - பொதுமக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்களஸ் தேவனந்தா தலைமையில் நேற்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பொலிஸ் உயரதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெறுகின்ற சட்ட விரோத மற்றும் சமூக விரோத செயற்பாடுகள் தொடர்பாக பிரதேச செயலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பொலிஸ் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தனர்.

குறிப்பாக மணல் கொள்ளை, மரக் கடத்தல், கஞ்சா கடத்தல், மது போதையில் அட்டகாசம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டவிரோத சமூகவிரோத செயல்கள் தொடர்பாகவே பலராலும் அதிகளவு குற்றச்சாட்டுக்க முன்வைக்கப்பட்டன.

இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

பொலிஸார் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். பொலிஸாரும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நம்பிக்கை வைத்தாலே பாதியளவு சட்டவிரோத செயற்பாடுகள் குறிந்துவிடும் எனவும் இக்கலந்துரையாடலில் பங்கேற்ற அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

போக்குவரத்து கடமை இனிமேல் படையினருக்கு இல்லை?

யாழ்பாணத்தில் வீதிப் போக்குவரத்துக் கடமையில் இராணுவத்தினர் ஈடுபடுவது தடுக்கப்படும். பொலிஸாரே இந்தப் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்தப்படுவார்கள் என வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளார்.

யாழ்பாணத்தில் போக்குவரத்துப் பொலிஸாருக்குரிய வேலையை அதிகளவில் இராணுவத்தினரே பார்த்து வருகின்றனர். வீதிகளில் வாகனங்களை மறித்து சோதனையிடுவது முதல் ஆவணங்களை சோதிப்பது வரையான இராணுவத்தினரின் செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுகிறது.

எனவே இதனைத் தடுத்து பொலிஸாரை இந்தக் கடமையில் ஈடுபடுத்த வேண்டுமென யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று பொலிஸார், அரச அதிகாரிகள், மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக யாழ்.நகரை அண்மித்த ஓட்டுமடம் மற்றும் நாயண்மார்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் படையினர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்தே போக்குவரத்து கடமைகளில் இனிமேல் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். பொலிஸார் முழுமையாக கடமையில் அமர்த்தப்படுவார்கள் என வட பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் உறுதியளித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சர்வதேசம் நம்பிக்கை வாக்குகளை வழங்க வேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்

Posted: 26 Dec 2013 09:38 PM PST

இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்கம் மற்றும் புனரமைப்புக்களுக்காக சர்வதேச சமூகம் தமது நம்பிக்கை வாக்குகளை வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசாங்கம் தமது மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து மக்களினதும் சமயங்களினதும் அரசியல் பிரிவுகளினதும் உறுதித்தன்மையை கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கம் முயற்சிக்கிறது. இதனை கருத்திற்கொண்டே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சுமார் 300 […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™