மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கெஜ்ரிவாலுக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மிரட்டிய மர்ம மனிதர்கள்
- மேற்குவங்காளத்தில் சைக்கிள் குண்டு வெடித்து 7 பேர் பலி
- தெலுங்கானா விவகாரம்: பிரணாப்முகர்ஜியை சந்தித்து ஜெகன்மோகன் ரெட்டி புகார்
- பாராளுமன்ற தேர்தல் வியூகம்: காங். முதல்–மந்திரிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை
- வெளிநாட்டில் இருந்து ஆம்ஆத்மி கட்சிக்கு ரூ.19 கோடி வந்தது எப்படி?: மத்திய உள்துறை விசாரணை
- கெஜ்ரிவால் வேண்டுகோளை ஏற்று காசியாபாத் வீட்டிற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்
- பிரதமர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை: மன்மோகன்சிங் திடீர் அறிவிப்பு
- மும்பை - ஐஐடியில் சூப்பர் கார்களின் கண்காட்சி
- மராட்டியத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று மும்பை வருகை
- உண்மைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி: கோர்ட்டு உத்தரவு பற்றி நரேந்திரமோடி கருத்து
- கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் அன்னா ஹசாரே பங்கேற்கவில்லை
- காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை
- சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைப்பு: மண்டல பூஜை வருமானம் ரூ.127 கோடி
- தேவயானி கைது செய்யப்பட்ட போது சட்ட பாதுகாப்பு இருந்தது: புதிய தகவலால் திருப்பம்
- நீதிபதிகளை நியமிக்கும் நீதித்துறை நியமன கமிஷனுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
- மராட்டிய முதல்மந்திரிக்கு அன்னா ஹசாரே கடிதம்: சிறந்த சட்டங்களை முறையாக அமல்படுத்தாவிட்டால் போராட்டம்
- ஐதராபாத்: சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கில் சென்னை வாலிபர் கைது
- மேற்குவங்காளத்தில் 2 புதிய மந்திரிகள் பதவி ஏற்பு
- ‘பான்’ கார்டு பெறுவதற்கு முகவரி ஆதாரமாக, ‘ஆதார்’ அட்டை ஏற்கப்படும்: வருமான வரித்துறை அறிவிப்பு
- பீகார்-குஜராத்தில் நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணிக்கு ரூ.1,912 கோடி: மத்திய அரசு ஒப்புதல்
| கெஜ்ரிவாலுக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மிரட்டிய மர்ம மனிதர்கள் Posted: 26 Dec 2013 11:04 PM PST டெல்லி முதல்–மந்திரியாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை பதவி ஏற்கிறார். 3–ந்தேதி கெஜ்ரிவால் மந்திரி சபை மீது டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. கெஜ்ரிவால் வெற்றிக்கு 36 எம்.எல்.ஏ.க்கள்ஆதரவு தேவை. அந்த கட்சியில் 28 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். 8 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் |
| மேற்குவங்காளத்தில் சைக்கிள் குண்டு வெடித்து 7 பேர் பலி Posted: 26 Dec 2013 10:50 PM PST மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரம் ஜல்பைகுரி. இங்கு நேற்று இரவு 7.30 மணிக்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. குண்டு வெடிப்பு சத்தம் 2 கி.மீ. தூரத்துக்கு கேட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். அந்த இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது ஆங்காங்கே மனித உடல்கள் சிதறிக் கிடந்தன. பலர் குண்டு காயங்களுடன் |
| தெலுங்கானா விவகாரம்: பிரணாப்முகர்ஜியை சந்தித்து ஜெகன்மோகன் ரெட்டி புகார் Posted: 26 Dec 2013 10:33 PM PST ஆந்திராவை பிரிந்து தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக மக்களிடம் பிரசாரம் செய்ய மாநிலம் முழுவதும் யாத்திரை செல்ல முடிவு செய்துள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் சித்தூர் மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்டார். இன்று தனது 2–வது கட்ட யாத்திரையை பலமநேரி தொகுதியில் தொடங்கினார். |
| பாராளுமன்ற தேர்தல் வியூகம்: காங். முதல்–மந்திரிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை Posted: 26 Dec 2013 09:46 PM PST பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளும் தீவிர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. தேர்தல் வியூகத்தை வகுக்க அந்த கட்சிகள் அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. மணிப்பூர், மிசோரம், அசாம், கர்நாடகா, ஆந்திரா, அரியானா, இமாச்சலபிர தேசம், உத்தரகாண்ட், மராட்டியம், கேரளா, அருணா சலப்பிரதேசம், மேகாலயா ஆகிய 12 மாநிலங்களில் காங்கிரஸ் |
| வெளிநாட்டில் இருந்து ஆம்ஆத்மி கட்சிக்கு ரூ.19 கோடி வந்தது எப்படி?: மத்திய உள்துறை விசாரணை Posted: 26 Dec 2013 09:28 PM PST பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரேயுடன் 2011 முதல் இணைந்து ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் நடத் தியவர் அரவிந்த் கெஜ்ரிவால். அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக அன்னா ஹசாரேயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் ''ஊழலுக்கு எதிரான இந்தியா'' அமைப்பில் இருந்து விலகினார். பிறகு அவர் கடந்த ஆண்டு (2012) நவம்பர் மாதம் 26–ந்தேதி ஆம்ஆத்மி கட்சி (சாதாரண |
| கெஜ்ரிவால் வேண்டுகோளை ஏற்று காசியாபாத் வீட்டிற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் Posted: 26 Dec 2013 09:01 PM PST ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவி ஏற்கிறார். உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் கெஜ்ரிவாலின் சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு அம்மாநில போலீசார் 5 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் போலீஸ் அதிகாரி தர்மேந்திரசிங்கை தொடர்பு கொண்டு பேசிய கெஜ்ரிவால், தனது வீட்டிற்கு பாதுகாப்பு தேவையில்லை. எனவே, |
| பிரதமர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை: மன்மோகன்சிங் திடீர் அறிவிப்பு Posted: 26 Dec 2013 09:01 PM PST ராகுலுக்கு வழிகாட்டுவேன், பிரதமர் பதவியில் நீடிக்க மாட்டேன் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். தற்போதைய 15–வது பாராளுமன்றத்தின் பதவி காலம் வருகிற மே மாதம் 30–ந்தேதியுடன் முடிவடைகிறது. ஜூன் 1–ந்தேதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து 2–வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. |
| மும்பை - ஐஐடியில் சூப்பர் கார்களின் கண்காட்சி Posted: 26 Dec 2013 08:50 PM PST தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறைகளில் மாணவர்களின் புதிய சிந்தனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும்வகையில் மும்பை- ஐஐடியில் ஆண்டுதோறும் தொழில்நுட்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் பார்வையாளர்களின் வரவு அதிகரிக்கும் இந்தத் திருவிழா வரும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி தொடங்கி ஐந்தாம் தேதி நிறைவடைகின்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிலிருக்கும் 2,300 கல்லூரிகளின் மாணவர்களும்,வெளிநாடுகளிலிருந்து 500 கல்லூரிகளின் |
| மராட்டியத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று மும்பை வருகை Posted: 26 Dec 2013 08:49 PM PST மராட்டியத்தின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று மும்பை வருகிறார். அவர் மும்பை, தானே, புனேயில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மராட்டியத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் இன்று பிற்பகல் 3.25 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்து சேருகிறார். அவரை கவர்னர் சங்கர |
| உண்மைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி: கோர்ட்டு உத்தரவு பற்றி நரேந்திரமோடி கருத்து Posted: 26 Dec 2013 07:58 PM PST குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்று சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த அறிக்கையை எதிர்த்து பலியான காங்கிரஸ் எம்.பி. ஈசானின் மனைவி ஜாகியா ஆமதாபாத் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கோர்ட்டு உத்தரவு வந்தபின்னர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 'சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்), உண்மைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி' என்று அவர் கூறியுள்ளார். |
| கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் அன்னா ஹசாரே பங்கேற்கவில்லை Posted: 26 Dec 2013 07:20 PM PST டெல்லி மாநில முதல்-மந்திரியாக ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை (சனிக்கிழமை) ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்றுக் கொள்கிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்று சிறப்பிக்கும்படி தனது குருவான அன்னா ஹசாரேவுக்கு அவர் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். இதுபற்றி அன்னா ஹசாரேவிடம் கேட்டபோது, ''இப்போது என்னால் எதுவும் சொல்ல |
| காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை Posted: 26 Dec 2013 07:14 PM PST காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பத்காம் மாவட்ட பகுதிகளில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக எல்லைப்பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஸ்ரோ கிராமபகுதியில் உள்ள ஒரு வீட்டில் |
| சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைப்பு: மண்டல பூஜை வருமானம் ரூ.127 கோடி Posted: 26 Dec 2013 06:57 PM PST சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 15–ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 41 நாள் நடந்த விழா நேற்றுடன் முடிந்தது. இரவு 10 மணிக்கு அரிவரசானம் பாடப்பட்டு நடை அடைக்கப்பட்டது. மண்டல பூஜை நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசித்து சென்றனர். அடுத்து மகரவிளக்கு பூஜை நடக்க இருக்கிறது. இதற்காக வருகிற 30–ந்தேதி மாலை |
| தேவயானி கைது செய்யப்பட்ட போது சட்ட பாதுகாப்பு இருந்தது: புதிய தகவலால் திருப்பம் Posted: 26 Dec 2013 04:05 PM PST அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைதூதராக பணியாற்றி வருபவர் தேவயானி கோப்ரகடே. இவர், விசா விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்ததாகவும், இந்தியாவில் இருந்து அழைத்து வந்த பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு மிகக்குறைந்த சம்பளம் |
| நீதிபதிகளை நியமிக்கும் நீதித்துறை நியமன கமிஷனுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து: மத்திய மந்திரிசபை ஒப்புதல் Posted: 26 Dec 2013 03:03 PM PST சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமிக்க ஒரு தேர்வுக்குழு செயல்பட்டு வந்தது. அந்த முறைக்கு பதிலாக, நீதித்துறை நியமன கமிஷன் அமைக்கும் வகையில், நீதித்துறை நியமன கமிஷன் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த கமிஷன், சுப்ரீம் |
| மராட்டிய முதல்மந்திரிக்கு அன்னா ஹசாரே கடிதம்: சிறந்த சட்டங்களை முறையாக அமல்படுத்தாவிட்டால் போராட்டம் Posted: 26 Dec 2013 02:48 PM PST கிராம பஞ்சாயத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட சிறந்த சட்டங்களை முறையாக அமல்படுத்தாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவேன் என்று மராட்டிய முதல்மந்திரி பிரிதிவிராஜ் சவானுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதினார். |
| ஐதராபாத்: சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கில் சென்னை வாலிபர் கைது Posted: 26 Dec 2013 12:06 PM PST சென்னையை சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவர் ஐதராபாத்தில் உள்ள ஆசீப்நகரில் வாடகை வீட்டில் வசித்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாட்டு மற்றும் நடனம் கற்றுத்தருவதாக அவளது |
| மேற்குவங்காளத்தில் 2 புதிய மந்திரிகள் பதவி ஏற்பு Posted: 26 Dec 2013 11:34 AM PST மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி நேற்று தனது மந்திரி சபையை மாற்றியமைத்தார். புதிதாக சாஷி பஞ்சா, பினாய் பர்மன் ஆகியோர் பதவி ஏற்றனர். இவர்களுக்கு கவர்னர் எம்.கே.நாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராஜங்க மந்திரியாக உள்ள சுவபான் |
| ‘பான்’ கார்டு பெறுவதற்கு முகவரி ஆதாரமாக, ‘ஆதார்’ அட்டை ஏற்கப்படும்: வருமான வரித்துறை அறிவிப்பு Posted: 26 Dec 2013 10:23 AM PST வருமான வரித்துறையில் இருந்து 'பான்' கார்டு பெறுவதற்காக, முகவரி ஆதாரமாக இதுவரை வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டையும் மற்றும் புகைப்பட ஆதாரமாக பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவையும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. |
| பீகார்-குஜராத்தில் நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணிக்கு ரூ.1,912 கோடி: மத்திய அரசு ஒப்புதல் Posted: 26 Dec 2013 08:47 AM PST பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணிக்கு ரூ.1,912 கோடி ஒதுக்கீடு செய்ய இன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பீகாரில் உள்ள புத்த சுற்றுலாத் தளங்களை இணைக்கும் நான்கு பாதைகளைக் கொண்ட நெடுஞ்சாலைப் பணிக்கு ரூ.1408.85 கோடியும், குஜராத் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |