Tamil Star |
- உலகக்கோப்பை கபாடி இறுதி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா கோப்பையை 4-வது முறையாக வென்றது
- இயற்கைக்கு முரணான ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க முடியாது
- இலங்கை அரசுக்கு மார்ச் மாதம் ஜெனிவாவில் பேரதிர்ச்சி காத்திருக்கின்றது: மன்னார் ஆயர் எச்சரிக்கை!
- வெள்ளிகிழமையில் அபாயம் ஏற்படுமாம்! ஜேர்மன்
- தொப்பி, பர்தா அணிந்த புகைப்படங்களுக்கு அனுமதியில்லை என்பது மனித உரிமை மீறல்
- மதுரைக்காரர்கள் மிகவும் பாசமானவர்கள்! வியப்பில் நெதர்லாந்து மனிதன்
- கதவை பூட்டியதால் தூக்கில் தொங்கிய கள்ளக்காதலர்கள்!
- இலங்கை குறித்து கருத்து வெளியிட முடியாது – ஜப்பான்
- ‘ஆண்டிராய்டு மொபைல்’: மாணவனின் சாதனை
- ஆபிரிக்க நாடுகளுடான உறவு இலங்கைக்கு முக்கியமானது – மகிந்த
| உலகக்கோப்பை கபாடி இறுதி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா கோப்பையை 4-வது முறையாக வென்றது Posted: 15 Dec 2013 03:52 PM PST உலகக்கோப்பை கபாடி இறுதி போட்டி பஞ்சாப் மாநிலம் லுதியானா குருனானக் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் சுக்பீர் சரவான் தலைமையிலான இந்திய அணி, பாபர் குஜ்ஜர் தலைமையிலான பாகிஸ்தான் அணியை சந்தித்தது. இப்போட்டியை பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் கண்டுரசித்தனர். பாகிஸ்தான் பஞ்சாப் முதல்வர் ஷாபாஸ் ஷரீப்பும் இப்போட்டியை கண்டு ரசித்தார். பாகிஸ்தான் ஆட்ட தொடக்கத்திலேயே முதலாவதாக ஒரு […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இயற்கைக்கு முரணான ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க முடியாது Posted: 15 Dec 2013 03:28 PM PST ‘ஓரினச்சேர்க்கை குற்றமல்ல’ என்று டெல்லி ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த தீர்ப்பினை ரத்து செய்தது. ‘இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377-ன்கீழ் ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்தான், அந்த சட்டப்பிரிவு இருக்கிறவரை ஓரினச்சேர்க்கையை குற்றம் அல்ல என்று கோர்ட்டு கூற முடியாது’ என சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்ற கருத்து நிலவி […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை அரசுக்கு மார்ச் மாதம் ஜெனிவாவில் பேரதிர்ச்சி காத்திருக்கின்றது: மன்னார் ஆயர் எச்சரிக்கை! Posted: 15 Dec 2013 11:24 AM PST ‘மற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்காமல் தான் தோன்றித்தனமாகச் செயற்பட்டு வரும் இலங்கை அரசுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் பேரதிர்ச்சி காத்திருக்கின்றது’ என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘தமிழ் மக்களுக்கான சகல உரிமைகளையும் வழங்காவிடின் சர்வதேச சமூகத்தால் இலங்கை அரசு தூக்கியெறியப்படும் காலம் தொலைவில் இல்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்தவாரம் கத்தோலிக்க ஆயர் பேரவை விடுத்துள்ள சுற்றுநிரூப ஆவணத்தை இலங்கை அரச தரப்பினரும், சிங்கள இனவாதிகளும் விமர்சிப்பதை […] |
| வெள்ளிகிழமையில் அபாயம் ஏற்படுமாம்! ஜேர்மன் Posted: 15 Dec 2013 11:11 AM PST ஜேர்மன் மக்கள் வெள்ளிகிழமை மற்றும் 13 என்ற திகதி வரும் நாட்களில் சாலைகளில் வாகனம் ஓட்டி செல்வது அபாயகரமானது என கருதுவதாக புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டில் 13 என்ற திகதி மற்றும் வெள்ளிகிழமை என தொடர்ந்து மூன்று முறை வந்ததால் மொத்தம் 1,197 மக்கள் கொலை மற்றும் படுகாயத்திற்குள்ளாகியுள்ளனர். 13 என்ற திகதியில் வரும் வெள்ளியன்று மட்டும் 1253 இறப்புகள் நிகழ்கின்றன .இந்நாளில் வாரயிருதி என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். இது மற்ற […] |
| தொப்பி, பர்தா அணிந்த புகைப்படங்களுக்கு அனுமதியில்லை என்பது மனித உரிமை மீறல் Posted: 15 Dec 2013 10:57 AM PST புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஆள் அடையாள அட்டையில் தொப்பி மற்றும் பெண்களின் பர்தா போட்ட புகைப்படங்களுக்கு அனுமதியில்லை என்பது இந்த நாட்டில் அரங்கேறும் மற்றுமொரு மனித உரிமை மீறலாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்தார். மேற்படி ஆளடையாள அட்டை சம்பந்தமான ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முஸ்லிம் பெண்களைப் பொறுத்த வரை அவர்கள் பகிரங்க இடங்களில் தலை மூடியிருப்பது சமயச் சட்டமாக இருப்பதுடன் அவர்களின் கலாச்சாரமாகவும் […] |
| மதுரைக்காரர்கள் மிகவும் பாசமானவர்கள்! வியப்பில் நெதர்லாந்து மனிதன் Posted: 15 Dec 2013 10:41 AM PST மதுரைக்காரர்கள் மிகவும் பாசமானவர்கள் என்று சைக்கிளிலேயே உலக சுற்றுப்பயணம் செய்யும் நெதர்லாந்து சுற்றுலா பயணி தெரிவித்துள்ளார். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ராபர்ட் ஜான்(53) இவருக்கு சைக்கிளில் உலகை வலம் வருவது மிகவும் பிடித்தமான ஒன்று. இதுதவிர நீச்சல், பனிச்சறுக்கு உள்ளிட்ட விடயங்களில் ஆர்வம் உள்ளவர். கடந்த நவம்பர் மாதம் இந்தியா வந்துள்ளார். நாட்டின் முக்கிய இடங்களை சைக்கிளிலேயே வலம் வந்த இவர் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வழியே சைக்கிளில் சென்று வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்களின் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| கதவை பூட்டியதால் தூக்கில் தொங்கிய கள்ளக்காதலர்கள்! Posted: 15 Dec 2013 10:11 AM PST சேலம் மாவட்டத்தில் கள்ளக்காதல் ஜோடியினை வீட்டுக்குள் வைத்து பூட்டியதால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். சேலம் மாவட்டம், சந்தியூர் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி மணிமேகலை(30). இந்தத் தம்பதிக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உண்டு. இந்நிலையில் மணிமேகலை தனது தாய் வீட்டுக்கு அருகே வசித்து வந்த 27 வயதான அருள் என்ற நபருடன் கள்ளக்காதலில் வீழந்தார். பல காலமாக இது நீடித்துள்ளது. அருளுக்கும் திருமணமாகி, மனைவி, […] |
| இலங்கை குறித்து கருத்து வெளியிட முடியாது – ஜப்பான் Posted: 15 Dec 2013 09:57 AM PST இலங்கை மீதான யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டு குறித்து கருத்து வெளியிட முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் பிரித்தானியா தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்கப்பட்டால் அந்த நேரத்தில் ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என ஜப்பான் குறிப்பிட்டுள்ளது. இலங்கை விவகாரம் குறித்து பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இலங்கைக்கான […] |
| ‘ஆண்டிராய்டு மொபைல்’: மாணவனின் சாதனை Posted: 15 Dec 2013 09:45 AM PST 'ஆண்டிராய்டு கைப்பேசியில் ' ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை ஒகேம்பேட்டையை சேர்ந்தவர் எல்.ராஜசேகரன். இவருடைய மகன் சஞ்சீவி (20). இவர் சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து சஞ்சீவி நிரூபர்களிடம் கூறுகையில், பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து, ஏ.டி.எம். சென்டர்களில் ஏற்படும் கொள்ளை போன்ற நேரத்திலும் மேலும் விபத்து நடக்கும் போதும் அவசர மருத்துவ சிகிச்சை […] |
| ஆபிரிக்க நாடுகளுடான உறவு இலங்கைக்கு முக்கியமானது – மகிந்த Posted: 15 Dec 2013 09:05 AM PST ஏனைய நாடுகளின் உறவை காட்டிலும், ஆபிரிக்க நாடுகளுடனான உறவு இலங்கைக்கு முக்கியமானது என்பதை தாம் அறிந்து வைத்திருந்ததாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கென்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு அங்கு கென்யாவின் ஜனாதிபதி கென்யாட்டாவை சந்தித்து பேசும் போது அவர் இதனைத் தெரிவத்துள்ளார். 2005ம் ஆண்டு தாம் முதன் முதலில் ஜனாதிபதியாக பதவி ஏற்ற போது, அபிரிக்க நாடுகளுடனான உறவை புதுப்பிக்கும் வகையிலான வெளிநாட்டு கொள்கைகளை வகுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எந்த தருணத்திலும் ஆதரவளிப்பது ஆபிரிக்க நாடுகளே என்றும் […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |