Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அவுஸ்திரேலியாவின் புதிய சட்டம்

Posted: 25 Dec 2013 10:45 PM PST

Campus

Campusஅவுஸ்திரேலியாவில் மாணவர்கள் குண்டாவதை தவிர்க்க புதிய சட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு மற்றும் இளம் வயதில் ஏற்படும் நீரிழிவு நோய்க்கான காரணங்கள் குறித்த ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையில், பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் அதிக நேரம் அமர்ந்த வண்ணம் பாடங்களை கற்பதால் அவர்களுக்கு உடல் எடை அதிகரித்து, நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்று மாணவர்கள் நின்ற வண்ணம் பாடம் கற்கும் வகையில் வகுப்பறையை அமைத்துள்ளது.

இதுகுறித்து பள்ளி நிர்வாக அதிகாரி கூறுகையில், மாணவர்களுக்கு உயரத்தை அதிகரித்தும், குறைத்தும் பயன்படுத்தும் வகையிலான மேஜைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மேஜைகளின் உதவியுடன், மாணவர்கள் குறிப்பிட்ட, சில மணி நேரம் கண்டிப்பாக நின்றபடியே பாடங்களை கவனிக்க வேண்டும்.

விருப்பப்படும் மாணவர்கள், முழு நேரமும் நின்றபடியே பாடங்களை கவனிக்கலாம்.

மாணவர்கள் நீண்ட நேரம் அமர்ந்த வண்ணம் பாடங்களை கவனிப்பதால், அவர்களின் தசைகளின் செயல்பாடு குறைந்து விடுகிறது.

நின்றபடி பாடங்களை கவனிப்பதாலும், பிற வேலைகளில் ஈடுபடுவதாலும் தசைகளின் வலிமை அதிகரிப்பதால் கொழுப்பு குறைக்கப்பட்டு உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

இந்த முறையை பின்பற்றும் மாணவர்களின் செயல்திறன், ஞாபகசக்தி, உடல் எடை மாற்றம், உடலில் ஏற்படும் வேறு சில மாற்றங்கள் போன்றவை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை செய்யப்படும்.

மாணவர்களின் உடலில் ஏற்படும் மாற்றத்தைப் பொருத்து, இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், கணனி மூலம் பாடம் நடத்தும் நடைமுறையும், தேவைக்கு அதிகமான அளவில் உண்பதும், உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்காததுமே மாணவர்களின் உடல்எடை அதிகரிப்பதற்கு காரணம்.

அதனை தவிர்க்க திட்டம் தீட்டாமல், நின்றபடியே பாடம் படிக்க சொல்வது நகைப்புக்கு உரியது என கருத்து தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கிறிஸ்துமஸ் தினத்தில் புயல் மழையால் இங்கிலாந்தில் மின்தடை

Posted: 25 Dec 2013 10:31 PM PST

christmas-lights-tree-xmas-Favim.com-302181

christmas-lights-tree-xmas-Favim.com-302181இங்கிலாந்தில் கடந்த சில தினங்களாக கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசி வருகிறது. புயல் எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் அங்கு மின்தடை ஏற்பட்டது. கிறிஸ்துமஸ் தினமான இன்று காலை மின்சாரம் தடைபட்டதால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டன. மின்சாரம் வழங்கும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மின்தடை காரணமாக தென்மேற்கு இங்கிலாந்து பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மோசமான வானிலை காரணமாக விமான, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளாதக தக்வல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய கின்னஸ் சாதனை படைக்க துடிக்கும் துபாய்

Posted: 25 Dec 2013 10:22 PM PST

NYs-Celebrations-2012-Downtown-Dubai

NYs-Celebrations-2012-Downtown-Dubaiவினோதமான சாதனைகள் முதல் பிரம்மிக்கவைக்கும் சாதனைகள் என ஐக்கிய அரபு குடியரசு நாடு இதுவரை கிட்டத்தட்ட 150 உலக சாதனைகளை படைத்துள்ளது. இந்த நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் துபாய் பிரதேசம் கின்னஸ் சாதனைகளை குவிக்க துடிக்கும் பகுதியாகும்.

எண்ணெய் வளம் கொழிக்கும் இந்த துபாய் நகரம் வரும் புத்தாண்டு தினத்தன்று மிகப்பெரிய அளவிலான வான வேடிக்கை ஒன்றை நடத்தி பழைய வான வேடிக்கை சாதனையை முறியடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பாம் ஜுமெரியா பகுதிக்கும் உலகத்தீவுப்பகுதிக்கும் இடைப்பட்ட 100 கிலோ மீட்டர் பரப்புடைய கடல் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்கவர் வானவேடிக்கைக்காக 200 வானவெடிக்கை வீரர்கள் 100 கம்யூட்டர்கள் துணையுடன் 400 இடங்களில் 4 லட்சம் வானவேடிக்கைகளை நிகழ்த்தவுள்ளனர். இதில், பறக்கும் பருந்து, 10 கிலோ மீட்டர் அகலமுள்ள சூரிய உதயம், தேசியக்கொடி, வானில் 6 நிமிட வானவேடிக்கை நடன நிகழ்ச்சி என கண்கொள்ளாக் காட்சிகளை கண்டு ரசிக்கமுடியும்.

வேடிக்கை பார்க்க வரும் மக்களுக்கும், சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கும் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும் என்று துபாய் நிர்வாகம் கூறியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹைதி நாட்டில் படகு விபத்து: 18 பேர் பலி

Posted: 25 Dec 2013 10:04 PM PST

150904-99-aboard-asylum-seeker-boat

150904-99-aboard-asylum-seeker-boatகரிபியன் தீபகற்ப பகுதிகளில் உள்ள ஹைதி நாட்டின் கடற்பகுதியில், 50 பேர் கொண்ட ஒரு குழுவினர் நேற்று காலை துர்க் மற்றும் கார்காய்ஸ் தீவுகளுக்கிடையே பாய்மரப்படகில் பயணித்துக்கொண்டிருந்தனர். இதைக்கண்ட மீட்புக்குழுவினர் அந்த படகை துறைமுகம் நோக்கி இழுத்து வந்தனர்.

வெளிநாடுகளில் தஞ்சம் புகும் நோக்கில் சென்ற நிறைய பேர் அந்த சிறிய படகில் இருந்ததால் வரும் வழியில் அது கவிழ்ந்தது. இதில் படகிலிருந்து விழுந்த 50 பேரும் கடல் நீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். உடனடியாக இழுவை போட்டில் இருந்தவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 32 பேரை காப்பாற்றினர். ஆனால், 18 பேரின் உயிரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

சம்பவப்பகுதிக்கு அமெரிக்க கடற்காவல் படையினர் ஹெலிகாப்டர்களில் விரைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டவர்களை துர்க்ஸ் மற்றும் கார்க்காய்ஸ் குடியிரிமை தடுப்பு மையங்களில் அடைத்து வைத்துள்ளனர். மேலும் இதுபோன்று சட்டவிரோதமாக குடிபுக சென்றார்களா என்பது பற்றி ஹைதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2010-ம் ஆண்டு ஹைதியில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்புகளில் இருந்து மீளத்துடிக்கும் மக்கள் அங்கிருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர் என்று குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தப்ப முயன்ற எகிப்து முன்னாள் பிரதமர் கைது

Posted: 25 Dec 2013 10:00 PM PST

arrest

arrestஎகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்சியின் இடைக்கால அரசில் பிரதமராக இருந்தவர் காண்டில். இவர் பதவியில் இருந்தபோது 1996–ம் ஆண்டில் தனியார் மயமாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை மீண்டும் தேசிய மயமாக்க ஆளுங்கட்சி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை காண்டில் ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்து அவருக்கு எகிப்து கோர்ட்டு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து கெய்ரோ கோர்ட்டில் அப்பீல் செய்தார். அங்கு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் வெளியில் தலை காட்டாமல் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் காண்டில் சூடான் நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றார். இதற்காக தலைநகர் கெய்ரோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பாலைவனம் வழியாக சென்ற போது அவரை போலீசார் கைது செய்தனர். காண்டில் கைது செய்யப்பட்டதை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தேவ்யானி கைது: சிறிய தவறால் நடந்த விபரீதம்

Posted: 25 Dec 2013 09:32 PM PST

விசா விண்ணப்பத்தில் பணிப்பெண் குறிப்பிடப்பட்ட விவரங்களை, அமெரிக்க அதிகாரி மார்க் ஸ்மித் தவறாக புரிந்துகொண்டதே தேவயானி கோப்ரகடே கைதுக்கு காரணம் என அவரது வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் தெரிவித்துள்ளார். விசா விண்ணப்பத்தில் படிவம் டி.எஸ்.160 ல் தனது சம்பளம் 4500 டொலர் என்று தேவ்யானி குறிப்பிட்டிருந்தார். இதனை சங்கீதா ரிச்சர்டு எதிர்பார்த்த சம்பளமாகவும், ஆனால் தேவ்யானி, சங்கீதாவுக்கு 1560 டொலர் தர சம்மதித்தாகவும் தவறாக புரிந்து கொண்ட மார்க் ஸ்மித், தனது விசாரணையில் தேவ்யானி குற்றவாளி என […]

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரியா தொடர்பில் பாப்பரசர் எச்சரிக்கை

Posted: 25 Dec 2013 09:15 PM PST

சிரியாவுக்கான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்குமாறு, பாப்பரசர் பிரான்ஸிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். வத்திக்கானில் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிரியாவில் இடம்பெறுகின்ற மோதல்கள் சமாதானமாக நிறைவடைய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஐரோப்பிய நாடுகளுக்குள் பிரவேசிக்க முற்படும் அகதிகளுக்கு எதிராக, வன்முறைகளும், பாரபட்சமும் காட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று சுனாமி நினைவு தினம்: மாயமான 3 மகள்களை 10 ஆண்டுகளாக தேடும் தாயின் பரிதாபம்

Posted: 25 Dec 2013 07:19 PM PST

கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந்தேதி தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்து, 10–ம் ஆண்டு தொடங்குகிறது. இந்த சுனாமிக்கு தனது கணவரின் உயிரை பறிகொடுத்து விட்டு அன்று முதல் மாயமான 3 மகள்களையும் கடந்த 10 ஆண்டுகளாக தேடி வரும் ஒரு தாயின் நிலைமையை நினைத்து பார்க்க பரிதாபமாக உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:– சென்னையை அடுத்த தாம்பரம் பெருங்களத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் செண்பகவள்ளி […]

This posting includes an audio/video/photo media file: Download Now

65ஆயிரம் போலி தேசிய அடையாள அட்டைகள்

Posted: 25 Dec 2013 06:58 PM PST

நாடு முழுவதிலும் 65 ஆயிரம் போலி தேசிய அடையாள அட்டைகள் உலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது வெளியிடப்பட்ட அடையாள அட்டைகளில் பல போலியானவை. இவற்றில் உள்ளடக்கப்பட்ட தகவல்கள் பிழையானவை என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார். எனது அடையாள அட்டை சரியானதா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. தற்போது பாவனையில் உள்ள தேசிய அடையாள அட்டைகள் தரமற்றவை. நீண்ட காலம் பயன்படுத்தவும் முடியாது. பல்வேறு தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை என்றார். […]

This posting includes an audio/video/photo media file: Download Now

தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சர்வதேச சட்டம் இயற்றுவது கடினம்

Posted: 25 Dec 2013 06:37 PM PST

சர்வதேச ரீதியாக தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில், புதிய சட்டம் இயற்றுவது கடினமான செயல்திட்டம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதி நிரந்தர பிரதிநிதி பாலித்த கொஹன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஆறாவது குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பும் அதுவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த குழுவினால், தீவிரவாதத்திற்கு எதிராக சர்வதேச சட்டத்தை அமைக்கும் வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. நியூயோக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் உள்ள சிங்வா செய்திச் சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™