Tamil Star |
- ஊடகங்களை சட்டங்களால் அடக்க முடியாது – துமிந்த சில்வா
- மக்களுக்கு எதிரான கொள்கைகளை பின்பற்றி வருவதால் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு அதிகரிப்பு
- துபாயில் 96.7 எப்.எம். மலையாள வானொலி தொகுப்பாளர்கள் கின்னஸ் சாதனை
- ஆளும் கட்சியில் இணையும் உத்தேசம் கிடையாது – சரத் பொன்சேகா
- வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தடை
- தடுமாறும் இந்திய அணி: ஆறுதல் வெற்றிக்கு முயற்சிக்குமா?
- மைசூர் மகாராஜா ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மரணம்
- கொலை பட்டியலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பெயர் முதலிடத்தில்
- நெல்சன் மண்டேலாவை முன்னுதாரணமாக கொண்டு இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும் – பிரித்தானியா
- சர்வதேச மனித உரிமை தினத்திலும் கூட அரசின் மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல் – சமகி அமைப்பு
| ஊடகங்களை சட்டங்களால் அடக்க முடியாது – துமிந்த சில்வா Posted: 11 Dec 2013 07:30 PM PST
ஊடகங்கள் என்பது உதாசீனம் செய்யக் கூடிய விடயமல்ல. ஊடகங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் காணப்படுகின்றது. தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது, சுயாதீன கருத்துக்களை வெளியிடுமாறு கோருகின்றேன். சில ஊடகவியலாளர்கள் தகவல்களை திரிபுபடுத்தி செய்தி வெளியிடுகின்றனர் என துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மக்களுக்கு எதிரான கொள்கைகளை பின்பற்றி வருவதால் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு அதிகரிப்பு Posted: 11 Dec 2013 09:31 AM PST
ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு முதுகெலும்பு கிடையாது எனவும், பிரதேச சபை உறுப்பினர்கள் தைரியமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரவு செலவுத் திட்டம் ஒர் வெற்றுப் பேப்பராகவே மக்கள் கருதுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதனை விடவும் அரசாங்கம் நாய்களுக்கு நலன்களை வழங்குவதில் நாட்டம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கெரில்லா பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பொதுப்போக்குவரத்தில் செல்வதற்கு தடுமாறி வரும் தருணத்தில் அரசாங்கம் இரவு கார்பந்தயங்களை நடாத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தம்மை ஏமாற்றி வருவதனை மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| துபாயில் 96.7 எப்.எம். மலையாள வானொலி தொகுப்பாளர்கள் கின்னஸ் சாதனை Posted: 11 Dec 2013 09:20 AM PST
"தல்கதோன்" என்ற இசை நிகழ்ச்சியை அவர்கள் இருவரும் 84 மணிநேரம் 15 நிமிடங்கள் வரை தொடர்ந்து நிகழ்த்தி கின்னஸ் சாதனை புரிந்தனர். வியாழன் மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியானது ஞாயிறன்று இரவு 10.12 மணியளவில், பழைய கின்னஸ் சாதனையான ஹாட் எப்.எம். என்ற வானொலி நிறுவனத்தில் 77 மணிநேரம் 11 நிமிடங்கள் வரை நடந்த சாதனையை முறியடித்தது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியானது அதைத்தொடர்ந்து திங்கள் காலை 5 மணிக்கு முடிவு பெற்றது. இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்த அவர்கள் 2 மணி 35 நிமிடங்களுக்கு இடைவேளை எடுத்துக்கொண்டனர். இதையடுத்து சிந்துவும், மிதுனும் மீண்டும் தனது வழக்கமான மாலை 5 மணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த கின்னஸ் சாதனையை, எக்ஸ்போ-2020 என்ற வர்த்தக கண்காட்சியை வென்ற துபாய்க்காக அவர்கள் அர்ப்பணித்தனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆளும் கட்சியில் இணையும் உத்தேசம் கிடையாது – சரத் பொன்சேகா Posted: 11 Dec 2013 09:14 AM PST
அரசாங்கத்துடன் இணையும் உத்தேசம் கிடையாது ஆனால் அரசாங்கத்தை கவிழ்க்கும் எந்தவொரு சக்தியுடனும் இணைந்து செயற்படத் தயார். தாம் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக வெளியான தகவல்கள் சர்வாதிகாரிகளின் சூழ்ச்சித் திட்டமாகக் கருதப்பட வேண்டும், எவ்வளவு நெருக்கடிகளை எதிர்நோக்கினாலும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் திட்டமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தடை Posted: 11 Dec 2013 09:02 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| தடுமாறும் இந்திய அணி: ஆறுதல் வெற்றிக்கு முயற்சிக்குமா? Posted: 11 Dec 2013 08:41 AM PST
ஆனால், தென் ஆப்பிரிக்க சென்ற பின் நிலைமை தலைகீழானது. முதல் ஆட்டத்தில் பெளலர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். ஆனால் 2-வது ஆட்டத்தில் 280 ரன்களில் தென் ஆப்பிரிக்காவைக் கட்டுப்படுத்தினர். இரண்டு ஆட்டங்களிலும் பேட்ஸ்மேன்கள் தான் அதிகம் ஏமாற்றினர். இந்திய ஆடுகளங்களில் எதிரணி பெளலர்களை கதிகலங்க வைத்த பேட்ஸ்மேன்கள், ஜோஹன்னஸ்பர்க் மற்றும் டர்பனில் ஸ்டெயின், சாட்சோபே, மோர்கல் மற்றும் மெக்லரன் வேகத்தில் மிரண்டு நின்றனர். குறிப்பாக ஸ்டெயின் ஸ்விங், பெளன்ஸர் மற்றும் வேகத்தில் அச்சுறுத்தினார். போராட்ட குணம் படைத்த விராட் கோலி, இரட்டை சதம் அடித்த ரோஹித் மற்றும் ஷிகர் தவன் ஆகிய டாப் ஆர்டர்கள் முதல் 10 ஓவர்கள் வரை நிலைத்து நிற்காததால் மிடில் ஆர்டர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 2-வது ஆட்டத்தில் இந்திய பெளலிங் பரவாயில்லை தானே தவிர, ஓஹோ என பாராட்டும்படி இல்லை. தென் ஆப்பிரிக்க பெளலர்கள் போல, இந்திய பெளலர்கள் அந்த அணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தவில்லை. தென் ஆப்பிரிக்க அணிக்கு பேட்டிங், பெளலிங் என இரண்டு தரப்பும் சிறப்பாக உள்ளது. தொடக்க வீரர்கள் டி காக், ஆம்லா இருவரும் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுப்பதால், பின் வரிசையில் இறங்குபவர்கள் நெருக்கடி இல்லாமல் ஆடுகின்றனர். 30 முதல் 35 ஓவர்கள் வரை தொடக்க ஜோடியை வீழ்த்த முடியாமல் இந்திய பெளலர்கள் திணறுவது பரிதாபத்துக்குரியது. தற்போது ஓரளவு தென் ஆப்பிரிக்க சூழல் இந்திய வீரர்களுக்கு பரிச்சயமாகி இருக்கும். ஏற்கனவே தொடரை வென்று விட்டதால் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக, முக்கியத்துவம் இல்லாத 3-வது ஆட்டத்தில் மூத்த வீரர் காலிஸ் மற்றும் வேகப்புயல் ஸ்டெயின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்க தென் ஆப்பிரிக்கா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, இதை இந்திய அணியினர் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்வர் என நம்பலாம். சூழல் பிரச்னை அல்ல ரோஹித் கூறியது: டர்பனில் இருந்த சூழல் இந்தியாவில் இருக்கும் சூழலை ஒத்திருந்தது. எனவே, சூழல் ஒரு பிரச்னை அல்ல. பேட்ஸ்மேன்கள் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைக்காததே தோல்விக்கு காரணம். இன்னும் ஒரு ஆட்டம் மீதமுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்படுவர் என நம்புகிறேன். டெஸ்ட் தொடர் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். இருப்பினும் டெஸ்ட் தொடருக்கு இன்னும் நாள்கள் இருப்பதால், இப்போதைக்கு அதில் கவனம் செலுத்தவில்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி அணியின் வெற்றியில் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார். பயிற்சியில் கோபப்பட்டு களத்தில் பொங்கிய ஸ்டெயின் இந்தத் தொடரில் இந்திய அணிக்கு கிலி ஏற்படுத்தும் சிம்ம சொப்பனம் ஸ்டெயின். இவர் தன் முதல் ஸ்பெல்லில், சொல்லி வைத்தாற்போல இந்திய டாப் ஆர்டரை வீழ்த்தி அணியின் வெற்றியை எளிதாக்குகிறார். ஒருநாள் தொடருக்கு அவர் தயாரான விதம் குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. முதல் ஒருநாள் ஆட்டத்துக்கு முன்னதாக ஜோஹன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்க அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். பயிற்சி முடியும் தருணத்தில் ஸ்டெயின் வழக்கத்துக்கு மாறாக பேட்டிங் பயிற்சி எடுத்துள்ளார். ஆனால், பந்து அவரது பேச்சைக் கேட்டது போல பேட் அவருக்கு கட்டுப்படவில்லை. சுற்றிச் சுற்றி அடித்தும் பந்து நீண்ட தூரம் செல்லவில்லை. சில சமயம் போல்டாகியுள்ளார். இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த ஸ்டெய்ன், வலைப்பயிற்சியின்போது பேட்டைக் கொண்டு ஸ்டெம்புகளை ஓங்கி அடித்துள்ளார். இதை களத்தில் இருந்த பயிற்சியாளர் ரஸல் டொமிங்கோ, கேப்டன் டி வில்லியர்ஸ் மற்றும் சக வீரர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளனர். யாரும் ஸ்டெயினை சமாதானம் செய்யவில்லை. மாறாக வீரர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். காரணம், ஆட்டம் தொடங்கும் முதல்நாள் ஸ்டெயின் அதிக கோபத்தில் இருந்தால், மறுநாள் அது அவரது பந்துவீச்சில் எதிரொலிக்கும் என்பது தென் ஆப்பிரிக்க வீரர்களின் கணிப்பு. அதன்படியே அவர்கள் கணிப்பு பலித்தது. ஆட்டம் முடிந்த பின் ஸ்டெயின் பேட்டி அளிக்கையில் ""என்னைப் போலவே மோர்கலையும் சக வீரர்கள் கோபப்படுத்தி இருந்தால் இன்னொரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் கிடைத்திருப்பார்" என்றார். ஸ்டெயின் வேகத்தைப் பார்த்து நாங்கள் பயப்படவில்லை என விராட் கோலி தெரிவித்தாலும், அவரது பந்தைத் தொட பயந்தனர் என்பது உண்மை. முதல்நாள் ஆட்டத்தில் ஸ்டெயின் வீசிய 15 பந்தை ரோஹித் தொடவே இல்லை. ஒருவழியாக பந்தை பேட்டில் வாங்க முயற்சித்தபோது அவர் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். ஒருநாள் ஆட்டத்தில் இரட்டைச்சதம் அடித்த ரோஹித் பந்தைத் தொடவே தடுமாறுவது ஆச்சர்யமளிக்கிறது என ஸ்டெயின் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. உலகம் போற்றும் ஒரு பேட்ஸ்மேனை அவர் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேற்றுவதை விட அவரை நீண்டநேரம் களத்தில் நிற்க வைத்து, தன் பந்தில் தடுமாற வைக்க வேண்டும் என்பதே ஸ்டெயின் திட்டம் போலும். ரோஹித் விஷயத்தில் நடந்ததும் அதுவே. சச்சின் இல்லாதது எங்களுக்கு சாதகம்: ஒருநாள் தொடரிலேயே தடுமாறும் நிலையில், டெஸ்ட் தொடரில் இந்திய அணி எந்தளவு சாதிக்கும் எனத் தெரியவில்லை. சச்சின் ஓய்வுபெற்ற பின் இந்திய அணி பங்கேற்கும் முதல் டெஸ்ட் தொடர் இது. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டொமிங்கோ கூறுகையில், ""இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர் சச்சின்.ஓய்வு அறையில் வீரர்களுக்கு ஊக்க சக்தியாக விளங்கிய சச்சின் இல்லாதது இந்திய அணிக்குப் பின்னடைவே. தற்போது அவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டுமே என நாங்கள் சிந்திக்க வேண்டியதில்லை. தென் ஆப்பிரிக்க அணியின் பணியை சச்சின் எளிதாக்கி விட்டார்" என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மைசூர் மகாராஜா ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மரணம் Posted: 11 Dec 2013 08:10 AM PST
மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார். இவர் கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கொலை பட்டியலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பெயர் முதலிடத்தில் Posted: 11 Dec 2013 07:52 AM PST
இந்தியாவில் அப்பாவிகளை குறிவைத்து இந்தியன் முஜாஹிதின் என்ற தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அமைப்பானது மற்ற தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து சமீபத்தில் நேபாளத்தில் ரகசிய கூட்டம் நடத்தியது. அதில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும், எம்.பி.யும் பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளருமான ஷானவாஸ் ஹூசைனையும் கொல்ல திட்டமிட்டுள்ளதாக பீகார் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தியன் முஜாஹிதின் தீவிரவாத அமைப்பின் கொலை பட்டியலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பெயர் முதலிடத்தில் உள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பாட்னா பொலிசாரிடம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பீகார் காவல்துறையும், புலனாய்வு அமைப்புகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. மோடிக்கு அடுத்து பாரதிய ஜனதா தலைவர் ஷானாவாஸ் ஹூசைன் இந்த கொலைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அடிக்கடி பீகார் சென்றுவரும் அவருக்கும் ஆபத்து இருக்கிறது. இதனால் இவர்களது பாதுகாப்பு குறித்து பீகார் பொலிசார் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். சமீபத்தில் பீகார் மாநிலம் பாட்னா பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசுவதற்கு முன்பு அந்த மைதானத்திலும் அதனை சுற்றியுள்ள 7 இடங்களிலும் குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த வாரம் பீகாரில் மாவோயிஸ்ட் நடமாட்டமுள்ள பகுதிகளில் மூத்த பாரதீய ஜனதா தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் பீகார் புலனாய்வு அதிகாரிகளின் எச்சரித்தனர். இதையடுத்து அப்பகுதி மாவட்ட கண்காணிப்பு பொலிஸ் அதிகாரிகள் மிகவும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| நெல்சன் மண்டேலாவை முன்னுதாரணமாக கொண்டு இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும் – பிரித்தானியா Posted: 11 Dec 2013 07:44 AM PST
தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நெல்சன் மண்டேலாவின் முன்னுதாரணத்தை அன்றி, வேறும் வழிகளில் பின்பற்றி இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காயங்களை ஆற்றுவதற்கு மண்டேலாவின் வழியே சிறந்த வழி என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன சமூகங்கள் சமாதானத்திற்காக தொடர்ந்தும் போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மன்னிப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான கொள்கைகளை மண்டேலா பின்பற்றியதாகத் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சர்வதேச மனித உரிமை தினத்திலும் கூட அரசின் மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல் – சமகி அமைப்பு Posted: 11 Dec 2013 07:34 AM PST
அமைதியாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மீது அரசாங்கம் வன்முறையாளர்களை ஏவி தாக்குதல் நடத்திய சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சமகி அமைப்பின் உறுப்பினர்கள், நவசமசமாஜ கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் காணாமல் போனவர்களை தேடி அறியும் குழுவின் பணிப்பாளரான சுதந்திரம் மகேந்திரன் உட்படட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச மனித உரிமை தினத்திலும் கூட அரசாங்கம் மிலேச்சத்தனமாக மனித உரிமைகளை மீறியுள்ளது. சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மட்டுமல்ல, மகிந்த ராஜபக்ஷ தலைவராக இருக்கும் பொதுநலவாயத்தின் கொள்கைகளையும் இந்த அரசாங்கம் ஐந்து சதத்திற்கும் மதிக்காது என்பது இந்த சம்பவம் மூலம் தெளிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து முறைப்பாடு செய்ய திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது, முறைப்பாட்டை பொலிஸார் ஏற்க மறுத்து விட்டனர். இதன் மூலம் மனித உரிமைகளை பாதுகாக்கும் அரசாங்கத்தின் உண்மையான நிர்வாண தோற்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒருபோதும் மக்களின் உரிமைகளை வழங்க போவதில்லை என்பது இந்த சம்பவங்கள் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளன. மக்கள் உரிமைகளை பெறவேண்டும் என்றால் வீதியில் இறங்கி போராட வேண்டும் என சமகி அமைப்பு விடுத்தள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |













