மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இலங்கை கடற்படைக்கு பயிற்சி: டெல்லி மேல்சபையில் கனிமொழி எதிர்ப்பு
- சத்தீஸ்கர் மாநில முதல்வராக ராமன் சிங் பதவியேற்றார்
- தெலுங்கானா குறித்து முடிவு செய்ய ஆந்திர சட்டசபைக்கு 6 வார கால அவகாசம்: பிரணாப் முகர்ஜி
- திருவனந்தபுரம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: சென்னை ரெயில் தப்பியது
- டெல்லி விமான நிலையத்தில் பயங்கர விபத்து தவிர்ப்பு: ராகுல் உயிர் தப்பினார்
- டெல்லியில் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவுக்கு கவர்னர் அழைப்பு
- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக் குறைவு: ஹசாரே உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளமாட்டார்
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டம்?: பா.ஜனதா எதிர்ப்பு
- ஹசாரேயின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க கூடாது: தொண்டர்களுக்கு ‘ஆம் ஆத்மி’ கட்சி தடை
- ஆந்திர எம்.பி.க்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜனதா ஆதரிக்குமா?: அத்வானி பேட்டி
- கேரள மாநிலத்தில் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம்
- மிசோரம் மாநிலத்தில் முதல்-மந்திரியாக லால் தன்காவ்லா 14ந்தேதி பதவி ஏற்பு
- ஹெலிகாப்டர் ஊழல்: ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை - ஏ.கே. அந்தோணி
- பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி ராஜூவ் சுக்லா பதவி விலக வேண்டும்: பா.ஜனதா வலியுறுத்தல்
- புதுடெல்லியில் வீட்டில் இருந்து ஓடிய சிறுமி நான்கு பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு
- சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜி.எஸ்.சிங்வி ஓய்வு பெற்றார்
- மேற்குவங்காளத்தில் ஆசிரமத்தில் புகுந்து சாமியார் சுட்டுக்கொலை
- ஜம்மு காஷ்மீரில் ஆம்புலன்சை நிறுத்தி சோதனை செய்ததால் நோயாளி பாதி வழியில் சாவு: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
- காங்கிரஸ்- பாஜக இணைந்து டெல்லியில் ஆட்சி அமைக்க வேண்டும்: கெஜ்ரிவால் யோசனை
- அசாம் என்கவுண்டரில் 2 பேர் சுட்டுக்கொலை: போலீஸ் நிலையம் மீது பொதுமக்கள் தாக்குதல்
| இலங்கை கடற்படைக்கு பயிற்சி: டெல்லி மேல்சபையில் கனிமொழி எதிர்ப்பு Posted: 11 Dec 2013 11:00 PM PST இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பது குறித்தும், இந்திய மீனவர்கள், இலங்கையால் சிறைப் பிடிக்கப்படுவது குறித்தும், டெல்லி மேல்சபையில் விவாதிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. சபாநாயகரிடம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், சபா நாயகர் இதற்கு நேரம் ஒதுக்க மறுத்ததால், கனிமொழி தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர். |
| சத்தீஸ்கர் மாநில முதல்வராக ராமன் சிங் பதவியேற்றார் Posted: 11 Dec 2013 10:47 PM PST சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்த பாரதீய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் ராமன் சிங் இன்று அம்மாநில முதல்வராக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். ஆயுர்வேத மருத்துவரான ராமன் சிங் ராஜ்நண்ட்கோன் சட்டபேரவை தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அல்கா முத்லியாவை 35,886 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அல்கா முத்லியா, தர்பாவில் நடைபெற்ற மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த காங்கிரஸ் |
| தெலுங்கானா குறித்து முடிவு செய்ய ஆந்திர சட்டசபைக்கு 6 வார கால அவகாசம்: பிரணாப் முகர்ஜி Posted: 11 Dec 2013 10:40 PM PST தெலுங்கானா விவகாரம் குறித்து 6 வார காலத்திற்குள் முடிவெடுக்கும்படி ஆந்திர சட்டப்பேரவைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவகாசம் அளித்துள்ளார். இம்மசோதாவை நிறைவேற்றி தருமாறு ஆந்திர அரசுக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் பிரணாப் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஆந்திராவை இரண்டாக பிரிப்பது குறித்து சட்ட வல்லுனர்களிடம் விரிவான விளக்கங்களையும் அவர் கேட்டறிந்தார். தெலுங்கானா மாநிலத்திற்கு ஆந்திர மாநில முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது சட்டப்பேரவையில் இம்மசோதாவை வீழ்த்தியே தீருவோமென்றும், ஆந்திராவை இரண்டாக பிரிப்பதை ஒருபோதும் ஒத்துக்கொள்ளமாட்டோம் என சூளுரைத்தார். எப்படி இந்த மசோதா |
| திருவனந்தபுரம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: சென்னை ரெயில் தப்பியது Posted: 11 Dec 2013 09:22 PM PST கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது வர்க்கலை. இந்த பகுதியில் உள்ள சின்னமூடு–ஜனதா முக்கு பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. அந்த பகுதியைச் சேர்ந்த நிதுன், அஜித் ஆகிய 2 வாலிபர்கள் அந்த வழியாக சென்றபோது, தண்டவாளத்தில் |
| டெல்லி விமான நிலையத்தில் பயங்கர விபத்து தவிர்ப்பு: ராகுல் உயிர் தப்பினார் Posted: 11 Dec 2013 08:47 PM PST காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் தன் தாயாரின் தொகுதியான ரேபரேலிக்கு ஆய்வு நடத்துவதற்காக சென்றிருந்தார். ஆய்வு முடிந்து செசன்னா வகை சொகுசு தனி விமானத்தில் டெல்லிக்கு திரும்பினார் |
| டெல்லியில் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவுக்கு கவர்னர் அழைப்பு Posted: 11 Dec 2013 08:35 PM PST டெல்லி மாநில சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த ஒரு கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 70 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 36 எம்.எல்.ஏ.க்கள் பலம் வேண்டும். பா.ஜ.க. கூட்டணிக்கு 32 இடங்கள், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி |
| அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக் குறைவு: ஹசாரே உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளமாட்டார் Posted: 11 Dec 2013 08:24 PM PST ஜன லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வலியுறுத்தி காந்தியவாதி அன்னா ஹசாரே கடந்த சில நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த உண்ணாவிரத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கலந்து கொள்வார் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அக்கட்சி செய்திதொடர்பாளர் மணீஷ் சிசோடியா |
| பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டம்?: பா.ஜனதா எதிர்ப்பு Posted: 11 Dec 2013 07:39 PM PST பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த இந்த குறுகிய கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் பல்வேறு பிரச்சினைகளால் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இதனால், இந்த தொடரில் நிறைவேற்ற முடிவு செய்திருந்த பல்வேறு மசோதாக்களை, விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாமல் உள்ளது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசுகளையும் பரிசீலிக்க முடியவில்லை. |
| ஹசாரேயின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க கூடாது: தொண்டர்களுக்கு ‘ஆம் ஆத்மி’ கட்சி தடை Posted: 11 Dec 2013 07:20 PM PST பாராளுமன்றத்தின் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில், வலுவான லோக்பால் சட்டம் இயற்றக்கோரி பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம், ராலேகான்சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை என தகவல்கள் கூறுகின்றன. அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்தில் தனது கட்சித்தொண்டர்கள் பங்கேற்க வேண்டாம் என 'ஆம் ஆத்மி' கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக |
| ஆந்திர எம்.பி.க்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜனதா ஆதரிக்குமா?: அத்வானி பேட்டி Posted: 11 Dec 2013 07:10 PM PST தெலுங்கானா விவகாரத்தால் அதிருப்தி அடைந்துள்ள ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், இந்த தீர்மானத்தை பா.ஜனதா ஆதரிக்குமா? என்பது பற்றி பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அதற்கு அத்வானி கூறியதாவது:- ஆந்திர காங்கிரஸ் எம்.பி.க்களும், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும் முதலில் எங்களிடம் ஆதரவு கேட்டனர். இன்று (நேற்று) காலை, நாங்கள் |
| கேரள மாநிலத்தில் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் Posted: 11 Dec 2013 02:47 PM PST கேரள மாநிலத்தில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகைப்படிப்பது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. |
| மிசோரம் மாநிலத்தில் முதல்-மந்திரியாக லால் தன்காவ்லா 14ந்தேதி பதவி ஏற்பு Posted: 11 Dec 2013 02:24 PM PST 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநில தேர்தல் கடந்த மாதம் 25-ந்தேதி நடந்தது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. |
| ஹெலிகாப்டர் ஊழல்: ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை - ஏ.கே. அந்தோணி Posted: 11 Dec 2013 02:15 PM PST இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர்கள் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக அதிநவீனமானதும், அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதுமான 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை இத்தாலிய நிறுவனமான பின்மெக்கானிக்காவிடம் |
| பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி ராஜூவ் சுக்லா பதவி விலக வேண்டும்: பா.ஜனதா வலியுறுத்தல் Posted: 11 Dec 2013 01:45 PM PST பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி ராஜூவ் சுக்லாவும் அவரது மனைவியும் இணைந்து அந்தேரியில் நில மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. |
| புதுடெல்லியில் வீட்டில் இருந்து ஓடிய சிறுமி நான்கு பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு Posted: 11 Dec 2013 01:23 PM PST உத்தரதேச மாநிலம் கோராக்பூரை சேர்ந்த சிறுமி வீட்டு பிரச்சனை காரணமாக பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடியுள்ளார். அவர் ரெயில் மூலம் புதுடெல்லி சென்றுள்ளார். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. |
| சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜி.எஸ்.சிங்வி ஓய்வு பெற்றார் Posted: 11 Dec 2013 11:51 AM PST துணிச்சலான நீதிபதி என்று பெயர் எடுத்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜி.எஸ்.சிங்வி, இன்று ஓய்வு பெற்றார். அவருக்கு வயது 65. அவர் தனது 6 ஆண்டுகால சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பணிக்காலத்தில், சர்ச்சைக்குரிய பல |
| மேற்குவங்காளத்தில் ஆசிரமத்தில் புகுந்து சாமியார் சுட்டுக்கொலை Posted: 11 Dec 2013 10:42 AM PST மேற்குவங்காள மாநிலம் பர்டுவான் மாவட்டம் சன்ன கிராமத்தில் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் 65 வயது மவுன சாமியார் இருந்து வந்தார். இவர் ஆசிரமத்தில் 35 ஆண்டுகளாக தங்கி இறைபணியாற்றி வந்தார். |
| Posted: 11 Dec 2013 08:30 AM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அப்துல் கரிம் தார் என்ற 80 வயது முதியவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது உறவினர்கள் அவரை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஸ்ரீநகரில் இருந்து சுமார் 55 கி.மீ. |
| காங்கிரஸ்- பாஜக இணைந்து டெல்லியில் ஆட்சி அமைக்க வேண்டும்: கெஜ்ரிவால் யோசனை Posted: 11 Dec 2013 06:14 AM PST டெல்லி சட்டசபை தேர்தலில் 28 தொகுதிகளை வென்ற ஆம் ஆத்மி கட்சியினர் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்று கூடினர். இக்கூட்டத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:- நாங்கள் இங்கு கொண்டாடுவதற்கு கூடவில்லை. ஊழல் ஒழிக்கப்படுகிறவரை நாங்கள் கொண்டாடப்போவதில்லை. ஊழலுக்கு போராடி |
| அசாம் என்கவுண்டரில் 2 பேர் சுட்டுக்கொலை: போலீஸ் நிலையம் மீது பொதுமக்கள் தாக்குதல் Posted: 11 Dec 2013 05:25 AM PST அசாமில் சிராங் மாவட்டத்தின் மலைப்பகுதியில் மறைந்துகொண்டு என்.டி.எப்.பி. (சாங்பிஜிட்) போராளிகள் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை இங்குள்ள ருனிகடா போலீஸ் நிலைய சராகத்திற்கு உட்பட்ட ரெய்டுவோங்பாரி என்ற இடத்தில் போலீசாருடன் ராணுவத்தினர் ரோந்து சென்றனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |