Tamil Star |
- வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போர் குறித்து கெலும் மக்ரே ஜெர்மனியில் சாட்சியம்
- இப்ப இந்தக் கார் ஆற்றைக் கடக்கணும்…. அது எப்படி முடியும் நீங்களே பாருங்க!….
- கண்களும், மூக்கும் இன்றி வாழும் வினோத பெண்……
- மனதைக் கொள்ளை கொள்ளும் வினோத மலர்…..
- இணையத்தில் பிரபலமான பூனை மரணம்….
- கமெராவில் பதிவு செய்யப்பட்ட அவுஸ்திரேலியாவின் முதலாவது வீதி விபத்து…..
- இப்படியொரு பெருத்த அவமானம் இதுகளுக்கு தேவையா?…. பாருங்க இடைவிடாமல் சிரிப்பீங்க….
- அதிக சுமை ஏற்றச்சென்ற வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது : 14 பேர் பலி
- கத்தாரிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு இலவச தொலைபேசி வசதி: கத்தார் அரசு அறிமுகம்
- ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய அரசாங்கம் கூடுதல் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்
| வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போர் குறித்து கெலும் மக்ரே ஜெர்மனியில் சாட்சியம் Posted: 10 Dec 2013 11:08 PM PST
இலங்கையில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர், சிங்களவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மக்ரே சாட்சியமளித்துள்ளார். அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த 11 நீதிபதிகள் இந்த தீர்ப்பாயத்தின் வழக்கு விசாரணைகளை நடத்தினர். இங்கு சாட்சியமளித்த மக்ரே மூன்று இலங்கையர்கள் தமக்கு இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தகவல்களையும் ஆதாரங்களையும் வழங்கியதாக கூறியுள்ளார். எவ்வாறாயினும் கெலும் மக்ரே வன்னிப் போரை நேரில் பார்த்தவர் போல் சாட்சியமளித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் அவருக்கு வழங்கிய தகவல்களை கொண்டே அவர் இந்த சாட்சியங்களை வழங்கியிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புலிகள் வெளியிட்டு வந்த தேதுன்ன (வானவில்) என்ற சிங்கள பத்திரிகையை வெளியிட்ட ரோஹித்த பாஷண அவேர்தனவும் சாட்சியமளித்துள்ளதாக திவயின கூறியுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இப்ப இந்தக் கார் ஆற்றைக் கடக்கணும்…. அது எப்படி முடியும் நீங்களே பாருங்க!…. Posted: 10 Dec 2013 05:41 AM PST |
| கண்களும், மூக்கும் இன்றி வாழும் வினோத பெண்…… Posted: 10 Dec 2013 05:34 AM PST |
| மனதைக் கொள்ளை கொள்ளும் வினோத மலர்….. Posted: 10 Dec 2013 05:23 AM PST |
| இணையத்தில் பிரபலமான பூனை மரணம்…. Posted: 10 Dec 2013 05:19 AM PST |
| கமெராவில் பதிவு செய்யப்பட்ட அவுஸ்திரேலியாவின் முதலாவது வீதி விபத்து….. Posted: 10 Dec 2013 05:15 AM PST |
| இப்படியொரு பெருத்த அவமானம் இதுகளுக்கு தேவையா?…. பாருங்க இடைவிடாமல் சிரிப்பீங்க…. Posted: 10 Dec 2013 05:03 AM PST |
| அதிக சுமை ஏற்றச்சென்ற வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது : 14 பேர் பலி Posted: 10 Dec 2013 04:58 AM PST
கிர் என்ற கிராமத்தில் இவ்விபத்து நடந்தபோது 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 2 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிக சுமை ஏற்றிச்சென்றதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழுந்த வேன் செங்குத்தான வளைவில் திரும்பும் போது 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகவும், காயமடைந்துள்ள 4 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கத்தாரிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு இலவச தொலைபேசி வசதி: கத்தார் அரசு அறிமுகம் Posted: 10 Dec 2013 04:33 AM PST
கத்தார் டெல்கோ ஊரிடு நிறுவனம் இந்த நாடுகளுடனான ஒப்பந்தத்தை உறுதி செய்துவிட்டது என்று பத்திரிகை தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இணைப்பு அளிக்கப்படும் நாடுகளின் பெயர்கள் அதில் வெளியிடப்படவில்லை. தகவல் தொடர்பு சேவையுடன் கூடுதலாக அளிக்கப்படும் இந்த இலவச தொலைபேசி வசதியானது வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களைப் பற்றிய அரசு அக்கறையையும் மற்றும் மக்களுக்கு சேவை செய்யும் அரசு மனப்பான்மையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என்று தகவல் தொலைத்தொடர்புத் துறையின் இயக்குனர் சைப் அல் குவாரி தெரிவித்தார். இந்த ஏற்பாட்டின்படி வெளிநாட்டுப் பயணிகளிடமிருந்து பெறப்படும் தகவல்கள் உடனுக்குடன் அங்கு எந்நேரமும் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும். மேலும் இந்த அலுவலகம் கத்தாரின் வெளிநாட்டுத் தூதரகங்களுடனும், அதிகாரிகளுடனும் எப்போதும் தொடர்பில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பயணிகளுக்கு அளிக்கப்படும் இந்த இலவச சேவைக்கு ஆகும் செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கத்தார் மக்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு சென்று சேர்ந்தவுடன் கத்தார் அரசு சார்பில் அவர்களுக்கு ஒரு வரவேற்பு தகவலும் அனுப்பப்படும் என்று தொலைத்தொடர்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இலவச சேவை நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் அனைத்து நாடுகளுக்கும் ஒரே எண்ணைப் பெற கத்தார் அரசு முயற்சித்தது. ஆனால் இது நடைமுறைக்கு சரிவராததால் 42 நாடுகளுக்கு 8000 8000 100 என்ற எண் பெறப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இந்தத் தொலைபேசியின் எண் மாறிவரும் என்று இயக்குனர் குவாரி கூறியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 10 Dec 2013 04:13 AM PST
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அந்தக் கோரிக்கைக்கு கூடுதல் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர், ஐக்கிய நாடுகள் இடம்பெயர் மக்களுக்கான பிரதிநிதி போன்றோரின் இலங்கை விஜயங்கள் வரவேற்கப்பட வேண்டியவை என தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகளை அதிகளவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோத கடத்தல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியின் நிலுவையில் உள்ள விஜயம் உள்ளிட்ட ஏனைய நிலுவையில் உள்ள ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளின் இலங்கை விஜயக் கோரிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தின் பின்னரான பௌதீக புனர்நிர்மாணப் பணிகளில் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளமை வரவேற்கப்பட வேண்டியவை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. நிலக்கண்ணி வெடி அகழ்வு மற்றும் வீட்டு நிர்மாணம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டல், ஜனநாயகத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட காரணிகளில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட இலங்கை முனைப்பு காட்ட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |












