மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மணிப்பூரில் என்கவுன்டர்: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
- தெலுங்கானா, விலைவாசி பிரச்சினை: பாராளுமன்றத்தில் 3–வது நாளாக அமளி- இரு சபைகளும் ஒத்திவைப்பு
- சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் தரிசன நேரம் அதிகரிப்பு
- விமானம் மூலம் தங்கம் கடத்தல்: மலையாள நடிகைக்கு சுங்கத்துறை நோட்டீசு
- விலைவாசி உயர்வே பண வீக்கத்திற்கு காரணம்: ப.சிதம்பரம்
- ஓரினச்சேர்க்கை சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- காதலன் சொன்னதால் காதலை நிரூபிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்த காதலி
- மங்கள்யான் விண்கலத்தின் வேகம் இன்று வெற்றிகரமாக குறைக்கப்பட்டது
- யாருக்கும் ஆதரவு இல்லை: மறுதேர்தலுக்கு தயாராகுங்கள் - தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் அழைப்பு
- வங்காளதேசம்: குற்றம் சுமத்தப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரின் தூக்குதண்டனை நிறுத்திவைப்பு
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவை ரத்து: 17-ந் தேதி அமலுக்கு வருகிறது
- துபாயில் இருந்து கோழிக்கோடுக்கு ரூ.4 லட்சம் தங்ககட்டி கடத்தி வந்தவர் கைது
- கோவாவில் டச்சு நாட்டு பெண் யோகா ஆசிரியரால் கற்பழிப்பு
- வேலைக்கார பெண் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கு ஜாமீன் வழங்க கோர்ட் மறுப்பு
- நாக்பூரில் போலி டாக்டர் கைது: 12-ம் தேதி வரை போலீஸ் காவல்
- மைசூர் மகாராஜா ஸ்ரீகண்டதத்தா நரசிம்ம உடையார் மறைவு
- பிட்காயின் பயன்பாடு மோசடிக்கு வழிவகுக்கும்: விரைவில் எச்சரிக்கை வெளியிடுகிறது இந்தியா
- மோடியைக் குறிவைக்கிறது இந்தியன் முஜாகிதீன்: மத்திய உள்துறை எச்சரிக்கை
- மனித உரிமை கமிஷன் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை: ஏ.கே.கங்குலி
- டெல்லியில் புதிய தேர்தலுக்கு தயாராகுங்கள்: எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா அறிவுரை
| மணிப்பூரில் என்கவுன்டர்: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை Posted: 10 Dec 2013 11:35 PM PST மணிப்பூர் மாநிலம் தவுபால் மாவட்டத்தில் இன்று அதிகாலை 'நாங்பொக் கீத்தெல்மான்பீ' என்ற பகுதியில் காவல்துறையை சேர்ந்த கமாண்டோ படையினரும், ராணுவத்தின் 21வது படையணியை சேர்ந்தவர்களும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது குக்கி தேசிய முன்னணி இயக்கத்தை சார்ந்தவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டவர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு காவல்துறையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்குமிடையே நடந்த கடும் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். |
| தெலுங்கானா, விலைவாசி பிரச்சினை: பாராளுமன்றத்தில் 3–வது நாளாக அமளி- இரு சபைகளும் ஒத்திவைப்பு Posted: 10 Dec 2013 11:31 PM PST பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 5–ந்தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டம் உறுப்பினர்களின் மறைவுக்காக ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த நாள் மண்டேலா மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பின் தள்ளி வைக்கப்பட்டது. திங்கட்கிழமை மீண்டும் பாராளுமன்றம் கூடியபோது தெலுங்கானா விவகாரம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளால் 2 சபைகளும் முடங்கியது. |
| சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் தரிசன நேரம் அதிகரிப்பு Posted: 10 Dec 2013 11:07 PM PST பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 26–ந் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த மாதம் 15–ம் தேதி கோவில் நடைதிறக்கப்பட்டது. அன்று முதல் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது |
| விமானம் மூலம் தங்கம் கடத்தல்: மலையாள நடிகைக்கு சுங்கத்துறை நோட்டீசு Posted: 10 Dec 2013 11:05 PM PST அரபு நாடுகளில் இருந்து விமானம் மூலம் கேரளாவிற்கு தங்கம் கடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்கம் கடத்தி வருபவர்களும் சுங்க இலாகாவினரிடம் பிடிபட்டு வருகிறார்கள். கடந்த மாதம் கொச்சி விமான நிலையத்தில் 20 கிலோ தங்க பிஸ்கட் கடத்தி வந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். |
| விலைவாசி உயர்வே பண வீக்கத்திற்கு காரணம்: ப.சிதம்பரம் Posted: 10 Dec 2013 10:46 PM PST தேசிய அளவிலான பொருளாதார நிபுணர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:– நிதி பற்றாக்குறை இலக்கில் எந்தவித சமரசமும் கிடையாது. பணவீக்க உயர்வு மற்றும் நிதி பற்றாக் குறையாலேயே |
| ஓரினச்சேர்க்கை சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Posted: 10 Dec 2013 10:10 PM PST இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் என்ற நிலை இருந்து வந்தது. இதற்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 வழிவகுத்து இருந்தது. ஆனால் ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, இருவரின் சம்மதத்துடனான ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றமல்ல என்று அதிரடி தீர்ப்பு வழங்கி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறைந்த பாரதீய ஜனதா |
| காதலன் சொன்னதால் காதலை நிரூபிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்த காதலி Posted: 10 Dec 2013 10:00 PM PST டெல்லியை சேர்ந்தவர் அனிதா. இவருக்கும் காசிபூர் பகுதியில் செல்போன் கடையில் பணிபுரியும் வாசிம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் பழகி வந்தனர். அவர்களுக்குள் காதல் இருந்தது. இந்நிலையில் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அனிதா டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு குடியேறினார். |
| மங்கள்யான் விண்கலத்தின் வேகம் இன்று வெற்றிகரமாக குறைக்கப்பட்டது Posted: 10 Dec 2013 09:49 PM PST செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, ரூ.450 கோடி செலவில் இந்தியா தயாரித்த 'மங்கள்யான்' விண்கலம், கடந்த நவம்பர் மாதம் 5–ந்தேதி மதியம் 2.3 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட 'மங்கள்யான்' விண்கலத்தின் சுற்று வட்ட பாதை உயரம் சிறிது சிறிதாக உயர்த்தப்பட்டது. குறிப்பிட்ட தூரத்தை அடைந்ததும், அதை செவ்வாய் கிரகத்தை நோக்கி திருப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர். அதன்படி, டிசம்பர் 1–ந்தேதி 'மங்கள்யான்' செவ்வாய் கிரகத்தை நோக்கி செல்லும் பாதையில் செலுத்தப்பட்டது. இது 680 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய்கிரகத்தை சென்று அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| யாருக்கும் ஆதரவு இல்லை: மறுதேர்தலுக்கு தயாராகுங்கள் - தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் அழைப்பு Posted: 10 Dec 2013 08:53 PM PST சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதீய ஜனதா கூட்டணி 32 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றது |
| வங்காளதேசம்: குற்றம் சுமத்தப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரின் தூக்குதண்டனை நிறுத்திவைப்பு Posted: 10 Dec 2013 07:33 PM PST கடந்த 1971 ஆம் ஆண்டு வங்காளதேசத்தில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற சமயத்தில் அந்நாட்டின் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி,நாட்டில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கிய வங்காள தேசியக் கட்சி போன்றவை பாகிஸ்தான் வீரர்களுடன் இணைந்து வன்முறைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஒன்பது மாதம் நடந்த அந்த சுதந்திரப் போராட்டத்தில் இவர்கள் 3 மில்லியன் மக்களைக் கொன்று குவித்ததாகவும், 2,00,000 பெண்களைக் கற்பழித்ததாகவும் புகார் சொல்லப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டில் இந்த போர்க்குற்றங்களுக்கான சிறப்பு விசாரணை பிரதமர் ஷே |
| திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவை ரத்து: 17-ந் தேதி அமலுக்கு வருகிறது Posted: 10 Dec 2013 07:16 PM PST திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வருகிற 16-ந்தேதி(திங்கட்கிழமை) காலை 10.31 மணிக்கு மார்கழி மாதம் பிறக்கிறது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழக்கம்போல் அதிகாலை 3 மணியளவில் நடக்கும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக, ஆண்டாள் எழுதிய திருப்பாவை பாசுரங்கள் 17 -ந்தேதியில் இருந்து அடுத்த ஆண்டு (2014) ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை ஒரு மாதத்திற்கு |
| துபாயில் இருந்து கோழிக்கோடுக்கு ரூ.4 லட்சம் தங்ககட்டி கடத்தி வந்தவர் கைது Posted: 10 Dec 2013 03:18 PM PST கோழிக்கோடு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை செய்து கொண்டு இருந்தனர். |
| கோவாவில் டச்சு நாட்டு பெண் யோகா ஆசிரியரால் கற்பழிப்பு Posted: 10 Dec 2013 01:23 PM PST கோவா மாநில தலைநகர் பனாஜியில் வாடகை வீடு ஒன்றில் 25 வயது டச்சு நாட்டு பெண் தனியாக வசித்து வந்துள்ளார். அவர் அப்பகுதியில் கிருஷ்ணா சர்மா என்பவரிடம் யோகா கற்றுவந்தார். |
| வேலைக்கார பெண் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கு ஜாமீன் வழங்க கோர்ட் மறுப்பு Posted: 10 Dec 2013 12:05 PM PST உத்தரபிரதேச மாநிலம், ஜான்பூர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனஞ்சய் சிங் டெல்லி வீட்டில் வேலை பார்த்த ராக்கி என்ற பெண் உடலின் பல்வேறு பாகங்களில் படுகாயங்களுடன் கடந்த 4–ந்தேதி பிணமாக கிடந்தார். |
| நாக்பூரில் போலி டாக்டர் கைது: 12-ம் தேதி வரை போலீஸ் காவல் Posted: 10 Dec 2013 08:34 AM PST கல்வியறிவு இல்லாத மற்றும் வறுமைக் கோட்டுக்குள் வாழும் எளிய மக்கள் தங்களின் நோய் தீர்த்துக் கொள்ள கவர்ச்சி விளம்பரங்களைக் கண்டு போலிகளிடம் சிக்குவது தொடர்ந்த வண்ணம்தான் உள்ளது. அறுவை சிகிச்சை இல்லாமல் நோய் விரைவாகக் குணப்படுத்தப்படும் என்ற அறிவிப்பினைக் கண்டு ஏமாந்த நாக்பூரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான |
| மைசூர் மகாராஜா ஸ்ரீகண்டதத்தா நரசிம்ம உடையார் மறைவு Posted: 10 Dec 2013 06:45 AM PST மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீகண்டதத்தா நரசிம்ம உடையார் பெங்களூரில் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். மைசூரை ஆட்சி செய்தவர் மகாராஜா ஜெயசாமராஜேந்திர உடையார். இவரது மகன் ஸ்ரீகண்டதத்தா நரசிம்ம உடையார் மகாராஜாவாக அதிகாரப்பூர்வமாக இருந்ததில்லை. ஆனால், மைசூரின் பெரும்பாலான மக்கள் அவரை மகாராஜாவாகவே நினைக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் நடந்த |
| பிட்காயின் பயன்பாடு மோசடிக்கு வழிவகுக்கும்: விரைவில் எச்சரிக்கை வெளியிடுகிறது இந்தியா Posted: 10 Dec 2013 06:21 AM PST டிஜிட்டல் நாணயமான பிட்காயினின் வர்த்தக மதிப்பு தற்போது அதிகரித்து வருகின்றபோதிலும் இந்த நாணயத்தின் பயன்பாடு குறித்து எந்த நாடுகளும் தெளிவான ஒழுங்குமுறை விதிகளை இதுவரை வெளியிடவில்லை. எனவே, இந்த நாணயத்தின் மூலம் வர்த்தக ஈடுபாடுகள் கொள்வது குறித்த |
| மோடியைக் குறிவைக்கிறது இந்தியன் முஜாகிதீன்: மத்திய உள்துறை எச்சரிக்கை Posted: 10 Dec 2013 05:58 AM PST இந்தியாவில் அப்பாவிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது இந்தியன் முஜாஹிதின் என்ற தீவிரவாத அமைப்பு. இந்த அமைப்பானது மற்ற தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து சமீபத்தில் நேபாளத்தில் ரகசிய கூட்டம் நடத்தியது. அதில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும், எம்.பி.யும் பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளருமான ஷானவாஸ் ஹூசைனையும் கொல்ல திட்டமிட்டுள்ளதாக பீகார் போலீசார் தெரிவித்துள்ளனர். |
| மனித உரிமை கமிஷன் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை: ஏ.கே.கங்குலி Posted: 10 Dec 2013 05:30 AM PST பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி, மேற்கு வங்க மாநில மனித உரிமை கமிஷன் தலைவர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், ராஜினாமா செய்யப்போவதில்லை என இன்று செய்தியாளர்கள் |
| டெல்லியில் புதிய தேர்தலுக்கு தயாராகுங்கள்: எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா அறிவுரை Posted: 10 Dec 2013 04:51 AM PST புதுடெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியபோதிலும் (31) ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தல் முடிவு வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில், பெரும்பான்மை பெறுவதற்கு 5 எம்.எல்.ஏ.க்கள் குறைவதால், பா.ஜனதா |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |