Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பாலியல் புகார் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

Posted:

சென்னை: 'விளையாட்டுத் துறையில், பாலியல் தொடர்பான புகார் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.பணியிடங்களில் எழும், பாலியல் புகார் குறித்து விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், தற்போது சட்டம், கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, விளையாட்டுத் துறையில், பாலியல் புகார் எழுந்தால், கடும் நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக, விளையாட்டு பயிற்சி நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:* ...

கொசுவும்... யானையும்...:பீதியில் உறையும் வால்பாறை

Posted:

கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் காடாக இருந்தது. ஆதிவாசிகள் குடில்கள் அமைத்து விவசாயம் செய்து வந்தனர். கடந்த 1864ம் ஆண்டு வால்பாறைக்கு வந்த ஆங்கிலேய பொறியாளர் கார்ல்மார்க்ஸ் காபி, தேயிலை பயிரிட்டார். பின்னர், 1898ல் ஆழியாறு- வால்பாறைக்கு பாதையும் அமைத்தார். இதன் தொடர்ச்சியாக, வால்பாறையிலிருந்து ஆழியாறு செல்ல ரோப்கார் அமைக்கப்பட்டது.பின்னாளில், இந்த மலைப்பகுதியில், வனவிலங்குகள் அதிகமாக இருந்ததால், அவற்றை பாதுகாக்க, வால்பாறை மலைப்பகுதியை இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயமாக மத்திய அரசு ...

அறிவிப்போடு நின்று போன மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை

Posted:

மதுரை:தென் மாவட்டங்கள் வர்த்தக, பொருளாதார ரீதியாக வளம் பெற உதவும் மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் அறிவித்த கையுடன் கிடப்பில் உள்ளது. நிதி ஒதுக்கீடு இன்றி, சர்வே பணிகள் கூட முடியவில்லை.மதுரை-தூத்துக்குடி ரயில்கள் தற்போது விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி வழியாக இயக்கப்படுகின்றன. பயணிகளுக்கு கால, பொருளாதார விரையம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மதுரையிலிருந்து நேரடியாக காரியாபட்டி, பந்தல்குடி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், மீளவிட்டான் வழியாக தூத்துக்குடிக்கு அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக தொழில் ...

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை தமிழகத்தில் ஜோர்: அரசு நடவடிக்கை எப்போது?

Posted:

தமிழகத்தில், லாட்டரி சீட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, ஈரோடு, திருச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில், வெளி மாநில லாட்டரி சீட்டுகள், போலி லாட்டரிகள் அதிகளவில் விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில், லாட்டரி சீட்டுக்கள் விற்பனை மற்றும் பதுக்கல் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை, திருச்சி மற்றும் எல்லையோர மாவட்டங்களான, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டங்களில், வெளிமாநில லாட்டரி சீட்டுக்கள் மற்றும் அவற்றின் பெயரில் போலி லாட்டரி சீட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அண்டை மாநிலமான, ...

அடுத்தடுத்து பொதுக்குழு; ஓரணியில் விஜயகாந்த், ராமதாஸ், வைகோ?

Posted:

சென்னை:விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஓரணியில் இடம் பெறுவரா என்ற கேள்விக்கு விடை சொல்ல, அடுத்த மாதம், 2ம் தேதி பா.ம.க.,வும், 4ம் தேதி ம.தி.மு.க.,வும், 5ம் தேதி தே.மு.தி.க.,வும் பொதுக்குழுவை கூட்டுகின்றன. தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் ஒரு அணி அமைப்பதற்கான, முதல் கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. பா.ம.க.,வும், ம.தி.மு.க.,வும் அணியில் சேர்வது உறுதியாகி உள்ளது. ஆனால், தே.மு.தி.க., மட்டும், இன்னும் சம்மதம் சொல்லவில்லை. "பொங்கலுக்கு முன், அணியை முடிவு செய்து விட வேண்டும். அதன்பிறகு, தேர்தல் பணியை துவங்க வேண்டும்' என, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது. ...

அமைச்சரை புனிதப்படுத்த பாலாபிஷேகம்: இப்படியும் சில பாசக்கார தொண்டர்கள்

Posted:

மும்பை: மகாராஷ்டிர மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான, ஹசன் முசிப்பை, புனிதப்படுத்துவதாக கூறி, அவரின் ஆதரவாளர்கள், பாலாபிஷேகம் செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.எதிராக கோஷம்:மகாராஷ்டிராவில், காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரசின் பிரித்விராஜ் சவான், முதல்வராக பதவி வகிக்கிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, ஹசன் முசிப், மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.சமீபத்தில், புதனா என்ற நகரில் நடந்த, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை ...

"இப்போதே தயாராகு!' : கருணாநிதி அழைப்பு

Posted:

சென்னை: "திருச்சி மாநாட்டுக்கு, இப்போதே தயாராக வேண்டும்' என, தொண்டர்களுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்து உள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருச்சியில், பிப்ரவரி, 15, 16ல் நடக்கும் மாநாடு, திருப்பு முனையாக இருக்கும். மாநாடு குறித்த தகவல்களை, தொடர்ந்து வெளியிட முடிவு செய்துள்ளேன். மாநாட்டுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளது என, தொண்டர்கள் எண்ண வேண்டாம். மாநாட்டுக்கான பயணத் திட்டத்தை, இப்போதே தொடங்க வேண்டும். வாகனங்களுக்கு பணம் கொடுத்து, முன்பதிவு செய்யவேண்டும். குடும்பத்தோடு வருவதற்கு ஏதுவாக, இப்போதே தொண்டர்கள் தயாராக ...

டில்லியில் கால்கடுக்க காத்திருந்த தி.மு.க.,: நேரம் பார்த்து வெறுப்பேற்றியது காங்.,

Posted:

மீனவர் பிரச்னைக்காக சந்தித்து முறையிடுவதற்கு கூட, பிரதமர் அலுவலகத்தில் நேரம் வாங்க முடியாமல், திணறும் நிலை, தி.மு.க.,வுக்கு ஏற்பட்டது. ஒருநாள் காத்திருப்புக்கு பின், பிரதமரை சந்தித்து, கோரிக்கை மனு, அளிக்கப்பட்டு உள்ளது.தீவிரம்:இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற, தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில், தி.மு.க., தரப்பு, தீவிரம் காட்டி வருகிறது.இதற்காக, கட்சியின் மூத்த எம்.பி., - டி.ஆர்.பாலு மூலமாக, தி.மு.க., காய் நகர்த்தியது.மீனவ பிரதிநிதிகளை, பிரதமரிடம் அழைத்துச் சென்று, சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அவர் மேற்கொண்டார். ...

பெங்களூரிலிருந்து மகாராஷ்டிரா சென்ற ரயிலில் தீ : 'ஏசி' பெட்டி எரிந்ததால் 26 பேர் கருகி பலி

Posted:

அனந்தபூர்:பெங்களூரில் இருந்து, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின், 'ஏசி' பெட்டியில், நேற்று அதிகாலை ஆந்திராவின் அனந்தபூர் அருகே, தீ விபத்து ஏற்பட்டது. இதில், இரண்டு குழந்தைகள் உட்பட, 26 பேர், உடல் கருகி பலியாகினர்.16 பெட்டிகள்:பெங்களூரிலிருந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, நான்?டட்டுக்கு நேற்று முன்தினம் இரவு, 10:45 மணிக்கு, எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இதில், 1,000க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். இந்த ரயிலில், 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன.நேற்று அதிகாலை, 3:45க்கு, ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் அருகே, ரயில் சென்று ...

தலைநகர் டில்லியில் "ஆம் ஆத்மி' கட்சி ஆட்சி ஆரம்பம் : பிரச்னைகளை உடனே தீர்க்க முடியாது என்கிறார் கெஜ்ரிவால்

Posted:

புதுடில்லி: புதிதாக கட்சி துவங்கிய, ஒரு ஆண்டுக்குள், ஆட்சியை பிடித்துள்ள, அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வராக, நேற்று பதவியேற்றார். அவரின் சகாக்கள், ஆறு பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர். ""ஊழல் அரசியல்வாதிகளை, நாட்டை விட்டு விரட்டும் காலம் வந்து விட்டது. மக்களுக்கு சேவை செய்வதே, எங்கள் லட்சியம். ஆனால், ஒரே நாளில், எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியாது,'' என, அவர் பேசினார். டில்லியில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு, 32 தொகுதிகளும், ஆம் ஆத்மி கட்சிக்கு, 28 தொகுதிகளும், ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசுக்கு, எட்டு தொகுதிகளும் கிடைத்தன. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™