Tamil News | Online Tamil News |
- அ.தி.மு.க., சீட் கேட்டவர்களிடம் வசூல் தொகை ரூ.11 கோடி: 40 தொகுதிகளுக்கு 4,500 பேர் போட்டியிட விருப்பம்
- பதவியேற்க 'மெட்ரோ' ரயிலில் பயணம்: கெஜ்ரிவால் அதிரடி
- 'குஜராத் கலவரத்தை வர்ணிக்க வார்த்தை இல்லை': மனம் திறக்கிறார் முதல்வர் நரேந்திர மோடி
- தே.மு.தி.க., பேச்சுவார்த்தை வரவில்லை: கருணாநிதி பேட்டி
- 'பிரசாரத்தில் கெட்ட வார்த்தை பேசாதீர்கள்!' கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அறிவுரை
- தி.மு.க.,- தே.மு.தி.க., கூட்டணியா : இப்போது கூற முடியாதாம்-ஸ்டாலின்
- தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற இந்திய தூதர் வலியுறுத்தல்
- 12,000 மெகாவாட்டை தாண்டியது மின்சார தேவை: இரண்டுமணி நேரம் மின்தடை
- 'ஆம் ஆத்மி' வழியில் ராகுல்!
- பங்களாவை அழகுபடுத்த செலவிட்ட பணத்தை திருப்பி கொடுத்தார் அஜீத் பவார்
| Posted: சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட, 40 லோக்சபா தொகுதிகளில், அ.தி.மு.க., சார்பில், போட்டியிட விருப்பம் தெரிவித்து, 4,500 பேர் மனு கொடுத்துள்ளனர். விண்ணப்பப் படிவம் விற்பனை மூலம், 11 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி உள்ளது. இலக்கை தாண்டி, விண்ணப்பங்கள் விற்பனையானது, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.லோக்சபா தேர்தல் தேதி, பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி விட்டது. விருப்ப மனு:தமிழகத்தில், ஆளும் கடசியான அ.தி.மு.க., அனைத்து கட்சிகளையும் ... |
| பதவியேற்க 'மெட்ரோ' ரயிலில் பயணம்: கெஜ்ரிவால் அதிரடி Posted: காஜியாபாத் : டில்லி முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக, அரவிந்த் கெஜ்ரிவால், இன்று, மெட்ரோ ரயிலில் செல்கிறார். அவர் கட்சியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களும், உடன் செல்கின்றனர்.6 அமைச்சர்கள்:டில்லி மாநிலத்தில், காங்., ஆதரவுடன், 'ஆம் ஆத்மி' கட்சி, புதிய அரசு அமைக்கவுள்ளது. முதல்வராக, அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், அரவிந்த் கெஜ்ரிவால், ராம்லீலா மைதானத்தில், இன்று நடக்கும் விழாவில் பதவியேற்கிறார்.அவர் கட்சியை சேர்ந்த, ஆறு எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால், வழக்கமாக, மாநில முதல்வர்கள் பின்பற்றும், ... |
| 'குஜராத் கலவரத்தை வர்ணிக்க வார்த்தை இல்லை': மனம் திறக்கிறார் முதல்வர் நரேந்திர மோடி Posted: ஆமதாபாத்:'குஜராத் கலவரத்தின்போது, நான் அடைந்த வேதனையை, துயரம், சோகம், வருத்தம், வலி என, எந்த வார்த்தையாலும் வர்ணிக்க முடியாது; அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை' என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, தெரிவித்து உள்ளார்.குஜராத் கலவரம் தொடர்பாக, நரேந்திர மோடி, முதல் முறையாக, இவ்வாறு, மனம் திறந்து கூறியுள்ளார்.டிஸ்மிஸ்:கடந்த, 2002ல், குஜராத்தில் நடந்த கலவரத்தில், அம்மாநில முதல்வர், நரேந்திர மோடிக்கு தொடர்பிருப்பதாக கூறி, ஆமதாபாத் பெருநகர கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று முன்தினம், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் ... |
| தே.மு.தி.க., பேச்சுவார்த்தை வரவில்லை: கருணாநிதி பேட்டி Posted: சென்னை:"தே.மு.தி.க., சார்பில், எங்களிடம் பேச்சு வார்த்தைக்கு யாரும் வரவில்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.அவரது பேட்டி:மீண்டும் தி.மு.க.,வில் இணைந்திருக்கும் டி.ராஜேந்தருக்கு, லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுவது பற்றி, இப்போது எதுவும் கூற முடியாது. தி.மு.க., வில் பல கட்சிகள் இணைவதற்கு, வாய்ப்புகள் வருகிறதா என்பது அக்கட்சிகள் இணையும் போது, அறிவிக்கப்படும். தே.மு.தி.க., சார்பில், எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு யாரும் வரவில்லை. அறிவாலயம் நிலம் விவகாரத்தில், விதி மீறல் எதிலும் தி,மு,க., ஈடுபடவில்லை. வேண்டுமென்றால் வந்து, அளந்து ... |
| 'பிரசாரத்தில் கெட்ட வார்த்தை பேசாதீர்கள்!' கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அறிவுரை Posted: சென்னை: ""தேர்தல் பிரசாரத்தின் போது, கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என, அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தி உள்ளோம்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார்.நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:அங்கீகரிக்கப்பட்ட, ஆறு தேசிய கட்சிகள், மூன்று மாநில கட்சி நிர்வாகிகளை அழைத்து, லோக்சபா தேர்தலை, பிரச்னை இல்லாமல் நடத்துவது குறித்து, கலந்தாலோசித்தோம். துணை கமிஷனர் சுதீர் திரிபாதி கலந்து கொண்டார். ஓட்டுக்கு பணம் கொடுக்க, புதிய வழிமுறைகளை பின்பற்ற, அரசியல் கட்சிகள் முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர். வங்கி கணக்குகளில், பணம் ... |
| தி.மு.க.,- தே.மு.தி.க., கூட்டணியா : இப்போது கூற முடியாதாம்-ஸ்டாலின் Posted: நாகர்கோவில்:""லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் போது, கூட்டணி பற்றி இறுதி முடிவை, தி.மு.க., எடுக்கும்,'' என, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் கூறினார். நாகர்கோவில் திருமண விழாவில் பங்கேற்ற, அவர் கூறியதாவது: டில்லியில், மத்திய அமைச்சர் கபில்சிபலை, கனிமொழி எம்.பி., சந்தித்தது, பிறந்த நாள் வாழ்த்தை பரிமாறிக் கொள்ளத் தான்; இது அரசியல் மரபு. இந்த சந்திப்பால், தி.மு.க.,- காங் கூட்டணி அமையும் என கருதக்கூடாது. தே.மு.தி.க., வுடன் கூட்டணி ஏற்படுமா என்பது பற்றி, இப்போது கூறமுடியாது. தேர்தல் நெருங்கும் போது, கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும். தற்போது எங்கள் கூட்டணியில், ... |
| தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற இந்திய தூதர் வலியுறுத்தல் Posted: நியூயார்க்: துணை தூதராக பணியாற்றிய, தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெறும்படி, அமெரிக்காவுக்கான, இந்திய தூதர், ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.தேவயானி கோப்ரகாடே, 39, என்ற பெண், ஐ.எப்.எஸ்., அதிகாரி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, இந்திய தூதரகத்தில், துணை தூதராக பணியாற்றினார். இவரது வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு, "விசா' பெறுவதற்காக, மோசடியான, சில சான்றிதழ்களை வழங்கினார் என, தேவயானி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது.இது தொடர்பாக, கைது செய்யப்பட்ட தேவயானி, கைவிலங்கிடப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, அவர் உடைகளை களைந்து, சோதனை செய்த போலீசார், அவரை, ... |
| 12,000 மெகாவாட்டை தாண்டியது மின்சார தேவை: இரண்டுமணி நேரம் மின்தடை Posted: சென்னை: நீர் மின் நிலையங்களில், நேற்று, 1,450 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆன நிலையிலும், தமிழகத்தில், மின்சாரத்திற்கான தேவை, 12 ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டியது. தமிழகத்தில், மின்சாரத்திற்கான தேவை, உற்பத்தியை விட, அதிகமாக உள்ளது. இதனால், ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க, சென்னை உள்ளிட்ட, பல இடங்களில், இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக, மின் தடை செய்யப்படுகிறது. நேற்று, அனல் மின் நிலையங்கள், 2,440; நீர் மின் நிலையங்கள், 1,450; எரிவாயு நிலையங்கள், 310; காற்றாலைகள், 330 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. மத்திய மின் தொகுப்பு, 2,700; வெளி மாநில மின் நிலையங்கள், 3,800 மெகாவாட் ... |
| Posted: 'ஆம் ஆத்மி' கட்சி வழியில், காங்., கட்சியும், 'அடுத்த ஆண்டு, பிப்., 28ம் தேதிக்குள், காங்., ஆளும் மாநிலங்களில், 'லோக் ஆயுக்தா' நீதிமன்றங்கள் துவக்கப்படும்' என, அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை, கட்சியின் துணைத் தலைவர், ராகுல் நேற்று வெளியிட்டார்.காங்., உயர்மட்ட குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அதில், காங்., ஆளும், 12 மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்றனர்.கட்சியின் துணைத் தலைவர், ராகுல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்., அரசின் முக்கிய திட்டங்களை, மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என, பேசப்பட்டது. பா.ஜ.,வைப் போல், பிரதமர் வேட்பாளர் குறித்த ... |
| பங்களாவை அழகுபடுத்த செலவிட்ட பணத்தை திருப்பி கொடுத்தார் அஜீத் பவார் Posted: மும்பை: தன் பங்களாவை அழகு படுத்துவதற்காக, அரசு பணம், 27 லட்சத்தை செலவழித்ததாக, மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்., கட்சி தலைவருமான, அஜீத் பவார் மீது, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அந்த, 27 லட்ச ரூபாயை, பொதுப்பணித் துறையிடம், அவர், திரும்ப கொடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரசின் பிரித்விராஜ் சவான், முதல்வராகவும், தேசியவாத காங்கிரசின், அஜீத் பவார், துணை முதல்வராகவும் பதவி வகிக்கின்றனர். இந்நிலையில், அனில் கல்காலி என்பவர், துணை முதல்வர் அஜீத் பவார் மற்றும் மாநில அமைச்சர்கள், செலவு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 28,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |