Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நட்சத்திர ஓட்டலில் நடந்த 'மாடி தோட்டம்' திட்ட துவக்க விழா

Posted:

பழைய திட்டத்திற்கு, 'பாலிஷ்' போட்டு, 'மாடி காய்கறி தோட்ட திட்டம்' என்ற பெயரில், தமிழக தோட்டக் கலைத் துறையினர் துவக்க விழா நடத்தினர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த திட்டத்தை, பொது இடத்தில் நடத்தாமல், நட்சத்திர ஓட்டலில் நடத்தியது, பயனாளிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் உள்ள வீடுகளில், காய்கறி தோட்டம் அமைக்க, கடந்த, தி.மு.க., ஆட்சியில், தோட்டக் கலைத் துறை சார்பில், 'நகர காய்கறி அபிவிருத்தி திட்டம்' செயல்படுத்தப்பட்டது. நடவுச் செடிகள், காய்கறி விதைகள், உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகளை, ...

முதல்வரிடம் "ஹாட்ரிக்' விருது பெற்ற கலெக்டர்: "ஐஸ்' வைக்க ஆலாய் பறக்கும் ஆளுங்கட்சியினர்

Posted:

மூன்று முறை முதல்வரிடம் விருது பெற்றதை அடுத்து, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீயை, "காக்கா' பிடிக்க உள்ளூர் ஆளுங்கட்சியினர், ஆலாய் பறக்கும் நிலையில், கோ.அபிஷேகபுரம் கோட்டத் தலைவர், அரசியல்வாதிகள் போல, கலெக்டருக்கு, பிளக்ஸ் பேனர் வைத்து அசத்தியுள்ளார்.திருச்சி கலெக்டராக ஜெயஸ்ரீ, 2011 ஜூன், 3ம் தேதி முதல் பணியாற்றி வருகிறார். இவர், அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதிலும், முதல்வர் தனிப் பிரிவு மனுக்களின் மீது துரிதமாக நடவடிக்கை எடுப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.அ.தி.மு.க., ஆட்சியின் முதல் கலெக்டர் மாநாடு, 2011ல் நடந்தது. அப்போது, முதல்வர் ...

சர்ச்சை இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் பணி : தி.மு.க.,வினர் மீதான நில அபகரிப்பு வழக்குகள் கதி?

Posted:

தி.மு.க., ஆட்சியில் நில அபகரிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்கு, மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணி நியமனத்தில், அவர் மீதான வழக்குகள் அனைத்தும் மறைக்கப்பட்டு விட்டதாக, நேர்மையான அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.குற்றச்சாட்டு :நாமக்கல் மாவட்டம் பாய்ச்சல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். 1997ல் போலீஸ் துறையில், எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தார். ஓமலூரைச் சேர்ந்த சங்கரை, துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக இவர் மீது, குற்றச்சாட்டு எழுந்தது.இந்த, 'என்கவுன்ட்டர்' விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1999 ...

ஆளாளுக்கு பேசுவதால், பா.ஜ.,வில் பெரும் குழப்பம்: அ.தி.மு.க., முடிவை எதிர்பார்க்கும் கட்சி மேலிடம்

Posted:

தமிழகத்தில், பா.ஜ., தலைமையில், தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., கட்சிகளை சேர்த்து, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி, ஒருபுறம் மும்முரமாக நடந்து வருகிறது. மறுபுறத்தில், பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர், நிர்மலா சீதாராமன், தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுவதும்; 'ராஜ்நாத் சிங் - வைகோ சந்திப்பு, மரியாதை நிமித்தமானது; கூட்டணி பேச்சுக்கானது அல்ல' என, அக்கட்சியின் தேசிய செயலர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுவதும், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.பொதுக்குழு முடிவு?இதனால், 'கூட்டணி விஷயத்தில், பா.ஜ., தன் நிலையை தெளிவுபடுத்த வேண்டும்' என, தே.மு.தி.க., - பா.ம.க., தலைவர்கள் ...

நிதிக்குழு உரையா; நிந்தனை உரையா? கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை:"மத்திய அரசின் நிதிக்குழுக் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசியது, நிதிக்குழு உரையா, நிந்தனை உரையா என்ற கேள்வி எழுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:மத்திய அரசின், 14 வது நிதிக்குழுக் கூட்டம், சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, எவ்விதக் குறிப்பும் இல்லாமல், தமிழக மின் பற்றாக்குறைக்கு காரணம் என்ன என்பதை, ஆதாரங்களுடன் விளக்கி கூறினாராம்.குறிப்பும், ஆதாரமும் கையில் இல்லாத காரணத்தால், சில அபத்தமான கருத்துக்களை, ஏதோ ஆணித்தரமான உண்மைகள் என, அனைவரும் நம்ப வேண்டும் என, எண்ணி பேசியுள்ளார்."இருண்ட ...

தேவயானி இழந்த கவுரவத்தை மீட்பேன்!: பார்லியில் அமைச்சர் குர்ஷித் உறுதி

Posted:

புதுடில்லி : அமெரிக்காவின், நியூயார்க் நகரில், இந்திய துணை தூதர், தேவயானி கைது செய்யப்பட்ட விவகாரம், பார்லிமென்டின், இருஅவைகளிலும் நேற்று பலத்த விவாதத்தை ஏற்படுத்தியது.கால் வைக்க மாட்டேன்:எம்.பி.,க்களின் கண்டனத் திற்கு பதிலளித்து பேசிய, வெளியுறவுத்துறை அமைச்சர், சல்மான் குர்ஷித், ''தேவயானியைஇந்தியா கொண்டு வராமல், அமெரிக்காவில் இழந்த, அவரின் கண்ணியத்தையும், மாண்பையும் மீட்டளிக்காமல், மீண்டும் நான் இந்த சபையில் கால் வைக்க மாட்டேன்,'' என, உறுதியளித்தார்.'விசா' முறைகேடு புகார் தொடர்பாக, நியூயார்க்கில், நடுரோட்டில் கைது செய்யப்பட்ட, நம் ...

'உளறல்களை எல்லாம் நிபந்தனையாக விதிப்பதா? பிரதமர் மன்மோகன் சூடு

Posted:

புதுடில்லி:''ஆம் ஆத்மி கட்சியினர், வாயில் வந்த நிபந்தனைகளை எல்லாம் கூறி, அவற்றை நிறைவேற்றும்படி கூறுவது, வேடிக்கையாக உள்ளது,'' என, பிரதமர் மன்மோகன் சிங், கிண்டலடித்துள்ளார்.டில்லியில், நேற்று நடந்த, காங்., பார்லிமென்ட் குழு கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:சட்டசபை தேர்தல் தோல்வி, ஒரு பெரிய விஷயம் அல்ல. இந்த தோல்வி, லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என, நினைப்பது தவறு. 2003ல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், நடந்த சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., வெற்றி பெற்றது. ஆனால், அதற்கு அடுத்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்., தான் வெற்றி ...

வெற்றியும் தோல்வியும் அரசியலில் 'சகஜமப்பா!': சமாதானப்படுத்திக் கொள்கிறார் சோனியா

Posted:

புதுடில்லி:''தோல்வியை பார்த்து, துவள வேண்டாம்; லோக்சபா தேர்தலுக்கு, இப்போதே தயாராகுங்கள்,'' என, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு, காங்., தலைவர் சோனியா, அறிவுறுத்தி, தானும் சமாதானம் செய்து கொள்கிறார்.காங்கிரஸ், படுதோல்வி: சமீபத்தில் நடந்த, டில்லி உள்ளிட்ட, நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ், படுதோல்வி அடைந்தது. பா.ஜ., சார்பில், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக, நாடு முழுவதும் வீசும் அலையால் தான், காங்., தோல்வி அடைந்ததாக, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.'காங்., சார்பில், கட்சியின் துணை ...

லோக்சபாவிலும் நிறைவேறியது 'லோக்பால்' மசோதா: ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் இனி தப்ப முடியாது

Posted:

ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு எதிரான, 'லோக்பால்' மசோதா, லோக்சபாவில் நேற்று நிறைவேறியது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த மசோதா, பார்லிமென்டில் நிறைவேறியதை அடுத்து, விரைவில் சட்டமாக உள்ளது. அதன் பிறகு, ஊழல் பேர்வழிகள் தப்ப முடியாது.லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால், பிரதமர் உட்பட அனைத்து, அரசியல்வாதிகள், அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து, விசாரிக்க வகை செய்யும், லோக்பால் மசோதா, நிறைவேற்றப்படாமல், நீண்டகாலமாக பார்லிமென்டில் நிலுவையில் இருந்தது.இந்த மசோதாவை, 'பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டும்' என, சமூக ஆர்வலர், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™