Tamil News | Online Tamil News |
- தக்காளி, வெங்காயத்தை வீழ்த்தி வெள்ளைப்பூண்டு விலை விறுவிறு
- தமிழகத்தில் 6.5 லட்சம் பேர் கடும் போட்டி: 3 மாதங்களில் "குரூப்2' தேர்வு முடிவுகள்
- விவசாய மானியத்திற்கு வேட்டு வைக்கும் அமெரிக்க ஆளுமை தேவையா?
- தக்காளி சாதம், 20 ரூபாய் சாப்பாடு: தேர்தல் கணக்குக்கு இதுவும் சாதகம்
- சமுதாய ஓட்டுகளை கைப்பற்ற ஸ்டாலின் திட்டம்: ஏற்காடு பிரசாரத்தில் தலைவர்களுக்கு புகழாரம்
- காஷ்மீரில் பெண்களுக்கு சம உரிமை இல்லை: மோடி ஆதங்கம்
- இலங்கைக்கு ராணுவ ஒத்துழைப்பு எதற்கு? பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
- கலெக்டரை கைது செய்த போலீஸ் கமிஷனர் பதவிநீக்கம்
- பிரதீபா பாட்டீல் பரிசுப்பொருட்கள் ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைப்பு
- நக்சல் பகுதிகளில் மொபைல் கோபுரங்கள் அமைக்க பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தீவிரம்
| தக்காளி, வெங்காயத்தை வீழ்த்தி வெள்ளைப்பூண்டு விலை விறுவிறு Posted: வாஷி:வட மாநிலங்களில், சில வாரங்களுக்கு முன், வெங்காயம் மற்றும் தக்காளி, நுாறு ரூபாயை தாண்டி விற்பனையான நிலையில், அந்த இடத்தை, இப்போது, வௌ்ளைப்பூண்டு பிடித்துள்ளது. வட மாநிலங்கள் பலவற்றில், 1 கிலோ வௌ்ளைப்பூண்டு, 160 ரூபாய்க்கு, விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில், 1 கிலோ, தரமான வௌ்ளைப்பூண்டு, அதிகபட்சம், 80 - 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வட மாநிலங்களிலும், இந்த விலையில் தான் விற்கப்பட்டு வந்த ெவள்ளைப்பூண்டுக்கு, திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதன் விலையும், திடீரென உயர்ந்து உள்ளது.வழக்கமாக, 80 - 100 ரூபாய் வரை, விற்கப்பட்ட, 1 கிலோ வெள்ளைப்பூண்டு, கடந்த சில ... |
| தமிழகத்தில் 6.5 லட்சம் பேர் கடும் போட்டி: 3 மாதங்களில் "குரூப்2' தேர்வு முடிவுகள் Posted: சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நேற்று நடந்த "குரூப் 2 தேர்வில், நேற்று 6.5 லட்சம் பேர் பங்கேற்றனர். இத்தேர்வுக்கான மொத்த பணியிடங்கள், 1,064. மூன்று மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.இத்தேர்வுக்கு, தமிழகம் முழுவதும், ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனையில், 6.5 லட்சம் ஏற்கப்பட்டு, தேர்வு நடந்தது.தமிழகம் முழுவதும், 2,269 மையங்களில், காலை, 10:00 மணி முதல், 1:00 மணி வரை தேர்வு நடந்தது. சென்னையில், 269 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில், பொதுப்பிரிவில், 75 கேள்விகள், திறன் அறிதலில், 25 ... |
| விவசாய மானியத்திற்கு வேட்டு வைக்கும் அமெரிக்க ஆளுமை தேவையா? Posted: இந்தோனேஷியாவின் பாலி நகரில், நாளை முதல் நான்கு நாட்களுக்கு, உலக வர்த்தக அமைப்பின் கூட்டம் நடக்க உள்ளது.அதில், இந்திய விவசாயிகளின் நலன்களை பாதிக்கும் விதமான ஒப்பந்தம் விவாதிக்கப்பட உள்ளது. இந்தியா அதில் கையெழுத்திட்டால், வேளாண் மானியங்கள் குறித்து, முடிவெடுக்கும் அதிகாரத்தை இழப்பதோடு, ஏழைகளுக்கு மலிவு விலையில், உணவு பொருட்கள் அளிப்பதன் மீதான தனது கொள்கை அதிகாரத்தையும் இழக்கும்.சர்வதேச ஒப்பந்தங்களும், உறவுகளும், நம் நாட்டில் பொது இடங்களில் அதிகம் விவாதிக்கப்படுவதில்லை.ஆனால், தற்போது, நம்முடைய வெளியுறவு கொள்கை, நம் உணவு பாதுகாப்பை ... |
| தக்காளி சாதம், 20 ரூபாய் சாப்பாடு: தேர்தல் கணக்குக்கு இதுவும் சாதகம் Posted: சென்னை:ஏற்காடு இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளருடன், பிரசாரத்திற்கு செல்வோருக்கு, தக்காளி சாதமும், தி.மு.க., வேட்பாளருடன் செல்வோருக்கு, 20 ரூபாய் சாப்பாடும் வழங்குவதாக, இரு தரப்பினரும், தேர்தல் கமிஷனிடம் தெரிவித்துள்ளனர். ஏற்காடு சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும், நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கட்சியினரும், வெற்றிக்காக, பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். சோதனையின்போது, ரொக்கப்பணம், வேட்டி, சேலை, போன்றவை, பறிமுதல் செய்யப்படுகிறது.இரு தரப்பினரும், அதிகாலை நேரத்தில், வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து வருகின்றனர். வெளி ... |
| சமுதாய ஓட்டுகளை கைப்பற்ற ஸ்டாலின் திட்டம்: ஏற்காடு பிரசாரத்தில் தலைவர்களுக்கு புகழாரம் Posted: சேலம்:ஏற்காடு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின், கிராமப்புறங்களுக்கு செல்லும் போது, அப்பகுதியில் உள்ள, சமுதாய தலைவர்கள் பற்றி புகழ்ந்து பேசுகிறார்; அ.தி.மு.க., அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் அவர், தி.மு.க., வழங்கிய சலுகைகளை எடுத்துக் கூறி, பிரசாரம் செய்கிறார்.சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் மாறனை ஆதரித்து, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், நான்கு நாட்கள் தொடர் பிரசாரம் செய்கிறார். இரண்டு நாட்களில், 30க்கும் மேற்பட்ட கிராம மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.வெள்ளாகுண்டம் பிரிவு ரோட்டில், பிரசாரத்தில் ... |
| காஷ்மீரில் பெண்களுக்கு சம உரிமை இல்லை: மோடி ஆதங்கம் Posted: ஜம்மு:''நாட்டின் மற்ற மாநிலங்களில், பெண்களுக்கு அளிக்கப்படும் சம உரிமை போல், காஷ்மீரில் அளிக்கப்படுவது இல்லை,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, குற்றம் சாட்டினார்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், முதல் முறையாக, நேற்று, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றார். ஜம்முவில் நடந்த, பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:சிறப்பு சலுகை:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும், சட்டப்பிரிவு, 370, அமலில் உள்ளது. இதன்மூலம், காஷ்மீர் மாநிலத்துக்கு, சில சலுகைகள் கிடைப்பதாக ... |
| இலங்கைக்கு ராணுவ ஒத்துழைப்பு எதற்கு? பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Posted: சென்னை: 'இலங்கை கடற்படையினருக்கு பயிற்சியளிப்பது தொடர்பான, ராணுவ ஒத்துழைப்புக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்'என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.இந்திய கடற்படை சார்பில், நான்கு ஆண்டுகள், பி.டெக்., கடல்சார் பாதுகாப்பு தொழில் நுட்ப பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. இந்த பட்டப்படிப்பில், இலங்கை கடற்படை வீரர்களுக்கும் இடம் அளிக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.இதுதொடர்பான தகவலை, இந்திய கடற்படை தளபதி ஜோஷி, சமீபத்தில் வெளியிட்டார். இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அவரது கடித ... |
| கலெக்டரை கைது செய்த போலீஸ் கமிஷனர் பதவிநீக்கம் Posted: கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், மாவட்ட கலெக்டரை கைது செய்த, போலீஸ் கமிஷனர், பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலதிகாரிகளை ஆலோசிக்காமல், தானே முடிவெடுத்ததாக கூறி, போலீஸ் கமிஷனர் மீது, மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.திரிணமுல் காங்., அரசு:நாட்டின் கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு பதவியில் உள்ளது. இங்குள்ள, சிலிகுரி மாவட்டத்தின் கலெக்டராக இருப்பவர், ஆந்திராவைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி கோதால கிரண்குமார்.இவர், இற்கு முன், வேறொரு துறையின் தலைமை அதிகாரியாக ... |
| பிரதீபா பாட்டீல் பரிசுப்பொருட்கள் ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைப்பு Posted: புதுடில்லி : 'முன்னாள் ஜனாதிபதி, பிரதீபா பாட்டீல், தன் பதவி காலத்தில் பரிசாக பெற்ற பொருட்களை, ஜனாதிபதி மாளிகைக்கு திருப்பிக் கொடுத்துள்ளார்' என, ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.காங்., மூத்த தலைவர்:மகாராஷ்டிராவை சேர்ந்த, காங்கிரஸ் மூத்த, பெண் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல், இப்போதைய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கு முன், 2007 - 2012 வரை அப்பதவியில் இருந்தார்.அப்போது, அவர், பல நாடுகளின் தலைவர்களிடம் இருந்து, பல பொருட்களை, மரியாதை நிமித்தமாக பரிசாக பெற்றிருந்தார். அவற்றை, தன் குடும்ப அறக்கட்டளைக்கு சொந்தமான, மகாராஷ்டிராவின், அமராவதி நகரில் உள்ள ... |
| நக்சல் பகுதிகளில் மொபைல் கோபுரங்கள் அமைக்க பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தீவிரம் Posted: புதுடில்லி:நக்சல் அச்சுறுத்தல் உள்ள பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில், 1,315 இடங்களில், மொபைல் கோபுரங்களை அமைக்க, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் முடிவு செய்துள்ளது.இவ்வாறு அமைக்கப்படும் கோபுரங்களின் கட்டுமானம், நிர்வாகம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றை, ஐந்தாண்டுக்கு கவனிக்க, தனியாரிடம் இருந்து, கடந்த ஆகஸ்ட் மாதம், டெண்டர் கோரப்பட்டு இருந்தது.இந்த டெண்டர்களை பரிசீலனை செய்து, யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்பதை, இன்னும், 10 - 12 நாட்களுக்குள் முடிவு செய்யப்பட உள்ளது.தற்போதுள்ள விதிமுறைப்படி, 30 சதவீத பணிகள், மத்திய அரசுக்கு சொந்தமான, ஐ.டி.ஐ., ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 02,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |