Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தூண் மீது லாரி மோதல்: டிரைவர் சாவு
- ஸ...ரி...க...ம...ப...த...நி...
- நாளைய மின்தடை
- வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம்
- 3.45 கோடி இலவச வேட்டி, சேலைகள்: பொங்கலுக்குள் வழங்க நடவடிக்கை
- பெரியகுளம் அருகே லாரி மீது வேன் மோதல்: ஐயப்ப பக்தர்கள் மூவர் உள்பட 4 பேர் சாவு
- சென்னை பல்கலை. ஆசிரியர் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா?
- மருத்துவக் கல்லூரியில் ரூ. 20 லட்சம் கையாடல்: ஊழியர்கள் இருவர் கைது
- 10 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் கைதிகளை விடுவிக்க வேண்டும்
- வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் மலரஞ்சலி
- சுங்கத்துறை புதிய நடைமுறையால் வேளாண் பொருள் ஏற்றுமதி ஸ்தம்பிக்கும் அபாயம்
- பயணிகளிடம் திருட்டு: 4 பேர் கைது
- நூலகங்களுக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
- ஃபிக்கி செயற்குழு உறுப்பினராக சிவக்குமார் தேர்வு
- எம்ஜிஆர் நினைவு தினம் கடைப்பிடிப்பு
- கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
- உடல்நலன் குறித்த சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி உதவி மையம்
- டிசம்பர் 29- இல் செங்குந்தர் சங்க ஆண்டு விழா
- மலர்க் கண்காட்சி போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்
- அரூரில் எய்ட்ஸ் தினம் கடைப்பிடிப்பு
- கிருஷ்ணகிரி, அரூரில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா
- "மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு'
- ஆணழகன் போட்டி: கிருஷ்ணகிரி மாணவர் தகுதி
- பாமகவினருக்கு தேர்தல் பணி பயிற்சி முகாம்
- கோ-கோ போட்டி: அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
- சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் முகாம் தொடக்கம்
- கல்குவாரியில் வெடிபொருள் பறிமுதல்:6 பேர் கைது
- நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
- மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம்மோதியதில் இளைஞர் சாவு
- மளிகைக் கடையில் பணம், பொருள் திருட்டு
- கர்நாடகத்துக்கு மணல் கடத்ததிய 9 பேர் கைது
- அரசு மருத்துவரைத் தாக்கியதாக ஹோட்டல் உரிமையாளர் மீது வழக்கு
- தொழில் வரி செலுத்தும் உத்தரவை மறு பரிசீலனை செய்ய "காட்மா' கோரிக்கை
- மத்திய அரசு சாதனைகளை விளக்கி 28-இல் காங்கிரஸ் தெருமுனைப் பிரசாரம்
- மாநகராட்சியில் குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்துக்கு...
- வேளாண் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பாளர்கள் கையெழுத்து இயக்கம்
- கோவை ஊரக மாவட்டத்தில் நடப்பாண்டில் 31 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- பெண்களிடம் நகைப்பறிப்பு: இளைஞர் கைது
- கல்லூரிப் பேராசிரியை காரை திருடிய மாணவர் சிக்கினார்
- குழந்தைகள் கடத்தல்: கணவர் மீது மனைவி புகார்
- இளம்பெண் மீது தாக்குதல்: தாயும் மகனும் கைது
- இளம்பெண் தற்கொலை
- இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித அளவை மாற்றக் கோரி வழக்கு
- மர்ம நபர்களிடமிருந்து பாதுகாப்பு கோரி சிறுவாணி சாலையில் மக்கள் மறியல்
- எல்லைப்புற சோதனைச் சாவடிகளில் பெருக்கெடுத்துள்ள லஞ்சம்
- மாற்றுத் திறனாளிகள் மேலாண்மை குறித்து பயிற்சிப் பட்டறை
- மாநகராட்சியில் நிரப்பப்படாத துப்புரவு ஆய்வாளர் பணியிடங்கள்
- தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் உதவிகள்
- துடியலூரில் கிறிஸ்துமஸ் விழா
- வாஜ்பாய் பிறந்த நாள் கோவையில் கொண்டாட்டம்
- தொழிற்பயிற்சி முகாம்
- கைத்துப்பாக்கியால் சுட்டதில் மூவர் படுகாயம்: கிழங்கு மண்டி உரிமையாளர் மகன் கைது
- காளப்பநாயக்கன்பாளையத்தில் மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு
- மினோத்தி அறம் காலமானார்
- சுகாதாரச் சீர்கேட்டில் வில்லிவாக்கம் பஸ் நிலையம்
- ஐ.நா. அமைதி படைக்கு வீரர்களை தேர்வு செய்வதில் விதிகளை பின்பற்றவில்லை
- நீதிபதிகளின் பணி நியமன ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம்
- வாஜ்பாய்க்கு 89ஆவது பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து
- ஆதரவுடன் ஆட்சி; கூட்டணி இல்லை
- போலி என்கவுன்டர்: ராணுவத்தில் இருந்து 2 அதிகாரிகள் உள்பட ஆறு வீரர்கள் வெளியேற்றம்
- பந்தல் அமைப்பாளர் தவறி விழுந்து சாவு
- குடிநீர் டிராக்டர் மோதி 3 வயது சிறுவன் சாவு
- "நிலுவையில் உள்ள ரூ.6 கோடி வரியை விரைந்து வசூலிக்க நடவடிக்கை'
- கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
- முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா
- என்எஸ்எஸ் சிறப்பு முகாம் தொடக்கம்
- 8.24 லட்சம் மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவி
- அரக்கோணத்தில் ரத்த தான முகாம்
- வாஜ்பாய் பிறந்த நாள்: பாஜகவினர் கொண்டாட்டம்
- வளையாம்பட்டில் பாஜகவினர் பிரசாரம்
- தன்வந்திரி பீடத்தில் சக்தி அம்மா
- சுகாதாரம், கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு
- கெங்கையம்மன் திருத்தேர் பவனி
- டிசம்பர் 26 மின் தடை
- திருமலையில் சக்தி அம்மாவுக்கு மரியாதை
- மாணவர்களுக்கு வழிகாட்டி பயிற்சி முகாம்
- நடைபாதை வியாபாரிகள், பாதசாரிகள் நலனில் மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டுகோள்
- தடுப்புக் குழுவினரின் வாகனம் பழுதால் யானைகளை விரட்ட முடியாத நிலை
- கோவை
- டிசம்பர் 27 மின் தடை
- பணி நீக்கக் காலம்: சாலைப் பணியாளர்கள் கோரிக்கை
- வெவ்வேறு விபத்துகளில் இருவர் சாவு
- திருச்செங்கோடு அருகே பெண் தற்கொலை
- கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
- மனைவியைத் தாக்கியதாக தறிப் பட்டறை உரிமையாளர் கைது
- மழைநீர் வடிகாலில் முறைகேடாக கழிவுநீர் இணைப்பு
- பெரியபுராணம் சொற்பொழிவு: 9 வயது இரட்டையர்கள் நாவில் நடனமாடும் நாயன்மார்கள்
- பள்ளிபாளையத்தில் சம்பா நெல் அறுவடை தொடக்கம்
- பரமத்திவேலூரில் எம்.ஜி.ஆர் நினைவு நாள்
- பெங்களூரு
- திருப்பதி தரிசனம்: 21 மணிநேரம் காத்திருப்பு
- உ.பி.யில் மூளைக் காய்ச்சலுக்கு 3 சிறுவர்கள் சாவு
- ஷார்ஜாவில் இந்திய மாணவி மர்மச் சாவு
- பவானி, அந்தியூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் ஆராதனை
- சிற்றுந்து மோதி கல்லூரி மாணவர் பலி
- ஒரிச்சேரியில் பாஜக பாத யாத்திரைப் பிரசாரம்
- பவானிசாகர் அணை நீர் மட்டம் 59.39 அடி
- வங்கி ஊழியர் அண்ணா தொழிற்சங்கப் பேரவைக் கூட்டம்
- கடும் பனிப் பொழிவு: மல்லிகை மகசூல் பாதிப்பு
| தூண் மீது லாரி மோதல்: டிரைவர் சாவு Posted: 25 Dec 2013 01:37 PM PST சென்னை மதுரவாயலில் பாலத்தின் தூண் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். |
| ஸ...ரி...க...ம...ப...த...நி... Posted: 25 Dec 2013 01:36 PM PST இன்றைய (26-12-13) இசை நிகழ்ச்சிகள்... |
| Posted: 25 Dec 2013 01:35 PM PST சென்னையில் டிசம்பர் 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். |
| வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம் Posted: 25 Dec 2013 01:28 PM PST முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 89-வது பிறந்தநாளை பாஜகவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர். |
| 3.45 கோடி இலவச வேட்டி, சேலைகள்: பொங்கலுக்குள் வழங்க நடவடிக்கை Posted: 25 Dec 2013 01:24 PM PST பொங்கல் பண்டிகைக்குள் 3.45 கோடி இலவச வேட்டி, சேலைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக கைத்தறித் துறை அமைச்சர் எஸ். சுந்தரராஜ் புதன்கிழமை ராமநாதபுரத்தில் தெரிவித்தார். |
| பெரியகுளம் அருகே லாரி மீது வேன் மோதல்: ஐயப்ப பக்தர்கள் மூவர் உள்பட 4 பேர் சாவு Posted: 25 Dec 2013 01:23 PM PST தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் லாரி மீது வேன் மோதியதில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மூவர் மற்றும் லாரி ஓட்டுநர் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். |
| சென்னை பல்கலை. ஆசிரியர் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா? Posted: 25 Dec 2013 01:21 PM PST சமூக நீதி பாதுகாக்கப்படும் வகையில் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே எழுந்துள்ளது. |
| மருத்துவக் கல்லூரியில் ரூ. 20 லட்சம் கையாடல்: ஊழியர்கள் இருவர் கைது Posted: 25 Dec 2013 01:20 PM PST தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சுமார் ரூ. 20 லட்சம் கையாடல் செய்ததாக ஊழியர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| 10 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் கைதிகளை விடுவிக்க வேண்டும் Posted: 25 Dec 2013 01:19 PM PST பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் மலரஞ்சலி Posted: 25 Dec 2013 01:18 PM PST நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் வெண்மணி தியாகிகள் 45-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதன்கிழமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
| சுங்கத்துறை புதிய நடைமுறையால் வேளாண் பொருள் ஏற்றுமதி ஸ்தம்பிக்கும் அபாயம் Posted: 25 Dec 2013 01:17 PM PST ஏற்றுமதிக்கான ஆவண பரிவர்த்தனையில் சுங்கத்துறை அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறை விதிகளால் வேளாண் விளைபொருள் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. |
| பயணிகளிடம் திருட்டு: 4 பேர் கைது Posted: 25 Dec 2013 01:12 PM PST பெங்களூருவில் பேருந்து பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்ட இரு பெண்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| நூலகங்களுக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் Posted: 25 Dec 2013 01:11 PM PST சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படும் நூலகங்களின் மேம்பாட்டுக்கு நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
| ஃபிக்கி செயற்குழு உறுப்பினராக சிவக்குமார் தேர்வு Posted: 25 Dec 2013 01:11 PM PST இந்திய தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பின் (ஃபிக்கி) உறுப்பினராக கர்நாடகத் தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| எம்ஜிஆர் நினைவு தினம் கடைப்பிடிப்பு Posted: 25 Dec 2013 01:11 PM PST கர்நாடக மாநில அதிமுக சார்பில் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை எம்ஜிஆர் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. |
| கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை Posted: 25 Dec 2013 01:11 PM PST கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, கர்நாடகத்தில் உள்ள தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. |
| உடல்நலன் குறித்த சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி உதவி மையம் Posted: 25 Dec 2013 01:10 PM PST கர்நாடகத்தில் உடல்நலன் சார்ந்த சந்தேகங்களை தீர்த்து வைக்க அந்த மாநில அரசு இலவச தொலைபேசி உதவி மையத்தைத் தொடங்கியுள்ளது. |
| டிசம்பர் 29- இல் செங்குந்தர் சங்க ஆண்டு விழா Posted: 25 Dec 2013 01:10 PM PST பெங்களூருவில் வருகிற 29-ஆம் தேதி கர்நாடக செங்குந்தர் சங்க ஆண்டு விழா நடைபெறுகிறது. இதுகுறித்து கர்நாடக செங்குந்தர் சங்கம் வெளியிட்ட அறிக்கை: |
| மலர்க் கண்காட்சி போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 25 Dec 2013 01:10 PM PST குடியரசுத் தின விழாவையொட்டி, பெங்களூரு லால் பாக் பூங்காவில் நடைபெறும் மலர்க் கண்காட்சிப் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
| அரூரில் எய்ட்ஸ் தினம் கடைப்பிடிப்பு Posted: 25 Dec 2013 01:09 PM PST அரூரில் உலக எய்ட்ஸ் தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. தருமபுரி மாவட்ட பாசிடிவ் நலச் சங்கம் சார்பில், அரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜா மகேந்திரன் தலைமை வகித்தார். |
| கிருஷ்ணகிரி, அரூரில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா Posted: 25 Dec 2013 01:09 PM PST கிருஷ்ணகிரி, ஒசூர், அரூரில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழாவை பாஜகவினர், இனிப்பு வழங்கியும், கட்சிக் கொடியேற்றியும் புதன்கிழமை கொண்டாடினர். |
| "மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு' Posted: 25 Dec 2013 01:08 PM PST தேன்கனிக்கோட்டை வட்டம், கக்கதாசத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ், ரூ.91,55,479 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார் |
| ஆணழகன் போட்டி: கிருஷ்ணகிரி மாணவர் தகுதி Posted: 25 Dec 2013 01:08 PM PST அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆணழகன் போட்டிக்கு கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரி மாணவர் கா.ஜாபர்ஷெரிப் தேர்வு செய்யப்பட்டார். |
| பாமகவினருக்கு தேர்தல் பணி பயிற்சி முகாம் Posted: 25 Dec 2013 01:08 PM PST கிருஷ்ணகிரியில் பாமகவினருக்கு மக்களவைத் தேர்தல் பணி குறித்த பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| கோ-கோ போட்டி: அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் Posted: 25 Dec 2013 01:07 PM PST ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மண்டல அளவிலான கோ -கோ போட்டியில் முதலிடத்தைப் பெற்றதை அடுத்து, ஆசிரியர்கள் பாராட்டினர். |
| சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் முகாம் தொடக்கம் Posted: 25 Dec 2013 01:07 PM PST தருமபுரி மாவட்டத்தில் உள்ள மகளிர், மாற்றுத் திறனாளிகள், சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் புதன்கிழமை தொடங்கியது. |
| கல்குவாரியில் வெடிபொருள் பறிமுதல்:6 பேர் கைது Posted: 25 Dec 2013 01:07 PM PST தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே கல்குவாரியில் அனுமதியின்றி வெடிபொருள் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக தொழிலாளர்கள் |
| நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல் Posted: 25 Dec 2013 01:07 PM PST தருமபுரி அருகே உள்ள நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தியது. |
| மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம்மோதியதில் இளைஞர் சாவு Posted: 25 Dec 2013 01:06 PM PST அரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி சரக்கு வாகனம் மோதியதில் இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| மளிகைக் கடையில் பணம், பொருள் திருட்டு Posted: 25 Dec 2013 01:06 PM PST ஊத்தங்கரை மளிகைக் கடையில் பூட்டை உடைத்து, ரூ.27 ஆயிரம், பொருள்கள் திருடப்பட்டதுடன், மேலும், ஒரு மருந்து கடை, வீட்டிலும் பூட்டு உடைத்து, மர்ம நபர்கள் திருட முயன்றதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் |
| கர்நாடகத்துக்கு மணல் கடத்ததிய 9 பேர் கைது Posted: 25 Dec 2013 01:06 PM PST கர்நாடகத்துக்கு, தமிழகத்தில் இருந்து கிருஷ்ணகிரி ஒசூர் வழியாக மணல் கடத்திய 9 பேரை சிப்காட் போலீஸார் புதன்கிழமை கைது செய்ததுடன், 5 லாரிகள், 25 யூனிட் மணலை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். |
| அரசு மருத்துவரைத் தாக்கியதாக ஹோட்டல் உரிமையாளர் மீது வழக்கு Posted: 25 Dec 2013 01:06 PM PST கிருஷ்ணகிரியில் மருத்துவரைத் தாக்கியதாக, ஹோட்டல் உரிமையாளரைப் போலீஸார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஆர்.தனசேகரன் (38). இவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் |
| தொழில் வரி செலுத்தும் உத்தரவை மறு பரிசீலனை செய்ய "காட்மா' கோரிக்கை Posted: 25 Dec 2013 01:05 PM PST கோவையில் உள்ள சிறு தொழில்கூடங்கள் முன் தேதியிட்டு தொழில்வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, மேயர் செ.ம. வேலுசாமியிடம் கோயமுத்தூர் திருப்பூர் மாவட்ட |
| மத்திய அரசு சாதனைகளை விளக்கி 28-இல் காங்கிரஸ் தெருமுனைப் பிரசாரம் Posted: 25 Dec 2013 01:04 PM PST காங்கிரஸ் கட்சியின் 129-ஆம் ஆண்டு விழாவையொட்டி டிசம்பர் 28-ஆம் தேதி மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் தெருமுனைப் பிரசாரம் நடைபெற உள்ளது. |
| மாநகராட்சியில் குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்துக்கு... Posted: 25 Dec 2013 01:04 PM PST கோவை மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் இணைப்புக் கோரி விண்ணப்பித்தவர்கள் செலுத்த வேண்டிய கட்டண விவரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என மேயர் செ.ம. வேலுசாமி தெரிவித்துள்ளார். |
| வேளாண் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி Posted: 25 Dec 2013 01:04 PM PST தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவை, மதுரை, திருச்சி வேளாண்மைக் கல்லூரிகளில் இந்தப் பயிற்சி நடத்தப்பட உள்ளது. |
| சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பாளர்கள் கையெழுத்து இயக்கம் Posted: 25 Dec 2013 01:04 PM PST தரச்சான்று பெற்ற குடிநீரை பயன்படுத்த வலியுறுத்தி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், கையெழுத்து இயக்கம் மேட்டுப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை துவங்கியது. |
| கோவை ஊரக மாவட்டத்தில் நடப்பாண்டில் 31 பேர் குண்டர் சட்டத்தில் கைது Posted: 25 Dec 2013 01:03 PM PST கோவை ஊரக மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 31 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். |
| பெண்களிடம் நகைப்பறிப்பு: இளைஞர் கைது Posted: 25 Dec 2013 01:03 PM PST கோவையில் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்கள் இருவரிடம் சங்கிலிகளைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். |
| கல்லூரிப் பேராசிரியை காரை திருடிய மாணவர் சிக்கினார் Posted: 25 Dec 2013 01:03 PM PST கோவையில் கல்லூரிப் பேராசிரியை ஒருவரின் காரைத் திருடிச் சென்ற மாணவனைப் போலீஸார் பிடித்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியது: |
| குழந்தைகள் கடத்தல்: கணவர் மீது மனைவி புகார் Posted: 25 Dec 2013 01:03 PM PST கோவையில் தனது இரு குழந்தைகளை கடத்திச் சென்றுவிட்டதாக கணவர் மீது மனைவி அளித்த புகாரின் பேரில், போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| இளம்பெண் மீது தாக்குதல்: தாயும் மகனும் கைது Posted: 25 Dec 2013 01:02 PM PST கோவையில் கடன் பணத்தை வாங்கச் சென்ற இளம்பெண்ணைத் தாக்கிய தாயும் மகனும் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 25 Dec 2013 01:02 PM PST கோவையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் கூறியது: கோவை, குனியமுத்தூர் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட கரும்புக்கடை, திப்பு நகரைச் சேர்ந்தவர் அப்துல் |
| இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித அளவை மாற்றக் கோரி வழக்கு Posted: 25 Dec 2013 01:02 PM PST கேந்த்ரிய வித்யாலயா பள்ளி இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கு இணையாக மற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊதிய விகித அளவை மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| மர்ம நபர்களிடமிருந்து பாதுகாப்பு கோரி சிறுவாணி சாலையில் மக்கள் மறியல் Posted: 25 Dec 2013 01:02 PM PST கோவை அருகே தனியார் வணிக வளாகத்தில் தீப் பிடித்த சம்பவம் தொடர்பாக, மர்ம நபர்களிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, புதன்கிழமை மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| எல்லைப்புற சோதனைச் சாவடிகளில் பெருக்கெடுத்துள்ள லஞ்சம் Posted: 25 Dec 2013 01:01 PM PST கடத்தலைத் தடுக்கவும், மாநில அரசுக்கு வருமானத்தை அதிகரிக்கவும் தமிழக - கேரள எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தமிழக சோதனைச் சாவடிகளில் கண்துடைப்புச் சோதனையுடன் பெருமளளவு லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. |
| மாற்றுத் திறனாளிகள் மேலாண்மை குறித்து பயிற்சிப் பட்டறை Posted: 25 Dec 2013 01:01 PM PST கோவை யூடீஸ் ஃபோரம் அமைப்பு சார்பில், மாற்றுத் திறனாளிகள் மேலாண்மை குறித்த பயிற்சிப் பட்டறை அண்மையில் நடைபெற்றது. |
| மாநகராட்சியில் நிரப்பப்படாத துப்புரவு ஆய்வாளர் பணியிடங்கள் Posted: 25 Dec 2013 01:01 PM PST சென்னை மாநகராட்சியின் பல வார்டுகளில் துப்புரவு ஆய்வாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பணிச்சுமையால் ஆய்வாளர்கள் பலர் அவதியுற்று வருகின்றனர். |
| தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் உதவிகள் Posted: 25 Dec 2013 01:01 PM PST தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சிவானந்தாகாலனி பகுதியில் உள்ள 49-ஆவது வார்டு கிளை சார்பில், மாநகர மாவட்டச் செயலாளர் ஆர். |
| Posted: 25 Dec 2013 01:00 PM PST துடியலூர் அருகே கணுவாயில் உள்ள பெனியேல் ஜெபக் கூடத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, சபையின் போதகர் வி.ராஜூ தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் வி |
| வாஜ்பாய் பிறந்த நாள் கோவையில் கொண்டாட்டம் Posted: 25 Dec 2013 01:00 PM PST முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை புதன்கிழமை கோவையில் பாரதிய ஜனதா கட்சியினர் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். |
| Posted: 25 Dec 2013 01:00 PM PST ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் நஞ்சுண்டாபுரத்தில் வேலை இல்லாத இளைஞர் மற்றும் மகளிருக்கு இரண்டு வார தொழிற்பயிற்சி முகாம் நடந்தது. |
| கைத்துப்பாக்கியால் சுட்டதில் மூவர் படுகாயம்: கிழங்கு மண்டி உரிமையாளர் மகன் கைது Posted: 25 Dec 2013 01:00 PM PST காரமடை அடுத்த குருந்தமலை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர். இதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. |
| காளப்பநாயக்கன்பாளையத்தில் மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு Posted: 25 Dec 2013 12:59 PM PST கோவை அருகே சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காளப்பநாயக்கன்பாளையத்தில் புதிய மதுபானக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கட்டடத்திற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| Posted: 25 Dec 2013 12:59 PM PST கோவை சாந்தி ஆசிரமத்தின் நிறுவனர் மினோத்தி அறம் (72) உடல்நலக் குறைவால் துபையில் புதன்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்கு கோவைப்புதூரில் உள்ள சாந்தி ஆசிரமத்தில் வெள்ளிக்கிழமை (நாளை) மாலை நடைபெறவுள்ளது. |
| சுகாதாரச் சீர்கேட்டில் வில்லிவாக்கம் பஸ் நிலையம் Posted: 25 Dec 2013 12:58 PM PST சென்னையின் முக்கியப் பகுதியாக விளங்கும் வில்லிவாக்கம் பஸ் நிலையம் மிகுந்த சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கி வருகிறது. |
| ஐ.நா. அமைதி படைக்கு வீரர்களை தேர்வு செய்வதில் விதிகளை பின்பற்றவில்லை Posted: 25 Dec 2013 12:57 PM PST ஐ.நா. அமைதிப் படைக்கு இந்திய வீரர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை என்று மத்திய அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளது. |
| நீதிபதிகளின் பணி நியமன ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் Posted: 25 Dec 2013 12:57 PM PST நீதிபதிகளின் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான முடிவுகளை எடுக்க அமைக்கப்பட்டுள்ள ஆணையத்துக்கு அரசியலமைப்பு சட்டத்தின் படி அங்கீகாரம் அளிப்பது |
| வாஜ்பாய்க்கு 89ஆவது பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து Posted: 25 Dec 2013 12:57 PM PST உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள பாரத முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 89ஆவது பிறந்த நாளையொட்டி, அவர் நலம் பெற வேண்டி அந்தக் கட்சித் தலைவர்கள் புதன்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினர். |
| Posted: 25 Dec 2013 12:56 PM PST "தில்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறதே தவிர, அக் கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை' என்று ஆம் ஆத்மி சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். |
| போலி என்கவுன்டர்: ராணுவத்தில் இருந்து 2 அதிகாரிகள் உள்பட ஆறு வீரர்கள் வெளியேற்றம் Posted: 25 Dec 2013 12:56 PM PST காஷ்மீரில் போலி என்கவுன்டர் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு ராணுவ அதிகாரிகள், நான்கு வீரர்கள் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தில்லியில் உ |
| பந்தல் அமைப்பாளர் தவறி விழுந்து சாவு Posted: 25 Dec 2013 12:56 PM PST குடியாத்தத்தை அடுத்த வளத்தூர், பெரியார் நகரைச் சேர்ந்தவர் கல்விக்குமார்(42), பந்தல் அமைப்பாளர். இவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கீழ்பட்டி கிராமத்தில் கிறிஸ்துமஸ் விழாவுக்காக, பந்தல் அமைக்கும் |
| குடிநீர் டிராக்டர் மோதி 3 வயது சிறுவன் சாவு Posted: 25 Dec 2013 12:55 PM PST வேலூர் தொரப்பாடி பகுதியில் மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்குவதற்கு வந்த டிராக்டரை பின்னால் நகர்த்தியபோது, 3 வயது சிறுவன் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். |
| "நிலுவையில் உள்ள ரூ.6 கோடி வரியை விரைந்து வசூலிக்க நடவடிக்கை' Posted: 25 Dec 2013 12:54 PM PST ராணிப்பேட்டை நகராட்சியில் நிலுவையில் உள்ள ரூ.6 கோடி வரிப் பணத்தை விரைந்து வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நகர்மன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் தெரிவித்தார். |
| Posted: 25 Dec 2013 12:54 PM PST வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி மற்றும் உதயேந்திரம் பகுதியில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சபைகளின் தேவாலங்களில் புதன்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. |
| முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா Posted: 25 Dec 2013 12:54 PM PST ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மகாத்மா காந்தி அறக்கட்டளைத் தலைவர் ஜெ.லட்சுமணன் தலைமை தாங்கினார். செயலாளர் |
| என்எஸ்எஸ் சிறப்பு முகாம் தொடக்கம் Posted: 25 Dec 2013 12:53 PM PST ஆம்பூர் ஆனைக்கார் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் குளிதிகை ஊராட்சியில் 7 நாள் சிறப்பு முகாம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| 8.24 லட்சம் மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவி Posted: 25 Dec 2013 12:53 PM PST வேலூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் விலையில்லா புத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் 8 லட்சத்து 24 ஆயிரத்து 713 மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளன என்று ஆட்சியர் இரா.நந்தகோபால் தெரிவித்தார். |
| Posted: 25 Dec 2013 12:53 PM PST அரக்கோணம் இந்திய கடற்படை நகர் அரிமா சங்கம், ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி ஆகியவை இணைந்து செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாமை நடத்தின. |
| வாஜ்பாய் பிறந்த நாள்: பாஜகவினர் கொண்டாட்டம் Posted: 25 Dec 2013 12:53 PM PST முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 89-வது பிறந்த நாளை வேலூரில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். |
| வளையாம்பட்டில் பாஜகவினர் பிரசாரம் Posted: 25 Dec 2013 12:52 PM PST வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு ஊராட்சியில் பாஜக மாவட்ட பிரசார அணித் தலைவர் ஆர்.எஸ்.ஜவகர்பாபு தலைமையில் இல்லந்தோறும் மோடி, கிராமம்தோறும் தாமரை எனும் பிரசாரம் |
| தன்வந்திரி பீடத்தில் சக்தி அம்மா Posted: 25 Dec 2013 12:52 PM PST வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் 10-வது ஆண்டு, பீடாதிபதி முரளிதர சுவாமிகளின் 54-வது ஜெயந்தி விழா மற்றும் உலக நன்மையைக் கருதி கடந்த |
| சுகாதாரம், கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு Posted: 25 Dec 2013 12:52 PM PST தமிழகம் கல்வி, சுகாதாரத்தில் மேம்பட வேண்டும் என்ற நோக்கில் அதிக நிதி ஒதுக்கீட்டை இந்த இரு துறைகளுக்கும் தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்து வருகிறார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். |
| Posted: 25 Dec 2013 12:51 PM PST ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் அருள்மிகு கெங்கையம்மன் மற்றும் எல்லையம்மன் கோயில்கள் சார்பில் மார்கழி திருத்தேர் திருவிழாவையொட்டி தேர் திருவீதி உலா புதன்கிழமை நடைபெற்றது . |
| Posted: 25 Dec 2013 12:51 PM PST விண்ணமங்கலம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதனங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் |
| திருமலையில் சக்தி அம்மாவுக்கு மரியாதை Posted: 25 Dec 2013 12:50 PM PST வேலூர் திருமலைக்கோடி ஸ்ரீநாராயணி பீடம் சக்தி அம்மா திருப்பதி, திருமலைக்கு தரிசனத்துக்காக வியாழக்கிழமை செல்கிறார். |
| மாணவர்களுக்கு வழிகாட்டி பயிற்சி முகாம் Posted: 25 Dec 2013 12:50 PM PST மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான "விண்ணைத் தொடுவோம்' வழிகாட்டி பயிற்சி முகாம் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| நடைபாதை வியாபாரிகள், பாதசாரிகள் நலனில் மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டுகோள் Posted: 25 Dec 2013 12:49 PM PST சென்னையில் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் பாதசாரிகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு எக்ஸ்னோரா தன்னார்வ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. |
| தடுப்புக் குழுவினரின் வாகனம் பழுதால் யானைகளை விரட்ட முடியாத நிலை Posted: 25 Dec 2013 12:49 PM PST மனித -வனவிலங்கு மோதல் தடுப்புக் குழுவினரின் வாகனம் பல நாள்களாக பழுதாகி நிற்பதால், மானாம்பள்ளி வனச்சரகத்தில் யானைகளை விரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. |
| Posted: 25 Dec 2013 12:48 PM PST |
| Posted: 25 Dec 2013 12:48 PM PST காளப்பநாயக்கன்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (டிச.27) மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
| பணி நீக்கக் காலம்: சாலைப் பணியாளர்கள் கோரிக்கை Posted: 25 Dec 2013 12:48 PM PST தமிழக நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரியும் சாலைப் பணியாளர்களின் பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| வெவ்வேறு விபத்துகளில் இருவர் சாவு Posted: 25 Dec 2013 12:48 PM PST நாமக்கல், புதுச்சத்திரம் பகுதிகளில் நடைபெற்ற விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். நாமக்கல் அக்கியம்பட்டி அருகே பேராவூரைச் சேர்ந்த ராமசாமியின் மகன் பெருமாள் (28). லேத் பட்டறை |
| திருச்செங்கோடு அருகே பெண் தற்கொலை Posted: 25 Dec 2013 12:48 PM PST திருச்செங்கோடு அருகே பெண் தற்கொலை செய்து கொண்டார். |
| கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் Posted: 25 Dec 2013 12:48 PM PST எருமப்பட்டி தேவராயபுரத்தில் உள்ள வாய்ஸ் ஆஃப் காட் பாலிடெக்னிக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. |
| மனைவியைத் தாக்கியதாக தறிப் பட்டறை உரிமையாளர் கைது Posted: 25 Dec 2013 12:48 PM PST திருச்செங்கோடு அருகே மனைவியைத் தாக்கியதாக தறிப் பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். திருச்செங்கோடு ஒன்றியம், தேவனாங்குறிச்சியில் தறிப் பட்டறை வைத்திருப்பவர் ராஜேந்திரன் (45). |
| மழைநீர் வடிகாலில் முறைகேடாக கழிவுநீர் இணைப்பு Posted: 25 Dec 2013 12:47 PM PST திருவல்லிக்கேணி பகுதியில் மழைநீர் கால்வாயில் சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிந்தும், மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. |
| பெரியபுராணம் சொற்பொழிவு: 9 வயது இரட்டையர்கள் நாவில் நடனமாடும் நாயன்மார்கள் Posted: 25 Dec 2013 12:44 PM PST சென்னை குன்றத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 9 வயது இரட்டையர்கள் 63 நாயன்மார்கள் வரலாறு குறித்து ஆன்மிகச் சொற்பொழிவாற்றினர். |
| பள்ளிபாளையத்தில் சம்பா நெல் அறுவடை தொடக்கம் Posted: 25 Dec 2013 12:31 PM PST பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் சம்பா நெல் அறுவடை தொடங்கியது. மொத்தம் சாகுபடி செய்யப்பட்டுள்ள 4,231 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து சுமார் 30 ஆயிரம் டன் நெல் உற்பத்தி |
| பரமத்திவேலூரில் எம்.ஜி.ஆர் நினைவு நாள் Posted: 25 Dec 2013 12:31 PM PST தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு, பரமத்திவேலூர் வட்டத்தில் அதிமுகவினர் அவரது உருவப் படத்திற்கும்,சிலைக்கும் மரியாதை செலுத்தினர். |
| Posted: 25 Dec 2013 12:30 PM PST |
| திருப்பதி தரிசனம்: 21 மணிநேரம் காத்திருப்பு Posted: 25 Dec 2013 12:30 PM PST திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் புதன்கிழமை 21 மணிநேரம் காத்திருந்தனர். |
| உ.பி.யில் மூளைக் காய்ச்சலுக்கு 3 சிறுவர்கள் சாவு Posted: 25 Dec 2013 12:23 PM PST உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். |
| ஷார்ஜாவில் இந்திய மாணவி மர்மச் சாவு Posted: 25 Dec 2013 12:22 PM PST ஷார்ஜாவில் 22 வயதுள்ள இந்திய மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| பவானி, அந்தியூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் ஆராதனை Posted: 25 Dec 2013 12:22 PM PST பவானி, அந்தியூர் மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் ஆராதனை புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து உற்சாகமாகப் பங்கேற்றனர். |
| சிற்றுந்து மோதி கல்லூரி மாணவர் பலி Posted: 25 Dec 2013 12:21 PM PST ஈரோட்டில் சிற்றுந்து மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். ஈரோடு, மாணிக்கம்பாளையம் சக்திநகர், பெருமாள் மேட்டைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் |
| ஒரிச்சேரியில் பாஜக பாத யாத்திரைப் பிரசாரம் Posted: 25 Dec 2013 12:21 PM PST பவானி ஒன்றியப் பகுதிகளில் பாஜகவினர், "வீடு தோறும் மோடி உள்ளம் தோறும் தாமரை' எனும் பாதயாத்திரை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். |
| பவானிசாகர் அணை நீர் மட்டம் 59.39 அடி Posted: 25 Dec 2013 12:21 PM PST பவானிசாகர் அணையின் நீர் மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 59.39 அடியாக இருந்தது. |
| வங்கி ஊழியர் அண்ணா தொழிற்சங்கப் பேரவைக் கூட்டம் Posted: 25 Dec 2013 12:20 PM PST ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் அண்ணா தொழிற்சங்கப் பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| கடும் பனிப் பொழிவு: மல்லிகை மகசூல் பாதிப்பு Posted: 25 Dec 2013 12:20 PM PST சத்தி பகுதியில் நிலவி வரும் பனிப் பொழிவு காரணமாக மல்லிகைப்பூ மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |