Daily Thanthi |
- கற்பழிப்புக்கு எதிராக போராட்டம்
- தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காங்கிரசுக்கு இது சோதனையான காலம் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேச்சு
- காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்: வீரப்ப மொய்லி திட்டவட்டம்
- இந்தியா–பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்
- பனிக்கட்டிகளை அகற்றிய மீட்பு குழுவினர்
- வீரப்ப மொய்லிக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து
- இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கிறிஸ்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
- சினிமா டைரக்டர் கே.எஸ்.ரவிகுமாருக்கு பாராட்டு விழா ஜனவரி 4–ந்தேதி நடக்கிறது
- உறவை மேலும் வலுப்படுத்த முயற்சி: பாகிஸ்தான் அணுமின் திட்டத்துக்கு சீனா ரூ.39 ஆயிரம் கோடி நிதி உதவி
- ஆஸ்திரேலியாவின் வெற்றிப் பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுமா இங்கிலாந்து?
| கற்பழிப்புக்கு எதிராக போராட்டம் Posted: 24 Dec 2013 01:26 PM PST |
| Posted: 24 Dec 2013 01:17 PM PST சிவகங்கை, ''தமிழகத்தில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நமக்கு இது சோதனையான காலம்'' என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசினார். செயல்வீரர்கள் கூட்டம் சிவகங்கையில், மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:– அகில இந்திய அளவில் காங்கிரஸ் சோதனையான காலக்கட்டத்தில் உள்ளது. காலப்போக்கில் ஏற்பட்ட சுழற்சியினால் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது என்பதை தலைவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தமிழகத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்டதால் கொள்கைகளை விட்டுத்தர முடியாது. உரிய பணிகளை ஆற்றிட வேண்டும். தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது தான் தற்போது நமக்குள்ள முக்கிய கடமை. ஆர்.எஸ்.எஸ்.சின் ஒருமுகம் பா.ஜ.க. பா.ஜ.க. ஒரு புதிய தலைவரை முன்னிலைப்படுத்தி வேகமாக காரியங்களை செய்து வருகிறது. அதை மறுப்பதற்கில்லை. பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.சின் ஒரு முகம் ஆகும். ஆர்.எஸ்.எஸ்.சுக்கு பல முகங்கள் உள்ளன. அதில் அரசியல் முகம்தான் பா.ஜ.க. இன்று நமக்கும், பா.ஜ.க.வுக்கும் போட்டியில்லை. நமக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தான் போட்டி. ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்க்கும் சக்தி காங்கிரசாரான உங்களிடம் இருக்கிறது. நமக்கு எதிராக வலதுசாரிகள், ஆதிக்க சக்திகள் உள்ளன. பெரிய யுத்தம் அடுத்த மூன்று, ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய யுத்தம் வரவுள்ளது. இதில் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும் என்றால் மிக, மிக நுண்ணிய முடிவு எடுக்க வேண்டும். இன்றைய கூட்டத்தில் இந்த தேசத்திற்கு எதிரான சோதனைகளை பற்றி கோடிட்டு காட்ட வந்துள்ளேன். ஆதிக்க சக்திகளை விரட்டுவதுதான், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு வழி புதியவர்கள் வரும்போது, முதியவர்கள் விலகி இளைஞர்களுக்கு வழி விடவேண்டும். நமது கட்சியில் இளைஞர்களே அதிக அளவில் இல்லை. அவர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். பதவி வழங்க வேண்டும். பொதுவாக தலைமையில் உள்ளவர்களுக்கு எளிதாகப் பேசத் தெரியவேண்டும். தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள் அவர்கள் நன்கு எழுதப்பேச தெரிந்தவர்களாக இருப்பார்கள். தற்போது நமது அகில இந்திய தலைவர்களும் பேசுகின்றனர். எல்லா நிலையிலும் நன்கு பேச, எழுத தெரிந்து கொள்ள வேண்டும். அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுகோப்போடு இருந்து பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். image: category:Tagging:News Group Category: |
| காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்: வீரப்ப மொய்லி திட்டவட்டம் Posted: 24 Dec 2013 12:47 PM PST புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திதான் என்று மத்திய பெட்ரோலிய துறை மந்திரி வீரப்ப மொய்லி திட்டவட்டமாக கூறியுள்ளார். புதிய சுற்றுச்சூழல் துறை மந்திரியாக வீரப்ப மொய்லி பொறுப்பு ஏற்றதை அடுத்து இதனை தெரிவித்துள்ளார். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரியாக ஜெயந்தி நடராஜன் பதவி வகித்து வந்தார். கட்சிப்பணிக்கு செல்வதற்காக, அவர் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து, அவர் வகித்து வந்த சுற்றுச்சூழல் மற்றும் வன இலாகா, பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. மேலும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து பேசிய வீரப்ப மொய்லி " நரேந்திர மோடி அதிகமாக பேசுகிறார். ஆனால் நாங்களே செயலில் காட்டுகிறோம்" என்று கூறியுள்ளார். image: category:Tagging:News Group Category: |
| இந்தியா–பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் Posted: 24 Dec 2013 12:45 PM PST |
| பனிக்கட்டிகளை அகற்றிய மீட்பு குழுவினர் Posted: 24 Dec 2013 12:25 PM PST |
| வீரப்ப மொய்லிக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து Posted: 24 Dec 2013 11:57 AM PST |
| இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கிறிஸ்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து Posted: 24 Dec 2013 11:52 AM PST சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, கிறிஸ்தவர்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கருணாநிதி தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– மண்ணில் மனிதநேயம் தழைக்க, ''அடுத்தவனை நேசி; உன் எதிரியிடமும் அன்பு காட்டு; உன்னைச் சபிப்பவர்களை ஆசீர்வாதம் செய்; உன்னை வெறுப்பவர்க்கும் உதவி செய்; உன்னை அவமதிப்பவர்களையும் போற்று'' என அன்பையும், பொறுமையையும் போதித்த இயேசு பெருமான் பிறந்த டிசம்பர் 25–ந்தேதி கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இயேசு நாதரை எண்ணும்போதே, அவரது கோட்பாடுகளைப் பரப்ப வந்த அயல்நாட்டுக் குருமார்களால் தமிழும், தமிழகமும் பெற்ற பெருமையை எவரும் மறந்திட இயலாது. தம் உன்னதமான தொண்டுகளால் தமிழுக்கு வளம் சேர்த்த இம்மாமேதைகளில் வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோருக்கு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் 1968–ம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது சிலை எடுத்துச் சிறப்பித்ததையும், திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் தங்கிச்சமயப் பணிகள் ஆற்றிய கால்டுவெல் வாழ்ந்த இல்லத்தைப் புதுப்பித்து, 2011 பிப்ரவரி திங்களில் நினைவு இல்லமாகத் திறந்து வைத்துப் பெருமைப் படுத்தியதையும்; கிறித்துவ சமயம், தொண்டு சமயம் என்பதைத் தம் வாழ்க்கை மூலம் புலப்படுத்திய கருணையின் வடிவம் அன்னை தெரசாவைப் போற்றி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்திற்கு ''அன்னை தெரசா மாளிகை'' எனப் பெயர் சூட்டிப் பெருமைப் படுத்தியதையும் நினைவு கூர்ந்து கிறிஸ்தவ சமுதாய உடன் பிறப்புகள் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். ஆர்.எம்.வீரப்பன் ஏசுபிரானை இறைவனாக வழிபடும் உலகில் வாழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அவரது வாழ்க்கையைப் பாடமாகக் கற்றுக்கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு உதவுகிற நல்லுணர்வோடு புத்தாடை அணிந்து மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்தத் தியாகத் திருநாளில் தமிழ்நாட்டில் வாழும் கிறிஸ்தவப் பெருமக்கள் ஏசுபிரானை வணங்கி அவர் காட்டிய வழியில் நடந்து கொண்டாட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஜி.கே.வாசன் மத்திய கப்பல்துறை மந்திரி ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– கிறிஸ்துமஸ் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்நாளில், ''மதநல்லிணக்கம் வளர வேண்டும். மனித நேயம் மலர வேண்டும், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்'' என்பதே நமது லட்சியமாக இருக்க வேண்டும். அனைவருக்கும் என் மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பி.எஸ்.ஞானதேசிகன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– மக்களின் மீட்புக்காக பூமியில் அவதரித்த கிறிஸ்து இயேசுவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகெங்கும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. அவர் அருளிய அற்புதமான போதனைகளை நாம் மனதில் ஏற்பதன் மூலம் நாட்டில் வன்முறை ஒழிந்து, அமைதி, சமாதானம் மேலோங்கிடவும், அனைவரிடையேயும் அன்பு, பாசம், கருணை, மகிழ்ச்சி பெருகிடவும் சாதி, மத, இன பிரிவுகள் மறைந்து நல்லிணக்கம் மேம்படவும் வாழ்ந்து உயர்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். விஜயகாந்த் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– மக்கள் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சூழ்நிலையில் கிறிஸ்துமசை கொண்டாடுவது ஏழை எளிய மக்களுக்கு கஷ்டம்தான் என்றாலும், வருடத்தில் ஒருமுறை கொண்டாடுகிற இவ்விழாவை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், உற்றார், உறவினர்களோடும், நண்பர்களோடும் இணைந்தும் கொண்டாடிட வேண்டுகிறேன். கிறிஸ்தவ மக்களுக்கு தே.மு.தி.க. சார்பில் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். வைகோ ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– உயர்ந்த லட்சியங்களுக்காகப் போராடுகின்றவர்களுக்கு, சோதனைகளும் தோல்விகளும் அடுக்கடுக்காக வந்தாலும், அவற்றை நெஞ்சுறுதியோடு தாங்கிக்கொண்டு, நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில், விவிலியத்தில் சொல்லப்படுகின்ற வார்த்தைகளான, 'அவர் நியாயத்துக்கு வெற்றி கிடைக்கப் பண்ணுகிற வரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார் என்ற சொற்களை, மந்திரச் சொற்களாக மனதில் கருதி, தமிழ்நாட்டின் மறுமலர்ச்சிக்கும், தமிழ் ஈழ விடியலுக்கும் உறுதி எடுப்போமாக. இவ்வாறு வைகோ கூறியுள்ளார். டாக்டர் ராமதாஸ் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீது நீ அன்பு காட்டுவாயாக என்று கூறி அன்பின் மகத்துவத்தை மற்றவர்களுக்கும் புரிய வைத்தவர் இயேசுபிரான். ஆனால், இயேசு போதித்த கொள்கைகளை எல்லாம் மறந்துவிட்டு சுயநலத்துடனும், பிடிக்காதவர்களை பழிவாங்கும் நோக்குடனும் நடந்து கொள்ளும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. ''தந்தையே இவர்களை மன்னியும்... ஏனெனில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை'' என்றார் இயேசுபிரான். அவரது இந்த போதனையை மனதில் கொண்டு, மற்றவர்களின் தவறுகளை மன்னித்து, நாட்டில் அமைதி நிலவவும், போட்டி பொறாமைகள் அகலவும், ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் துயரங்கள் அகலவும் உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– உலகெங்கும் கிறிஸ்தவர்களால் வெகுவிமரிசையாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது பரிசுப் பொருட்களை வழங்கும் நிகழ்வு மட்டுமல்ல, அனைவரையும் மகிழவைப்பது நமது வாழ்தலின் மூலம் இறைவனது இருப்பை நிரூபிப்பது, அன்பெனும் இழையால் உலக மக்களை உறுதியாக இணைத்திருக்கும் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்திக் காட்டிய இயேசுபிரான் அவதரித்த நன்னாள் இது. இந்த இனிய கிறிஸ்துமஸ் நன்னாளில் தமிழகத்திலும், நாட்டிலும் நல்வாழ்த்துக்களை மகிழ்வோடு பகிர்ந்துகொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தொல்.திருமாவளவன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– வெறுப்பை விதைத்து பகையை மூட்டி ஆதாயம் தேடும் தற்குறிகளைக் காலம் அம்பலப்படுத்தும் எனும் நம்பிக்கையோடு இயேசு பெருமான் காட்டிய வழியில் மனிதநேயத்தை மேம்படுத்த உறுதியேற்போம். என யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் அறைகூவல் விடுப்பதோடு, அவர் பிறந்த இந்த நாளில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சு.திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியின் தேசியச்செயலாளர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– அன்பு, பொறுமை, சாந்தி, சமாதானம், கொடை, மன்னிப்பு உள்ளிட்ட தூய நற்பண்புகளை உலகிற்கு தந்து வாழ்ந்து காட்டிய இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும், எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஏ.சி.சண்முகம் புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– உலகமெங்கும் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்துமஸ் திருநாள் உற்சாகத்தோடும், பக்தி பெருக்கோடும் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் நம்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்துவ பெருமக்களுக்கும், இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். என்.ஆர்.தனபாலன் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இந்த உலகில் திடீரென்று நிகழ்ந்த நிகழ்ச்சியல்ல, கடவுள் படைத்த இவ்வழகிய உலகம் சாத்தானால் சீர்குலைக்கப்பட்டு இருளில் வீழ்ந்தது. வீழ்ந்து போனதை மீட்டெடுக்கக் கூடிய ஆற்றல் கடவுள் ஒருவருக்கே உண்டு, எனவேதான் மனுகுலத்தின் மீது அன்பு கூர்ந்து கடவுள் தம்முடைய ஒரே பேரான குமாரன் இயேசுவை நமக்கு ரட்சகராக இந்த உலகத்திற்கு அனுப்பினார். நாட்டில் அமைதியும், ஒற்றுமையும், சமாதானமும் எப்போதும் எல்லோருக்கும் கிடைத்திட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். டி.ராஜேந்தர் இதேபோல், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழக நிறுவன தலைவர் ந.சேதுராமன், லட்சிய திராவிட முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் டி.ராஜேந்தர், இந்திய சமூக நீதி இயக்க நிறுவன தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் பாரிவேந்தர், இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஒய்.ஜவஹர் அலி, இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவன தலைவர் சு.தாமஸ், தென் இந்திய பொதுநலச் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.வி.ராஜேந்திரன், அம்பேத்கார் மக்கள் முன்னணி நிறுவனர் கோ.வைரபாண்டியன், ஐக்கிய ஜனதாதளம் மாநில தலைமை பொதுச்செயலாளர் டி.ராஜகோபால், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி, தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரி அருண். முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை தலைவர் மேலை நாசர், வடசென்னை காங்கிரஸ் பிரமுகர் வி.எஸ்.ஜெ.தினகரன், கிறிஸ்தவ முன்னேற்றக்கழக தலைவர் எஸ்.ஜோசப் பெர்னாண்டோ, அம்பேத்கார் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ம.மத்தியாஸ் என்ற சீனிவாசன், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்க தலைவர் சேம.நாராயணன், இந்திய கிறிஸ்துவ மதச்சார்பற்ற கட்சி தலைவர் டாக்டர் மாட்டின், அம்பேத்கார் முன்னணி கழகம் மற்றும் சென்னை துறைமுக எஸ்.சி. எஸ்.டி. தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் திண்டிவனம் ஸ்ரீராமுலு ஆகியோரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். image: category:Tagging: |
| சினிமா டைரக்டர் கே.எஸ்.ரவிகுமாருக்கு பாராட்டு விழா ஜனவரி 4–ந்தேதி நடக்கிறது Posted: 24 Dec 2013 11:45 AM PST சென்னை, முத்து, படையப்பா, அவ்வை சண்முகி, தசாவதாரம், நாட்டாமை, நட்புக்காக உள்பட ஏராளமான படங்களை டைரக்டு செய்தவர், கே.எஸ்.ரவிகுமார். இவர் திரையுலகுக்கு வந்து 25 வருடங்கள் ஆகிறது. இதையொட்டி அவருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழா ஜனவரி 4–ந்தேதி, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 5–30 மணிக்கு நடக்கிறது. விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு கே.எஸ்.ரவிகுமாருக்கு நினைவு பரிசை வழங்குகிறார். சரத்குமார், சத்யராஜ், பிரபு, கார்த்திக், விஜய், அஜீத்குமார், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, விஷால், ஜீவா, சிலம்பரசன், தனுஷ் உள்பட பிரபல கதாநாயகர்கள்–கதாநாயகிகள் அனைவரும் விழாவில் கலந்துகொள்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமாரின் படங்களுக்கு இசையமைத்த பல இசையமைப்பாளர்கள் பங்குபெறும் இசை நிகழ்ச்சியும், நடிகர்–நடிகைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை நடிகர் ரமேஷ்கண்ணா, பட அதிபர்கள் சித்ரா லட்சுமணன், பி.எல்.தேனப்பன், டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, சந்தானபாரதி, ஈ.ராம்தாஸ், ரங்கநாதன், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஆகியோர் செய்து வருகிறார்கள். image: category:Tagging: |
| உறவை மேலும் வலுப்படுத்த முயற்சி: பாகிஸ்தான் அணுமின் திட்டத்துக்கு சீனா ரூ.39 ஆயிரம் கோடி நிதி உதவி Posted: 24 Dec 2013 11:33 AM PST இஸ்லாமாபாத், பாகிஸ்தான் புதிய அணுமின் திட்டத்துக்கு சீனா ரூ.39 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குகிறது. இதன் மூலம் இரு நாடுகள் இடையே உறவு மேலும் வலுப்பெறும் என பாகிஸ்தான் அதிகாரிகள் கூறினர். புதிய அணுமின் திட்டம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகருக்கு அருகே புதிய அணுமின் நிலையம் அமைக்கப்படும் என பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்தார். இந்த மின்சார திட்டத்துக்கு ரூ.57 ஆயிரம் கோடி செலவிடவும் தீர்மானித்தார்கள். இரு அணு உலைகள் மூலம் தலா 1,100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால் இத்திட்டத்துக்கு நிதி உதவி வழங்குவது யார்? எப்போது திட்டம் நிறைவு பெறும் என்ற விவரம் வெளியிடப்படாமல் இருந்தது. சீனா நிதி உதவி இந்த அணுமின் திட்டத்துக்கு சீனா ரூ.39 ஆயிரம் கோடி (6½ பில்லியன் டாலர்கள்) கடன் உதவி வழங்குகிறது என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இதை வழங்க சீன தேசிய அணுசக்தி நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அரசு எரிசக்தி திட்ட 2 உறுப்பினர்கள் தெரிவித்த தகவலின் மூலம் இது வெளிவந்துள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் அணு எரிசக்தி கமிஷன் தலைவர் அன்சார் பர்வேஸ் கூறுகையில், 'இந்த புதிய அணுமின் திட்டத்தை இயக்க சீனா முழு ஒத்துழைப்பு வழங்க உள்ளது' என்று கூறினார். இது வரும் 2019–ம் ஆண்டில் நிறைவு பெறும் என்று மட்டும் தெரிவித்தார். வேறு விவரங்களை கூற மறுத்து விட்டார். உறவு வலுப்பெறும் இதன் மூலம் சீனா, பாகிஸ்தான் இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறினர். பாகிஸ்தானில் தற்போது 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஆனால் 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுவதால் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே புதிய அணுமின் நிலையங்கள் தொடங்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருகிறது. 2050–ம் ஆண்டிற்குள் அணுமின் நிலையங்கள் மூலம் 40 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டு வருகிறது. சீனா ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் ஷஷ்மா என்ற இடத்தில் அணுமின் திட்டத்துக்கு உதவி அளித்துள்ளது. அத்துடன் மேலும் 2 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்போது கராச்சி திட்டத்துக்கும் நிதி உதவி வழங்க முன்வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். category:Tagging: |
| ஆஸ்திரேலியாவின் வெற்றிப் பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுமா இங்கிலாந்து? Posted: 24 Dec 2013 11:30 AM PST மெல்போர்ன், இங்கிலாந்து–ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 4–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. 'பாக்சிங் டே' டெஸ்ட் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பிரிஸ்பேன், அடிலெய்டு, பெர்த் ஆகிய இடங்களில் நடந்த முதல் 3 டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை மீண்டும் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா–இங்கிலாந்து இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி உலகின் பெரிய மைதானமான மெல்போர்னில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்கும் இந்த போட்டிக்கு 'பாக்சிங் டே' டெஸ்ட் என்று பெயர். மேலைநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஏழைகளுக்கு உதவுவதற்காக தேவாலயங்களில் பெட்டி (பாக்ஸ்) வைத்திருப்பார்கள். அதில் ஆலயத்திற்கு வருபவர்கள் பணம், பொருட்களை போடுவார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் அதாவது டிசம்பர் 26–ந்தேதி அந்த பாக்ஸ்கள் பிரித்து ஏழைகளுக்கு வழங்கப்படும். பாக்ஸ்களை பிரித்து வழங்கும் இந்த நிகழ்ச்சி அடிப்படையிலேயே 'பாக்சிங் டே' என்ற பெயர் வந்ததாக கூறுகிறார்கள். இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது. இதனால் அன்றைய தினம் விடுமுறை இன்றி தங்களிடம் உழைக்கும் தொழிலாளர்களுக்கு முதலாளிகள் மறுநாள் லீவு கொடுத்து அவர்களுக்கு 'கிறிஸ்துமஸ் பாக்ஸ்' வழங்கும் பழக்கம் இருந்தது. இதன் காரணமாகவும் 'பாக்சிங் டே' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இப்படி பாரம்பரியமிக்க 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி ஒவ்வொரு ஆண்டும் மெல்போர்னில் அரங்கேறி வருகிறது. இந்த முறை ஆஸ்திரேலியாவுடன் இங்கிலாந்து மல்லுகட்டுகிறது. ஆஸ்திரேலியாவின் குறி தொடர்ச்சியான வெற்றியால் உற்சாகமடைந்துள்ள ஆஸ்திரேலிய அணி தொடரை 5–0 என்ற கணக்கில் முழுமையாக வெல்வதை இலக்காக கொண்டுள்ளது. தொடரை வசப்படுத்தி விட்டாலும் எந்த வகையிலும் மெத்தனமாக இருக்கமாட்டோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியில், கேப்டன் மைக்கேல் கிளார்க் (2 சதம்), டேவிட் வார்னர் (2 சதம்), ஸ்டீவன் சுமித், பிராட் ஹேடின், ஷேன் வாட்சன் ஆகியோர் சதம் அடித்து அசத்தியுள்ளனர். பந்து வீச்சில் மிட்செல் ஜான்சன் 23 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். இதே பார்மை எஞ்சிய போட்டிகளிலும் தொடரும் முனைப்புடன் ஆஸ்திரேலியா வியூகங்களை வகுத்து வருகிறது. அனேகமாக இந்த டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. அப்படி நடந்தால் 9 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா தொடர்ந்து 4 டெஸ்டுகளில் ஒரே அணியை களம் இறக்கிய பெருமையை பெறும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதை லட்சியமாக கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் எஞ்சிய இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றால் தரவரிசையில் 5–வது இடத்தில் இருந்து 3–வது இடத்திற்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. மீளுமா இங்கிலாந்து? தொடர்ச்சியான படுதோல்விகளால் இங்கிலாந்து அணி கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ஓய்வு பெற்று விட்டார். ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்திற்கு முட்டுகட்டை போட்டு, ரசிகர்களுக்கு ஆறுதல் வெற்றியையாவது தேடித்தர வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து அணி தவிக்கிறது. அந்த அணியில் புதுமுக வீரர் பென் ஸ்டோக்ஸ் தவிர வேறு யாரும் இந்த தொடரில் சதம் அடிக்கவில்லை. மூத்த வீரர்கள் கேப்டன் அலஸ்டயர் குக், கெவின் பீட்டர்சன், இயான் பெல், மேத் பிரையர் உள்ளிட்டோர் ரன் குவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். ஸ்வான் ஓய்வு பெற்று விட்டால் அவருக்கு பதிலாக இந்த டெஸ்டில் மான்டி பனேசர் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலும் 'டல்' அடிப்பதில்லை. 1997–ம் ஆண்டுக்கு பிறகு இங்கு நடந்துள்ள 15 டெஸ்டுகளிலும் முடிவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



