Daily Thanthi |
- உலக கோப்பை கபடியில் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து
- வங்காளதேச பாராளுமன்ற தேர்தல் ஆளும் கூட்டணி வேட்பாளர்கள் 151 பேர் போட்டியின்றி தேர்வு
- ரஞ்சி கிரிக்கெட் ஷேவாக் அரை சதம் அடித்தார்
- டெல்லி மராத்தான் பந்தயம் எத்தியோப்பியா வீரர் முதலிடம்
- இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3–வது டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா டேவிட் வார்னர் சதம் அடித்தார்
- ஒற்றுமைக்கான ஓட்டம்
- *உலக கோப்பை கபடியில் இந்தியா சாம்பியன்
- லோக்பால் மசோதா நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் அன்னா ஹசாரே அறிவிப்பு
- மக்களின் எதிர்பார்ப்புகளை மதிக்க தவறிவிட்டது’ ஆம் ஆத்மி கட்சிக்கு பாரதீய ஜனதா கண்டனம் ‘
- பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றிவிட்டு பின்னர் திருத்தம் செய்யலாம் சந்திரபாபு நாயுடு தகவல்
| உலக கோப்பை கபடியில் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து Posted: 15 Dec 2013 11:59 AM PST உலக கோப்பை கபடியில் இந்தியா சாம்பியன் பஞ்சாப்பின் லூதியானாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த உலக கோப்பை கபடி போட்டியின் (சர்க்கிள் ஸ்டைல்) இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 48-39 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்து தொடர்ந்து 4-வது முறையாக உலக கோப்பைக்கு முத்தமிட்டது. ரூ.2 கோடியை பரிசாக வென்ற இந்திய வீரர்கள் உலக கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுத்த காட்சி. பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பிரகாஷ்சிங் பாதல், துணை முதல்-மந்திரி சுக்பிர்சிங் பாதல், பாகிஸ்தானை சேர்ந்த பஞ்சாப் மாகாண முதல்&மந்திரி ஷபாஸ் ஷரிப் ஆகியோரும் படத்தில் உள்ளனர். image: category:News Group Category: |
| வங்காளதேச பாராளுமன்ற தேர்தல் ஆளும் கூட்டணி வேட்பாளர்கள் 151 பேர் போட்டியின்றி தேர்வு Posted: 15 Dec 2013 11:55 AM PST டாக்கா வங்காளதேச பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசினாவின் ஆளும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 151 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாராளுமன்ற தேர்தல் வங்காளதேசத்தில் பொதுத்தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் ஷேக் ஹசினாவுக்கும், முன்னாள் பிரதமரும், முக்கிய எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சி தலைவருமான காலிதா ஜியாவுக்கும் கருத்து வேறுபாடு நிலவியது. அரசியல் கட்சி சார்பற்றவர்களை கொண்ட இடைகால மந்திரிசபையை அமைத்து தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என கலிதா ஜியா வலியுறுத்தினார். அவருக்கு ஜமாத்–இ–இஸ்லாமி கட்சி ஆதரவு குரல் கொடுத்தது.ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்காமல் பிரதமர் ஹசினா அனைத்துக்கட்சி மந்திரிசபையை அமைத்தார். அத்துடன் அடுத்த மாதம் (ஜனவரி) 5–ந்தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இடையே மீண்டும் சமரச பேச்சு நடைபெற்றும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை அடுத்து கலிதா ஜியா தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார்.என்றாலும் பிரதமர் ஹசினாவின் அவாமி லீக் கட்சி மற்றும் அதன் 3 தோழமை கட்சிகளின் வேட்பாளர்கள் பாராளுமன்றத்தின் 300 தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். 151 வேட்பாளர்கள் தேர்வு வேட்பு மனு வாபஸ் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் முடிவுக்கு வந்தது. அதில் மொத்தம் உள்ள பாராளுமன்ற 300 தொகுதிகளில் 151 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி விட்டார்கள். இதில் 127 பேர் ஆளும் அவாமி லீக் கட்சியையும், மற்ற 24 பேர் கூட்டணி கட்சிகளையும் சேர்ந்தவர்கள். இந்த தகவலை தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் வெளியிட்டார்.வங்காளதேச வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு மிக அதிக அளவில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். இது பாராளுமன்றத்தின் பாதிக்கும் மேற்பட்ட இடம் ஆகும். இதற்கு முன் 1996–ம் ஆண்டு தேர்தலில் 49 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றார்கள்.எனவே மீதமுள்ள 149 தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. image: category:Tagging:News Group Category: |
| ரஞ்சி கிரிக்கெட் ஷேவாக் அரை சதம் அடித்தார் Posted: 15 Dec 2013 11:30 AM PST புதுடெல்லி, ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விதர்பா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷேவாக் அரை சதம் அடித்தார். ரஞ்சி கிரிக்கெட் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லி–விதர்பா அணிகள் இடையிலான ஆட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 88 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் குவித்தது. மன்ஹாஸ் 100 ரன்னிலும், யாதவ் 81 ரன்னிலும், ஷேவாக் 56 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் பிடிக்காமல் தவிக்கும் ஷேவாக் இந்த ரஞ்சி சீசனில் அடித்த முதல் அரை சதம் இதுவாகும். தமிழக அணி 246 ரன் ஹூப்ளியில் நடந்து வரும் கர்நாடக அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் 174 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய கர்நாடக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட்டுக்கு 59 ரன் எடுத்து இருந்தது. 2–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கர்நாடக அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 367 ரன்கள் எடுத்தது. டெல்லியில் நடந்து வரும் ரெயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய தமிழக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து இருந்தது. 2–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 246 ரன்னில் ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக பிரசன்னா 117 ரன்கள் சேர்த்தார். இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய ரெயில்வே அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. மும்பை 501 ரன்கள் குவிப்பு மும்பையில் நடந்து வரும் ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய மும்பை அணி முதல் நாளில் எடுத்த ஸ்கோருடன் (2 விக்கெட்டுக்கு 242 ரன்கள்), நேற்று தொடர்ந்து ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 501 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஷா 170 ரன்னும், வாசிம் ஜாபர் 143 ரன்னும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஒடிசா அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 73 ரன் எடுத்தது. image: category:News Group Category: |
| டெல்லி மராத்தான் பந்தயம் எத்தியோப்பியா வீரர் முதலிடம் Posted: 15 Dec 2013 11:27 AM PST டெல்லி மராத்தான் பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் எத்தியோப்பிய வீரரும், பெண்கள் பிரிவில் கென்ய வீராங்கனையும் முதலிடம் பிடித்தனர். டெல்லி மராத்தான் டெல்லி அரை மராத்தான் பந்தயம் நேற்று நடந்தது. எலைட் ஆண்கள், பெண்கள் உள்பட 4 பிரிவுகளில் பந்தயங்கள் நடைபெற்றன. 21 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த போட்டியில் சர்வதேச வீரர்–வீராங்கனைகள் உள்பட மொத்தம் 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதன் 'எலைட்' ஆண்கள் பிரிவில் எத்தியோப்பியா வீரர் அட்செடு செகாய் 59 நிமிடம் 10 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். இதற்கு முன்பு 2008–ம் ஆண்டில் டெரிபா மெர்கா (எத்தியோப்பியா) 59.15 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அட்செடு செகாய் நேற்று தகர்த்தார். கென்யா ஆதிக்கம் முன்னாள் உலக சாம்பியன் ஜெப்ரி கிப்சாங் (கென்யா) 59:30 வினாடியில் கடந்து 2–வது இடத்தையும், மற்றொரு கென்யா வீரர் வில்சன் கிப்ரோப் 59:49 வினாடியில் கடந்து 3–வது இடத்தையும் பிடித்தனர். கடந்த ஆண்டு சாம்பியனான எட்வின் கிப்யெகோ (கென்யா) 8–வது இடம் பெற்றார். பெண்கள் பிரிவில் கென்ய வீராங்கனைகளே முதல் 3 இடங்களை பிடித்தனர். புளோரன்ஸ் கிப்லாகாட் 1:07:58 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். கிளாடிஸ் ஷெர்னோ 1:08:03 வினாடியில் கடந்து 2–வது இடத்தையும், லுசி கபு 1:08:10 வினாடியில் கடந்து 3–வது இடத்தையும் பெற்றனர். லட்சுமண் இந்திய வீரர்களில் லட்சுமண் (1:04.44 வினாடி) முதலிடத்தையும், வீராங்கனைகளில் பிரீஜா ஸ்ரீதரன் (1:20:04 வினாடி) முதலிடத்தையும் பிடித்தனர். எலைட் பிரிவில் முதலிடம் பிடித்த வீரர்–வீராங்கனைக்கு ரூ.2.5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. சீனியர் சிட்டிசன் பிரிவில் தொழில் அதிபர் அனில் அம்பானி உள்பட பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு ஓடினார்கள். category:News Group Category: |
| இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3–வது டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா டேவிட் வார்னர் சதம் அடித்தார் Posted: 15 Dec 2013 11:21 AM PST பெர்த், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3–வது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 369 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருக்கிறது. டேவிட் வார்னர் சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து 251 ரன் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3–வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 385 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2–வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இங்கிலாந்து அணி தொடர்ந்து பேட் செய்தது. மேற்கொண்டு 71 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சிய 6 விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இங்கிலாந்து அணி உணவு இடைவேளைக்கு முன்பாக 251 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இயான் பெல் 15 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 18 ரன்னிலும், விக்கெட் கீப்பர் மேத் பிரையர் 8 ரன்னிலும், டிம் பிரிஸ்னன் 21 ரன்னிலும், ஸ்டூவர்ட் பிராட் 5 ரன்னிலும், ஆண்டர்சன் 2 ரன்னிலும் வெளியேற்றப்பட்டனர். ஸ்வான் 19 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றார். ஆஸ்திரேலிய தரப்பில் ரையான் ஹாரிஸ், பீட்டர் சிடில் தலா 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஜான்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வார்னருக்கு அதிர்ஷ்டம் அடுத்து 134 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியாவின் 2–வது இன்னிங்சை டேவிட் வார்னரும், கிறிஸ் ரோஜர்சும் தொடங்கினர். இங்கிலாந்தின் சொதப்பலான பீல்டிங், இவர்கள் தங்கள் அணிக்கு நல்ல அடித்தளம் அமைக்க வித்திட்டது. டேவிட் வார்னர் 13 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான ஸ்டம்பிங் வாய்ப்பை விக்கெட் கீப்பர் மேத் பிரையர் கோட்டை விட்டார். கிறிஸ் ரோஜர்ஸ் 27 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது, பேட்டில் உரசி சென்ற பந்தை ஸ்லிப்பில் நின்ற எதிரணி கேப்டன் அலஸ்டயர் குக் கேட்ச் செய்ய தவறினார். அதிரடி காட்டிக் கொண்டிருந்த டேவிட் வார்னருக்கு 89 ரன்களில், மேத் பிரையர் மூலம் மீண்டும் ஒரு முறை 'கருணை' கிடைத்தது. அவர் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வானின் பந்தை இறங்கி வந்து அடிக்க முயற்சித்த போது, அது ஏமாற்றியது. அந்த சமயத்தில் ஸ்டெம்பிங் செய்யும் வாய்ப்பை பிரையர் நழுவ விட்டார். கிளார்க் 23 ரன் முதல் விக்கெட்டுக்கு 157 ரன்கள் சேர்த்த நிலையில், இந்த ஜோடியை பிரிஸ்னன் பிரித்தார். ரோஜர்ஸ் 54 ரன்களில் (135 பந்து) கேட்ச் ஆனார். சிறிது நேரத்தில் டேவிட் வார்னர் பவுண்டரி அடித்து தனது 5–வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இந்த தொடரில் அவர் அடித்த 2–வது சதமாகும். இறுதியில் அவர் 112 ரன்களில் (140 பந்து, 17 பவுண்டரி, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். தனது 100–வது டெஸ்டில் ஆடும் கேப்டன் மைக்கேல் கிளார்க் (23 ரன்) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. நேற்றைய ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சில் 70 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. ஷேன் வாட்சன் (29 ரன்), ஸ்டீவன் சுமித் (5 ரன்) களத்தில் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு ஆஸ்திரேலிய அணி ஒட்டுமொத்தமாக இதுவரை 369 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியிருக்கிறது. போட்டியின் 4–வது நாளான இன்று ஆஸ்திரேலியா அதிரடியாக ஆடி விட்டு, இங்கிலாந்துக்கு இலக்கு நிர்ணயிக்கும் வகையில் 'டிக்ளேர்' செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜான்சன் பந்து வீச்சில் ஸ்டூவர்ட் பிராட் காயம் இங்கிலாந்து அணியின் ஆல்–ரவுண்டர் ஸ்டூவர்ட் பிராட் (5 ரன், 13 பந்து), மிட்செல் ஜான்சன் மின்னல் வேகத்தில் யார்க்கராக வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். பந்து அவரது வலது கணுக்காலை பலமாக பதம் பார்த்தது. வலியால் துடித்த அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பிராட்டுக்கு எக்ஸ்ரே எடுத்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் நேற்று அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. காயத்தன்மை குறித்து முழுமையாக அறிய ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும், அதன் பிறகு இன்று காலை அதன் விவரம் தெரிவிக்கப்படும் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. இந்த டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட் 4–வது நாளில் பந்து வீச வாய்ப்பில்லை. அடுத்த டெஸ்டில் களம் இறங்குவதும் சந்தேகம் தான்.
category: |
| Posted: 15 Dec 2013 10:56 AM PST |
| *உலக கோப்பை கபடியில் இந்தியா சாம்பியன் Posted: 15 Dec 2013 10:52 AM PST பஞ்சாப்பின் லூதியானாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த உலக கோப்பை கபடி போட்டியின் (சர்க்கிள் ஸ்டைல்) இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 48-39 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்து தொடர்ந்து 4-வது முறையாக உலக கோப்பைக்கு முத்தமிட்டது. ரூ.2 கோடியை பரிசாக வென்ற இந்திய வீரர்கள் உலக கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுத்த காட்சி. 8 |
| லோக்பால் மசோதா நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் அன்னா ஹசாரே அறிவிப்பு Posted: 15 Dec 2013 10:07 AM PST ராலேகான் சித்தி பாராளுமன்ற இரு அவைகளிலும் லோக்பால் மசோதா நிறைவேறும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று அன்னா ஹசாரே அறிவித்தார். 6–வது நாள் உண்ணாவிரதம் ஊழலுக்கு எதிராக வலுவான ஜன லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தி பிரபல சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தியில் அவர் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார். நேற்று 6–வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். அவரை பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஏராளமானவர்கள் வரிசையில் சென்று பார்த்தனர். மேலும் அவர் அமர்ந்திருக்கும் மேடைக்கு எதிரே ஆதரவாளர்கள் பலர் கூடி இருந்தனர். நேற்று சோர்வாக காணப்பட்ட ஹசாரே உடல்நிலையை பரிசோதித்த டாக்டர், அவரின் உடல் எடை 4 கிலோ குறைந்துள்ளதாக தெரிவித்தார். அன்னா ஹசாரே பேட்டி லோக்பால் ஒரு ஜோக்பால் என்றும், மத்திய அரசு அதனை பலவீனமான முறையில் கையாளுவதாகவும் 'ஆம் ஆத்மி' கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்து இருந்தார். அவருடைய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் அன்னா ஹசாரே நேற்று, உண்ணாவிரத மேடையில் இருந்து படி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு அதில் ஏதேனும் குறைபாடுகளை யாராவது கண்டால், அக்குறைகளை நிறைவேற்ற கோரி அவர்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். லோக்பால் மசோதாவில் குறிப்பிட்டு உள்ள நிபந்தனைகளை நான் முழுவதுமாக படித்து பார்த்தேன். அதில் எந்த குறையும் இல்லை. எனவே மசோதாவில் ஏதேனும் குறைபாட்டை நீங்கள் (கெஜ்ரிவால்) கண்டுபிடித்தால், என்னை போல் உண்ணாவிரதம் இருங்கள். முன்பு நான் உண்ணாவிரதம் இருந்த போது, குடிமக்கள் சாசனம் உள்ளிட்ட 3 பிரச்சினைகளை வலியுறுத்தினேன். அவை லோக்பால் மசோதாவில் இடம்பெற்று உள்ளது வரவேற்கத்தக்கது. சி.பி.ஐ. அதிகாரிகளை மத்திய அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து நீக்குவது உள்ளிட்ட 13 நிபந்தனைகளை மசோதாவில் படித்தேன். இதனால் தான், லோக்பால் மசோதா தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டை வரவேற்பதாக கூறினேன். அரசியல் கட்சிகளுக்கு நன்றி லோக்பால் மசோதா மூலம் நாடும், நாட்டு மக்களும் மிகவும் பயன்பெறுவார்கள். மாநிலங்களவையில் லோக்பால் மசோதா தாக்கல் செய்வதில் உறுதுணையாக இருந்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குளிர்கால கூட்டத்தொடர் முடிவதற்கு இன்னமும் 5 நாட்கள் தான் இருக்கின்றன. எனவே நேரத்தை கருத்தில் கொண்டு லோக்பால் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும். தேவைப்பட்டால் கூட்டத்தொடரை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கலாம். ஜன லோக்பால் மசோதா நிறைவேறும் வரை எனது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாட்டேன். நான் அவ்வளவு சீக்கிரம் சாக விரும்பவில்லை. நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சேவை ஆற்ற வாழ விரும்புகிறேன். நாட்டுக்காக போராடுவதை நான் பெருமையாகவே கருதுகிறேன். லோக்பால் மசோதா தாக்கலாவதற்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு எனது நன்றி. இருப்பினும் சிலர் இதற்கு ஆதரவு அளிக்காமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார். அரவிந்த் கெஜ்ரிவால் மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அன்னா ஹசாரேவுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடு குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ''இது பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நாங்கள் ஏன் சண்டை போட வேண்டும்?' என்று பதிலளித்தார்.மேலும் அவர், லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும்போது யாராவது கூச்சல் குழப்பம் ஏற்படுத்தினால், சலசலப்புக்கு மத்தியில் மசோதாவை நிறைவேற்றுங்கள் என்று ஆவேசமாக பதிலளித்தார். கிரண் பெடி முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பெடியும் நேற்று அன்னா ஹசாரேவுடன் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். கிரண் பெடி அளித்த பேட்டியில் கூறியதாவது:–லோக்பால் மசோதா பலவீனமான முறையில் காட்சி அளிப்பதாக சிலர் கூறுகிறார்கள். அவர்கள் அதை முழுவதுமாக படித்து பார்க்கவில்லை என்பதை தான் இது உணர்த்துகிறது. அவர்கள் மசோதாவை படிக்க வேண்டும். அதாவது சி.பி.ஐ.யின் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிட கூடாது என்பதை லோக்பால் மசோதா தெளிவாக உணர்த்துகிறது.குறிப்பாக மசோதாவை கெஜ்ரிவால் படித்து பார்த்து அதன் உண்மை நிலை என்ன என்பதை உணர வேண்டும். லோக்பால் மசோதாவை ஜோக்பால் என்று கிண்டல் செய்தவர்கள் எல்லாம் அதை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் மசோதாவை நன்கு படித்துவிட்டு முடிவுக்கு வர வேண்டும்.இவ்வாறு கிரண் பெடி கூறினார். image: category:Tagging:News Group Category: |
| மக்களின் எதிர்பார்ப்புகளை மதிக்க தவறிவிட்டது’ ஆம் ஆத்மி கட்சிக்கு பாரதீய ஜனதா கண்டனம் ‘ Posted: 15 Dec 2013 09:50 AM PST புதுடெல்லி டெல்லியில் அரசு அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. அரசு அமைப்பதில் இழுபறி டெல்லி சட்டசபை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. 2–வது பெரிய கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் தயக்கம் காட்டி வருகிறது. காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் 18 நிபந்தனைகள் விதித்தார்.அந்த நிபந்தனைகளை அக்கட்சிகள் ஏற்கவில்லை. டெல்லியில் புதிய அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள இழுபறி குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு துணை நிலை கவர்னர் நஜீப் ஜங் அறிக்கை அனுப்பி உள்ளார். அரசியல் நாடகம் இந்த நிலையில் டெல்லி பாரதீய ஜனதா தலைவர் விஜய் கோயல் கூறியதாவது:–டெல்லியில் அரசு அமைப்பதை ஆம் ஆத்மி கட்சி அரசியல் நாடகம் ஆக்கி இருப்பது துரதிர்ஷ்டவசமானது. அரசு அமைப்பது மிக முக்கியமான பிரச்சினை. இதை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தக்கூடாது.காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதை அனைவரும் அறிவார்கள். ஆனால் ஆம் ஆத்மி கட்சி வேண்டுமென்றே இந்த விஷயத்தில் தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதை தாமதித்துக்கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மிக்கு கேள்வி ஆம் ஆத்மி கட்சியினர் பாரதீய ஜனதாவுடனோ, காங்கிரசுடனோ எந்த உறவும் வைத்துக்கொள்வதில்லை என்று தங்கள் குழந்தைகள் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளனர். அப்படி இருக்கிறபோது, கெஜ்ரிவால் ஏன் 18 நிபந்தனைகள் தொடர்பாக பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் கடிதம் எழுத வேண்டும்?இறுதியாக, உறுதியாக ஆம் ஆத்மி ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். ஆட்சி அமைப்பீர்களா, இல்லையா? உரிமை இல்லை ஜனநாயக நடைமுறைகளை கேலிக்கூத்தாக்கும் வகையில், இத்தகைய நாணயமற்ற அரசியல் அராஜகத்தின் மூலம் ஓட்டு போட்ட மக்களை இழிவுபடுத்த ஆம் ஆத்மி கட்சிக்கு உரிமை இல்லை.பாரதீய ஜனதாதான் மக்களின் முதல் தேர்வு. வாக்காளர்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஆம் ஆத்மி கட்சி, துரதிர்ஷ்டவசமாக சாமானிய மக்களின் எதிர்பார்ப்புக்களை மதிக்க தவறிவிட்டது.இவ்வாறு அவர் கூறினார். ஜனாதிபதி ஆட்சி? தற்போதைய டெல்லி சட்டசபையின் ஆயுட்காலம் நாளை மறுதினம் (18–ந் தேதி) முடிகிறது. அதற்குள் புதிய அரசு அமையாத பட்சத்தில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. image: category:Tagging:News Group Category: |
| Posted: 15 Dec 2013 09:45 AM PST ஐதராபாத் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டு பின்னர் திருத்தம் செய்து கொள்ளலாம் என தெலுங்கு தேசம் கட்சிதலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். லோக்பால் மசோதா பாராளுமன்றத்தின் மக்களவையில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மேல்–சபையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சமாஜ்வாடி உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும், இந்த மசோதாவில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் சில கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.இதற்கிடையே, நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தெலுங்கு தேசம் ஆதரவு இந்தநிலையில் லோக்பால் மசோதாவை முதலில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டு பின்னர் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.இது குறித்து ஐதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''சில மசோதாக்களை குறித்த நேரத்தில் நிறைவேற்றியே ஆக வேண்டும். இல்லையெனில் காலம் கடந்து விடும். அதன்படி லோக்பால் மசோதாவை முதலில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அதில் தேவையான திருத்தங்களை பின்னர் செய்து கொள்ளலாம். இந்த மசோதா நிறைவேற தெலுங்கு தேசம் ஆதரவு அளிக்கும்'' என்றார். பா.ஜனதாவுடன் கூட்டணி? மேலும் 'மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) கூட தற்போது காங்கிரஸ் புலனாய்வு அமைப்பாக மாறி வருவதாகவும், எனவே லோக்பால் மசோதாவில் நிச்சயம் திருத்தம் செய்ய வேண்டும்' என்றும் கூறினார்.'வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.வுடன் கூட்டணி வைப்பீர்களா?' கேட்டதற்கு, ''தெலுங்கு தேசம் எப்போதும் காங்கிரசை எதிர்த்தே போராடி வருகிறது. மத்தியில் 4 முறை காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சி அமைத்த போது, அதில் 3 முறை தெலுங்குதேசம் அங்கம் வகித்தது. தற்போதும் காங்கிரசை வெளியேற்றுவதே எங்கள் நோக்கம். இதற்கு மேல் எதுவும் தற்போது கூற முடியாது'' என்றார். image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

