மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- வகுப்பு கலவர தடுப்பு மசோதா பேரழிவுக்கு வழி வகுத்து விடும்: மன்மோகன்சிங்குக்கு நரேந்திர மோடி கடிதம்
- தெலுங்கானாவில் 2 மாவட்டத்தை சேர்க்க எதிர்ப்பு: ஐதராபாத் உள்பட 10 மாவட்டத்தில் பந்த்
- 28–ந்தேதி புட்டபர்தி சாய்பாபா ஆசிரமத்தில் ஜனாதிபதி வழிபாடு
- திருப்பதி கோவிலில் 16–ந்தேதி முதல் சுப்ரபாத சேவை ரத்து
- தெலுங்கானா அறிக்கைக்கு மந்திரிசபை இன்று ஒப்புதல்: மேலும் 2 மாவட்டங்கள் சேர்க்கப்படுமா?
- தெலுங்கானா முழு அடைப்புக்கு பா.ஜனதா ஆதரவு
- பெண்களின் பாதுகாப்பிற்காக அவசர உதவி வசதியை மொபைல் போன்களில் கொண்டுவர அரசு திட்டம்
- மும்பையில் மனைவி தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்தவர் கைது
- டெல்லி பெண் பிரீத்தி ரதி திராவகம் வீசி கொலை: மும்பை குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை தொடக்கம்
- மும்பையில் கடற்படை தினம்: கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள்
- குளிர்கால கூட்டத்தொடருக்காக பாராளுமன்றம் இன்று கூடுகிறது
- டெல்லி சட்டசபை தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு
- பஞ்சாபில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நாளை தொடக்கம்
- எனது வாழ்நாளில் இந்தியாவுடன் போரிட்டு பாகிஸ்தான் வெற்றி பெற முடியாது: மன்மோகன் சிங்
- 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்: கருத்துக்கணிப்பு தகவல்
- பாலியல் புகார்: முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது வழக்குப்பதிவு
- அட்டப்பாடியில் இருந்து தமிழர்கள் வெளியேற்றமா? கேரளா மறுப்பு
- சுங்கச் சாவடியை சூறையாடிய மராட்டிய மந்திரி மகன் கைது: நண்பர்கள் 8 பேரும் சிக்கினர்
- ஏடி.எம். மையத்தில் பெண் அதிகாரியை வெட்டியவர் அடையாளம் தெரிந்தது
- செவ்வாயை நோக்கிய பயணம்: மங்கள்யான் விண்கலம் புவிஈர்ப்பு மண்டலத்தை தாண்டியது
| வகுப்பு கலவர தடுப்பு மசோதா பேரழிவுக்கு வழி வகுத்து விடும்: மன்மோகன்சிங்குக்கு நரேந்திர மோடி கடிதம் Posted: 04 Dec 2013 11:14 PM PST பிரதமர் மன்மேகான் சிங்குக்கு குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:– வகுப்பு கலவர தடுப்பு மசோதாவை மத்திய அரசு இந்த நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட உள்ளதாக அறிகிறேன். தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த மசோதாவை அவசரம், அவசரமாக மத்திய அரசு கொண்டு வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. |
| தெலுங்கானாவில் 2 மாவட்டத்தை சேர்க்க எதிர்ப்பு: ஐதராபாத் உள்பட 10 மாவட்டத்தில் பந்த் Posted: 04 Dec 2013 10:09 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் ஏற்பாட்டில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கு சீமாந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். என்றாலும் தெலுங்கானா வரைவு மசோதா தயாரிக்கும் பணியில் மந்திரிகள் குழு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதற்கு ஒரு மித்த முடிவு எட்டப்படாததால் மசோதாவை இறுதி செய்வது தாமதமாகி வருகிறது. |
| 28–ந்தேதி புட்டபர்தி சாய்பாபா ஆசிரமத்தில் ஜனாதிபதி வழிபாடு Posted: 04 Dec 2013 09:08 PM PST ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகிற 19–ந்தேதி ஐதராபாத் செல்கிறார். 28–ந்தேதி வரை ஐதராபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தங்குகிறார். 28–ந்தேதி காலை புட்ட பர்தியில் உள்ள சத்ய சாய்பாபா ஆசிரமத்துக்கு செல்கிறார். அங்கு சாய்பாபா சமாதியை தரிசனம் |
| திருப்பதி கோவிலில் 16–ந்தேதி முதல் சுப்ரபாத சேவை ரத்து Posted: 04 Dec 2013 09:07 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை சுப்ரபாத சேவை நடத்தப்படுவது உண்டு. தனூர் எனப்படும் மார்கழி மாதம் வருகிற 16–ந் தேதி பிறக்கிறது. இதையடுத்து 16–ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 14–ந் தேதி வரை சுப்ரபாத சேவை ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை பாராயணம் செய்யப்படுகிறது. |
| தெலுங்கானா அறிக்கைக்கு மந்திரிசபை இன்று ஒப்புதல்: மேலும் 2 மாவட்டங்கள் சேர்க்கப்படுமா? Posted: 04 Dec 2013 08:41 PM PST ஆந்திராவில் இருந்து 10 மாவட்டங்களைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 3–ந் தேதி தெலுங்கானா வரைவு மசோதா தயாரிக்க மத்திய மந்திரிகள் குழு அமைக்கப்பட்டது. மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழு தெலுங்கானா, சீமாந்திரா பகுதி தலைவர்கள் மற்றும் மக்களை சந்தித்து கருத்துக்கள் கேட்டது. அதன் அடிப்படையில் 69 பக்கங்கள் கொண்ட வரைவு மசோதா அறிக்கையை மந்திரிகள் குழு தயாரித்துள்ளது. அந்த 69 பக்க வரைவு மசோதா தவிர 22 பக்க சிறப்பு அறிக்கை ஒன்றையும் மந்திரிகள் குழு தயாரித்தது. அதில் மந்திரிகள் குழுவின் பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. |
| தெலுங்கானா முழு அடைப்புக்கு பா.ஜனதா ஆதரவு Posted: 04 Dec 2013 07:19 PM PST தெலுங்கானாவுக்கு பதிலாக, ராயல தெலுங்கானா என்ற தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று தெலுங்கானா முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆந்திர மாநில பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆந்திர பா.ஜனதா தலைவர் ஜி.கிஷன் ரெட்டி கூறியதாவது:- தெலுங்கானாவை ஆதரிப்பதாகவும், ராயல தெலுங்கானா யோசனையை |
| பெண்களின் பாதுகாப்பிற்காக அவசர உதவி வசதியை மொபைல் போன்களில் கொண்டுவர அரசு திட்டம் Posted: 04 Dec 2013 04:39 PM PST கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குரூர கற்பழிப்பு சம்பவம் ஒன்றில் தனது நண்பனுடன் சென்றிருந்த இளம்பெண் இறந்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.இதனைத் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் மீதான சட்டங்கள் கடுமைப்படுத்தப்பட்ட போதிலும் பெண்களின் பாதுகாப்பு |
| மும்பையில் மனைவி தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்தவர் கைது Posted: 04 Dec 2013 02:08 PM PST தானே, மிராரோடு, கோல்டன் நெஸ்ட் காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள நட்சத்திரா டவர் என்ற கட்டிடத்தின் 14-வது மாடியில் வசித்து வருபவர் கிரிஷ் ஸ்ரீரங்க் போடே(வயது37). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மதுமதி(32). குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு |
| டெல்லி பெண் பிரீத்தி ரதி திராவகம் வீசி கொலை: மும்பை குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை தொடக்கம் Posted: 04 Dec 2013 12:52 PM PST தலைநகர் டெல்லியை சேர்ந்தவர் பிரீத்தி ரதி. இவருக்கு மும்பை கொலபாவில் உள்ள கடற்படைக்கு சொந்தமான ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது. இதற்காக அவர் கடந்த மே மாதம் 2-ந்தேதி ரெயிலில் டெல்லியிலிருந்து, பாந்திரா ரெயில் நிலையத்திற்கு |
| மும்பையில் கடற்படை தினம்: கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் Posted: 04 Dec 2013 12:32 PM PST ஆண்டு தோறும் டிசம்பர் 4-ம் தேதி அன்று கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. மும்பையில் கடற்படை தினத்தையொட்டி கடற்படை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. கடற்படை தினமான நேற்று கேட்வே ஆப் இந்தியாவில் கடற்படை இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி மற்றும் வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை |
| குளிர்கால கூட்டத்தொடருக்காக பாராளுமன்றம் இன்று கூடுகிறது Posted: 04 Dec 2013 11:05 AM PST பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வரும் 20-ந்தேதி இது முடிகிறது. 12 நாட்கள் அலுவல் நாட்கள் ஆகும். அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள பாராளுமன்றதேர்தலுக்கு முன்னதாக இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் இதில்தான் மசோதாக்களை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க |
| டெல்லி சட்டசபை தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு Posted: 04 Dec 2013 10:19 AM PST டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஆளும் காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பாரதீய ஜனதா 66 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 69 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி |
| பஞ்சாபில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நாளை தொடக்கம் Posted: 04 Dec 2013 09:48 AM PST பஞ்சாப் மாநிலத்தின் புனித நகரமான அமிர்தசரஸில் பிஎச்டி-பிஐடிஈஎக்ஸ் எனப்படும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் எட்டாவது பதிப்பு நாளை தொடங்குகின்றது. பஞ்சாபின் தொழில் மற்றும் வர்த்தகக் கழகம் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்தக் கண்காட்சியினை ஏற்பாடு செய்துள்ளது. |
| எனது வாழ்நாளில் இந்தியாவுடன் போரிட்டு பாகிஸ்தான் வெற்றி பெற முடியாது: மன்மோகன் சிங் Posted: 04 Dec 2013 08:39 AM PST காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்களை கொன்றது. அதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே உறவுகளில் பெரிதும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் டான் பத்திரிக்கை, காஷ்மீர் பிரச்சினையால் இந்திய பாகிஸ்தான் இடையே நான்காவது யுத்தம் நடக்கலாம் என்று பிரதமர் |
| 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்: கருத்துக்கணிப்பு தகவல் Posted: 04 Dec 2013 05:27 AM PST டெல்லி உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று |
| பாலியல் புகார்: முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது வழக்குப்பதிவு Posted: 04 Dec 2013 04:15 AM PST சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது, பயிற்சி வழக்கறிஞர் ஒருவர் பாலியர் புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய மூன்று நீதிபதிகள் குழுவும் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தது. |
| அட்டப்பாடியில் இருந்து தமிழர்கள் வெளியேற்றமா? கேரளா மறுப்பு Posted: 04 Dec 2013 03:55 AM PST கேரள மாநிலம் மன்னார்காடு அருகே உள்ள அட்டப்பாடி பகுதியில் பல ஆண்டுகளாக தமிழர்கள் குடியிருந்து வருகின்றனர். விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற கேரள அரசு முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. |
| சுங்கச் சாவடியை சூறையாடிய மராட்டிய மந்திரி மகன் கைது: நண்பர்கள் 8 பேரும் சிக்கினர் Posted: 04 Dec 2013 02:28 AM PST மராட்டிய மாநிலத்தில் தொழில்துறை மந்திரியாக இருப்பவர் நாராயண் ரானே. இவரது மகன் நிதிஷ்ரானே (வயது31). இவர் தனது நண்பர்கள் 8 பேருடன் காரில் கோவா சென்றார். வடக்கு கோவாவில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி உள்ளது. அங்கு ரானேயின் கார் சென்றதும் அந்த காரையும் ஊழியர்கள் நிறுத்தி கட்டணம் கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த |
| ஏடி.எம். மையத்தில் பெண் அதிகாரியை வெட்டியவர் அடையாளம் தெரிந்தது Posted: 03 Dec 2013 11:44 PM PST பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் அதிகாரியை மர்ம ஆசாமி அரிவாளால் வெட்டி பணம், செல்போன், கிரெடிட் கார்டுகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த மர்ம ஆசாமியை கர்நாடக போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த நபர் ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த நாராயணன் ரெட்டி என்பது தெரிய வந்தது. தலைமறைவாகி |
| செவ்வாயை நோக்கிய பயணம்: மங்கள்யான் விண்கலம் புவிஈர்ப்பு மண்டலத்தை தாண்டியது Posted: 03 Dec 2013 11:40 PM PST செவ்வாய்கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கள்யான் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி உள்ளது. 450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. மங்கள்யானின் சுற்று வட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு கடைசியாக 2 லட்சம் கி.மீ. உயரத்துக்கு பல்வேறு சிக்கல்களுக்குப்பின் உயர்த்தப்பட்டது. சுற்று வட்டப்பாதையை உயர்த்தும்போது மங்கள்யானில் உள்ள சிறிய ராக்கெட்டுகள் இயங்கவில்லை என்றாலும் அதில் உள்ள எரிபொருள்கள் வீணாகாததால் ராக்கெட்டுகளை மீண்டும் இயக்கும் பணி நடந்தது. இதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |