ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் காரில் போன 5 தமிழர்கள் விபத்தில் பலி
- E-Tweets
- டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் by ரேவதி சங்கரன் - காணொளி
- புயலுக்குப் பெயர் வைப்பது ஏன்?
- 11.12.13 அன்று 14.15.16 மணிக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
- பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்?
- முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு டிச. 31 வரை விண்ணப்பிக்கலாம்!
- ஓலைக் கிளி
- ப.சிதம்பரத்துக்கு ஒரு பகிரங்க மடல்..
- நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்
- மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி!
- தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல்
- விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி!
- மிசோராம் தேர்தல்: ஆட்சியை தக்க வைத்தது காங்கிரஸ்!
- தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு
- ஆயிரம்
- முதல் ஆயிரம் பதிவுகளைக் கடந்துள்ள அன்புத் தம்பி செந்திலுக்கு வாழ்த்துகள்!
- எங்கள் சிவாஜி
- கதாநாயகியின் பாதங்கள் தரையில் படாதவாறு கரங்களால் தாங்குவதை ...
- வரிக் குதிரையின் நிறம் என்ன? -பொது அறிவு கேள்விகள்-
- திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்
- துபாய் பணம்!
- நன்முறையில் வாழ ஒரு நற்றமிழ் வழி!
- உணவுகளின் போட்டோகள் - பாஜ்ரா ரொட்டி ! - photo
- பாலைவன போர் தமிழ் காமிக்ஸ் புத்தகம் PDF வடிவில் .
- சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
- "மா" - கவிதை!
- ஐயோ இது உண்மையா?
- தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா ! step by step photo
- தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன்
- பொங்கல் மற்றும் சித்திரான்னங்கள் - பூண்டு சாதம் - with photo
- சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் - பாஜ்ரா ரொட்டி- கம்பு ரொட்டி Step by step photo
- யார் இவர்?
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- வட இந்திய சமையல்கள் - சால்ட் பிரட் இல் பாவ் பாஜி - போட்டோவுடன்
- மெரினாவில் பதுங்கியிருக்கும் ஆபத்து!
- மத்திய அரசு மீது காங். எம்.பி.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம்!
- இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...!
- டுவிட்டரால் வந்த சோதனை!
- மரக்குதிரை!
- உல்டா...(நம்ம பிரபலங்கள் சிலருக்கு ஆங்கிலத்தில் பெயர்சூட்டினால்...)
- தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?
- அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில் (ஸ்ரீவாஞ்சியம் )
- தோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல்
| மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் காரில் போன 5 தமிழர்கள் விபத்தில் பலி Posted: 09 Dec 2013 02:37 PM PST ரெம்பா, மலேசியா: மலேசியாவின் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் 5 இந்தியர்கள் பலியானார்கள். இவர்கள் சென்ற கார் 20 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. செனவாங்- பெடாஸ் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது தேவக்குமார், 28 வயது ரகுநாதன், 29 வயது சுரேஷ், 23 வயது ஆனந்த் மீனாட்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 27 வயது விஜயகார்த்திக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ... |
| Posted: 09 Dec 2013 02:29 PM PST முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!
|
| டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் by ரேவதி சங்கரன் - காணொளி Posted: 09 Dec 2013 02:10 PM PST |
| புயலுக்குப் பெயர் வைப்பது ஏன்? Posted: 09 Dec 2013 01:38 PM PST வங்காள விரிகுடாவில் சமீபத்தில் உருவான புயல்களின் பெயர்கள் என்ன தெரியுமா? பைலின், ஹெலன், லெஹர். அடுத்து வரவிருப்பது மடி புயல். இந்தப் பெயர்களுக்கு என்ன அர்த்தம்? பைலின் (நீலக்கல்), ஹெலன் (பிரகாச ஒளி), லெஹர் (அலை). சரி, புயலுக்குப் பெயர் வைப்பது அவசியமா? இதற்கான விடையைப் பின்னால் பார்ப்போம். சாதாரணமாக வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தாலேயே புயல்கள் உருவாகுகின்றன. எப்பொழுதெல்லாம் காற்று சூடாகிறதோ, அது விரிந்து லேசாகிறது. லேசான காற்று மேலே செல்கிறது. அது ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பக் கனமான ... |
| 11.12.13 அன்று 14.15.16 மணிக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்! Posted: 09 Dec 2013 01:21 PM PST 11.12.13 அன்று 14.15.16 மணிக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்! ![]() |
| பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Posted: 09 Dec 2013 11:58 AM PST இப்போது தன் புத்தகத்தில், 'விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக் கொல்லவேண்டும் அல்லது கைது செய்யவேண்டும்...' என்று அப்போது இலங்கையின் இந்திய ஹை கமிஷனராக இருந்த ஜே.என்.தீட்சித் தனக்குக் கட்டளையிட்டதாகவும், 'இதெல்லாம் பிரதமரின் (அன்று- ராஜீவ் காந்தி) உத்தரவுப்படிதான் சொல்லப்படுகிறது' என்று தன்னிடம் கூறியதாகவும், தீட்சித்தின் அந்த உத்தரவுக்குத் தான் கீழ்ப்படிய மறுத்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார் ஹர்கிரத் சிங்! 'Intervention in Srilanka: The IPKF Experience Retold' என்ற தலைப்பில் ... |
| முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு டிச. 31 வரை விண்ணப்பிக்கலாம்! Posted: 09 Dec 2013 11:16 AM PST சென்னை: டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முதலமைச்சரின் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், 'வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெல்லாம் கணினி வழித் தமிழ்மொழி பரவிட வகைசெய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் 'முதலமைச்சர் கணினித் தமிழ் விருது' என்ற பெயரில் விருது வழங்கப்படும்' ... |
| Posted: 09 Dec 2013 10:54 AM PST அபார்ட்மென்ட்டின் காவலாளி வந்து வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது காலை மணி எட்டரை இருக்கும். பேப்பர் படித்துக்கொண்டு இருந்த நான் எழுந்து கதவைத் திறந்தபோது, சற்று எரிச்சலான குரலில் வாட்ச்மேன் சொன்னான், ''டாக்டர் சார், உங்களைப் பாக்க ஒரு கிழவன் ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்து கேட் முன்னாடி உட்கார்ந்து இருக்கான். விடிகாலை நாலு மணிக்கு எல்லாம் அந்த ஆளு வந்து உங்க பேரைச் சொல்லிக் கேட்டான். மூணாவது ஃப்ளோர்ல வீடுன்னு சொன்னேன். அய்யா தூங்கி எந்திரிச்சி குளிச்சி, சாப்பிட்டு ரெடியாகட்டும். அதுவரைக்கும் ... |
| ப.சிதம்பரத்துக்கு ஒரு பகிரங்க மடல்.. Posted: 09 Dec 2013 10:37 AM PST மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம். 'இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும்' என்ற தலைப்பில் சென்னையில் 'சிந்தனையாளர்கள்' பங்கேற்ற அரியதோர் கருத்தரங்கில் நீங்கள் ஆற்றிய உரையில் வழங்கிய அபூர்வமான விளக்கங்களை நான் அறிய நேர்ந்தது. 'இனப்படுகொலையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இதுகுறித்து விரிவான, தெளிவான, நேர்மையான, உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாது. இலங்கைத் ... |
| நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம் Posted: 09 Dec 2013 10:15 AM PST நேற்று சிங்கபூர் லிட்டில் இந்தியாவில் நடந்த கலவரம் இது . அங்குள்ள நண்பர்கள் யாராவது இது பற்றிய முழு விபரம் தரமுடியுமா. ஈகரை உறவுகளின் கருத்துக்களும் வரவேற்கபடுகின்றன |
| மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Posted: 09 Dec 2013 10:07 AM PST புதுடெல்லி: டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததாதோடு, யாரும் ஆட்சியமைக்கவும் முன்வராததால், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலாகும் எனத் தெரிகிறது. டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பா.ஜனதா 31, ஆம் ஆத்மி 28 காங்கிரஸ் 8 மற்றும் இதர கட்சிகள் 3 இடங்களை கைப்பற்றி உள்ளன. இந்நிலையில் தங்களுக்கு ஆட்சியமைக்க தேவையான 36 இடங்கள் கிடைக்கவில்லை என்பதால், தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை ... |
| தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல் Posted: 09 Dec 2013 10:01 AM PST தொலைக்காட்சிகளில் இடம் பெறும் பழைய திரைப்படங்களின் பட்டியல் இங்கே தரப் படுகிறது. Zee Tamizh – Avan Than Manithan – 05.12.13 – 2.30 pm Vasanth TV – Nallathoru Kutumbam – 03.12.13 – 2 pm Raj Digital – Garuda Sowkkiyama – 02.12.13 – 1 pm Mega TV –Panam - 05.12.2013 – 1.30 pm Mega 24 – Anbulla Appa – 03.12.2013 – 8.30 am Mega 24 – Koteesvaran – 05.12.2013 –2.30 pm Mega 24 – Lakshmi Kalyanam – 07.12.2013 – 2.30 pm Mega 24 – Deepam – 08.12.2013 6 pm KTV – Ooty Varai Uravu - 02.12.2013 ... |
| விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Posted: 09 Dec 2013 09:47 AM PST அரசியல் என்றாலே ஊழலும் சுயநலமும்தானா என்று வெறுத்துப்போன மக்களுக்கு, ஆறுதலாக 26 நவம்பர் 2012 மலர்ந்திருக்கிறது அரவிந்த் கெஜ்ரிவாலின் 'ஆம் ஆத்மி' கட்சி. 'சாமானிய மனிதனின் கட்சி' என்று பொருள் இதற்கு. மதம், மொழி, மாநிலக் கோரிக்கைகளின் அடிப்படையில் கட்சிகள் உருவாகும் நிலையில், ஒட்டு மொத்தத் தேசத்தின் கோரிக்கையான 'ஊழலை ஒழிக்க பிறந்த கட்சி'. ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதா தேவை என்று அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை தொடங்க முதன்முதலில் அன்னாவின் ஆதரவாளராக அறியப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். தகவல் அறியும் ... |
| மிசோராம் தேர்தல்: ஆட்சியை தக்க வைத்தது காங்கிரஸ்! Posted: 09 Dec 2013 09:45 AM PST ஐஸ்வால்: மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டசபைக்கு நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மிசோரமில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளிலும் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்ற நிலையில், முடிவு அறிவிக்கப்பட்ட 25 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 24 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... |
| தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Posted: 09 Dec 2013 09:44 AM PST சென்னை : ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் ஜெ., தமது அமைச்சரவையை இன்றும் மாற்றி அமைத்துள்ளார். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சாத்தூர் தொகுதியை சேர்ந்த ஆர்.பி., உதயக்குமார் மீண்டும் அமைச்சர் பொறுப்பை பெற்றுள்ளார். முதல்வர் ஜெ., இன்று தமது அமைச்சரவையை மாற்றுவது 14 வது முறையாகும். தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது: விளையாட்டு துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து கே.வி., ராமலிங்கம் விடுவிக்கப்படுகிறார். ... |
| Posted: 09 Dec 2013 09:42 AM PST ஆயிரம் ஈகரை எனும் இணைய அரசிக்குள் நுழையும் போது நான் அறியவில்லை! ஈகரையின் பலம் என்னவென்று புரியவில்லை! பதிவுகள் ஆயிரம் - நாம் இடுவோம் என்று தெரியவில்லை!! இதோ - ஆயிரம், இது எப்படி என்று யோசித்தேன்!! நல்ல, நல்ல விஷயங்கள் நல்ல, நல்ல உறவுகள் இருக்கும்போது இயலாது என்ற வார்த்தைக்கு இடமில்லை இங்கே!! பின்னூட்டம் வழியே பேசி முன்னோடியாய் இருக்கும் தலைவா, முன் செல்லும் கால்கள் சரியான பாதையில் செல்கையில், பின்வரும் கால்கள் அதன் வழியே தொடர்வது இயற்கையில் இயல்புதானே!! நல்ல ... |
| முதல் ஆயிரம் பதிவுகளைக் கடந்துள்ள அன்புத் தம்பி செந்திலுக்கு வாழ்த்துகள்! Posted: 09 Dec 2013 09:39 AM PST முதல் ஆயிரம் பதிவுகளைக் கடந்துள்ள அன்புத் தம்பி செந்திலுக்கு வாழ்த்துகள்! ![]() |
| Posted: 09 Dec 2013 08:58 AM PST தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ... |
| கதாநாயகியின் பாதங்கள் தரையில் படாதவாறு கரங்களால் தாங்குவதை ... Posted: 09 Dec 2013 08:35 AM PST தளரடி தாங்கிய நெஞ்சு! - முனைவர் இரா.ஜெகதீசன் இன்றைய திரைப்படங்களில் கதாநாயகன், கதாநாயகியின் பாதங்கள் தரையில் படாதவாறு தன் கரங்களால் தாங்குவதைப் போன்ற காட்சிகளைக் காண்கிறோம். இதே காட்சியைக் கபிலர் சற்று மாறுபட்ட நிலையில் எடுத்துக் காட்டியுள்ளார். இரவுக்குறியிடத்துத் தலைவன் வந்துவிடுவான் என்று தலைவி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். "இருள் நிறைந்த காட்டில் சற்றுமுன்தான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. பெய்த மழை வழிந்தோடி ஆழமான பல குழிகளில் நிறைந்தது. மலைநாட்டிற்கு உரிய தலைவன் குவளைப் பூச்சூடி, ... |
| வரிக் குதிரையின் நிறம் என்ன? -பொது அறிவு கேள்விகள்- Posted: 09 Dec 2013 08:34 AM PST - 1) வரிக் குதிரையின் நிறம் என்ன? - 2) முக்குணங்கள் யாவை? - 3) மியான்மர் நாட்டின் தலைநகர் எது? - 4) பறவை இனத்தைச் சேர்ந்த பறக்காத பறவை ஒன்று சொல்லுக.. - 5) வாட்டர்கேட் எங்குள்ளது? - -------------------------- விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் |
| திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில் Posted: 09 Dec 2013 08:32 AM PST முழுமுதற் கடவுளான விநாயகரை ஆலயங்களில் யானை முகத்தோனாகவே தரிசிக்கிறோம். சற்று வித்தியாசமான வடிவில் நரமுக விநாயகராக திலதர்ப்பணப்புரியிலும், முகமில்லா விநாயகராக சித்தமல்லியிலும் தரிசிக்கலாம். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில்- திருவாரூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திலதர்ப்பணப்புரி. இங்குள்ள சிவாலயத்தில் தனிச்சந்நிதியில் மேற்கு நோக்கி தும்பிக்கையின்றி மனித முகத்துடன் விநாயகர் அருள்பாலிக்கிறார். யானை முகமாகத் தோன்றுவதற்கு முன் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட உருவம் இது. முதன்முதலில் ... |
| Posted: 09 Dec 2013 08:27 AM PST ''என்ன நாகு... டவுனுக்குப் போய், ஏஜன்ட்டைப் பார்த்தியா... என்ன சொன்னார்? அரபு நாட்டுக்கு, அடுத்த பயணம் எப்போதாம். உனக்கு நிச்சயமா, வாய்ப்பு உண்டுன்னு சொல்லியிருப்பாரே... நீதான், அவருக்கு ரொம்ப நெருக்கமானவனாச்சே,'' என, விசாரித்தான் லோக நாதன். நாகராஜன், சுரத்தில்லாமல் இருந்ததை வைத்தே, அவன் போன வேலை, நல்ல விதமாய் முடியவில்லை என்பதை புரிந்து கொண்டிருந்தாலும், எதிரில் வந்து விட்டதால், வேறு வழியில்லாமல் கேட்டு வைத்தான். அதிக நேரம், அவன் முன் நிற்க விரும்பவில்லை. மணி, சேகர், குமார் சம்பத் ஆகியோரிடம் ... |
| நன்முறையில் வாழ ஒரு நற்றமிழ் வழி! Posted: 09 Dec 2013 08:26 AM PST இரும்புலியும் குறுநரியும் உடல் நிறைய பொன் அணிகளை அணிந்து கொண்டு நள்ளிரவில் தன்னந்தனியே ஓர் இளம்பெண் நடந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட வேண்டும்' என்று காந்தியடிகள் விரும்பினார். ஆனால், இன்றோ காதலனுடன் தனிமை நாடிச்செல்லும் பெண்கள், காதலன் கண்முன்னே, காமுகர்களால் கொடூரமாகச் சிதைக்கப்படுகின்ற அவலம்! "காதல் வாழ்வையே லட்சியமாகக்கொண்ட பழந்தமிழகத்தில் இம்மாதிரியான அவலங்களே இல்லையா? இரவு நேரத்தில் தன் இணையைக் காணவரும் காதலர்களுக்கு இடையூறே இல்லையா?' என்ற கேள்விகளுக்குக் கபிலர், நல்லதொரு பதிலை கலித்தொகையில் ... |
| உணவுகளின் போட்டோகள் - பாஜ்ரா ரொட்டி ! - photo Posted: 09 Dec 2013 08:18 AM PST நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை |
| பாலைவன போர் தமிழ் காமிக்ஸ் புத்தகம் PDF வடிவில் . Posted: 09 Dec 2013 08:06 AM PST பாலைவன போர் தமிழ் காமிக்ஸ் புத்தகம் PDF வடிவில் . http://www.mediafire.com/download/7j3puu76wnusa5q/203-Palaivana+Porr%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (or) http://www65.zippyshare.com/v/67474681/file.html |
| சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) Posted: 09 Dec 2013 08:05 AM PST - நீதிபதிக்கு பொண்ணை கட்டிக்கொடுத்தது தப்பா போச்சா ஏன்? - அடிக்கடி தள்ளி வச்சுடறாரே...! - ------------------------------------------------- - இவ்வளவு பெரிய தொந்திய வச்சுக்கிட்டு எப்படி ஏட்டய்யா உங்களால ஓடிப்போய் திருடனைப் பிடிக்க முடியும்? - சேச்சே..! நான் ஏன் ஓடணும்? அவங்களே நியாயமா கொண்டு வந்து மாமூலை தந்துட்டுப் போயிடுவாங்க...! - ----------------------------------------------- - தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன? - யோவ்...பப்ளிக்ல அசிங்கப்படுத்தாதேய்யா...! மொபைல் நெம்பர்னு ... |
| Posted: 09 Dec 2013 07:54 AM PST உலகத்துமொழிகளில் முதல் மொழி சிறந்த மொழி மொழிகளில் முதல் வார்த்தை சிறந்த வார்த்தை வார்த்தைகளில் முதல் எழுத்து சிறந்த எழுத்து பிறந்த குழந்தையும் பிற உயிரினங்களும் அழைத்து உணரும் "மா" அம்மா ... ! |
| Posted: 09 Dec 2013 07:36 AM PST ஒரு அடர்ந்த காட்டின் வழியாக இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர் இரவு ஒன்பது மணி அவர்கள் ஊருக்கு செல்லும் பாதை அது ,அவர்கள் ஊர் வரை செல்ல பேருந்து வசதி கிடையாது அவர்கள் இருவருமே ஐம்பது வயதை தாண்டியவர்கள் அவர்களின் பேச்சிலும் முதிர்ச்சி தெரிந்தது தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர் அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் ... |
| தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா ! step by step photo Posted: 09 Dec 2013 07:15 AM PST தீபாவளி பலகாரங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு கார வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும். |
| தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Posted: 09 Dec 2013 07:01 AM PST தமிழ்ச் செல்வங்கள்: அம்மா- 1 - நன்றி : தினமணி குழந்தைகளுக்குப் "பிறந்த நாள்' கொண்டாடுகிறோம். "பெயர்சூட்டு நாள்' என ஒரு விழாக் கொண்டாடுகிறோம். இவ்விரண்டு விழாக்களையும், குழந்தை பிறந்த சில நாள்களிலேயே, தன் தாய்க்குச் சூட்டிக் கொண்டாடிவிடுகிறது குழந்தை! பேசாக் குழந்தையா? பிறந்த சில நாள்களிலேயா? வியப்பின் மேல் வியப்பாக இருக்கிறது! ஆனால், உண்மைதான் என்பதைக் குழந்தைகள், தொடர் விழாவாகக் கொண்டாடிக்கொண்டே உள்ளன! நாம்தான் கண்டு கொள்ளவில்லை. குழந்தை தாயிடம் பால் பருகுகின்றது; பசித்த குழந்தை, பசி ... |
| பொங்கல் மற்றும் சித்திரான்னங்கள் - பூண்டு சாதம் - with photo Posted: 09 Dec 2013 06:45 AM PST இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் இதில் வழக்கமாக செய்யும் வேன் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை ... |
| சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் - பாஜ்ரா ரொட்டி- கம்பு ரொட்டி Step by step photo Posted: 09 Dec 2013 06:44 AM PST இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும் உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின் பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள் குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் ... |
| Posted: 09 Dec 2013 06:33 AM PST அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ... |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 09 Dec 2013 06:24 AM PST ![]() |
| வட இந்திய சமையல்கள் - சால்ட் பிரட் இல் பாவ் பாஜி - போட்டோவுடன் Posted: 09 Dec 2013 06:22 AM PST முதலில் பானி பூரி பூரி செய்ய தேவயானவை : 1 கப் மைதா 1/4 கப் உளுந்துமாவு 1 கப் மெல்லிய ரவை தேவையான உப்பு கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம். அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம். ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் ... |
| மெரினாவில் பதுங்கியிருக்கும் ஆபத்து! Posted: 09 Dec 2013 06:20 AM PST ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. அதில் ஆஸ்திரேலியாவில் அபாயகரமான கடல் நீரோட்டங்களால் (Rip Currents) ஓர் ஆண்டுக்கு சராசரியாக 21 பேர் பலியாவதாக தெரிவித்துள்ளது. இந்த ஆய்வை ஒப்பிட்டு சென்னையின் மெரினா உள்ளிட்ட கிழக்கு கடற்கரைகளை ஆராய்ச்சி செய்த தமிழகத்தின் கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்திரேலியாவின் கடல் நீரோட்டங்களைவிட நமது கிழக்கு கடல்கள் வெகு ஆபத்தான நீரோட்டங்களை கொண்டிருப்பதாகவும் அதனாலேயே சராசரியாக ஆண்டுக்கு 200 பேர் வரை பலியாவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா ... |
| மத்திய அரசு மீது காங். எம்.பி.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம்! Posted: 09 Dec 2013 06:05 AM PST புதுடெல்லி: தெலங்கானா விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர். தனி தெலங்கானா மாநிலம் அமைக்க அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஆந்திராவை சேர்ந்த மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், ஆந்திராவை பிரிக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து ... |
| இந்தியா ஒரு மூட்டைப்பூச்சி நாடு, மன்மோகன் ஒரு வயதான முட்டாள்...! Posted: 09 Dec 2013 06:00 AM PST "இந்தியா ஓரு மூட்டைப்பூச்சி நாடு என்றும், பிரதமர் மன்மோகன் சிங் வயதான முட்டாள்"என்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியபெரும வாய்கொழுப்பாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதியளித்த மன்மோகன் சிங் வராததை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் அவரை சூரியபெரும கடுமையாக விமர்சித்து பேசினார். இந்நிலையில், மன்மோகன் சிங் வயதான முட்டாள் என்றும், இந்தியா பெரிய நாடு அல்ல. அது மூட்டைப்பூச்சி என்றும் சூரியபெரும கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ... |
| Posted: 09 Dec 2013 05:56 AM PST மெலிசா பெச்மென் என்ற பெண், அமெரிக்காவில், மிகவும் பிரபலம். 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளாராக பணியாற்றுகிறார். இவருக்கு, மற்றொரு முகமும் உண்டு. மிருகங்களை வேட்டையாடுவதை, பொழுது போக்காக வைத்துள்ளார். சமீபத்தில், தென் ஆப்ரிக்கா சென்ற இவர், அங்கு, அடர்ந்த வனப் பகுதிக்குள், துப்பாக்கியுடன் களமிறங்கினார். மெலிசாவின் கழுகு பார்வையில், அங்கு, சுற்றிக் கொண்டிருந்த, பெரிய சிங்கம் ஒன்று, சிக்கியது. அடுத்த நொடியே, தன் துப்பாக்கி குண்டுகளுக்கு, அந்த சிங்கத்தை இரையாக்கி விட்டார். அத்துடன், பேசாமல் ... |
| Posted: 09 Dec 2013 05:53 AM PST முன்னொரு காலத்தில், தச்சுவேலை செய்பவனும், இரும்பு வேலை செய்பவனும் நண்பர்களாக இருந்தனர். ஒருநாள்- அவர்கள் இருவருக்கிடையில் ஒரு போட்டி ஏற்பட்டது. அவர்கள் தங்களில் யார் பெரியவர் என்று தீர்மானிக்க விரும்பினர். தமக்குத் தீர்ப்பு சொல்லுமாறு அரசனிடம் சென்றனர். அவர்கள் சொன்னதைக் கேட்ட அரசன், ""நீங்கள் இருவரும் உங்களது திறமைகளை நிரூபித்துக் காட்டலாம். அதன் பின்னர் நான் தீர்ப்புக் கூறுகிறேன்,'' என்றான். பத்து நாட்களில் தமது திறமைகளை நிரூபிப்பதாக உறுதி அளித்து விட்டு, அரசனிடம் இருந்து இருவரும் விடை ... |
| உல்டா...(நம்ம பிரபலங்கள் சிலருக்கு ஆங்கிலத்தில் பெயர்சூட்டினால்...) Posted: 09 Dec 2013 05:44 AM PST நன்றி வசந்த் |
| தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா? Posted: 09 Dec 2013 05:23 AM PST தண்ணீரில் கல் மிதப்பது அதிசயம் ஒன்றும் இல்லை. இது ஒரு இலகுவான இயற்பியல் தான். அனைவராலும் இந்த கூற்றைப் புரிந்து கொள்ள இயலும். இருப்பினும், இக்கூற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மிகச் சிலருக்கு மட்டுமே இருக்கும். தண்ணீரில் மிதக்கும் கற்கள் எவ்வாறு உருவாகின்றன? எரிமலை வெடிக்கும் பொழுது, அதிலிருந்து வெளிவரும் எரிமலை குழம்புகள் பெரும்பாலும் திரவ நிலையிலான கற்களும் பாறைகளுமே ஆகும். இவ்வாறு மிகுதியான வெப்பநிலை கொண்ட கற்குழம்புகள், குறைவான அழுத்தத்தினாலும் (மலைகளில் பெரும்பாலும் அழுத்தம் குறைவாக ... |
| அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில் (ஸ்ரீவாஞ்சியம் ) Posted: 09 Dec 2013 04:23 AM PST கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழித்தடத்தில் அச்சுத மங்களத்திலிருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீ வாஞ்சியம் ஆகும். இறைவன்-ஸ்ரீ வாஞ்சிலிங்கெஸ்வரர் இறைவி-மங்கள நாயகி தீர்த்தம்-குப்த கங்கை புனித நீராடல்: திருவாஞ்சியத்தில் இருக்கும் குப்தகங்கையில் மகாசங்கராந்தி, அமாவாசை, அர்த்தோதயம், மஹோதயம், விஷீ,சூரிய,சந்திர கிரகணகாலம் கார்த்திகை, ஞாயிறு, சோமவாரங்கள், மாசிமகம், மார்கழி திருவாதிரை நட்சத்திரம் போன்ற தினங்களில் திருத்தலம் வந்து சிவபெருமானை வழிபடுவதற்கு முன்னரே மனம் உருகி நம் பாவங்களை ... |
| தோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Posted: 09 Dec 2013 03:52 AM PST புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வழிநடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சி, பலவீனமாக இருப்பதால் தான் சட்டசபை தேர்தலில் இப்படி ஒரு மோசமான தோல்வி கிடைத்துள்ளது என, கூட்டணி கட்சிகள் தங்களின் கருத்துக்களை கூறி உள்ளன. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், மிசோரமை தவிர, மற்ற மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் அக்கட்சி ஆட்சி அமைக்கிறது. அதேவேளையில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. டில்லியில், புதிதாக தோன்றிய ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


