மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மணிப்பூரில் 7 தீவிரவாதிகள் கைது
- இடுப்பு எலும்பு மூட்டு உலோக தகட்டில் குறைபாடு: பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் முடிவு
- பேஸ்புக்கில் கைதிகள் படம்: 24 ஜெயில் ஊழியர்கள் இடம் மாற்றம் - கேரள மந்திரி நடவடிக்கை
- கற்பழிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த சாமியார் ஆசாராம் மகன் 2 மாதத்துக்குப் பின் கைது
- டெல்லி தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
- பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு தீவிரம்- 10–ந்தேதி தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை
- கேரள ரிசார்ட்டில் ஐ.டி. பெண் ஊழியர் கற்பழிப்பு: வெளி மாநில வாலிபர்கள் 2 பேர் கைது
- கொலை கைதிகளுடன் அடைப்பு: தருண் தேஜ்பால் ஜெயிலில் மின்விசிறி கேட்கிறார்
- அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: புதிய முறை அறிமுகம்
- பாராளுமன்ற கூட்டத்தொடரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: சபாநாயகரிடம் திமுக கோரிக்கை
- ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட்டில் வேலை: நீதிபதியின் பரிந்துரையால் கிடைத்தது
- மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த வேவு பார்க்கும் 'சிமி' தீவிரவாதிகள்
- இன்று டெல்லி சட்டசபை தேர்தல்: இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக "நோட்டா" பொத்தான் அறிமுகம்
- கப்பல்கள் மூலமாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் ஆபத்து: கடற்படை தளபதி எச்சரிக்கை
- மத வன்முறை தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு: ஜெயலலிதாவுக்கு பா.ஜனதா பாராட்டு
- பெண்கள் உள்பட மாவோயிஸ்ட் கலைக் குழுவினர் 4 பேர் கைது
- காஷ்மீர் என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
- நேபாள தேர்தலில் வெற்றி பெற்ற மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தாவுக்கு எதிராக கள்ளஓட்டு புகார்
- ராயல-தெலுங்கானா திட்டத்தை ஏற்க மறுத்து நாளை மறுநாள் பந்த்: சந்திரசேகர ராவ் அழைப்பு
- 57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர்
| மணிப்பூரில் 7 தீவிரவாதிகள் கைது Posted: 03 Dec 2013 10:39 PM PST மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் அட்டூழியம் அதிகரித்து வந்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது குடெங்டாபி என்ற இடத்தில் இந்திய–மியான்மர் எல்லையில் 7 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் பெண்கள். |
| Posted: 03 Dec 2013 10:29 PM PST அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பான இடுப்பெலும்பு மூட்டுமாற்று அறுவை சிசிச்சையில் பொருத்தப்படும் உலோகத்தகடு கோபால்ட் மற்றும் குரோமியம் கலந்து செய்யப்பட்டிருந்தது. இந்த உலோகங்களின் கசடுகள் நோயாளியின் உடலில் கலந்ததால் அவர்களின் மூட்டுகள் மற்றும் தசைகளில் திரவம் சேர்ந்து வலியையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தின. மேலும் இந்த உலோகமானது நாளடைவில் நச்சுத் தன்மைகளை வெளிப்படுத்தியது. இந்த உலோகத்தைப் பொருத்திய ஐந்து வருடங்களிலேயே இதன் தோல்வி விகிதம் வெளித்தெரிய வந்தது. இதனால், கடந்த 2010 ஆம் ஆண்டு இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை உலகளவில் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தது. |
| பேஸ்புக்கில் கைதிகள் படம்: 24 ஜெயில் ஊழியர்கள் இடம் மாற்றம் - கேரள மந்திரி நடவடிக்கை Posted: 03 Dec 2013 09:55 PM PST கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிறையில் உல்லாச வாழ்க்கை நடத்துவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதை கேரள அரசு மறுத்து வந்தது. |
| கற்பழிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த சாமியார் ஆசாராம் மகன் 2 மாதத்துக்குப் பின் கைது Posted: 03 Dec 2013 09:26 PM PST ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாமியார் ஆசாராம் பாபு ஆசிரமம் நடத்தி வந்தார். இங்கு தங்கி படித்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவியை சாமியார் ஆசாராம் பாபு கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து ஆசாராம் பாபு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது. அவருக்கு உடந்தையாக இருந்த பெண் |
| டெல்லி தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு Posted: 03 Dec 2013 09:20 PM PST டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க., அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகிய 3 கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. 70 தொகுதிகளில் மொத்தம் 810 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. |
| பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு தீவிரம்- 10–ந்தேதி தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை Posted: 03 Dec 2013 09:13 PM PST பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அகில இந்திய செயலாளர் மிஸ்திரி, சி.பி. ஜோஷி ஆகியோர் ஒவ்வொரு மாநில காங்கிரஸ் தலைவரையும் டெல்லிக்கு அழைத்து மாநிலங்களில் காங்கிரசுக்கு இருக்கும் செல்வாக்கு, எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது சாதகமாக இருக்கும், தொகுதிவாரியாக வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் |
| கேரள ரிசார்ட்டில் ஐ.டி. பெண் ஊழியர் கற்பழிப்பு: வெளி மாநில வாலிபர்கள் 2 பேர் கைது Posted: 03 Dec 2013 09:06 PM PST குமரி மாவட்ட எல்லையையொட்டி உள்ள கேரள பகுதியில் பூவாறு என்ற இடத்தில் கடலும், காயலும் கலக்கிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் இங்கு கேரள சுற்றுலாத்துறை பயணிகளை கவர உல்லாச படகு சவாரி, ஆயுர்வேத ஆயில் மசாஜ் போன்றவற்றை ஏற்படுத்தியது. இது வெளிமாநில சுற்றுலா பயணிகளை கவர்ந்ததால் ஏராளமானோர் இங்கு வரத் தொடங்கினர். இதையடுத்து இந்த பகுதியில் ரிசார்ட்டுக்கள், உல்லாச |
| கொலை கைதிகளுடன் அடைப்பு: தருண் தேஜ்பால் ஜெயிலில் மின்விசிறி கேட்கிறார் Posted: 03 Dec 2013 08:54 PM PST தெகல்கா டாட்காம் நிறுவனர் மற்றும் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது அதே நிறுவனத்தில் பணியாற்றும் பெண் நிருபர் பாலியல் புகார் கொடுத்தார். கோவாவில் இந்த சம்பவம் நடந்ததால் அம்மாநில போலீசார் தருண் தேஜ்பால் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க கோவா கோர்ட்டில் தருண் தேஜ்பால் முன் ஜாமீன் |
| அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: புதிய முறை அறிமுகம் Posted: 03 Dec 2013 08:17 PM PST இந்தியாவின் பொறியியல் கல்லூரிகளுக்கான பொது நுழைவுத் தேர்வு முறைபோல் அனைத்திந்திய மருத்துவ நுழைவுத்தேர்வும் (ஏஐபிஎம்டி) தற்போது ஆன்லைன் விண்ணப்ப முறைகளை செயல்படுத்தியுள்ளது. விண்ணப்பங்கள் விரைவாக சரிபார்க்கப்படுவதற்கு ஏதுவாகவும், தவறுகள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காகவும் இந்த முறை பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்று இத்தேர்வினை நடத்த இருக்கும் சிபிஎஸ்இ கல்விக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த வருடம் மே மாதம் 4 ஆம் தேதி |
| பாராளுமன்ற கூட்டத்தொடரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: சபாநாயகரிடம் திமுக கோரிக்கை Posted: 03 Dec 2013 07:25 PM PST பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி சபாநாயகர் மீராகுமார் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சிகளின் அவைத்தலைவர்கள் பங்கேற்றனர். தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார். கூட்டத்திற்குப்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 12 நாட்கள் மட்டுமே நடக்கிறது. இந்த நாட்களில் 3 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. வெள்ளிக்கிழமை அன்று தனிநபர் மசோதாக்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். அந்த நாட்களை கழித்தால் 9 நாட்கள் மட்டுமே மற்ற பணிகள் நடைபெறும். |
| Posted: 03 Dec 2013 03:21 PM PST மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவை சேர்ந்த தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தை அணு முகர்ஜி. சிறு வயதிலேயே சாலை விபத்தில் பெற்றோரை இழந்த அணு உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார். அணுவுக்கு 10 வயதான போது அவரை பள்ளியை விட்டு நிறுத்திவிட்ட உறவினர்கள், ஏதாவது வேலை |
| மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த வேவு பார்க்கும் 'சிமி' தீவிரவாதிகள் Posted: 03 Dec 2013 01:55 PM PST பீகார் தலைநகர் பாட்னாவில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பேசிய மைதானம், பாட்னா ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்து சிதறின. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த தேசிய புலனாய்வு படையினர் சத்தீஸ்கர் மாநிலம் |
| இன்று டெல்லி சட்டசபை தேர்தல்: இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக "நோட்டா" பொத்தான் அறிமுகம் Posted: 03 Dec 2013 01:17 PM PST 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 810 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 70 தொகுதிகளிலும் போட்டியிடும் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பா.ஜ.க. 66 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளிலும் நேருக்கு நேர் மோதுகின்றன |
| கப்பல்கள் மூலமாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் ஆபத்து: கடற்படை தளபதி எச்சரிக்கை Posted: 03 Dec 2013 12:56 PM PST கடற்படை தினத்தையொட்டி கடற்படை தளபதி டி.கே.ஜோஷி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வணிகக்கப்பல்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பயணம் செய்கின்றனர். இவர்களில் பலரும் இந்திய கடல் பகுதிக்குள் நுழைகின்றனர். இது தீவிரமான பாதுகாப்பு |
| மத வன்முறை தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு: ஜெயலலிதாவுக்கு பா.ஜனதா பாராட்டு Posted: 03 Dec 2013 12:34 PM PST மாநில அரசின் அதிகாரங்களை பறிக்க வகை செய்யும் மத்திய அரசின் மதவன்முறை தடுப்பு சட்ட மசோதாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாமல் இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சிப்பது ஜனநாயக விரோதம் |
| பெண்கள் உள்பட மாவோயிஸ்ட் கலைக் குழுவினர் 4 பேர் கைது Posted: 03 Dec 2013 10:54 AM PST சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்களை கவர்ந்து தங்களுடன் இணைத்துக் கொள்ள மக்கள் விடுதலை கொரில்லா இயக்க மாவோயிஸ்ட்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர் |
| காஷ்மீர் என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை Posted: 03 Dec 2013 08:52 AM PST ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் ஹேண்ட்வாரா பகுதி ஷதிபோரா கிராமத்தின் ஒரு வீட்டில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக நேற்று மாலை ராணுவத்திற்கு இரகசியத்தகவல் கிடைத்தது. இதையடுத்து ராஷ்டிரிய ரைபிள் வீரர்களும், சி.ஆர்.பி.எப். வீரர்களும் அந்த கிராமத்தை சுற்றிவளைத்தனர். |
| நேபாள தேர்தலில் வெற்றி பெற்ற மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தாவுக்கு எதிராக கள்ளஓட்டு புகார் Posted: 03 Dec 2013 08:19 AM PST நேபாளத்தில் 601 இடங்களுக்கான பாராளுமன்றத் தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதி நடந்தது. இதில், முன்னாள் பிரதமரும் மாவோயிஸ்டு தலைவருமான பிரசாந்தா, இரண்டு தொகுதிகளில் (காத்மண்டு, சிராஹா) போட்டியிட்டார். இவற்றில் காத்மாண்டு தொகுதியில் நேபாள காங்கிரஸ் |
| ராயல-தெலுங்கானா திட்டத்தை ஏற்க மறுத்து நாளை மறுநாள் பந்த்: சந்திரசேகர ராவ் அழைப்பு Posted: 03 Dec 2013 07:40 AM PST ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயாராகி |
| 57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர் Posted: 03 Dec 2013 06:41 AM PST இந்திய நீதிமன்றங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல வழக்குகள் வருடக்கணக்காக இழுத்தடிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து உள்ளது. அதிகாரபூர்வ கணக்குகளின்படி 30 மில்லியனுக்கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளதாகத் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |