ஈகரை தமிழ் களஞ்சியம் |
- லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார்
- குழந்தையை மிதித்து கொடூரமாக கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
- நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம்
- ‘இன்ஸ்டாகிராம்’ செயலிக்கு அமெரிக்கர்களிடையே அமோக ஆதரவு!
- இந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்!
- ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை
- லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- 33 தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா பெயரில் விருப்ப மனு!
- இணைய பயன்பாட்டில் சிறந்த நாடு ஸ்வீடன்
- இந்தியப் பெண்களுக்காக கூகுள் அமைத்துள்ள இணையதளம்!
- கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம்
- பொண்ணுங்க பொய்களில் பத்து...
- இந்திய துணைத் தூதரின் ஆடைகளைக் களைந்து சோதனை: அமெரிக்க போலீஸ் ஒப்புதல்
- கோபாலபுரம் வேற மாதிரி! - உள்கதைகள்
- ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!
- சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
- அறிமுகம் -
- ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் .....
- தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா
- வீரம் mp3 download
- மது குடிக்கும் மக்கள் நீண்டகாலம் வாழலாம்!
- ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது
- ராகிங்கை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் : தலைமை நீதிபதி சதாசிவம்!
- தருணின் நான்காவது பிறந்த நாள் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு
- ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:
- தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்!
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- தொடத் தொடத் தொல்காப்பியம் (182)
- ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
- ரூ.15க்கு சி.எப்.எல்., பல்ப் விற்க மின் வாரியம் முடிவு.....
- நாடு முழுவதும் 24ஆம் தேதி பெட்ரோல் பங்க் மூடல்!
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -77)
- சீனப் பெருஞ்சுவர் உருவான கதை!
- சர்ச்சையில் இலங்கை தேசிய கீதம்
- நத்தையின் அழுகை - த.ரெ.தமிழ்மணி
- ''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர்
- லோக்பாலா, மக்களை ஏமாற்றும் ஜோக்பாலா ?
- கரை மீன்கள்
- என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
- சிலைகள் சொல்லும் சேதிகள்
- E-Tweets
- தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம்
- 'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2)
- அபூர்வ கானங்கள்
| லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Posted: 19 Dec 2013 11:26 AM PST மாட்டுத் தீவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்து ஜார்க்கண்ட் சென்றிருந்த ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் கால்களைக் காவல் துறை அதிகாரி ஒருவர் கழுவி விட்டதாலும், மற்றொரு காவல் துறை அதிகாரி அவருடைய செருப்பை எடுத்துசென்றதாலும் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஜார்க்கண்ட் காவல் துறை உத்தரவிட்டுள்ளது. ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த லாலு டியோரி கோவிலுக்கு சென்றார். அடுத்த நாள் பத்திரிக்கையாளர்களை சந்தித்த லாலு அதன் பின், ராஞ்சியில் ... |
| குழந்தையை மிதித்து கொடூரமாக கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை Posted: 19 Dec 2013 11:23 AM PST தூத்துக்குடியில் உள்ள ஒட்டப்பிடாரம் அருகே 2வது திருமணம் செய்து வாழ்வதற்க்கு இடஞ்சலாக இருந்ததாக நினைத்து 3 வயது குழந்தையை மிதித்துக் கொன்ற தாய் மற்றும் லாரி டிரைவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு பரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சரிதா (வயது 20). இவர்களுக்கு பாரதிதாசன் (3) என்ற மகன் இருந்தான். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2 பேரும் விவாகரத்து செய்தனர். அப்போது ராஜன் தரப்பில் பாரதிதாசனுக்கு ரூ.4 ... |
| நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Posted: 19 Dec 2013 11:21 AM PST நியாயப்படி கண்டிக்கப்பட வேண்டியவர்கள் இயக்குனர் சுகுமார், நடிகர் மகேஷ்பாபு உள்ளிட்ட படக்குழுவினர். ஆனால் சமந்தாவுக்கு எதிராக கண்டனங்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் ஆந்திராவில். மகேஷ்பாபு சுகுமார் இயக்கத்தில் 1 நேநொக்கடையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கிருத்தி சனான் ஹீரோயின். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. போஸ்டர்களில் ஒன்றில் கடற்கரையோரம் நடந்து சொல்லும் மகேஷ்பாபுவின் காலடித்தடங்களை நாய் மாதிரி மண்டியிட்ட நிலையில் கிருத்தி சனான் பின் ... |
| ‘இன்ஸ்டாகிராம்’ செயலிக்கு அமெரிக்கர்களிடையே அமோக ஆதரவு! Posted: 19 Dec 2013 11:17 AM PST புகைப்படங்களை இணையத் தொடர்பு செல்பேசிகளின் வழி பகிர்ந்து கொள்ளும் சமூகத்தள செயலியான 'இன்ஸ்டாகிராம்' அமெரிக்கர்களிடையே பிரபலமாகி வருகின்றது. குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும் அதன் பயன்பாடு மற்றொரு சமூக வலைத் தளமான ட்விட்டரை விட அதிக அளவில் இருப்பதாக நெல்சன் நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2013ஆம் ஆண்டில் மாதம் ஒன்றுக்கு 31,992,000 எண்ணிக்கையிலான வருகையாளர்கள் ஐஓஎஸ் மற்றும் அண்ட்ரோய்ட் செயலிகளில் வழி இன்ஸ்டாகிராம் தளத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். இதன்மூலம் ... |
| இந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Posted: 19 Dec 2013 11:15 AM PST எதிர்வரும் ஜனவரி முதற்கொண்டு இந்தியாவுக்கான தனது சேவைகளைத் தொடக்கவிருக்கும் மலேசியாவின் மலிவு விலை விமான சேவை நிறுவனமான மலிண்டோ ஏர், அடுத்த ஆண்டு இறுதிக்குள், மேலும் 6 புதிய நகர்களுக்கு பயணத்தை மேற்கொண்டு, பெரிய அளவில் தனது சிறகுகளை இந்தியாவிற்குள் விரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. இந்த மாத இறுதியில் இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு சேவையைத் தொடக்கும் மலிண்டோ ஏர், தொடர்ந்து ஜனவரி 2ஆம் தேதி தமிழகத்தின் திருச்சிக்கும், பிப்ரவரி 15 முதல் இந்தியாவின் வணிகத் தலைநகர் மும்பாய்க்கும் பயணங்களை ... |
| Posted: 19 Dec 2013 11:13 AM PST எனது ஹார்ட்டிஸ்க் கம்ப்யூட்டரில் தொடர்பு ஏற்படுதியால் காண்பிப்பது இல்லை சிறிது நேரம் கழித்து அதன் விளக்குகள் அணைந்துவிடுகின்றன இதற்க்கு என்ன செய்யலாம் எனது சகோதிரியின் திருமணபோட்டோ அனைத்தும் அதிலே இருக்கின்றன அதை மீட்பது எப்படி நண்பர்கள் உதவி செய்யவும் |
| லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Posted: 19 Dec 2013 10:55 AM PST சென்னை: லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு' என, அ.தி.மு.க., பொதுக்குழுவில், அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஆளும் கூட்டணியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், காத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, "கல்தா' கொடுக்கப்பட்டு உள்ளது. "லோக்சபா தேர்தலில், தனித்துப் போட்டி' என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளிலும், போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வினரிடம், விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சியும் நேற்று ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 19 Dec 2013 10:41 AM PST NO more time for love throwing myself into my careers right now plz regret the rumours guys.......... - --------------------------------- >Nayanthara Kurian |
| 33 தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா பெயரில் விருப்ப மனு! Posted: 19 Dec 2013 10:39 AM PST சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகின்றவர்களுக்கு இன்று முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது. 33 தொகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட விருப்பம் தெரிவித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மனு வழங்கினர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அதிமுக தேர்த்ல வேளைகளை தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகள் கணக்குகளை தொடங்காத நிலையில் முதல்வர் ஜெயலலிதா, 40 நாடாளுமன்ற தொகுதிக்கும் அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு ... |
| இணைய பயன்பாட்டில் சிறந்த நாடு ஸ்வீடன் Posted: 19 Dec 2013 10:37 AM PST இணையத்தைப் பயன்படுத்துவதில் முதலிடம் வகிக்கும் நாடு எது தெரியுமா? வைய விரிவு வலை அமைப்பு (world wide web foundation) நடத்திய ஆய்வின்படி இந்தப் பெருமையை ஸ்வீடன் தட்டிச்சென்றுள்ளது. ஸ்வீடனின் பக்கத்து நாடான நார்வே இரண்டாவது இடத்தில் உள்ளது. இணையம் மற்றும் சமூக ஊடகம், மக்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ளவும், போராடவும், அநியாயங்களைத் தட்டிக்கேட்கவும் பயன்பட்டு வருவது ஊக்கம் தரும் விஷயம் என்று இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்ட அமைப்பின் நிறுவனரும், வைய விரிவு வலையை கண்டுபிடித்தவருமான டிம் பெர்னர்ஸ் ... |
| இந்தியப் பெண்களுக்காக கூகுள் அமைத்துள்ள இணையதளம்! Posted: 19 Dec 2013 10:33 AM PST இந்தியப் பெண்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் இணையத்தை பயன்படுத்த வைப்பதற்காக 'கூகுள் இந்தியா' தனி இணையதளத்தை அமைத்துள்ளது. இந்த இணையதளம் மூலமாக, பெண்கள் மத்தியில் இணையப் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அடுத்த 5 ஆண்டுக்குள் இணையத்தை பயன்படுத்தும் இந்தியப் பெண்கள் எண்ணிக்கையை 5 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதுபோல இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா இரண்டாவது இடத்திற்கு வரவுள்ளது. சமீபத்தில் ... |
| கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Posted: 19 Dec 2013 10:32 AM PST நரேந்திர மோடியின் புகழ் இணையதள உலகிலும் கொடிகட்டிப் பறப்பது கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இருந்து தெளிவாகிறது. இந்தப் பட்டியலின்படி இணையதளத்தில் மிக அதிகமாக தேடப்படும் அரசியல் தலைவராக பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இருக்கிறார். கடந்த ஜூலை மாதம் முதல் இவரைப் பற்றி மிக அதிகமானவர்கள் தேடி வருவதாக கூகுள் நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு அடுத்த இடத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பிடித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ... |
| Posted: 19 Dec 2013 10:29 AM PST பொண்ணுங்க பொய்களில் பத்து : 1.நீ தான் என் முதல் காதலன் ..! 2.அன்னைக்கே ஜோசிய காரன் சொன்னான்..! 3.காசோ பணமோ முக்கியமில்லடா. .கேரக்டர் தான் முக்கியம்..! 4.ஐ மிஸ் யூ..! 5.பரவாயில்லை விடுங்க ..! 6.ஏழே நாட்களில் சிகப்பழகு ...! 7.நான் சாதி பார்பதில்லை ..! 8.அந்த டைம்ல நான் அங்க இருந்துருந்தேன்னா..! 9.எனக்கு பொய் சொல்லறது பிடிக்காது..! 10.இப்போ தான் உன்னை பத்தி நினைச்சேன்..நீய ே போன் பன்னிட்டே ...! முகநூல் |
| இந்திய துணைத் தூதரின் ஆடைகளைக் களைந்து சோதனை: அமெரிக்க போலீஸ் ஒப்புதல் Posted: 19 Dec 2013 10:21 AM PST இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவின் ஆடைகளை களைந்து சோதனையிட்டது உண்மைதான். எங்களின் விதிமுறைகளின்படியே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அமெரிக்க மார்ஷல் பிரிவு போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் தேவயானி கோப்ரகடேவை, விசா மோசடி வழக்கில் அந்த நாட்டு போலீஸார் கடந்த வியாழக்கிழமை பொது இடத்தில் கையில் விலங்கிட்டு கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ... |
| கோபாலபுரம் வேற மாதிரி! - உள்கதைகள் Posted: 19 Dec 2013 10:18 AM PST ஏற்காடு பரபரப்பு முடிந்தது. மயிலிறகால் வருடும்விதமான சிற்சில தீர்மானங்களோடு சமீபகாலமாக பொத்தாம்பொதுவாகக் கூடிக் கலைந்துவந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவின் போக்கில் பெரிய மாற்றம். 'காங்கிரஸ் வேண்டாம்' என்ற திட்டவட்ட அறிவிப்பு. திறந்த கதவுகள் வழக்கத்துக்கு மாறாக, அறிவாலயக் கதவுகள் அகலமாகத் திறந்திருக்க, தொண்டனும் பத்திரிகையாளனும் தாராளமாகக் காது கொடுக்க இந்த முறை அனுமதி இருந்தது. பொதுக்குழுவில் துறைமுகம் காஜா தொடங்கி டி.ஆர்.பாலு, திருச்சி சிவா என அனேகம் பேருக்கு வாய்ப்பு. ... |
| Posted: 19 Dec 2013 10:09 AM PST Cracy Russian motorcyclist....! மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது) |
| சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா Posted: 19 Dec 2013 09:43 AM PST பால முருகன் சின்னச்சின்னக் குழந்தையம்மா எங்கள் பாலமுருகன்-புன் சிரிப்புக்காட்டி மயக்கிடுவான் எங்கள் பாலமுருகன் வண்ணமயில் மீதிருப்பான் எங்கள் பாலமுருகன்-கையில் வடிவேலும் வைத்திருப்பான் எங்கள் பாலமுருகன் பிள்ளையாரின் நல்லதம்பி எங்கள் பாலமுருகன்-சிறு பிள்ளைகளின் இனியதோழன் எங்கள் பாலமுருகன் கள்ளமில்லா உள்ளங்கொண்டால் ... |
| Posted: 19 Dec 2013 08:51 AM PST ப்ரியமான நட்புக்கு.. நலமா.. என்னைப் பற்றி: பெ.வைத்த பெயர் கண்ணன் ராஜகோபாலன், வைத்துக் கொண்ட பெயர். சின்னக் கண்ணன். வலை வாழ் பாவலர் தம் அடியார்க்கும் அடியேன் என்பதால்.. வயது- மார்ச் மாதம் தான் எனது இருபதாவது வயதின் இருபதுக்கும் மேலான ஆண்டு விழாவைக் கொண்டாடினேன்.. ! இருக்குமிடம் : மஸ்கட் (தற்சமயம்).. எனது வேலையைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேனே.. எதை எழுதினாலும் கண்டிப்பாக சுவாரஸ்யம் கெடாமல் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன்..எனில் எனது கதை கவிதைகள் கட்டுரைகள் etc ... |
| ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ..... Posted: 19 Dec 2013 08:48 AM PST ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ..... பதவி இருக்கு, பணமும் இருக்கு அனுபவம் இருக்கு, அதிகாரம் இருக்கு கோட்டும் இருக்கு, சூட்டும் இருக்கு கூப்பிட்ட குரலுக்கு ஆளுமிருக்கு, குளிர்சாதன பெட்டியுமிருக்கு கோப்புகளின் எண்ணிக்கை குறைவே இருக்கு. ஒவ்வொரு கோப்பிலும் உதவி அதிகாரி ஒப்பமும் இருக்கு எனது வேலை - ஆலோசனை வழங்குவது முடிவுகளை உறுதி செய்வது கோப்புகளுக்கு ஒப்புதல்/ஒப்பம் அளிப்பது. அலுவலகத்தில் இன்றோ - அனைத்தும் இருந்தும் அமைதி இல்லை குளிர்சாதன அறையிலும் வெப்பம் அனைவர் மீதும் ... |
| தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா Posted: 19 Dec 2013 08:19 AM PST தாயகட்டம், பல்லாங்குழி, ஐஞ்சாங்கல், நொண்டி, காயா பழமா, காக்காகம்பு, தொட்டுவிளையாட்ட ு போன்ற பெயர்களை தற்போதுள்ள தலைமுறையினர் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை. இந்த பெயர்கள் எல்லாம் தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள். பழங்காலத்தில் சிறுவர்களுக்கு மரங்கொத்தி, காயா?பழமா?, சூ விளையாட்டு, உப்புவிளையாட்டு, ஐந்துபந்து, கால்தாண் என 65 விளையாட்டுகள் இருந்தன. இதே போல சிறுமியர்களுக்கு ஒண்ணாங்கிளி இரண்டாம்கிளி, பருப்புசட்டி, கண்கட்டி, அக்கா கிளி செத்துபோச்சு, மோருவிளையாட்டு, கரகர வண்டி, கும்மி, சோற்றுபானை ... |
| Posted: 19 Dec 2013 07:40 AM PST |
| மது குடிக்கும் மக்கள் நீண்டகாலம் வாழலாம்! Posted: 19 Dec 2013 07:39 AM PST மது குடிக்கும் மக்கள் நீண்டகாலம் வாழலாம்: ஆய்வில் தகவல் ! மதுவில் இருந்து முற்றிலும் விலகியிருக்கும் மக்களை விட மதுபானத்தை வழக்கமாக அருந்தும் மக்கள் நீண்டகாலம் வாழ்வார்கள் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளது. மேலும், மது அருந்தாத மக்களின் இறப்பு விகிதம் அதிகமாக கொண்டிருப்பவர்களாக தோன்றியது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு, ஒன்று முதல் மூன்று பானங்கள் என வரையறுக்கப்பட்ட மிதமான குடிபழக்கம் உள்ள மக்கள் மிகக்குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டிருப்பார்கள் என்று டெக்சாஸ் ... |
| ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Posted: 19 Dec 2013 07:25 AM PST சென்னை: தமிழகத்திலிருந்து பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் கனிந்துள்ளது என அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் ... |
| ராகிங்கை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் : தலைமை நீதிபதி சதாசிவம்! Posted: 19 Dec 2013 06:59 AM PST சென்னை: ராகிங்கை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் 156வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு விழா அரங்கில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ரோசய்யா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கலந்து கொண்டார். இந்த விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் பேசும்போது, ''சிறந்த பட்டதாரிகளை உருவாக்குவதோடு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ... |
| தருணின் நான்காவது பிறந்த நாள் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு Posted: 19 Dec 2013 06:59 AM PST தருணின் நான்காவது பிறந்த நாள் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு நன்றி வை.பா |
| ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்: Posted: 19 Dec 2013 06:53 AM PST 1. சொகுசு பஸ் 1 2. தங்க நகைகள் 7 சூட்கேஸ் 3. சொத்து விற்பனை பத்திரம் 19 4. ரோலக்ஸ் கைக்கடிகாரம் 7 5. வைரங்கள் 573 6. விலை உயர்ந்த பச்சைக்கல் 16 7. 290 வைரம் பதித்த தங்க ஒட்டியாணம் 1 8. 2,389 வைரம், 18 பச்சைக்கற்கள், 9 ரத்தினக்கல் பதித்த ஒரு கிலோ எடை கொண்ட ஒட்டியாணம் 1 9. அரை கிலோ தங்க காசுமாலை 1 10. அரை கிலோ தங்க குடம் 1 11. 191 கிராம் தங்க செங்கோல் 1 12. இரட்டை இலையுடன் கூடிய தங்க மாங்காய் 1 13. வெள்ளைக்கல் பதித்த தங்க கிரீடம் 1 14. 573 வைரம், 16 பச்சைக்கல், 3 ரத்தனக்கல் ... |
| தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்! Posted: 19 Dec 2013 06:45 AM PST தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....{PLEASE SHARE THIS}............. இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு... சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில், தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும்மருத்துவரின் மனிதாபிமானமான கடமை. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று நமது ... |
| Posted: 19 Dec 2013 06:39 AM PST என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (182) Posted: 19 Dec 2013 06:30 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! Posted: 19 Dec 2013 06:04 AM PST ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! கடலில் கலந்த நதியை ஆவியாக்கிப் பிரித்தான் ஆதவன் ! வந்தாரை வளமாக வாழவைத்து வாழ வழியின்றி புலம்பெயரும் தமிழன் ! நான் எழுதிய முதல் கவிதை அவள் பெயர் ! பிறப்பு முதல் இறப்பு வரை மறக்க முடியா உறவு அம்மா ! உயிரில் கலந்த மெய் அம்மா ! இன்று இருப்பார் நாளை இருப்பதில்லை அரசியல் கூட்டணி ! மக்களாட்சி என்ற பெயரில் தொடரும் மன்னராட்சி இந்தியா ! அரசியல்வாதிகளின் தேசிய விளையாட்டு ஊழல் ! அரசியல்வாதிகளின் தேசிய ... |
| ரூ.15க்கு சி.எப்.எல்., பல்ப் விற்க மின் வாரியம் முடிவு..... Posted: 19 Dec 2013 05:54 AM PST குடிசை மின் இணைப்புகளுக்கு, ஒரு பல்ப், 15 ரூபாய் என்ற விலையில், சி.எப்.எல்., பல்புகளை விற்பனை செய்ய, தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், தினசரி, 250 மெகாவாட் மின்சாரம் சேமிக்க முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மின் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த, எரிசக்தி திறனூக்க செயலகம் சார்பில், 'பச்சத் லேம்ப் யோஜனா' என்ற, விளக்கு மூலம் மின்சாரம் சேமிப்பு என்ற திட்டம், 2009, பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, மீட்டர் பொருத்தப்பட்ட, வீட்டு மின் நுகர்வோருக்கு, திறன் ... |
| நாடு முழுவதும் 24ஆம் தேதி பெட்ரோல் பங்க் மூடல்! Posted: 19 Dec 2013 05:44 AM PST சென்னை: அபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி வரும் 24ஆம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க் மூடப்படும் என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் எம்.ஹைதர் அலி பேட்டி அளித்தார். அப்போது அவர், ''விற்பனை கமிஷனை உயர்த்துவது, ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மத்திய அரசு அபூர்வ சந்திரா கமிட்டியை நியமித்தது. இந்தக் கமிட்டி ஆய்வுகளை மேற்கொண்டு கடந்த 2011 ஜனவரியில் ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -77) Posted: 19 Dec 2013 05:40 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| Posted: 19 Dec 2013 04:14 AM PST உலக அதிசயங்களில் ஒரே ஒரு அதிசயத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. விண்ணிலிருந்து பார்த்தால்கூட அந்த அதிசயம் கண்களுக்கு தெரியும் என்பதுதான் அந்த சிறப்பு. சீன வரைபடத்தில் இயற்கையே வரைந்த கோடுபோல் சுமார் 7500 கிலோமீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் சீனப் பெருஞ்சுவர்தான் அந்த சிறப்பைப் பெற்ற ஒரே உலக அதிசயம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நமக்கு பிரமிப்பூட்டும் அந்த நீள் சுவர் உருவாவதற்கு காரணமாக இருந்த சீன தேசத்துப் பெருமன்னனைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.சீனப் பெருஞ்சுவரை ... |
| சர்ச்சையில் இலங்கை தேசிய கீதம் Posted: 19 Dec 2013 04:09 AM PST இலங்கை தேசிய கீதத்தை எழுதிய ஆனந்த சமரகோனின் கையெழுத்தில் மூலப்பிரதியின் படம் இலங்கையின் வட கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழியிலுள்ள தேசிய கீதத்தை பாடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அவரது கருத்துக்கு பல்தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. வட கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகள், கலாச்சார நிகழ்வுகள் அல்லது இலங்கையின் அமைச்சர்கள் வரும்போது தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடும்படி ... |
| நத்தையின் அழுகை - த.ரெ.தமிழ்மணி Posted: 19 Dec 2013 03:57 AM PST காடழித்த வீட்டு கண்ணாடியைக் கொத்தும் குருவிகள் - வாழ்விட மீட்புப் போராட்டம்., இரவிலும் தாகமா இளநீர் அருந்த? மரநாய்., தேன்சிட்டா? வண்ணத்தியா? வலிக்காம தேனெடுப்பது யார்? பூக்களின் பட்டி மன்றம்., காட்டிக் கொடுத்ததில்லை தன் இனத்தை ஆட்காட்டிப் பறவை., தூண்டிலில் ஆமை கலுக்கென்று சிரித்தது மீன்கொத்தி மேலே இரட்டைவால் குருவி கீழே ஓணான் கம்பீரமாய் பறக்கும் ஈசல் தட்டான் பிடிச்சா கண்வலி வரும் சிற்றுயிர் காக்கும் தாய்மணம் தேர் எதற்கு? சிரித்தது முல்லை கிளுவையில் சாய்ந்தபடி... விவசாயக்கடன் கைரேகை ஆங்கிலப் ... |
| ''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Posted: 19 Dec 2013 03:51 AM PST லஞ்சம், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது 'சட்டப் பஞ்சாயத்து' என்ற இயக்கம். இந்த அமைப்புக்கான தொலைபேசி சேவை தொடக்க விழா சென்னை, தி.நகரில் நடந்தது. சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ இளங்கோ விழாவில் பேசும்போது, ''ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், கேஸ் இணைப்பு, மின் இணைப்பு, பட்டா மாற்றம், கல்விக் கடன் போன்ற அரசு சேவைகளை எப்படி லஞ்சம் தராமல் பெறுவது என்ற வழிகாட்டுதலை எங்கள் சேவை மையம் வழங்கும்!'' என்றார். அமைப்பின் பொதுச் செயலாளர் ... |
| லோக்பாலா, மக்களை ஏமாற்றும் ஜோக்பாலா ? Posted: 19 Dec 2013 03:41 AM PST 2011-ம் ஆண்டு டிசம்பரில் லோக்பால் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறினாலும் மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. அங்கே காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது ஒரு காரணம். தற்போது டில்லி சட்டமன்ற தேர்தலில் ஊழல் எதிர்ப்பை முக்கியமாக முன் வைத்து ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருப்பது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. 2ஜி, நிலக்கரி, வெஸ்ட்லேண்ட், காமன்வெல்த், ஆதார் என்று அன்றாடம் அணிவகுக்கும் ஊழல் செய்திகள் நாட்டு மக்களிடம் வெறுப்பையும் தோற்றுவித்திருந்தன. அதன் ... |
| Posted: 19 Dec 2013 03:18 AM PST 1. முந்நீர் வழக்கம் மகடூவோடு உண்டு... அங்கயற்கண்ணிகள் 2. எத்தனை தடவை அழித்தாலும் கிறுக்குவதே வேலையா? நண்டுகளைத் திட்டியபடி... அலை! 3. நள்ளிரவில் கடல் பார்த்த நகரத்துக் குழந்தை கேட்டாள் - இது தூங்கவே தூங்காதா? 4. காலையில் போனவர்கள் இருட்டியும் வரவில்லையே... கைவிளக்கோடு காத்திருக்கும் கலங்கரை விளக்கம் ! 5. கரைகண்ட கொள்ளுப் பேரன்களிடம் கடல் ... |
| என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை Posted: 19 Dec 2013 03:16 AM PST M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ... |
| Posted: 19 Dec 2013 03:10 AM PST சென்னை ஒரு பெரிய நகரமாக ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் உருவானது. ரயில், கப்பல் போக்குவரத்து ஏற்பட்டது. பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் வந்தன. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வாணிபம், தொழில், வேலை நிமித்தமாக மக்கள் குடிபெயர்ந்து வந்தார்கள். ஆங்கிலேய அரசாங்கம், விக்டோரியா மகாராணி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், கவர்னர் ஜெனரல் காரன் வாலீஸ், ராணுவ ஜெனரல் நீல் ஆகியோரின் சிலைகளை நகரத்தின் முக்கிய பகுதிகளில் வைத்தது. அப்படி வைக்கப்பட்டதன் நோக்கம், "ஆளும் பரம்பரையினரை பார்த்துக் கொள்ளுங்கள்' ... |
| Posted: 19 Dec 2013 02:32 AM PST முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!
|
| தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Posted: 19 Dec 2013 02:25 AM PST தங்கம் விலை ரூ.56 குறைந்தது சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 19ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,901-க்கும், சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.23,208-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.70 குறைந்து ரூ.30,720-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.48.80-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.935 குறைந்து ரூ.45,595-க்கும் ... |
| 'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Posted: 19 Dec 2013 02:23 AM PST 'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) தொடர்-2 'பணம் 'வெளி வந்த நாள்: 27.12.1952 மூலக்கதை: என்.வி.பாபு திரைக்கதை, வசனம்: கலைஞர் மு.கருணாநிதி இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள்: கண்ணதாசன், பாரதிதாசன். ஒளிப்பதிவு: மோஹன்ராவ் தயாரிப்பு: மதராஸ் பிக்சர்ஸ் இயக்கம்: என்.எஸ். கிருஷ்ணன் நடிக, நடிகையர் : நடிகர் திலகம், என்.எஸ். கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வி.கே.ராமசாமி, தங்கவேலு, பி.ஆர்.பந்துலு, பத்மினி, டி.ஏ.மதுரம் மற்றும் பலர். கதை: ஆடியபாத ... |
| Posted: 19 Dec 2013 02:21 AM PST பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம். இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |