மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மும்பையில் மோடி கூட்டத்துக்கு டீக்கடைக்காரர்கள் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு
- வாரணாசியில் இன்று நரேந்திரமோடி பிரசாரம்: 3 லட்சம் பேர் திரண்டனர்
- காந்திநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்: எல்.கே. அத்வானி அறிவிப்பு
- கொச்சி விமான நிலையத்தில் செருப்பில் மறைத்து தங்கம் கடத்தியவர் கைது
- கருத்து கேட்பில் மக்கள் சொன்னால் டெல்லியில் மீண்டும் தேர்தலை சந்திக்க தயார்: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு
- ஆந்திரா பிரிவினையை தடுக்க கடைசி வரை போராடுவேன்: முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி ஆவேசம்
- பாராளுமன்ற தேர்தல்: சிறுபான்மையின தலைவர்கள் ஆதரவை திரட்டும் ராகுல்
- ஏல விற்பனையில் சாதனை படைத்த இந்தியக் கலைஞரின் படைப்பு
- திருப்பதியில் கடும் குளிர்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது
- மும்பையில் 22-ந்தேதி நரேந்திர மோடி பங்கேற்கும் பேரணி: எஸ்.எம்.எஸ் மூலம் 3 கோடி இளைஞர்களுக்கு அழைப்பு
- என் மகள் மீதான வழக்கை திரும்ப பெறாவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன்: இந்திய பெண் தூதர் தந்தை ஆவேசம்
- இயற்கை எரிவாயு விலையை இருமடங்கு உயர்த்த ரிலையன்சுக்கு அனுமதி
- ஆம் ஆத்மி கட்சிக்கு 'துடைப்பம்' சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கியது
- டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் அவகாசம் வழங்க முடிவு: ஷிண்டே தகவல்
- வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்கவேண்டும்: பாரதிய ஜனதா
- 26 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் பீகார் அமைச்சர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு
- பாட்னா-புத்தகயா குண்டுவெடிப்பு குறித்த விவரங்கள் அனைத்தும் கிடைத்துள்ளன: ஷிண்டே
- மகாராஷ்டிர மாநிலத்தில் 10 நக்சலைட்டுகள் சரண்
- மத்திய அரசு ஒரு இறந்த வாத்து: அருண் ஜெட்லி கடும் தாக்கு
- மும்பை குண்டுவெடிப்பு சம்பவம்: பாகிஸ்தான் நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை
| மும்பையில் மோடி கூட்டத்துக்கு டீக்கடைக்காரர்கள் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு Posted: 19 Dec 2013 10:41 PM PST பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வருகிற 23–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகளை மாநில மற்றும் மும்பை பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கு 'மகா கர்ஜனை கூட்டம்' என பெயரிடப்பட்டுள்ளது. கூட்டம் பற்றி கட்சியின் செய்தி தொடர்பாளர் மாதவ் பண்டாரி கூறுகையில், |
| வாரணாசியில் இன்று நரேந்திரமோடி பிரசாரம்: 3 லட்சம் பேர் திரண்டனர் Posted: 19 Dec 2013 10:12 PM PST பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். இன்று அவர் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். இதையொட்டி அங்கு 3 லட்சம் பேரை திரட்ட மாநில பாரதீய ஜனதா ஏற்பாடு செய்து இருந்தது. அதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் வந்து குவிந்துள்ளனர். |
| காந்திநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்: எல்.கே. அத்வானி அறிவிப்பு Posted: 19 Dec 2013 09:38 PM PST பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வாஜ்பாய் மந்திரி சபையில் துணைப் பிரதமராக இருந்தார். வாஜ்பாய்க்குப் பின் அந்த கட்சியில் பிரதமர் பதவிக்கு அத்வானி தான் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக குஜராத் முதல் – மந்திரி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு அத்வானி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்தார். |
| கொச்சி விமான நிலையத்தில் செருப்பில் மறைத்து தங்கம் கடத்தியவர் கைது Posted: 19 Dec 2013 08:47 PM PST வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு தங்கம் கடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பலர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருகிறார்கள். ஆனாலும் சுங்க இலாகா அதிகாரிகளின் பார்வையில் இருந்து பெரும்பாலான கடத்தல் காரர்கள் தப்பிக்க முடிவதில்லை. இந்த நிலையில் துபாயில் இருந்து கொச்சி வந்த ஒரு விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணியின் நடத்தை சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகத்தை |
| Posted: 19 Dec 2013 08:47 PM PST கருத்துக் கேட்பில் மக்கள் சொன்னால் டெல்லியில் மீண்டும் தேர்தலை சந்திக்க தயார் என்று ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் அதிக இடங்களை கைப்பற்றிய பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. 2–வது இடம் பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப் அழைப்பு விடுத்தார். அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 10 நாள் அவகாசம் கேட்டு இருக்கிறார். அவருக்கு காங்கிரஸ், பாரதீய ஜனதாவும் ஆதரவு அளிக்க முன்வந்தன. அதை ஏற்க கெஜ்ரிவால் நிபந்தனைகள் விதித்துள்ளார். இதற்கிடையே ஆட்சி அமைப்பது தொடர்பாக இணைய தளம் மூலம் |
| ஆந்திரா பிரிவினையை தடுக்க கடைசி வரை போராடுவேன்: முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி ஆவேசம் Posted: 19 Dec 2013 08:39 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இது தொடர்பான வரைவு மசோதாவை ஆந்திர சட்டசபை ஒப்புதலுக்கு ஜனாதிபதி மாளிகை மூலம் அனுப்பி வைக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உறுப்பினர்களின் அமளியால் மசோதா மீது விவாதம் நடத்த முடியவில்லை. நேற்று நடந்த கூட்டத்திலும் பெரும் அமளி ஏற்பட்டது. இதனால், சட்டசபை அடுத்த மாதம் 3–ந் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. தெலுங்கானாவுக்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வரும் முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்ட அன்று சட்டசபைக்கு வரவில்லை. இந்த நிலையில் மாநில பிரிவினையை தடுக்க கடைசி வரை போராடுவேன் என்று நேற்று |
| பாராளுமன்ற தேர்தல்: சிறுபான்மையின தலைவர்கள் ஆதரவை திரட்டும் ராகுல் Posted: 19 Dec 2013 08:20 PM PST பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்கான யூகங்கள் வகுத்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. தேர்தல் கூட்டணி, பிரசாரம், வேட்பாளர்கள் போன்றவை பற்றி ஆலோசிப்பதற்காக வருகிற ஜனவரி மாதம் 17–ந் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் டெல்லியில் காங்கிரசின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் வகையில் ஆம்ஆத்மி கட்சி உருவாகியுள்ளது. அந்த கட்சியால் ஏற்படும் பாதிப்பை சரிக்கட்டும் வகையில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆதரவு திரட்ட |
| ஏல விற்பனையில் சாதனை படைத்த இந்தியக் கலைஞரின் படைப்பு Posted: 19 Dec 2013 07:51 PM PST இங்கிலாந்தின் லண்டன் நகரில் இயங்கிவரும் கிறிஸ்டி ஏல நிறுவனம் முதன்முதலாக தங்களின் விற்பனைக் கண்காட்சியை நேற்று மும்பை நகரில் நடத்தியது. தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த எட்டு கலைஞர்களின் படைப்புகள் உயர்ந்த விலைக்கு விற்பனை ஆகின. இவற்றில் குஜராத்தைச் சேர்ந்த வி.எஸ்.கோயடண்டே என்ற கலைஞரின் படைப்பு 23.7 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்தது. இதற்கு முன்னர் கடந்த 2002 ஆம் ஆண்டில் தயிப் மேத்தா என்ற இந்தியக் |
| திருப்பதியில் கடும் குளிர்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது Posted: 19 Dec 2013 07:44 PM PST மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்தே திருப்பதி திருமலை பகுதிகளில் பனிபொழிவு அதிகமாக உள்ளது. இரவு, அதிகாலை நேரங்களில் பனிச்சாரலுடன் காற்று வீசுகிறது. பக்தர்கள் நடுங்கும் குளிரில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சிலர் குளிருக்கு பயந்து வெளியே வராமல் விடுதியிலேயே முடங்கி கிடக்கின்றனர். திருமலையில் சில இடங்களில் கடை, வீடுகளின் எதிரில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். அதிகாலை நேரத்தில் மக்கள் நடமாட்டமும் குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் |
| மும்பையில் 22-ந்தேதி நரேந்திர மோடி பங்கேற்கும் பேரணி: எஸ்.எம்.எஸ் மூலம் 3 கோடி இளைஞர்களுக்கு அழைப்பு Posted: 19 Dec 2013 04:37 PM PST பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் 'மகா கர்ஜனை' பேரணி 22-ந்தேதி மும்பையில் நடக்கிறது. இந்த பேரணியில் அதிக அளவு மாணவர்கள் மற்றும் இளைஞர்களை திரட்டுவதற்காக மும்பை பா.ஜனதா சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பா.ஜனதா சமூக ஊடக குழு அமைக்கப்பட்டுள்ளது |
| என் மகள் மீதான வழக்கை திரும்ப பெறாவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன்: இந்திய பெண் தூதர் தந்தை ஆவேசம் Posted: 19 Dec 2013 04:18 PM PST நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விதம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் |
| இயற்கை எரிவாயு விலையை இருமடங்கு உயர்த்த ரிலையன்சுக்கு அனுமதி Posted: 19 Dec 2013 03:27 PM PST இயற்கை எரிவாயு உற்பத்தியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. இயற்கை எரிவாயு விலையை உயர்த்த கடந்த சில மாதங்களாக ரிலையன்ஸ் அனுமதி கேட்டு வந்தும், கிடைக்கவில்லை |
| ஆம் ஆத்மி கட்சிக்கு 'துடைப்பம்' சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கியது Posted: 19 Dec 2013 12:34 PM PST சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் முதன்முதலாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேர்தல் கமிஷன் விதிகளின்படி ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் தேர்தல் நடைபெறும் இடங்களில் குறைந்தபட்சம் |
| டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் அவகாசம் வழங்க முடிவு: ஷிண்டே தகவல் Posted: 19 Dec 2013 10:45 AM PST டெல்லி சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பா.ஜனதாவை ஆட்சி அமைக்குமாறு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அழைத்தார். ஆனால் இதற்கு பா.ஜனதா மறுப்பு |
| வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்கவேண்டும்: பாரதிய ஜனதா Posted: 19 Dec 2013 08:33 AM PST டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் படி பாரதிய ஜனதாவுக்கு 32, ஆம் ஆத்மி கட்சிக்கு 28, காங்கிரஸ் கட்சிக்கு 8 தொகுதிகளும் இதர கட்சிகளுக்கு இரு இடங்களும் கிடைத்தன. இதையடுத்து பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. |
| 26 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் பீகார் அமைச்சர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு Posted: 19 Dec 2013 08:21 AM PST பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் துர்கா பூஜை முடிந்து, சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாவட்ட கலெக்டரின் வீட்டின் அருகே நடந்த பிரச்சினையில் போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டனர். |
| பாட்னா-புத்தகயா குண்டுவெடிப்பு குறித்த விவரங்கள் அனைத்தும் கிடைத்துள்ளன: ஷிண்டே Posted: 19 Dec 2013 07:51 AM PST கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி பீகார் புத்தகயா கோவிலில், 10 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 5 துறவிகள் படுகாயம் அடைந்தனர். இதேபோன்று கடந்த அக்டோபர் மாதம் 27-ந்தேதி பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பங்கேற்ற பாட்னா பொதுக்கூட்டத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர். |
| மகாராஷ்டிர மாநிலத்தில் 10 நக்சலைட்டுகள் சரண் Posted: 19 Dec 2013 07:46 AM PST மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் 4 பெண்கள் உள்பட 10 நக்சலைட்கள் காவல்துறையினரிடம் சரணடைந்தனர். சரண் அடைந்தவர்கள் சுஷில் தீனனாத் டுக்கா, ரமேஷ் காவாண்டே, ஆஷா தனு ஹிச்சாமி, மதுக்கர் பெகா மட்டாமி, நத்து நரோட்டே, நிர்த்மலா |
| மத்திய அரசு ஒரு இறந்த வாத்து: அருண் ஜெட்லி கடும் தாக்கு Posted: 19 Dec 2013 07:40 AM PST பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முயற்சிக்காத மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை பாரதிய ஜனதா கட்சி மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கடுமையாக தாக்கியுள்ளார். |
| மும்பை குண்டுவெடிப்பு சம்பவம்: பாகிஸ்தான் நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை Posted: 19 Dec 2013 06:43 AM PST 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது அங்கு விசாரணை நடத்தவேண்டும் என பல தடவை இந்தியாவும், உலக நாடுகளும் வற்புறுத்தியதன் விளைவாக அந்நாட்டில் வழக்குபதிவு செய்து கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஜவ்வாக இழுத்தடிக்கப்பட்ட இவ்வழக்கில் இன்று சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. அங்குள்ள ஒகாரா மாவட்ட தேர்தல் அதிகாரி ஜாவேதிடமும், முசாபாராபாத் நகரில் செயல்படும் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |