Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சச்சின் நன்றாக விளையாட வேண்டும் : ஆனால் வெஸ்ட் இண்டீஸ் வெல்லவேண்டும் – பிரையன் லாரா

Posted: 06 Nov 2013 05:56 AM PST

CFQx-

CFQx-இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடக்கின்றது. இந்தியாவின் நட்சத்திர விளையாட்டு வீரரான சச்சின் டெண்டுல்கர் இந்தத் தொடருடன் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதால் அவருக்கு பிரம்மாண்டமான வழியனுப்பு விழா ஏற்பாடு கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்தால் செய்யப்பட்டு வருகின்றது. இது குறித்து வெஸ்ட் இண்டீசின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தனது கட்டுரையில் வெளியிட்டிருப்பதாவது:- இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரண்டு நாடுகளின் கிரிக்கெட் இடையே வரலாற்று தொடர் இருக்கும் என்று நான் நம்புகிறேன். நான் எப்போதுமே கிரிக்கெட்டை ஒரு குழுவினரின் விளையாட்டாகத்தான் பார்க்கிறேன். ஆனால் சில சமயங்களில் சில தனி மனிதர்களும் இதில் சிறப்பு கவனத்தைப் பெறுகின்றனர். அதுபோல் என்னுடைய நண்பர் சச்சின் ஒய்வு பெற இருக்கும் இந்த டெஸ்ட் தொடரிலும் அவரது முக்கியத்துவம் தனித்துத் தெரியும். கொல்கத்தாவும், ஈடன் கார்டன்சும் இந்த சந்தர்ப்பத்தை சிறப்பாக கொண்டாட உள்ளன. சச்சினின் மெழுகுச்சிலை ஒன்று ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. போட்டியைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு 70,000 முகமூடிகள் வழங்கப்பட உள்ளதாகவும் கேள்விப்பட்டேன். முதல்நாள் டாசில் பயன்படுத்தப்படும் நாணயத்தில் சச்சினின் முகம் பொறிக்கப்பட்டிருக்கும். முதன்முறையாக இங்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளிலும் சச்சின் முகம் அச்சிடப்பட்டுள்ளது. சச்சின் சல்யூட் என்ற தலைப்பில் இந்த விழா கொண்டாடப்பட உள்ளது. இத்தகைய கொண்டாட்டங்கள் ஒருவரது கவனத்தைச் சிதற அடிக்க முடியும். பிரிவுபசாரம் என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பதை அனுபவத்திலிருந்து கூறமுடியும். சச்சினின் கண்களில் எங்காவது கண்ணீர்த்துளி இருக்கலாம். இந்த விழா உண்மையில் உணர்வுகளை சோதிக்க முடியும். நான் எப்போதுமே ரன்களின் கணக்கீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் கிடையாது. ஆயினும் நான் முன்பு கூறியைதையே மறுபடியும் இங்கு சொல்ல விரும்புகிறேன். சச்சின் இந்தப் போட்டிகளில் நன்றாக விளையாட வேண்டும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் வெல்லவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஈடன் கார்டன் வண்ணமயமாகக் காணப்படும். ஆனால் இறுதியில் வெற்றியின் வண்ணம் எந்த அணியினரால் ஏற்படுகின்றது என்பதைப் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று ரூ.14 கோடி பரிசை தட்டிச்செல்வது யார்?

Posted: 06 Nov 2013 05:50 AM PST

13-viswanathan-anand300

13-viswanathan-anand300இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்– நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் மோதும் உலக செஸ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி வருகிற 9–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.

இந்த போட்டி மொத்தம் 12 சுற்றுகளை கொண்டது. அதிக புள்ளிகளை பெறுபவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். 12 சுற்றுகள் முடிவில் சமநிலை ஏற்பட்டதால் டைபிரேக்கர் முறையில் பந்தயம் நடைபெறும். 28–ந் தேதி அன்று டைபிரேக்கர் ஆட்டம் நடைபெறும்.

சென்னையில் உலக செஸ் போட்டி நடைபெறுவதால் இதில் யார் சாம்பியன் பட்டம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு செஸ் ரசிகர்கள் மத்தியில் ஆர்வமாக உள்ளது.

ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்தை 5 முறை வென்றுள்ளார். 2000–ம் ஆண்டு ஈரான் தலைநகர் டெக்ரானில் நடந்த போட்டியில் அலெக்சி ஹிரோவை வீழ்த்தி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 2007–ம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த போட்டியில் 2–வது முறையாக உலக சாம்பியன் ஆனார். 2008–ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த போட்டியில் கிராம்னிக்கை வீழ்த்தி 3–வது முறையாக பட்டம் வென்றார்.

2010–ம் அண்டு வாஸ்லின் தபோலோவையும், கடந்த ஆண்டு போரிஸ் ஜெல் பாண்டையும் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

தற்போது 6–வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் ஆனந்த் உள்ளார்.

நார்வேயை சேர்ந்த 22 வயதான மாக்னஸ் கார்ல்சென் 43 வயதான ஆனந்துக்கு கடும் சவாலாக விளங்குவார். 21 வயது இடை வெளி கார்ல்செனுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

19 வயதில் கார்ல்சென் உலகின் முதல்நிலை வீரராக திகழ்ந்தார். தொடர்ந்து இன்று வரை அவர் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார். உலக தரவரிப்பட்டியலில் அவர் 2870 ரேட்டிங் புள்ளிகளை வைத்துள்ளார். உலக செஸ் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் இந்த ரேட்டிங் புள்ளியை பெற்றது கிடையாது.

நடப்பு சாம்பியன் என்பதால் ஆனந்த் நேரடியாக உலக போட்டியில் ஆடுகிறார். லண்டனில் நடைபெற்ற கேன்டிடட் போட்டியில் ரஷியாவின் விளாடிமிர் கிராம்னிக்கை மாக்னஸ் கார்ல்சென் வீழ்த்தியதால் ஆனந்துடன் மோதும் வாய்ப்பை பெற்றார்.

முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் அவர் உள்ளார்.

சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் சென்னையை சேர்ந்த ஆனந்த் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆவலில் உள்ளார்.

இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.14 கோடியாகும். வெற்றி பெறுபவருக்கு 60 சதவீதம் வழங்கப்படும். சுமார் ரூ.8.4 கோடி கிடைக்கும். தோல்வி அடைபவருக்கு 40 சதவீதம் (ரூ.5.6 கோடி) கிடைக்கும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பல்கலைக்கழகங்களுக்கு 8 நாட்கள் விடுமுறை

Posted: 06 Nov 2013 04:44 AM PST

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு சகல பல்கலைக்கழகங்களுக்கும் எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் எட்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் பலரின் வேண்டுகோளை அடுத்தே விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்

Helicopter மூலம் Towerயை அழகாக கட்டும் அதிசயம்….

Posted: 06 Nov 2013 04:32 AM PST

helicopter_tower_001.w245

helicopter_tower_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

யார பாத்து என்ன வார்த்தை சொல்லிட்டிங்க….நானா கொமடி பீஸ்?

Posted: 06 Nov 2013 04:26 AM PST

tr_asingam_001.w245

tr_asingam_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் 4 வயதுச் சிறுமி பரிதாப மரணம்

Posted: 06 Nov 2013 04:19 AM PST

இங்கிலாந்தில் மிகப் பெரிய வளர்ப்பு நாயோடு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை கடித்து குதறியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் நாட்டிங்காம் அருகே மவுண்ட்சோரல் பகுதியில் உள்ள லெய்ஸ்டர்ஷயர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோடி ஹட்சன் (வயது 30). இவரது மகள் லெக்சி ஹட்சன் (வயது 4). சில வாரங்களுக்கு முன்புதான் கைவிடப்பட்ட மிகப் பெரிய நாய் ஒன்றை கொண்டு வந்து வீட்டில் வளர்த்து வந்தனர். அங்கு அடுக்குமாடி குடியிருப்பில் இவர்களுடைய குடும்பம் வசித்து வந்தது. மிகப் […]

Samsung Galaxy Win ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

Posted: 06 Nov 2013 04:15 AM PST

சம்சுங் நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட Samsung Galaxy Win எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை தென் கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. 4.8 அங்குல அளவு மற்றும் 800 x 480 Pixel Resolution உடைய WVGA தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியில் 1.4GHz வேகத்தில் செயலாற்றும் Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியன காணப்படுகின்றன. மேலும் 8GB சேமிப்பு கொள்ளளவினை கொண்டுள்ளதுடன் microSD கார்ட்டின் உதவியுடன் 32GB வரை அதிகரிக்கும் வசதியும் காணப்படுகின்றது. 152 கிராம்களே நிறையுடைய […]

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகின் மிக வேகம் கூடிய ரோபோ உருவாக்கம்

Posted: 06 Nov 2013 04:11 AM PST

தற்போது காணப்படும் ரோபோக்களிலே மிகவும் வேகம் கூடிய ரோபோவானது ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவானது மனிதனின் கைவிரல் அசைவுகளைப் புரிந்துகொண்டு 100 சதவீத வேகத்தில் தொழிற்படுவதுடன் 20 மில்லி செக்கன்களில் விரல் அமைப்புக்களை மாற்றியமைக்கும் திறமை கொண்டதாக காணப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

யாழ். விஜயம் என்ற போர்வையில் மாநாட்டுக்கு வருகிறார் மன்மோகன் சிங்?

Posted: 06 Nov 2013 04:08 AM PST

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் புதிய வியூகத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்புக்கு சென்று மாநாட்டில் பங்கேற்பதுடன் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்திற்கு பிரதமர் செல்லும் வகையில் பயணத்திட்டத்தை உருவாக்க வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்மூலம் தமிழர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது. இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிரதமர் மன்மோகனுக்கு அழைப்பு விடுத்துள்ளதால் இந்த முடிவுக்கு மத்திய […]

என்னடா நடக்குது இங்க‌

Posted: 06 Nov 2013 04:06 AM PST

funny

funny

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™