மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றாலும் ராகுல் நம்முடனே இருப்பார்: மத்திய மந்திரி பேச்சு
- தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் காங்கிரஸ் தலைவர் தற்கொலை முயற்சி
- ஓட்டுப்பதிவுக்கு 15 நாட்களுக்கு முன்பே கருத்து கணிப்புக்கு தடை: தலைமை தேர்தல் கமிஷன் பரிசீலனை
- தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: டெல்லியில் நாளை காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை
- டெல்லி சட்டசபை தேர்தல்: காங்., பா. ஜனதாவை எதிர்த்து தே.மு.தி.க. போட்டி
- திருப்பதி கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.53 கோடி உண்டியல் வருமானம்
- ரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்று நூறு ஆண்டுகள் கடந்தது குறித்து ஸ்வீடன் தூதரகத்தில் விழாக் கொண்டாட்டங்கள்
- சத்தீஸ்கர் மாநில தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.560 கோடி
- திருச்சானூரில் 28–ந்தேதி பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் தொடங்குகிறது
- சமையல் கியாஸ் விலை ரூ.10 உயரும்: டீசல் விலை மாதம் தோறும் ஒரு ரூபாய் உயர்கிறது - மத்திய அரசு முடிவு
- இலங்கை காமன்வெல்த் மாநாடு: பிரதமர் பங்கேற்பது குறித்து மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இன்று முடிவு
- நரேந்திர மோடிக்கு ‘எஸ்.பி.ஜி.’ பாதுகாப்பு இல்லை: மத்திய மந்திரி ஷிண்டே திட்டவட்டம்
- மோடிக்கு, பிரதமருக்கு நிகரான பாதுகாப்பு தரமுடியாது: பாரதீய ஜனதா கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது
- சவுதியில் இருந்து திரும்பி வரும் கேரள மாநிலத்தவருக்கு வட்டியில்லா கடன்: உம்மன் சாண்டி அறிவிப்பு
- மோடிக்கு தீபாவளி பரிசாக 5ம் வகுப்பு வரலாற்று புத்தகங்களை அனுப்பி காங்கிரசார் குறும்பு
- 2014 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. எம்.பி.க்கள் மோடியை கழற்றிவிட்டு அத்வானியை பிரதமர் ஆக்குவார்கள்: உ.பி. மந்திரி 'ஜோசியம்'
- 9 நாள் பயணமாக இளவரசர் சார்லஸ்-கமீலா தம்பதியர் இந்தியா வந்தனர்
- காரோ இயக்க போராளிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா 7 1/2 லட்சம்: மேகாலயா அரசு அறிவிப்பு
- டெல்லி தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. - ஷீலா தீட்சித்தை எதிர்த்து விஜேந்தர் குப்தா போட்டி
- விபத்தில் இறந்த வெளிநாடுவாழ் இந்தியரின் மனைவிக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
| பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றாலும் ராகுல் நம்முடனே இருப்பார்: மத்திய மந்திரி பேச்சு Posted: 06 Nov 2013 11:03 PM PST மத்திய ஊரக மேம்பாட்டு மந்திரி ஜெய்ராம் ரமேஷ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:– அகில இந்திய காங்கிரஸ் கட்சியானது யானை போன்றது. பா.ஜ.க. குள்ள நரியாக உள்ளது. யானையை எதிர்த்து நரியால் எதுவும் செய்ய முடியாது. |
| தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் காங்கிரஸ் தலைவர் தற்கொலை முயற்சி Posted: 06 Nov 2013 10:59 PM PST மத்திய பிரதேசம் மாநிலத்தில் வரும் 25–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை மேலிடம் அறிவித்தது. இதில் அகர் தொகுதியில் போட்டியிட மாள்வியா என்பவர் டிக்கெட் கேட்டு இருந்தார். சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. |
| ஓட்டுப்பதிவுக்கு 15 நாட்களுக்கு முன்பே கருத்து கணிப்புக்கு தடை: தலைமை தேர்தல் கமிஷன் பரிசீலனை Posted: 06 Nov 2013 10:53 PM PST 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. இதனால் வெறுப்பும், கோபமும் அடைந்துள்ள காங்கிரஸ் தலைவர்கள் கருத்து கணிப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். |
| தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: டெல்லியில் நாளை காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை Posted: 06 Nov 2013 10:28 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தெலுங்கானா மசோதா தயாரிப்பது குறித்து ஆலோசிக்க டெல்லியில் வருகிற 12 மற்றும் 13–ந் தேதியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. முன்னதாக தெலுங்கானா குறித்து ஆந்திர காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் திக்விஜய்சிங் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியின் ஆலோசனை |
| டெல்லி சட்டசபை தேர்தல்: காங்., பா. ஜனதாவை எதிர்த்து தே.மு.தி.க. போட்டி Posted: 06 Nov 2013 09:53 PM PST டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜங்புரா தொகுதியில் ஏ. சிவா போட்டியிடுகிறார். வசீர்பூர் தொகுதியில் எஸ்.ஈஸ்வரி, ஜனர்புரியில் சொர்ணம் காளிநாதன், புதுடெல்லி தொகுதியில் ஜி.எஸ்.மணி, கல்காஜி தொகுதியில் ராமு ஆகியோர் தே.மு.தி.க. வேட்பாளர்களாக களம் இறங்குகிறார்கள். இவர்களுக்காக டெல்லி மாநில தே.மு.தி.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கட்சி தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| திருப்பதி கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.53 கோடி உண்டியல் வருமானம் Posted: 06 Nov 2013 09:50 PM PST திருப்பதி கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.53 கோடி உண்டியில் வருமானம் கிடைத்துள்ளது. தனிதெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் நேற்று முழு அடைப்பு தொடங்கி இன்று 2வது நாளாக முழு அடைப்பு நடந்தது. சித்தூர் மாவட்டத்தில் பஸ்கள் ஓடவில்லை. தமிழகத்தில் இருந்து வாகனங்கள் ஆந்திர எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளன. திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்படுகிறது. |
| Posted: 06 Nov 2013 09:25 PM PST 1895 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்ப்ரெட் நோபல் என்பவர் துவக்கி வைத்தது நோபல் பரிசு அமைப்பாகும். இதில் ஆண்டுதோறும் இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், ரசாயனம், பௌதிகம் போன்றவற்றுக்கான சிறப்பு விருதினை ஸ்வீடனும், அமைதிக்கான நோபல் பரிசினை நார்வேயும் இணைந்து வழங்குகின்றன. |
| சத்தீஸ்கர் மாநில தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.560 கோடி Posted: 06 Nov 2013 09:19 PM PST சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு வரும் 11 மற்றும் 19–ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ராமன்சிங் தலைமையிலான பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. |
| திருச்சானூரில் 28–ந்தேதி பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் தொடங்குகிறது Posted: 06 Nov 2013 09:11 PM PST திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் வருகிற 28–ந்தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் (டிசம் பர்) 8–ந்தேதி புஷ்பவாகனத்துடன் விழா நிறைவு பெறுகிறது. திருமலை ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் போல் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவத்தையும் விமரிசையாக நடத்த இருப்பதாக தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி எம்.ஜி.கோபால் தெரிவித்தார். |
| சமையல் கியாஸ் விலை ரூ.10 உயரும்: டீசல் விலை மாதம் தோறும் ஒரு ரூபாய் உயர்கிறது - மத்திய அரசு முடிவு Posted: 06 Nov 2013 08:24 PM PST இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு கொடுத்து வரும் மானியத்தை முழுமையாக நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மாதம் தோறும் டீசல் விலையில் 50 காசு உயர்த்தப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வு காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு அதிகரித்துள்ளது. டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 11 இழப்பு ஏற்படுகிறது. அது போல சமையல் கியாஸ் விற்பனையில் சிலிண்டருக்கு ரூ. 555 வரை இழப்பு ஏற்படுகிறது. இதனால் எண்ணை நிறுவனங்களுக்கு டீசல், சமையல் கியாஸ் விலையை உடனே அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தற்போது மாதம் தோறும் டீசல் விலை 50 காசு உயர்த்தப்படுவதை இனி |
| இலங்கை காமன்வெல்த் மாநாடு: பிரதமர் பங்கேற்பது குறித்து மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இன்று முடிவு Posted: 06 Nov 2013 07:55 PM PST இலங்கையில் இந்த மாதம் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள கடந்த வாரம் நடந்த காங்கிரஸ் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதில் ஓரணியில் நின்று குரல் கொடுத்து வருகின்றன. பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் |
| நரேந்திர மோடிக்கு ‘எஸ்.பி.ஜி.’ பாதுகாப்பு இல்லை: மத்திய மந்திரி ஷிண்டே திட்டவட்டம் Posted: 06 Nov 2013 07:15 PM PST மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே மேற்கு வங்காள மாநிலத்தில், இந்தியா-வங்காள தேச எல்லையில் உள்ள பெட்ரோபோல் என்ற இடத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், "நரேந்திரமோடிக்கு பிரதமரைப்போன்று 'எஸ்.பி.ஜி.' என்னும் சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்கப்படுமா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. |
| மோடிக்கு, பிரதமருக்கு நிகரான பாதுகாப்பு தரமுடியாது: பாரதீய ஜனதா கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது Posted: 06 Nov 2013 07:10 PM PST பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கடந்த மாதம் 27-ந் தேதி பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அந்தக் கூட்டத்தில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தினர். இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்புகள் நாடு முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து காலிஸ்தான் தீவிரவாதிகளின் துணை கொண்டு நரேந்திரமோடியின் உயிருக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. குறி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. மோடிக்கு 'மச்லி' என்று ரகசிய பெயரிட்டு அதை 'கோட் வேர்டு' ஆகப் பயன்படுத்துவதாகவும் |
| சவுதியில் இருந்து திரும்பி வரும் கேரள மாநிலத்தவருக்கு வட்டியில்லா கடன்: உம்மன் சாண்டி அறிவிப்பு Posted: 06 Nov 2013 04:35 PM PST சவூதி அரேபிய அரசு நிடாகட் என்ற புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியதன் மூலம் உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்க முயன்று வருகின்றது. இதனால் அங்கு தங்கிப் பணிபுரியும் ஏராளமானவர்கள் தங்களுடைய தாய்நாடுகளுக்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது |
| மோடிக்கு தீபாவளி பரிசாக 5ம் வகுப்பு வரலாற்று புத்தகங்களை அனுப்பி காங்கிரசார் குறும்பு Posted: 06 Nov 2013 01:43 PM PST குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கு மும்பை இளைஞர் காங்கிரஸ் தலைவர் கணேஷ்குமார் யாதவ் என்பவர் தீபாவளி பரிசாக வரலாற்று பாட புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார் |
| Posted: 06 Nov 2013 12:38 PM PST 2014 - பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. எம்.பி.க்கள் நரேந்திர மோடியை கழற்றிவிட்டு அத்வானியை பிரதமர் ஆக்குவார்கள் என உ.பி. மந்திரி கூறியுள்ளார். அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி. மந்திரி சபையில் சுரங்க துறை மந்திரியாக பதவி |
| 9 நாள் பயணமாக இளவரசர் சார்லஸ்-கமீலா தம்பதியர் இந்தியா வந்தனர் Posted: 06 Nov 2013 11:29 AM PST இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-கமீலா பார்க்கர் தம்பதியர் இந்தியாவில் 9 நாள் பயணம் மேற்கொள்கின்றனர். இதற்காக அவர்கள் தனி விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் உள்ள ஜாலிகிராண்ட் விமான நிலையத்தில் நேற்று மாலை 4.15 மணிக்கு வந்து இறங்கினர் |
| Posted: 06 Nov 2013 11:02 AM PST வட கிழக்கு மாநிலமான மேகாலயாவின் மேற்கு பகுதி காரோ மலைப்பகுதியில் கைதி ஒருவரை அழைத்துக்கொண்டு பகுமாரா என்னுமிடத்திற்கு 5 போலீசார் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள பாங்ஜகோனா கிராமத்தில் சென்ற போது அந்த வாகனத்தின் |
| Posted: 06 Nov 2013 10:46 AM PST 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்ய பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு நேற்றிரவு டெல்லியில் கூடியது |
| விபத்தில் இறந்த வெளிநாடுவாழ் இந்தியரின் மனைவிக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு Posted: 06 Nov 2013 10:11 AM PST இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளியினரான திலீப் சமானியும் அவரது குடும்பத்தினரும் கடந்த 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் தங்களது விடுமுறையைக் கழிக்க இந்தியா வந்திருந்தனர். அந்த மாதம் 26ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் தங்களது உறவினர் பெண் ஒருவருடன் இந்த நால்வரும் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |