Tamil Star |
- பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்க அரசாங்கம் தீர்மானம்
- ஜெயிலில் லாலு பிரசாத்துக்கு தோட்டக்காரர் வேலை : தினமும் ரூ.14 சம்பளம்
- பிரதமர், பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் – வெளிவிவகார அமைச்சு
- ஈரான் சிறையில் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்
- மனைவி சமந்தாவுடன் புதிய பக்தராக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்
- இலங்கையில் ஊடக சுதந்திரம் பல்வேறு வழிகளில் முடக்கப்பட்டு வருகின்றது – கபே
- பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது – மதுரை ஆதீனம்
- கனடா நாட்டின் மர்கம் நகரில் உள்ள தெருவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர்
- இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் : தட்டிக்கழித்தால் பாரதூரமான விளைவுகளை இலங்கை அரசு சந்தித்தே தீரும்
- அலையில் ஓர் சாகச விளையாட்டு
| பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்க அரசாங்கம் தீர்மானம் Posted: 04 Nov 2013 11:15 PM PST
இந்த அழைப்புகள் அடுத்த சில தினங்களில் மாநாட்டின் ஏற்பாட்டு குழுவினால் கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதனை தவிர நாடாளுமன்றத்தில் அங்கம் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாநாட்டிற்கான அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்பது அந்த கட்சிகளின் முடிவில் தங்கியுள்ளது. அழைப்பு விடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதால் நாங்கள் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவுள்ளோம் என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெயிலில் லாலு பிரசாத்துக்கு தோட்டக்காரர் வேலை : தினமும் ரூ.14 சம்பளம் Posted: 04 Nov 2013 11:10 PM PST
அவரது ஜாமீன் மனுவை ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு கடந்த மாதம் 30–ந் தேதி தள்ளுபடி செய்தது. லாலுபிரசாத் தற்போது ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு படுக்கை, மின்விசிறி, நாளிதழ், டி.வி. என எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. லாலுவுக்கு ஜெயிலில் என்ன வேலை கொடுக்கலாம் என்று சிறைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். அவர் உள்ள ஜெயிலில் 30 சதவீத கைதிகள் மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் என்பதால் மற்றவர்கள் நெருங்காதபடி வேலை கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. நீண்ட ஆய்வுக்குப் பிறகு லாலு பிரசாத்துக்கு தோட்டக்காரர் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அவர் அடைக்கப்பட்டுள்ள 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறையின் பெரும் பகுதியில் காய்கறி, பூஞ்செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. காய்கறி தோட்டங்களில் தண்ணீர் பாய்ச்சி பாதுகாக்கவும், மலர் தோட்டங்களில் தினமும் பூ பறித்து பராமரிக்கவும் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அந்த பணியாளர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் பொறுப்பு லாலுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. லாலு பிரசாத் அந்த வேலையை மிகவும் குஷியாக செய்து வருகிறார். அடிக்கடி அவர் மலர் தோட்டங்களுக்குள் புகுந்து எப்படி வேலை செய்ய வேண்டும் என்று மற்ற கைதிகளுக்கு சொல்லி கொடுக்கவும் செய்கிறார். இந்த வேலைக்காக லாலு பிரசாத் யாதவுக்கு தினமும் ரூ.14 சம்பளம் கொடுக்கப்படுகிறது. முன்னதாக லாலுவுக்கு ஜெயிலில் உள்ள பள்ளியில் ஆசிரியர் வேலை கொடுக்கலாமா? என்று பரிசிலிக்கப்பட்டது. ஆனால், லாலு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை கூறியதைத் தொடர்ந்து அவருக்கு ஆசிரியர் வேலை கொடுக்கபடவில்லை. அரசியல் கலையில் பட்டம் பெற்றுள்ள லாலு ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், ஆமதாபாத் ஐ.ஐ.எம்.மிலும் நிர்வாகம் பற்றி மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரதமர், பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் – வெளிவிவகார அமைச்சு Posted: 04 Nov 2013 11:06 PM PST
பாதுகாப்பு மற்றும் தந்திரோபாய காரணிகளை கருத்திற்கொண்டு இந்தியா தீர்மானம் எடுக்க வேண்டுமென சிரேஸ்ட வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் தேசிய நலன்களை கருத்திற் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இதேவேளைஇ இந்தியப் பிரதமர் அமர்வுகளில் பங்கேற்கக் கூடாது என தமிழக அரசியல் கட்சிகளும்இ சில மத்திய அமைச்சர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதேவேளைஇ இலங்கை அமர்வுகளில் பிரதமர் பங்கேற்பதனை எதிர்க்கவில்லை என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈரான் சிறையில் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் Posted: 04 Nov 2013 11:02 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனைவி சமந்தாவுடன் புதிய பக்தராக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் Posted: 04 Nov 2013 10:57 PM PST
தீபாவளியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது மனைவி சமந்தாவுடன் புதிய பக்தராக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அங்கு வந்து சேர்ந்தார். அரக்கு நிற பட்டுப் புடவையில் சமந்தா கேமரூன் வட இந்திய குடும்பத் தலைவி போல் தோற்றமளித்தார். அவர்களுடன் இங்கிலாந்து எம்.பி.க்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளும் வந்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் அங்கு தங்கியிருந்து தீபாவளி வழிபாட்டில் பங்கேற்ற டேவிட் கேமரூன் பக்தர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அனைத்து மதங்கள், அனைத்து கலாசாராங்களை போற்றி பாதுகாக்கும் இங்கிலாந்துக்கு இங்கு வாழும் இந்துக்கள் அளித்து வரும் பங்களிப்பு சிறப்பானது என்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். எனது இதயத்தின் அடித்தட்டில் இருந்து உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறிய அவர் பூசாரியிடம் பழங்களை தந்து பூஜை செய்து கண்மூடி வணங்கினார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையில் ஊடக சுதந்திரம் பல்வேறு வழிகளில் முடக்கப்பட்டு வருகின்றது – கபே Posted: 04 Nov 2013 10:52 PM PST
ஊடக சுதந்திரம் குறித்த பல்வேறு சுட்டெண்களில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே ஊடகவியலாளர்கள் சுதந்திரமான முறையில் கடமையாற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அண்மையில் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் நாடு கடத்தப்பட்ட சம்பவம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அவர்கள் நாடு கடத்தப்பட்டமையானது இலங்கை அரசியல் சாசனத்தின் 14ஆம் சரத்திற்கு புறம்பான வகையில் அமைந்துள்ளது என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது – மதுரை ஆதீனம் Posted: 04 Nov 2013 10:44 PM PST
இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இனப்படுகொலை நடத்திய இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த வேண்டும் என முடிவு செய்ததே மிகப்பெரிய தவறு. அப்படிப்பட்ட முடிவுக்கு இந்தியா சம்மதம் தெரிவித்திருக்கக் கூடாது. லட்சக்கணக்கான மனிதர்களை கொன்று குவித்து, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அழித்து மனிதாபிமானத்திற்கு வேட்டு வைத்த இலங்கையில், பொதுநலவாய மாநாட்டை நடத்தலாமா. சின்னஞ்சிறு பாலகன் பிரபாகரனின் மகனை ஈவு இரக்கமின்றி கொலை செய்த இலங்கையில் பொதுநலவாய மாநாடு தேவையா? இசைப்பிரியாவை மிகப்பயங்கரமாக கொலை செய்து விட்டு, நாங்கள் இக்கொலையை செய்யவில்லை என பொய்ப்பிரசாரம் மேற்கொள்ளும் இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தலாமா? பொதுநலவாய என்ற சொல்லுக்கு பொது சொத்து என்று தான் பொருள். அப்படிப்பட்ட இறைவனின் பிள்ளைகளான மனித உயிர்கள் என்ற பொதுச் சொத்தை நாசமாக்கிய இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த அனுமதிக்கலாமா? மத்திய அரசே, இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடா நாட்டின் மர்கம் நகரில் உள்ள தெருவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் Posted: 04 Nov 2013 10:23 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 04 Nov 2013 10:08 PM PST
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்றுத் தெரிவித்தார்.இசைப்பிரியா தொடர்பில் சனல்4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள காணொலியை இலங்கை அரசும் இராணுவமும் நிராகரித்துள்ளன. இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.சனல்4 வில் இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் வெளிவந்த காட்சிகள் அனைத்தும் உண்மையானவை என்று அதனை பார்த்த அனைவரும் கூறுகின்றார்கள். இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் இந்த கொடூரத்தை வன்மையாகக் கண்டித்துள்ளன. எனவே, சனல்4 வெளியிட்ட காணொலியை போலி என கூறி அரசு நிராகரிக்க முடியாது. இது சனல் 4 விடயமல்ல, இசைப்பிரியா படுகொலை விடயம் என்பதை அரசு மனதில் கொள்ள வேண்டும். இது தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்படவேண்டும்; உண்மைகள் கண்டறியப்படவேண்டும்; இது இலங்கை அரசின் கடமையாகும். இதை தட்டிக்கழித்தால் பாரதூரமான பின்விளைவுகளை இலங்கை அரசு சந்தித்தே தீரும்.நாட்டில் மனித உரிமைகள், சட்டங்கள் ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று இலங்கை அரசு கூறுகின்றது. இது உண்மையானால் இசைப்பிரியா வின் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்திய உண்மையை கண்டறிய வேண்டும். அரசு ஏன் இதற்கு தயக்கம் காட்டுகின்றது? இந்தப் படுகொலை தொடர்பில் சர்வதேச சமூகத்தின் பார்வை இலங்கைப் பக்கம் திரும்பியுள்ளது. எனவே, இசைப்பிரியாவின் குடும்பத்தினருக்கும் தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். இதிலிருந்து அரசு தப்பவே முடியாது" என்றும் அவர் கூறினார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 04 Nov 2013 07:00 AM PST |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |














