Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காஷ்மீர் எல்லையில் இந்திய விமானங்களை கண்காணிக்க சீனா கட்டிய ரேடார் நிலையம்

Posted: 04 Nov 2013 11:11 PM PST

காஷ்மீர் எல்லையில் இந்திய விமானங்களை கண்காணிக்க சீனா 'ரேடார்' நிலையத்தை கட்டியுள்ளது. காஷ்மீரில் 'லடாக்' அருகே எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் 'தவுலத் பெக் ஒல்டி' என்ற இடத்தில் இந்திய விமான படை தளம் உள்ளது. இது உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ளது இங்கு தற்போது விமானபடை தளம் இயங்கி வருகிறது. கடந்த ஆகஸ்டு 20–ந் தேதி 'சி–130ஜெ சூப்பர் ஹெர்குஸ்' என்ற சரக்கு விமானம் வந்து தரை இறங்கியது. அதன் மூலம் 20 டன் பொருட்களை ஏற்றி வர

ராஞ்சி லாட்ஜில் தீவிரவாதி பதுக்கிய மேலும் 18 வெடிகுண்டுகள் சிக்கியது

Posted: 04 Nov 2013 10:45 PM PST

பாட்னாவில் நரேந்திர மோடி கூட்டத்தில் வெடிகுண்டு வைத்ததாக கைதான இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் கிடைத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு துறையினர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு லாட்ஜில் திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு 9 வெடிகுண்டுகள் சிக்கின. இது தொடர்பாக 4 பேரை புலனாய்வு துறையினர் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராஞ்சியில் பதுக்கி வைக்கப்பட்ட மேலும் 18 வெடிகுண்டுகளை கைப்பற்றினார்கள். பாட்னா குண்டு வெடிப்பு தொடர்பாக பிடிபட்ட

காமன்வெல்த் மாநாடு: மன்மோகன்சிங் பங்கேற்க வெளியுறவுத்துறை பரிந்துரை- 4 மந்திரிகள் கடும் எதிர்ப்பு

Posted: 04 Nov 2013 10:39 PM PST

இலங்கை தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் மாநாடு வருகிற 15, 16, 17–ந்தேதிகளில் நடைபெற உள்ளது. சுமார் 2 லட்சம் ஈழத் தமிழர்களை ஈவு, இரக்கமின்றி கொன்று குவித்த ராஜபக்சே நடத்தும் இந்த மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன்சிங் செல்லக்கூடாது என்று தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழர்களின் மன உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது என்று மத்திய மந்திரிகள் ஏ.கே. அந்தோணி, ஜி.கே.வாசன், நாராயணசாமி, ஜெயந்தி நடராஜன் வற்புறுத்தி உள்ளனர். என்றாலும் பிரதமர் மன்மோகன்சிங் இதுவரை தன் நிலையை அறிவிக்கவில்லை.

காலிஸ்தான் தீவிரவாதிகளால் மோடி உயிருக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை

Posted: 04 Nov 2013 09:46 PM PST

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் அவர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு பிரதமருக்கு இணையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நரேந்திர மோடி உயிருக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. குறி வைத்து இருப்பதை மத்திய உளவுத்துறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் தீவிரவாதிகள் மூலம் தங்கள் சதி திட்டத்தை நிறைவேற்ற ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டுள்ளதையும் உளவுத்துறை

லாலு பிரசாத் யாதவுக்கு சிறையில் தோட்டக்காரர் வேலை: தினமும் ரூ.14 சம்பளம்

Posted: 04 Nov 2013 09:37 PM PST

ரூ.950 கோடி மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்– மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகால ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரது ஜாமீன் மனுவை ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு கடந்த மாதம் 30–ந் தேதி தள்ளுபடி செய்தது. லாலுபிரசாத் தற்போது ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு படுக்கை, மின்விசிறி, நாளிதழ், டி.வி. என எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. லாலுவுக்கு ஜெயிலில் என்ன வேலை கொடுக்கலாம் என்று சிறைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். அவர் உள்ள ஜெயிலில் 30 சதவீத கைதிகள் மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் என்பதால் மற்றவர்கள் நெருங்காதபடி வேலை கொடுக்க

திருப்பதி கோவிலில் 14–ந்தேதி கைசீக துவாதசி ஆஸ்தானம்: கட்டண சேவைகள் ரத்து

Posted: 04 Nov 2013 09:35 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 65 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். மேலும் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்து நின்றனர்.

ஆந்திராவில் பஸ் கட்டணம் உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்

Posted: 04 Nov 2013 09:21 PM PST

ஆந்திராவில் தெலுங் கானா எதிர்ப்பு போராட் டம் காரணமாக 1½ மாதங்களாக பஸ்கள் ஓடாமல் இருந்தது. தற்போது போராட்டம் ஓய்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய வேளையில் பாய்லின் புயல், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெய்த கன மழையால் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.

மோடி அலை வீசுவதாக மிகைப்படுத்துகிறார்கள்: உமர் அப்துல்லா

Posted: 04 Nov 2013 09:14 PM PST

காஷ்மீர் முதல்–மந்திரி உமர் அப்துல்லா ஜம்முவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாராளுமன்ற தேர்தலை யொட்டி நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறதா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த உமர் அப்துல்லா கூறியதாவது:– வரும் தேர்தல்களில் பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் தாக்கம் எதுவும் இல்லை என்று கூறுவது தவறாக

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

Posted: 04 Nov 2013 08:42 PM PST

வட மாநில சட்டசபை தேர்தல்களம் சூடுபிடித்து வருகிறது. காங்கிரஸ் – பாரதீய ஜனதா கட்சிகள் மக்களிடம் ஓட்டுகளை பெறுவதற்காக பல்வேறு கவர்ச்சியான வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதை கைப்பற்ற பா.ஜனதாகவும், பா.ஜனதா ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் வெற்றி பெற காங்கிரசும் கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம்

நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் ‘பங்க்’குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை

Posted: 04 Nov 2013 08:03 PM PST

பெட்ரோல் பங்க்குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. அதன்படி சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய 5 பெருநகரங்களில் உள்ள குறிப்பிட்ட சில பெட்ரோல் பங்க்குகளில் இந்த திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி நேற்று

குளிர்பானத்தில் மதுகலந்து இளம் பெண் கற்பழிப்பு: தீபாவளி கொண்டாட்டத்தின்போது நண்பர்கள் வெறிச்செயல்

Posted: 04 Nov 2013 07:44 PM PST

மும்பையை அடுத்த குர்கான் பகுதியான சந்தோஷ்நகர் என்ற இடத்தில் 20 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் தீபாவளி பண்டிகையை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடினார்கள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 16 வயது பெண்ணை அவர்கள் தங்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகை கொண்டாட வருமாறு அழைப்பு விடுத்தனர்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகரில் வாலிபர் சுட்டுக்கொலை

Posted: 04 Nov 2013 07:39 PM PST

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்து கணிப்புகளை தடை செய்யக்கூடாது: பா.ஜனதா கருத்து

Posted: 04 Nov 2013 07:31 PM PST

மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இத்தகைய கருத்து கணிப்புகள் விஞ்ஞானபூர்வமானவை அல்ல என்றும், எனவே, இவற்றை தடை செய்ய வேண்டும் என்றும் தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டத்துறை செயலாளர் கே.சி.மிட்டல் கடிதம் எழுதி உள்ளார். ஆனால், கருத்து கணிப்புகளை தடை செய்யக்கூடாது என்று பா.ஜனதா கூறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி

வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் சேதம்: மனம் உடைந்த மேலும் 2 ஆந்திர விவசாயிகள் தற்கொலை

Posted: 04 Nov 2013 10:58 AM PST

ஆந்திராவில் கடந்த மாதம் பெய்த அடைமழையினால் 16 மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 6 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி நாசமடைந்தன. கடன் வாங்கி விவசாயம் செய்த பயிர்கள் வெள்ளத்தில்

பாட்னா குண்டு வெடிப்பில் பலியான தீவிரவாதியின் பிரேதம் சமூகசேவை அமைப்பிடம் ஒப்படைப்பு

Posted: 04 Nov 2013 10:43 AM PST

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடந்த 27–ந்தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது 7 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியானார்கள்

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது பற்றி பிரதமரே முடிவு செய்வார்: காங்கிரஸ் சொல்கிறது

Posted: 04 Nov 2013 09:51 AM PST

இலங்கை தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் நாட்டு தலைவர்களின் மாநாடு, 15-ந்தேதி தொடங்குகிறது. இறுதிக்கட்ட போரில், தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கும் வகையில், இம்மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளும்

இந்தியன் ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர் விமானத்தின் கண்ணாடி தரையிறங்கும் போது மீண்டும் நொறுங்கியது

Posted: 04 Nov 2013 09:30 AM PST

ட்ரீம்லைனர் விமானங்களில் ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுவதாக இந்த சம்பவமும் நடந்துள்ளது. டெல்லியிலிருந்து மெல்போர்ன் வழியாக சிட்னி வரை செல்லும் ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் விமானமான ஏஐ-311, 80 பயணிகளுடனும்

பாட்னாவில் வெடித்த குண்டுகள் போன்று ராஞ்சியில் 9 குண்டுகள் பறிமுதல்

Posted: 04 Nov 2013 08:44 AM PST

பீகார் மாநிலத் தலைநகர் பாட்னா காந்தி மைதான கூட்டத்தில், கடந்த 27-ம் தேதி மோடி பேசுவதற்கு முன்பு குண்டுகள் வெடித்தன. பாட்னாவில் 7 இடங்களில் நடந்த இந்த குண்டு வெடிப்பில் தீவிரவாதி ஒருவன் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

லடாக் பகுதியில் தரையிறக்கும் இந்திய விமானங்களை வேவுபார்க்க சீனா கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

Posted: 04 Nov 2013 07:55 AM PST

காஷ்மீர் மாநிலம் லடாக் எல்லையில் கடந்த ஏப்ரல் மாதம் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து இந்தியப்பகுதிகளை ஆக்கிரமித்தது. மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அங்கிருந்து சீன ராணுவம் வெளியேறியது.

இந்தியா-அமெரிக்கா கடற்படை கூட்டுப்பயிற்சி நாளை துவக்கம்

Posted: 04 Nov 2013 06:37 AM PST

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 'எக்சர்சைஸ் மலபார்' என்ற பெயரில் பன்னாட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™