Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இலங்கையில் 1808 பேருக்கு எயிட்ஸ்: கொழும்பில்தான் அதிகம்!

Posted: 29 Nov 2013 10:58 PM PST

கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் 69 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 159 பேருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின் இவ்விடயம் உறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது 1808 எயிட்ஸ் நோயாளர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் தாயிடம் இருந்து எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான 70 பேரும் அடங்குகின்றனர். இலங்கையில் முதல் முறையாக 1989ம் ஆண்டே எயிட்ஸ் […]

34 பேருடன் பயணிகள் விமானம் மாயம்

Posted: 29 Nov 2013 10:47 PM PST

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் தலைநகரான மபுடோவிலிருந்து அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவிற்கு நேற்று ஒரு பயணிகள் விமானம் 28 பயணிகளுடனும், 6 ஊழியர்களுடனும் புறப்பட்டது. நமீபியாவிற்கு வடக்கே பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. டிஎம் 470 என்ற எண்ணுள்ள அந்த விமானம் அதன்பின் குறிப்பிட்ட நேரப்படி அங்கோலாவிலும் தரையிறங்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த விமானம் குறித்த ஆரம்பத் தகவல்கள் போட்ஸ்வானா மற்றும் அங்கோலாவின் எல்லைக்கு அருகில் இருக்கும் வடக்கு நமீபியாவின் ருண்டு விமானநிலையத்தில் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்த திருடன்

Posted: 29 Nov 2013 10:33 PM PST

பிரான்சில் மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வைரம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பிரான்சின் கேளிஸ் நகரில் உள்ள கார்ல்ட்டன் ஹொட்டலில் கடந்த ஜீலை மாதம் வைர கண்காட்சி நடைபெற்றது. அப்போது பார்வையாளர் போன்று நுழைந்த நபர் ஒருவர், பாதுகாவலரை துப்பாக்கியால் மிரட்டி 103 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வைரத்தை திருடிச் சென்றார். இந்நிலையில் தற்போது சிசிடிவி கமெராவில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அந்த நபர் முகமூடி அணிந்திருந்த காரணத்தால், சிசிடிவி கமெராவில் முழு அடையாளமும் தெரியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் […]

பிரேசிலில் ஒஸ்கார் நைமேயர் வடிவமைத்த கட்டடம் தீக்கிரை

Posted: 29 Nov 2013 10:29 PM PST

பிரேசிலில் புகழ்பெற்ற கட்டட வடிவமைப்பாளரான ஒஸ்கார் நைமேயர் வடிவமைத்த பாரிய கட்டடம் ஒன்று தீக்கிரையாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. லத்தீன் அமெரிக்க ஞாபகார்த்த மண்டமான இது, சாவோ போலோ நகரில் அமைந்துள்ளது. தீயை கட்டுப்படுத்த முயன்ற 9 தீயணைப்பு படையினர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீக்கான காரணம் தெரியவில்லை. 20ம் நூற்றாண்டின் சிறந்த கட்டிட வடிமைப்பாளராக கருத்தப்பட்ட நைமேயர், தமது 104வது வயதில் காலமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இணைய பயன்பாட்டில் முன்னிலை வகிக்கும் சுவிடன்

Posted: 29 Nov 2013 10:21 PM PST

உலகளாவிய ரீதியில் இணையப் பயன்பாட்டில் சிறந்த நாடாக சுவிடன் தெரிவாகியுள்ளது. உலகளாவிய இணையத்தள அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் அயல்நாடான நோர்வே இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மக்கள் தம்மை ஒருங்கிணைப்பதற்கும், போராடவும், அநீதிகளைத் தட்டிக் கேட்பதற்கும் இணையம் மற்றும் சமூக இணையத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றமை ஊக்கமளிக்கும் விடயம் எனவும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 61 நாடுகள் கருத்தில் கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு முதல் முறையாக வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் சுவிடன் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பொலிசார் கண்காணித்த பெண்ணை சந்தித்த மோடி: புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு

Posted: 29 Nov 2013 09:50 PM PST

குஜராத்தில் அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின்படி கண்காணிக்கப்பட்டதாக கூறப்படும் இளம்பெண், முதல்வர் மோடியை சந்தித்த படங்கள் இணையதளத்தில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் முதல்வர் மோடிக்கு நெருக்கமான அமைச்சர் அமித் ஷா. இவர் பொலிஸ் அதிகாரி ஜிங்காலை தொடர்பு கொண்டு இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமைச்சரும், அதிகாரியும் பேசிய தொலைபேசி உரையாடல்களும் வெளியானது. இந்நிலையில் பொலிஸ் அதிகாரி சிங்கால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு குஜராத்தில் உள்ள […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ரம்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

Posted: 29 Nov 2013 09:44 PM PST

இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் எம்.பி ரம்யாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ரம்யா என்ற பெயரில் திரையுலகில் அறிமுகமான கன்னட நடிகை திவ்யா ஸ்பந்தனா, தமிழில் குத்து, பொல்லாதவன் மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் இளையவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். […]

தவறி விழுந்த செல்போனை பிடிக்க முயன்ற பெண் தவறி விழுந்து பலி

Posted: 29 Nov 2013 09:38 PM PST

மும்பையில் செல்போன் கீழே விழுந்தபோது அதை பிடிக்க முயன்ற இளம்பெண் மாடியில் இருந்து தவறி விழுந்து பலியாகியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாகூர் மாலில் சேல்ஸ் கேர்ளாக வேலை பார்ப்பவர் ராஜ்ஸ்ரீ ஜாதவ்(18). இவர் அதே பகுதியில் உள்ள ககன்கிரி குடியிருப்பில் தனது பெற்றோருடன் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு 8.45 மணி அளவில் ராஜ்ஸ்ரீ மாடியில் கைப்பேசியில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது தந்தை சந்தேஷ் என்ன எப்பொழுது […]

திரைப்படமாக உருவாகும் இரட்டைக் கொலை வழக்கு

Posted: 29 Nov 2013 09:30 PM PST

டெல்லி அருகே நொய்டாவில் கடந்த மே மாதம் 2008ம் ஆண்டு டாக்டர் ராஜேஷ் தல்வார்-நூபுர் தல்வார் ஆகியோரின் ஒரே மகளான ஆருஷி, வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யபட்டார். வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், மறுநாள் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரட்டைக் கொலை வழக்கில் பல் மருத்துவர்களான ஆருஷியின் தந்தை ராஜேஷ் மற்றும் தாயார் நுபுர் தல்வார் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது. 2012-ம் ஆண்டு […]

This posting includes an audio/video/photo media file: Download Now

கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் முதன் முறையாக ரூ. 1 கோடி வென்ற பெண்

Posted: 29 Nov 2013 09:21 PM PST

அமிதாப் பச்சன் நடத்தும் கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பிரோஸ் பாத்திமா என்ற பெண் ரூ. 1 கோடி வென்றுள்ளார். இந்தியில் கௌன் பனேகா குரோர்பதி என்ற பெயரில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசன் தற்போது நடந்து வருகிறது, இதனை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள சன்சார்பூரைச் சேர்ந்த பிரோஸ் பாத்திமா(வயது 22) கலந்து கொண்டு ரூ.1 கோடி வென்றார். இந்த […]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™