மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மராட்டியம், ஆந்திரா, கர்நாடகாவில் மத தலைவர்களை கொல்ல லஷ்கர் தீவிரவாதிகள் சதி
- தெலுங்கானா மசோதாவை இறுதி செய்வதில் குழப்பம்: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தில் தாக்கலாவது சந்தேகம்
- ஆந்திராவை பிரிக்க எதிர்ப்பு: ஜெகன்மோகன் ரெட்டி யாத்திரை தொடங்கினார்
- ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வந்த ரூ.6 கோடி மதிப்புள்ள கஞ்சா எண்ணை பறிமுதல்
- மோசமான கையெழுத்து உள்ள பொறியியல் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்பட மாட்டாது: மும்பை பல்கலைக்கழகம் அறிவிப்பு
- ஏற்காடு தேர்தலில் திமுகவினர் விதிமீறல்:தலைமை தேர்தல் கமிஷனரிடம் அதிமுக எம்.பி.க்கள் புகார்
- தெலுங்கானா விவகாரம்: மத்திய மந்திரி சபை 3-ந்தேதி கூடுகிறது
- ஆருஷி கொலை வழக்கு திரைப்படம் ஆகிறது: சிறையில் இருக்கும் பெற்றோரை சந்திக்க ஹாலிவுட் டைரக்டர் முயற்சி
- சர்ச்சைக்குரிய இளம்பெண்ணுடன் மோடி இருக்கும் படம்: செய்தி இணையதளம் வெளியிட்டது
- தெகல்கா அதிபர் தேஜ்பாலிடம் கோவா போலீசார் 1 1/2 மணிநேர விசாரணை
- ஷீலா தீட்சித் போட்டியிடும் தொகுதியில் மோடி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு
- பாலியல் புகார்: தேஜ்பாலின் இடைக்கால ஜாமின் நாளை வரை நீட்டிப்பு
- பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி: விசாரணை அறிக்கையில் தகவல்
- கெயில் எரிவாயு திட்டம்: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
- நெதர்லாந்து பல்கலைக்கழகத்துடன் கொல்கத்தா பல்கலை. கல்வி ஒப்பந்தம்
- பிஜு ராதாகிருஷ்ணனுடன் இருந்த ரகசிய தொடர்புகள்: கொல்லம் கோர்ட்டில் நடிகை ஷாலுமேனன் தகவல்
- போலீஸ் அதிகாரி ஜாமீன் மனு: சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
- உ.பி.யில் திருமண கூட்டத்தில் கார் புகுந்து 9 பேர் சாவு
- பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் தாக்கப்பட்ட வங்கி பெண் அதிகாரிக்கு உம்மன்சாண்டி ஆறுதல்
- மொபைலில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தெலுங்கு நடிகைக்கு செக்ஸ் டார்ச்சர்: வாலிபர் கைது
| மராட்டியம், ஆந்திரா, கர்நாடகாவில் மத தலைவர்களை கொல்ல லஷ்கர் தீவிரவாதிகள் சதி Posted: 29 Nov 2013 11:35 PM PST இந்தியாவில் மீண்டும் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்த பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் – இ– தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் பாதுகாப்புப் படையினர் எடுத்துள்ள பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக லஷ்கர் –இ–தொய்பா தீவிரவாதிகள் கைவரிசை காட்ட முடியாமல் உள்ளனர். இதையடுத்து இந்தியாவில் முக்கிய மத தலைவர்கள், அரசியல் |
| தெலுங்கானா மசோதாவை இறுதி செய்வதில் குழப்பம்: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தில் தாக்கலாவது சந்தேகம் Posted: 29 Nov 2013 09:09 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மாநிலத்தை பிரிப்பதில் முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும் தெலுங்கானா உருவாக்குவதில் சோனியா தீவிரமாக இருக்கிறார். அடுத்த மாதம் 6–ந்தேதி தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய |
| ஆந்திராவை பிரிக்க எதிர்ப்பு: ஜெகன்மோகன் ரெட்டி யாத்திரை தொடங்கினார் Posted: 29 Nov 2013 09:02 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தெலுங்கானா மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது அதனை தோற்கடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து முதல்– மந்திரிகளையும் அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். |
| ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வந்த ரூ.6 கோடி மதிப்புள்ள கஞ்சா எண்ணை பறிமுதல் Posted: 29 Nov 2013 09:01 PM PST கேரள மாநிலம் கோட்டயம் அடிமாலி மதுவிலக்கு போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் வந்தது. அடிமாலியில் இருந்து கோதவாடிக்கு கஞ்சா எண்ணை கடத்தப்போவதாக தெரியவந்தது. இதனையடுத்து கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கத்திப்பாறை என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 4 மணி நேர சோதனைக்குப்பின் அந்த வழியே வந்த ஜீப்பை மடக்கிப்பிடித்தனர். அதில் |
| Posted: 29 Nov 2013 07:23 PM PST மும்பை பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் பொறியியல் மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் முதல் முயற்சியாகத் திருத்தப்பட உள்ளன. பின்னர் இந்த முறை மற்ற துறைகளிலும் செயல்படுத்தப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்ததேர்வு குறித்து மாணவர்களுக்கான ஒன்பது விதிமுறைகளை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.அவற்றுள் மாணவர்களின் கையெழுத்து தெளிவாக இல்லையென்றால் அவர்களுக்கு மதிப்பெண்கள் ஏதும் வழங்கப்பட |
| ஏற்காடு தேர்தலில் திமுகவினர் விதிமீறல்:தலைமை தேர்தல் கமிஷனரிடம் அதிமுக எம்.பி.க்கள் புகார் Posted: 29 Nov 2013 07:07 PM PST அ.தி.மு.க. எம்.பி.க்கள் குழுவினர் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனரை சந்தித்து ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதாக புகார் மனு கொடுத்தனர். தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் வற்புறுத்தினார்கள். அ.தி.மு.க.வின் பாராளுமன்ற மக்களவை தலைவர் தம்பிதுரை தலைமையில் எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், ஓ.எஸ்.மணியன், ஆனந்தன், சி.சிவசாமி ஆகியோர் டெல்லியில் தலைமைத்தேர்தல் |
| தெலுங்கானா விவகாரம்: மத்திய மந்திரி சபை 3-ந்தேதி கூடுகிறது Posted: 29 Nov 2013 06:57 PM PST ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரித்து தனி மாநிலம் அமைக்க முடிவு செய்த மத்திய அரசு, புதிய மாநிலம் உருவாக்குவது தொடர்பாக மத்திய மந்திரிகளை கொண்ட சிறப்புக்குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு ஆந்திர மாநில முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி, ஆந்திர மாநில மத்திய மந்திரிகள் மற்றும் 8 அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன், தனி மாநிலம் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினர். பின்னர் இந்த குழுவினர் புதிய மாநிலம் தொடர்பான அறிக்கையை தயாரித்து மத்திய |
| ஆருஷி கொலை வழக்கு திரைப்படம் ஆகிறது: சிறையில் இருக்கும் பெற்றோரை சந்திக்க ஹாலிவுட் டைரக்டர் முயற்சி Posted: 29 Nov 2013 01:00 PM PST டெல்லி அருகே நொய்டாவில் கடந்த மே மாதம் 2008ம் ஆண்டு டாக்டர் ராஜேஷ் தல்வார்-நூபுர் தல்வார் ஆகியோரின் ஒரே மகளான ஆருஷி, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், மறுநாள் அவரது பிணமும் கண்டுபிடிக்கப்பட்டது. |
| சர்ச்சைக்குரிய இளம்பெண்ணுடன் மோடி இருக்கும் படம்: செய்தி இணையதளம் வெளியிட்டது Posted: 29 Nov 2013 11:54 AM PST குஜராத் முதல்–மந்திரியும், பா.ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் அமித் ஷா. இவர் கடந்த 2009–ம் குஜராத்தின் உள்துறை மந்திரியாக பதவி வகித்தபோது அந்த மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகளை போலீசார் மூலம் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. |
| தெகல்கா அதிபர் தேஜ்பாலிடம் கோவா போலீசார் 1 1/2 மணிநேர விசாரணை Posted: 29 Nov 2013 09:07 AM PST கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது தெகல்கா பத்திரிகை ஆசிரியர் தேஜ்பால் மீது, அந்த பத்திரிகையில் பணியாற்றிய பெண் நிருபர் பாலியல் புகார் அளித்தார். அதன்பேரில் கோவா போலீசார், கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். |
| ஷீலா தீட்சித் போட்டியிடும் தொகுதியில் மோடி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு Posted: 29 Nov 2013 08:39 AM PST புதுடெல்லி சட்டசபைத் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், அங்கு பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் ஷீலா தீட்சித் போட்டியிடும் புது டெல்லி தொகுதியில் நாளை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி மோடியை உரையாற்ற வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்காக |
| பாலியல் புகார்: தேஜ்பாலின் இடைக்கால ஜாமின் நாளை வரை நீட்டிப்பு Posted: 29 Nov 2013 05:17 AM PST கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது தெகல்கா பத்திரிகை ஆசிரியர் தேஜ்பால் மீது, அந்த பத்திரிகையில் பணியாற்றிய பெண் நிருபர் பாலியல் புகார் அளித்தார். அதன்பேரில் கோவா போலீசார், கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இன்று பிற்பகல் 3 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோவா காவல்துறை கெடு விதித்திருந்தது. ஆனால் சனிக்கிழமை வரை கால அவகாசம் கேட்டு தேஜ்பால் கடிதம் எழுதியிருந்தார். |
| பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி: விசாரணை அறிக்கையில் தகவல் Posted: 29 Nov 2013 04:40 AM PST ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் வழக்கறிஞர் கடந்த டிசம்பர் மாதம் புகார் கூறியிருந்தார். ஆனால் அந்த நீதிபதியின் பெயரை அவர் வெளியிடவில்லை. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் தொடர்பாக |
| கெயில் எரிவாயு திட்டம்: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு Posted: 29 Nov 2013 04:34 AM PST கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் வரை பூமிக்கு அடியில் குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. |
| நெதர்லாந்து பல்கலைக்கழகத்துடன் கொல்கத்தா பல்கலை. கல்வி ஒப்பந்தம் Posted: 29 Nov 2013 04:08 AM PST மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இயங்கிவரும் பிரசிடென்சி பல்கலைக்கழகம் 196 ஆண்டு கால பாரம்பரியத்தினைக் கொண்டது. கடந்த 1817 ஆம் ஆண்டு ஹிந்து கல்லூரியாகத் துவங்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம், 1855 ஆம் ஆண்டு பிரசிடென்சி கல்லூரியாகப் பெயர் மாற்றம் அடைந்தது. |
| பிஜு ராதாகிருஷ்ணனுடன் இருந்த ரகசிய தொடர்புகள்: கொல்லம் கோர்ட்டில் நடிகை ஷாலுமேனன் தகவல் Posted: 29 Nov 2013 03:34 AM PST கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இவருக்கு உதவியதாக முதல்–மந்திரி உம்மன்சாண்டியின் உதவியாளர் டென்னி ஜோப்பன், பாதுகாவலர் சலீம் மற்றும் டெலிவிஷன் நடிகை ஷாலுமேனன் ஆகியோரும் கைதானார்கள். இவர்களில் ஷாலுமேனன் நேற்று கொல்லம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் கூறியதாவது:– |
| போலீஸ் அதிகாரி ஜாமீன் மனு: சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் Posted: 29 Nov 2013 12:19 AM PST குஜராத்தில் நடந்த போலி கவுண்டரில் இஷரத் ஜகான் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குஜராத் மாநில போலீஸ் அதிகாரி ஏ.கே. அமின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே ஏ.கே. அமின், ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இதற்கு பதில் தருமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப |
| உ.பி.யில் திருமண கூட்டத்தில் கார் புகுந்து 9 பேர் சாவு Posted: 29 Nov 2013 12:17 AM PST உத்தரபிரதேச மாநிலம் மிட்டாவாள மாவட்டத்தில் குர்த் கிராமம் உள்ளது. இங்கு நடந்த ஒரு திருமண விழாவையொட்டி சாலை ஓரமாக இரவு நேரத்தில் சினிமா திரையிடப்பட்டது. |
| பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் தாக்கப்பட்ட வங்கி பெண் அதிகாரிக்கு உம்மன்சாண்டி ஆறுதல் Posted: 29 Nov 2013 12:00 AM PST பெங்களூரில் கடந்த 19–ந்தேதி வங்கி பெண் அதிகாரி ஜோதி உதய் என்பவர் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்றபோது, மர்ம மனிதனால் சரமாரியாக தாக்கப்பட்டார். அரிவாள் வெட்டு விழுந்ததில் மயங்கி விழுந்த பெண் அதிகாரி ஜோதி உதய் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.ஏ.டி.எம். மையத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் |
| மொபைலில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தெலுங்கு நடிகைக்கு செக்ஸ் டார்ச்சர்: வாலிபர் கைது Posted: 28 Nov 2013 11:50 PM PST நடிகை ஹேமா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக ஒரு வாலிபர் தொடர்ந்து மொபைல் போனில் பேசி தொல்லை கொடுத்தார். அவன் அழைப்புகளை ஹேமா கண்டு கொள்ள வில்லை. இதையடுத்து அவன் ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பி செக்ஸ் டார்ச்சர் செய்தான். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |