Tamil Star |
- விக்னேஸ்வரனுக்கு டக்ளஸ் அழைப்பு
- இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது இறந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கியது
- பிரபாகரன் குடும்பத்தை கணக்கெடுக்க முடியாது – தொகை மதிப்பீட்டுத் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
- முதலமைச்சருக்கு அனுமதி மறுப்பு
- பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து மைதானத்தில் கிரேன் உடைந்து விபத்து: 2 பேர் பலி
- இன்று வானில் நிகழப்போகும் அதிசயம்
- போர் காலத்தின் போது ஏற்பட்ட மொத்த உயிர் இழப்புகள்,உடைமை மற்றும் சொத்து இழப்புகள் தொடர்பாக பொது கணக்கெடுப்பு
- சிரியா போரில் 6 ஆயிரம் பெண்களை கற்பழித்த சிரியா ராணுவ வீரர்கள்
- மாண்டவர் மீண்டு வந்தார்
- குழந்தை மீது நடைபெறும் கற்பழிப்புத் தாக்குதலை நடித்துக்காட்ட வேண்டும் : அதிர்ச்சியைத் தோற்றுவித்த பள்ளித் தேர்வு
| விக்னேஸ்வரனுக்கு டக்ளஸ் அழைப்பு Posted: 28 Nov 2013 11:35 PM PST வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு, அமைச்சர் டக்களஸ் வேதானந்தா அழைப்பு விடுத்துள்ளார். மாவட்ட அபிவிருத்திக் குழுவில்; முதலமைச்சர் இணைந்து செயற்பட வேண்டுமென அமைச்சர் தேவானந்தா கோரியுள்ளார். இதற்கு முன்னார் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறியுடன் இணைந்து செயற்பட்டதாகவும், தற்போது முதலமைச்சருடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி பேதங்களை களைந்து மாவட்ட மற்றும் மாகாண மக்களின் நலன்களை கருத்திற் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என […] |
| இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது இறந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கியது Posted: 28 Nov 2013 11:28 PM PST விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிகட்டப் போரின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புப் பணியை இலங்கை அரசு வியாழக்கிழமை தொடங்கியது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச நெருக்குதல்களின் எதிரொலியாக, இலங்கை அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சுமார் 16,000 அதிகாரிகள், 14,000 கிராமங்களில் நாடு தழுவிய அளவில் டிசம்பர் 20 வரை இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அரசு சென்சஸ் நிறுவனம், போரின்போது வெறும் 8 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும், 6 ஆயிரத்து […] |
| பிரபாகரன் குடும்பத்தை கணக்கெடுக்க முடியாது – தொகை மதிப்பீட்டுத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் Posted: 28 Nov 2013 11:24 PM PST "போர்க்கால இழப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குடும்பத்தைக் கணக்கெடுக்க முடியாது. அவரது குடும்பத்தில் யாரும் உயிருடன் இல்லை" இவ்வாறு நேற்றுத் தெரிவித்தார் புள்ளி விபரவியல் மற்றும் தொகை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி.டபிள்யு.டி.குணவர்த்தன. போரில் ஏற்பட்ட இழப்புக்களை கணக்கெடுக்கும் நடவடிக்கை நேற்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது என்றும் அவர் கூறினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக 1983 ஆம் ஆண்டு […] |
| முதலமைச்சருக்கு அனுமதி மறுப்பு Posted: 28 Nov 2013 11:18 PM PST வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு நேற்று வியாழக்கிழமை மாலை சென்ற வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். வலிகாமம் வடக்கிலுள்ள உள்ள பொதுமக்களின் காணிகள் படைத்தரப்பால் அபகரிக்கப்பட்டு அங்குள்ள வீடுகள், கோயில்கள் மற்றும் பாடசாலைகள் ஆகியன படையினரால் உடைக்கப்படுகின்றன.இந்த நிலவரங்களை பார்வையிடுவதற்கு குறித்த பகுதிக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சென்றுள்ளார். எனினும் அவர் உள்ளே செல்ல அனுமதிக்காமல் படைத்தரப்பு அவரை திருப்பி அனுப்பியுள்ளதாக முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தெரிவித்தார்.முதலமைச்சரை மாவிட்டபுரம் பகுதியில் […] |
| பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து மைதானத்தில் கிரேன் உடைந்து விபத்து: 2 பேர் பலி Posted: 28 Nov 2013 07:26 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| இன்று வானில் நிகழப்போகும் அதிசயம் Posted: 28 Nov 2013 07:00 AM PST
படு வேகமாக சூரியனை நோக்கி போய்க் கொண்டிருக்கும் ஐசான் இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு(இந்திய நேரப்படி) சூரியனை மிக அருகே நெருங்கப் போகிறது. அது தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை, பொசுங்கிப் விடும் என்று பொதுவான கருத்து இருந்தாலும் அது தப்பிப் பிழைக்க வாய்ப்புள்ளதாகவும் சிலர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். ஐசான் வால்நட்சத்திரம் இன்று சூரியனுக்கு மிக அருகே போகும் காட்சியை நேரடியாக தொலைநோக்கிகள் மூலம் காண பல்வேறு நாடுகளில் உள்ள விண்வெளி அமைப்புகள், கோளரங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன. ஐசான் வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும் காட்சியை பகலில் பார்ப்பது நல்லதல்ல. அதாவது நேரடியாக பார்ப்பது நல்லதல்ல. அதிலும் சூரியனை நேராக பார்த்தால் கண் பார்வை பறிபோகும் வாய்ப்புள்ளதாம். விண்ணில் நிலை கொண்டுள்ள சோஹோ என்று அழைக்கப்படும் சோலார் அன்ட் ஹீலியோஸ்பெரிக் அப்சர்வேட்டரி என்ற விண்வெளி தொலைநோக்கி மூலமும், ஐசான் சூரியனை நெருங்கும் காட்சியை நேரடியாக காட்ட நாசா ஏற்பாடு செய்துள்ளது. சோஹோ மூலம் கிடைக்கும் வீடியோ காட்சிகளை நாம் காணவும் நாசா ஏற்பாடு செய்துள்ளது. சோஹாவில் பல்வேறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, அத்தனையும் சூரியனை ஆய்வு செய்வதற்காக பொருத்தப்பட்டவையாகும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 28 Nov 2013 06:53 AM PST
இலங்கையில் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொண்டார். அப்போது, தமிழர்கள் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, தமிழர்கள் போரின் போது பட்ட அவதிகளையும், கொடுமைகளையும், ராணுவ அத்துமீறல்களையும் கதறிய படி அவரிடம் எடுத்துரைத்தனர். காணாமல் போன தங்களது குடும்பத்தினர் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்றும் கண்ணீர் வடித்தனர். அதை தொடர்ந்து காமன்வெல்த் மாநாட்டில் பேசிய கேமரூன், இறுதிக்கட்ட போரின் போது நடந்த தமிழர்கள் படுகொலை குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தது. போரின் போது அத்துமீறல்கள் நடைபெற வில்லை என கூறியது. இந்த நிலையில், நேற்று லண்டன் பத்திரிகைக்கு பேட்டி அளித்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், நான் இலங்கையின் வடக்கு மாகாணம் சென்று திரும்பி ஒரு வாரம் ஆகவிட்டது. ஆனாலும், அங்கு பார்த்த காட்சிகள் இன்னும் என் மனதில் நிழலாடுகின்றன. முதலில் தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான ஒளிவு மறைவற்ற சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்த போது அடுத்த மாதத்துக்குள் சர்வதேச விசாரணை தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். விசாரணை தொடங்காவிட்டால் நாங்கள் ஐ.நா. மூலமாக அத்தகைய விசாரணையை கேட்போம் என அவரிடம் தெளிவாக கூறிவிட்டேன். இலங்கையில் மனித உரிமை விஷயத்தில் முன்னேற்றம் வேண்டும். உண்மையான கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் நிலவ வேண்டும். தமிழர் – சிங்களர் இடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்று கூறினார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிரியா போரில் 6 ஆயிரம் பெண்களை கற்பழித்த சிரியா ராணுவ வீரர்கள் Posted: 28 Nov 2013 06:40 AM PST
ராணுவம் மிகவும் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுவதாக மனித உரிமை அமைப்பு புகார் கூறி உள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளை கொடுமை படுத்துவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. சிரியா போரில் இதுவரை 6 ஆயிரம் பெண்களை ராணுவத்தினர் கற்பழித்து இருப்பதாகவும், பெண்களையும், குழந்தைகளையும் மனித கேடயமாக வைத்து ராணுவத்தினர் போரிடுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 28 Nov 2013 06:06 AM PST
இந்த நிலையில் அங்குள்ள காட்டு பகுதியில் ஆண் ஒருவருடைய பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. அது ஹைரோஸ்லாவுடைய பிணமாக இருக்கலம் என கருதி குடும்பத்தினரிடம் போலீசார் காண்பித்தனர். பிணத்தை பார்த்த குடும்பத்தினர் அது ஹைரோஸ்லாவ்தான் என்று கூறினார்கள். பின்னர் பிணத்தை வாங்கி சென்று அடக்கம் செய்தார்கள். அதில் கல்லறை எழுப்பப்பட்டது. இந்த கல்லறையில் பூஜை நிகழ்ச்சி நடந்தது. அந்த நேரத்தில் ஹைரோஸ்லாவ் அங்கு வந்தார். தனக்கு கல்லறை கட்டி பூஜை செய்வதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் கல்லறையில் ஏறி நின்று கூச்சல் போட்டார். நான் உயிரோடு இருக்கிறேன். எனக்கு ஏன் கல்லறை கட்டினீர்கள் என்று கோபத்தோடு குடும்பத்தினரிடம் கேட்டார். அவரை உயிருடன் பார்த்த ஹைரோஸ்லாவின் தாயார் மயங்கி விழுந்துவிட்டார். இப்போது கல்லறையில் புதைக்கப்பட்டவர் யார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 28 Nov 2013 05:57 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







