மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்படுவதற்காக தரையிறக்கப்படும் டிரீம்லைனர் விமானங்கள்
- தெலுங்கானா முதல்– மந்திரியாக ஜெய்பால் ரெட்டி தீவிர முயற்சி
- மணிப்பூரில் பஸ் டிரைவரை கடத்திய நாகா தீவிரவாதிகள் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்
- ராஜஸ்தானில் இன்று பிரசாரம் ஓய்கிறது: 1–ந் தேதி ஓட்டுப் பதிவு
- தெலுங்கானா மசோதாவுக்கு இறுதி வடிவம்: காங்கிரஸ் உயர்மட்ட குழுவிடம் சோனியா இன்று ஆலோசனை
- மதியம் வரை முன்ஜாமீன் அனுமதி: தேஜ்பாலை கைது செய்ய கோவா போலீஸ் வேட்டை
- அருணாசலபிரதேசத்தில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
- அரசியல் தலைவர்களுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை: தரக்குறைவாக பேசினால் நடவடிக்கை
- வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்
- மும்பை தாக்குதல் சதித்திட்ட ஆதாரங்கள், உங்களிடம்தான் உள்ளன: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
- மும்பையில் மகளை கற்பழித்து திருமணம் செய்ய முயன்றவர் கைது
- திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
- ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உலகின் பழமையான மதுபானம் இந்தியாவில் மீண்டும் அறிமுகம்
- அசாமில் சட்ட மேலவை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- தெகல்கா ஆசிரியர் வீட்டில் சேதம் ஏற்படுத்திய பாரதிய ஜனதா தலைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
- 35 வயது காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மருத்துவ செலவுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய டெல்லி அரசு
- டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை திரும்ப பெற்றார் தேஜ்பால்
- அரசியலமைப்பின் கடமைகளை நிறைவேற்ற காங்கிரஸ் தவறிவிட்டது: மோடி குற்றச்சாட்டு
- டெல்லி சட்டசபை தேர்தல்: தமிழர் பகுதியில் தமிழக காங்கிரசார் தீவிர பிரசாரம்
| தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்படுவதற்காக தரையிறக்கப்படும் டிரீம்லைனர் விமானங்கள் Posted: 28 Nov 2013 10:49 PM PST அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனமான போயிங்கின் ட்ரீம்லைனர் விமானங்கள் தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொண்டு வருகின்றன. வரும் ஞாயிறு முதல் இத்தகைய விமானங்களில் காணப்படும் தொழில்நுட்பக் கோளாறுகளையும், பழுதடைந்துள்ள சில உதிரிபாகங்களையும் மாற்றவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் ஏர்- இந்தியா நிறுவனம் தங்களிடம் உள்ள ட்ரீம்லைனர் விமானங்களைத் தரையிறக்கத் தொடங்கியுள்ளது. எங்களிடம் ஏற்கனவே 10 டிரீன்லைனர் விமானங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவற்றில் ஒவ்வொரு வகையான |
| தெலுங்கானா முதல்– மந்திரியாக ஜெய்பால் ரெட்டி தீவிர முயற்சி Posted: 28 Nov 2013 10:12 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தெலுங்கானா பிரிப்பை சுமூகமாக செய்வதற்காக மத்திய மந்திரிகள் குழு ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தி இருந்தது. மத்திய மந்திரிகள் குழு, பல்வேறு கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தகவல்களை சேகரித்தது. அதன் அடிப்படையில் அறிக்கை ஒன்றை மத்திய மந்திரிகள் குழு தயாரித்துள்ளது. அந்த அறிக்கைக்கு இன்னும் சில தினங்களில் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| மணிப்பூரில் பஸ் டிரைவரை கடத்திய நாகா தீவிரவாதிகள் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல் Posted: 28 Nov 2013 09:51 PM PST அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நாகலாந்து வழியாக மணிப்பூர் மாநிலம் இம்பால் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டு இருந்தது. நாகலாந்து மாநிலம் ஹோகிமா அருகே சென்றபோது திடீர் என்று ஒரு கார் வேகமாக வந்து பஸ்சை வழி மறித்தது. |
| ராஜஸ்தானில் இன்று பிரசாரம் ஓய்கிறது: 1–ந் தேதி ஓட்டுப் பதிவு Posted: 28 Nov 2013 09:44 PM PST ராஜஸ்தானில் இன்று பிரசாரம் ஓய்கிறது. 1–ந் தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது. 5 மாநில சட்டசபை தேர்தலில் சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த 11, 19–ந் தேதிகளில் 2 கட்டமாகவும் மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் 25–ந் தேதியும் ஓட்டுப்பதிவு நடந்தது. |
| தெலுங்கானா மசோதாவுக்கு இறுதி வடிவம்: காங்கிரஸ் உயர்மட்ட குழுவிடம் சோனியா இன்று ஆலோசனை Posted: 28 Nov 2013 09:31 PM PST ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து வருகிறது. தெலுங்கானா மாநில மசோதாவை பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்ற அரசு தீவிரமாக உள்ளது. இதையடுத்து தெலுங்கானா குறித்த வரைவு அறிக்கையை மத்திய மந்திரிகள் குழு இறுதி செய்துள்ளது. இந்த அறிக்கை சோனியாவின் பார்வைக்கு |
| மதியம் வரை முன்ஜாமீன் அனுமதி: தேஜ்பாலை கைது செய்ய கோவா போலீஸ் வேட்டை Posted: 28 Nov 2013 09:21 PM PST தெகல்கா இதழின் விழா ஒன்று இந்த மாதத் தொடக்கத்தில் கோவாவில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. அப்போது தெகல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால், தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக அந்த இதழின் பெண் நிருபர் புகார் கூறினார். கோவா போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த நட்சத்திர ஓட்டலின் கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். |
| அருணாசலபிரதேசத்தில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் Posted: 28 Nov 2013 09:19 PM PST அருணாசல பிரதேச மாநிலம் டிபாங் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று காலை 7.25 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5 ஆக பதிவானது. |
| திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது Posted: 28 Nov 2013 09:05 PM PST திருப்பதி ஏழுமலையானுக்கு புரட்டாசி மாதம் பிரமோற்சவம் நடத்துவது போல் திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை மாதம் பிரமோற்சவம் விமர்சியாக நடத்தப்படுவது உண்டு. இந்த ஆண்டுக்கான கார்த்திகை பிரமோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9 மணிக்கு கோவில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து |
| அரசியல் தலைவர்களுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை: தரக்குறைவாக பேசினால் நடவடிக்கை Posted: 28 Nov 2013 08:51 PM PST பாராளுமன்றத்துக்கு தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி தேர்தல் கமிஷனில் புகார் செய்து வருகிறார்கள். இதையடுத்து நாடெங்கும் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:– தேர்தல் நடத்தை விதிமுறைகளை எல்லா கட்சிகளும் கடைபிடிக்க |
| வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் Posted: 28 Nov 2013 06:25 PM PST பாராளுமன்றத்தில் லோக் பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து மத்திய அரசு மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் இந்த மசோதா மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே நேற்று கூறினார். |
| மும்பை தாக்குதல் சதித்திட்ட ஆதாரங்கள், உங்களிடம்தான் உள்ளன: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி Posted: 28 Nov 2013 04:20 PM PST மும்பை தாக்குதல் சதித்திட்ட ஆதாரங்கள் அனைத்தும் பாகிஸ்தானில்தான் உள்ளன. அவற்றை கோர்ட்டுக்கு தரவேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தளபதி ஜகியுர் ரகுமான் லக்வி உள்பட 7 |
| மும்பையில் மகளை கற்பழித்து திருமணம் செய்ய முயன்றவர் கைது Posted: 28 Nov 2013 02:30 PM PST மும்பை மலாடு மால்வாணியை சேர்ந்தவர் இப்ராகிம் சேக் (வயது 50). இவரது 26 வயது மகள் சமூக சேவகர் ஒருவர் உதவியுடன் மால்வாணி போலீஸ் நிலையம் சென்று தனது தந்தை மீது பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- |
| திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Posted: 28 Nov 2013 10:55 AM PST திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பு அளித்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட்ட ஒரு பெண், அந்த ஆணிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இந்த தீர்ப்பை |
| ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உலகின் பழமையான மதுபானம் இந்தியாவில் மீண்டும் அறிமுகம் Posted: 28 Nov 2013 08:28 AM PST பண்டைய இந்திய வேத நூல்களில் ஒன்றான ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேன் மது எனப்படும் பழமையான ஆயுர்வேத மதுபானம் தற்போது அதன் பிறப்பிடமான இந்தியாவில் மீண்டும் ஒரு உணவுக் கண்காட்சியில் இடம் பெற உள்ளது. சுமார் |
| அசாமில் சட்ட மேலவை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 28 Nov 2013 07:51 AM PST அசாம் மாநிலத்தில் சட்ட மேலவையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இதையடுத்து 2005 மற்றும் 2010ம் ஆண்டில் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசுக்கு |
| தெகல்கா ஆசிரியர் வீட்டில் சேதம் ஏற்படுத்திய பாரதிய ஜனதா தலைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது Posted: 28 Nov 2013 07:06 AM PST தெகல்கா நிறுவனர் தருண் தேஜ்பால் மீது அவரது நிறுவனத்தில் வேலைபார்த்த இளம் பெண் நிருபர் பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த புகாரை அலுவலக மட்டத்திலேயே பேசித் தீர்த்துக்கொள்ள உள்ளதாக தெகல்கா பத்ரிக்கையின் ஆசிரியர் சோமா சவுத்ரி தெரிவித்தார். இது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என்று தேசிய பெண்கள் |
| 35 வயது காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மருத்துவ செலவுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய டெல்லி அரசு Posted: 28 Nov 2013 06:34 AM PST யூனியன் பிரதேசமான டெல்லியில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள சட்டசபையில் 70 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களின் மருத்துவ செலவுகளுக்காக அதிகபட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல் கசிந்தது. |
| டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை திரும்ப பெற்றார் தேஜ்பால் Posted: 28 Nov 2013 03:39 AM PST பெண் நிருபருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து, தெகல்கா நிறுவனர் தருண் தேஜ்பால் மீது கோவா போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக டெல்லி வந்த கோவா போலீசார் தெகல்கா நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்திரி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை |
| அரசியலமைப்பின் கடமைகளை நிறைவேற்ற காங்கிரஸ் தவறிவிட்டது: மோடி குற்றச்சாட்டு Posted: 28 Nov 2013 03:01 AM PST ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 1-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். சிகர் என்னுமிடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ஏழை மக்களுக்காக பல சட்டங்கள் |
| டெல்லி சட்டசபை தேர்தல்: தமிழர் பகுதியில் தமிழக காங்கிரசார் தீவிர பிரசாரம் Posted: 28 Nov 2013 12:23 AM PST டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. டெல்லி மாநிலத்தில் சில தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். இந்த தொகுதிகளை குறிவைத்து தே.மு.தி.க. களம் இறங்கி உள்ளது. 11 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. அந்த தொகுதிகளில் விஜயகாந்த் பிரசாரம் செய்து வருகிறார். தமிழர்கள் வாக்குகளை சிதறாமல் தங்கள் பக்கம் திருப்புவதற்கு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |