Tamil Star |
- அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: எட்டு பேர் பலி
- சிரியாவில் 11,432 குழந்தைகள் பலி! திடுக்கிடும் தகவல்
- சாம்சங்கின் சூப்பர் டெக்னிக்! விழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்பிள் நிறுவன அதிகாரிகள்
- பூமியில் பெய்த அமில மழையால் 90 வீத உயிரினங்கள் அழிவு
- சாலையில் திடீரென தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
- சமஉரிமை வேண்டும்: டெல்லியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் போராட்டம்
- இந்திய பொதுத்தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி: பிரதமர் குற்றச்சாட்டு
- இலங்கையிடம் இந்தியா பக்குவமாக செயற்பட வேண்டும்: பி.எஸ்.ஞானதேசிகன்
- விற்பனைக்கு வருகிறது சச்சின் தங்க நாணயம்
- Yamaha அறிமுகப்படுத்தும் மோட்டார் வண்டி (வீடியோ இணைப்பு)
| அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: எட்டு பேர் பலி Posted: 24 Nov 2013 10:46 PM PST
நியூமெக்ஸிகோ மாகாணத்தில் கிழக்குப் பகுதியில் நிலவிய பனிப்பொழிவு மற்றும் உறைபனி காரணமாக ஏற்பட்ட விபத்தில் 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. டெக்சாஸ் பகுதியில் சூறாவளியினால் நிகழ்ந்த வாகன விபத்தில் சிக்கி 3 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கலிபோர்னியாவில் வியாழக்கிழமை கடும் புயலுடன் கனமழை பெய்தது. இதில் கார் மீது மரம் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் அவரது வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் பலியானார். புயலினால் துண்டிக்கப்பட்ட மின் கம்பி அருகே ஒரு சடலத்தை அதிகாரிகள் மீட்டனர். அரிசோனா மாகாணத்தில் மழை காரணமாக பள்ளிகளில் நடக்க இருந்த விளையாட்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. சாந்தா குருஸ் ஆற்றில் சடலம் ஒன்றை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அரிசோனாவில் நடைபெற இருந்த கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. டெக்ஸாசில் மோசமான வானிலை காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிரியாவில் 11,432 குழந்தைகள் பலி! திடுக்கிடும் தகவல் Posted: 24 Nov 2013 10:36 PM PST சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்தில், இதுவரையிலும் 11 ஆயிரம் குழந்தைகள் பலியானதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய போராட்டம், இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இதுவரையிலும் 11,420 குழந்தைகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை லண்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு ஆய்வு குழுவினர் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| சாம்சங்கின் சூப்பர் டெக்னிக்! விழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் Posted: 24 Nov 2013 10:28 PM PST
சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் நிறுவனம் வாதாடியது. கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சாம்சங் நிறுவனம் காப்புரிமை விதிமுறைகளை மீறி விட்டதாகவும் அதனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு 100 கோடி டொலர்(6,200 கோடி) அபராதமாக அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்துக்கு 30 லொறிகள் வந்துள்ளது. இதனை பார்த்த செக்யூரிட்டி முகவரி மாறிவந்துள்ளதாக வாதாடியுள்ளார். அதற்கு சரியான முகவரி தான் என்று கூறி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்குக்கு ஒரு போன் வந்துள்ளது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ குவான் கியூன் பேசினார், உங்களுக்கு தர வேண்டிய நஷ்ட ஈட்டைத்தான் அனுப்பியிருக்கிறோம், பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார். அத்தனை லொறிகளிலும் சில்லரை காசுகள் குவிந்திருந்தது, அனைத்தும் 5 சென்ட் நாணயங்கள். மொத்தம் 2 ஆயிரம் கோடி காசுகள். ஆப்பிள் நிறுவனத்தின் குடோன்களில் 30 டிப்பர் லாரிகளில் இருந்தும் நாணயங்கள் கொட்டப்பட்டுள்ளன. இதை எப்படி எண்ணுவது, எங்கே பாதுகாப்பாக வைப்பது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்பிள் நிறுவன அதிகாரிகள். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பூமியில் பெய்த அமில மழையால் 90 வீத உயிரினங்கள் அழிவு Posted: 24 Nov 2013 10:15 PM PST 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பொழிந்த அமில மழை மற்றும் ஓசோன் குறைவு காரணமாக மிகப்பெரிய அளவிலான அழிவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. பெர்மியான் காலத்தின் முடிவில் ஏற்பட்ட இந்த பேரழிவின் போது கடலில் வாழ்ந்த 90 சதவிகித உயிர்களும், நிலத்தில் வசித்த 70 சதவிகித உயிர்களும் இறந்துவிட்டன என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இதில் மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய மிக கொடிய மிருகங்கள் என அறியப்பட்டனவும் இறந்துவிட்டன என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் சைபீரியாவில் மிகப்பெரிய […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| சாலையில் திடீரென தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு (வீடியோ இணைப்பு) Posted: 24 Nov 2013 10:05 PM PST
அமெரிக்காவின் பால்மவுத் பகுதியை சேர்ந்த சச்சின் ஹெஜெஜி என்பவர் தனியார் வாடகை விமான நிறுவனத்திடம் இருந்து சிறியரக 'செஸ்னா' விமானத்தை வாடகைக்கு எடுத்தார். வாட்டர் வில்லியில் இருந்து போர்ட்லேண்ட் நோக்கி அவர் பறந்துக் கொண்டிருந்த போது விமான இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் இயந்திரம் இயக்கம் முற்றிலுமாக நின்றுவிட்டது. அவ்வேலையில் விமானம் கம்பர்லேண்ட் நெடுஞ்சாலைக்கு மேலே வானத்தில் பறந்துக் கொண்டிருந்தது. உடனடியாக தரையிறங்கா விட்டால் விமானம் கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் எனனபதை உணர்ந்த விமானி, வாகன போக்குவரத்து மிகுந்த போர்ட்லேண்ட் நெடுஞ்சாலையில் விமானத்தை இறக்கினார். விமானம் சாலையில் இறங்குவதை கண்ட இதர வாகன ஓட்டிகள் திகைத்துக் போய் தங்களது வாகனங்களை ஓரம்கட்டி விட்டு விமானம் செல்ல வழி விட்டனர். விமானத்தின் இயந்திரம் இயக்கம் இழந்து சில கிலோமீட்டர் தூரம் வரை ஓடி சாலை தடுப்பு சுவற்றின் மீது மோதி நின்றது. எனினும் இந்த சம்பவத்தினால் எந்தவித விபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. WHDH-TV 7News BostonThis posting includes an audio/video/photo media file: Download Now |
| சமஉரிமை வேண்டும்: டெல்லியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் போராட்டம் Posted: 24 Nov 2013 09:48 PM PST இந்திய சட்டங்களின்படி, ஓரினச்சேர்க்கை என்பது 10 ஆண்டு சிறைவாசத்திற்குரிய கடும்குற்றமாக முன்னர் கருதப்பட்டது. இந்த சட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் டெல்லி உயர்நீதி மன்றம் கடந்த 2009-ம் ஆண்டு ஓரினச்சேர்க்கையில் தவறில்லை என தீர்ப்பளித்தது. இதனையடுத்து, ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் முறை நம் நாட்டின் பல பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக ஆகி விட்டது. எனினும், சமூகத்தில் தங்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஆண் மற்றும் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், தங்களுக்கு மறுக்கப்பட்டு […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்திய பொதுத்தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி: பிரதமர் குற்றச்சாட்டு Posted: 24 Nov 2013 09:38 PM PST அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை சீர்குலைப்பதற்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதனால் பாதுகாப்புப் படையினர் கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் நாட்டில் அண்மைக் காலமாக மத ரீதியான மோதல்கள் அதிகரித்து வருகின்றமை கவலையளிப்பதாகவும் பிரமதர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். சில சமூக வலைதளங்கள், தவறாக பயன்படுத்துப்படுவதாகவும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் சமூக வலைதளங்களில் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பதியப்படும் தகவல்களை தடுப்பதற்கு நடவடிக்கை […] |
| இலங்கையிடம் இந்தியா பக்குவமாக செயற்பட வேண்டும்: பி.எஸ்.ஞானதேசிகன் Posted: 24 Nov 2013 05:18 AM PST இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காகவும், இந்திய மீனவர் பிரச்சினைக்கான தீர்வை கருத்திற்கொண்டும் இலங்கையிடம் இந்தியா பக்குவமாக செயற்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் கூறியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. கச்சதீவில் நடைபெறும் புனித அந்தோனியார் திருவிழா, மீனவர் பிரச்சினைக்கான தீர்வு போன்ற விடயங்களை கவனத்திற்கொண்டு இலங்கையை அணுக வேண்டியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் […] |
| விற்பனைக்கு வருகிறது சச்சின் தங்க நாணயம் Posted: 24 Nov 2013 05:14 AM PST கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் உருவம் பதித்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்(வயது 40), தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து விடைபெற்று விட்டார். மத்திய அரசும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்து கவுரவித்தது. இதற்கிடையே பெங்களூருவை சேர்ந்த நகை விற்பனை நிறுவனம் ஒன்று, சச்சின் உருவத்துடன் கூடிய தங்க நாணயங்களை சில்லரை விற்பனைக்காக வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக 3,000 […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Yamaha அறிமுகப்படுத்தும் மோட்டார் வண்டி (வீடியோ இணைப்பு) Posted: 24 Nov 2013 05:01 AM PST மோட்டார் வண்டி உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்களுள் ஒன்றான Yamaha ஆனது தற்போது மூன்று சில்லுகளை கொண்ட நவீன மோட்டார் வண்டி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. Yamaha Tricity எனும் பெயருடைய இந்த மோட்டார் வண்டியானது டோக்கியோவில் இடம்பெற்ற மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 125cc உடையதும் 4 ஸ்ட்ரோக் என்ஜினைக் கொண்டதுமான இந்த வண்டி அடுத்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளதுடன் இதன் பெறுமதியானது 4000 யூரோக்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




