Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ரெயிலில் 93 மாணவிகள் பாலியல் பலாத்காரம்: பீகார் வாலிபர்கள் அட்டூழியம்

Posted: 24 Nov 2013 10:42 PM PST

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த வெள்ளி, சனி 2 நாட்கள் சுற்றுச்சூழல் முகாம் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ–மாணவிகள் அங்கு சென்று அந்த முகாமில் கலந்து கொண்டனர். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் உள்ள காமல் பள்ளியைச் சேர்ந்த 93 மாணவிகளும் அந்த சுற்றுச் சூழல் முகாமில் கலந்து கொண்டனர். அவர்களை 3 ஆசிரியைகள் அழைத்துச் சென்றிருந்தனர்.

பெண் மீது தாக்குதல் எதிரொலி: பெங்களூரில் 1450 ஏ.டி.எம்.கள் மூடப்பட்டன

Posted: 24 Nov 2013 10:05 PM PST

பெஙக்ளூரில் கடந்த 19–ந்தேதி ஜோதி உதய் என்ற பெண் வங்கி அதிகாரி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த போது மர்ம மனிதனால் சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். தலையில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்ததால், உடலின் ஒரு பாகம் செயல் இழந்த நிலையில் ஜோதிஉதய் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப் பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேசம், மிசோரமில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு: பா.ஜ.க. ஹாட்ரிக் சாதனை படைக்குமா?

Posted: 24 Nov 2013 09:26 PM PST

மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் இன்று (திங்கட்கிழமை) சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில் மத்திய பிரதேச மாநில தேர்தல் நாடெங்கும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 230 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. முதல்–மந்திரியாக சிவராஜ்சிங் சவுகான் உள்ளார்.

ஒடிசா முதல்–மந்திரி நவின் பட்நாயக்குடன் ஜெகன்மோகன் சந்திப்பு

Posted: 24 Nov 2013 08:56 PM PST

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசு முயற்சிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மாநில மக்களின் கருத்தை கேட்காமல் மத்திய– மாநில காங்கிரஸ் அரசு ஒருதலை பட்சமாக முடிவு எடுப்பதாக அவர் குற்றம் சாட்டி வருகிறார். பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யும்போது அதனை எதிர்க்க அவர் முடிவு செய்துள்ளார். தனது போராட்டத்துக்கு தேசிய

கேரளாவில் கனமழை: இடிதாக்கி வாலிபர் பலி

Posted: 24 Nov 2013 08:32 PM PST

கேரள மாநிலம் திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரை, சிறையின்கீழ், விதுரை, பூவார், கோவளம் போன்ற பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. பலத்த இடி, மின்னலுடன் சூறாவளி காற்றும் வீசியது. விதுரையைச் சேர்ந்த அஜின் (வயது 27) என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் பொன்முடியாறு

ஓய்வு பெற்ற உடனேயே அரசு உயர் அதிகாரிகள், அரசியல் கட்சியில் சேர தடை விதியுங்கள்: தேர்தல் கமிஷன் வலியுறுத்தல்

Posted: 24 Nov 2013 08:16 PM PST

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உயர் அதிகாரிகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், குறைந்தது ஓராண்டு காலம் தனியார் துறையில் பணியில் சேருவதற்கு தடை விதித்து அரசு பிறப்பித்துள்ள விதி, நடைமுறையில் உள்ளது. ஆனால் அவர்கள் அரசியலில் குதிப்பதற்கு தடை இல்லை. இதற்கு தடை விதிக்க வேண்டும், அதற்கான விதிமு

பெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன

Posted: 24 Nov 2013 07:20 PM PST

பெங்களூர்-நிஜாமுதீன் இடையே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று அந்த ரெயிலை சுத்தப்படுத்த ஊழியர்கள் முடிவு செய்தனர். இதற்காக பிற்பகல் 3.15 மணியவில், அந்த ரெயிலை பெங்களூர் சிட்டி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள யார்டு பகுதிக்கு கொண்டு சென்றனர். ரெயில்வே குடியிருப்புபகுதியை ஒட்டியுள்ள காம்பவுண்டு சுவர் அருகே தண்டவாளத்தில் அந்த ரெயில் மெதுவாக பின்னோக்கி வந்து

காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ள கட்சிகள் பா.ஜனதா அணியில் சேர வாய்ப்பு: நிதின் கட்காரி

Posted: 24 Nov 2013 07:11 PM PST

பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இளம்பெண் வேவு சர்ச்சை விவகாரத்தில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. தங்கள் மீது குற்றம் சாட்டுவோரின் நடத்தைமீது புகார் கூறி அரசியல் நடத்துவது காங்கிரசின் விளையாட்டு ஆகி விட்டது.

சமஉரிமை கேட்டு டெல்லியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் நடத்திய பேரணி

Posted: 24 Nov 2013 04:25 PM PST

இந்திய சட்டங்களின்படி, ஓரினச்சேர்க்கை என்பது 10 ஆண்டு சிறைவாசத்திற்குரிய கடும்குற்றமாக முன்னர் கருதப்பட்டது. இந்த சட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் டெல்லி உயர்நீதி மன்றம் கடந்த 2009-ம் ஆண்டு ஓரினச்சேர்க்கையில் தவறில்லை என

பணம் கேட்டு கடத்தப்பட்ட பிரெஞ்சுக்காரரை போலீசார் மீட்டனர்: 3 பேர் கைது

Posted: 24 Nov 2013 04:12 PM PST

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அந்தோணி லியோனிடட் என்பவர் சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அவரை சிலர் கடத்தி சென்றனர். பிரான்சில் உள்ள அவரது குடும்பத்தாரிடட்

முதல் மந்திரியின் மனைவிக்கு ரூ.3000 வறட்சி நிவாரணம்

Posted: 24 Nov 2013 02:26 PM PST

மராட்டிய மாநிலத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் பல மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவியது. பாசனத்திற்கு போதுமான நீரின்றி பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர்கள் காய்ந்து கருகின.

மதவாத சக்திகள் மீண்டும் தலையெடுப்பதை அனுமதிக்க முடியாது: முலாயம் சிங் யாதவ் திட்டவட்டம்

Posted: 24 Nov 2013 02:08 PM PST

மதவாத சக்திகள் மீண்டும் தலையெடுப்பதை அனுமதிக்க மாட்டோம் என சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தரபிரதே மாநில முன்னாள் முதல் மந்திரியுமான முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.

பிடி வாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும்: தலைமறைவாக இருக்கும் ஆசாராம் பாபுவின் மகன் ஐகோர்ட்டில் மனு

Posted: 24 Nov 2013 11:28 AM PST

வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற சாமியார் ஆசாராம் பாபுவுக்கு பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் படித்து வரும் ஒரு பள்ளி மாணவி, சமீபத்தில் ஆசாராம் பாபு மீது பாலியல் புகார் கூறினார்.

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த 22 சிங்கள மீனவர்கள் கைது - 4 படகுகள் பறிமுதல்

Posted: 24 Nov 2013 09:43 AM PST

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி தமிழக மீனவர்கள் பலரை இலங்கை கடலோர காவல் படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி வாக்காளர்களுக்கு 'பண பட்டுவாடா': போலீசில் புகார்

Posted: 24 Nov 2013 09:31 AM PST

டெல்லி சட்டசபைக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

3 தொகுதி வாக்காளர் பட்டியலில் அரவிந்த் கெஜ்ரிவால் பெயர்: தேர்தல் கமிஷனிடம் புகார்

Posted: 24 Nov 2013 09:13 AM PST

டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். டிசம்பர் 4ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் டெல்லி தேர்தல் களம் சூடுபிடித்து அனல் பறக்கும் உச்சகட்ட தேர்தல் பிரசாரம்

பெங்களூர் ஏ.டி.எம். குற்றவாளி: ஆந்திர ஏ.டி.எம். ஒன்றிற்கு வந்ததாக தகவல்

Posted: 24 Nov 2013 08:27 AM PST

பெங்களூர் மிஷன் சாலையில் உள்ள ஏ.டி.எம். மில் கடந்த 19-ம் தேதி காலை பணம் எடுக்க சென்ற கார்பரேசன் வங்கியின் மேலாளர் ஜோதி உதய், அரிவாளால் கடுமையாக தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டார். ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை மூடிவிட்டு கொள்ளையடித்து சென்ற அந்த மர்ம மனிதனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

மத்திய அரசிடமிருந்து உயர்கல்வித் திட்டத்திற்காக தலா 120 கோடி பெறும் 12 மாநிலங்கள்

Posted: 24 Nov 2013 06:41 AM PST

இந்திய அரசு அடுத்த எட்டு வருடங்களில் ராஷ்ட்ரிய உச்சதர சிக்ஷா அபியான் (ரூசா) என்ற திட்டத்தின்கீழ் உயர்கல்வித்துறைக்காக 98,983 கோடி செலவிடத் திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் அறிவியல் பூங்காகளை அமைக்கவும், புதுரகத் தொழில்நுட்பங்களுக்கான வடிவமைப்புகளை நிறுவவும் இந்தத் திட்டத்தின்கீழ் நிதி ஆதரவு அளிக்க அரசு முடிவு

காங்கிரசை விட வேறு எந்த கட்சியும் அதிக விஷத்தன்மையுடையது அல்ல: மோடி பதிலடி

Posted: 24 Nov 2013 04:21 AM PST

ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. நேற்று ராஜஸ்தானில் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பாரதிய ஜனதா கட்சி விஷமிகளை கொண்ட கட்சி என்று தாக்கி பேசினார். இந்நிலையில் இன்று ராஜஸ்தான் மாநிலம் பன்சுவாரா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதா தலைவர் நரேந்திர மோடி பேசினார். அப்போது சோனியாவிற்கு பதிலளித்து அவர்

உம்மன்சாண்டி மீது கல் வீசியவர் கைது

Posted: 24 Nov 2013 01:34 AM PST

கேரளாவில் சோலார் பேனல் மோசடிக்கு பொறுப்பேற்று முதல்–மந்திரி உம்மன் சாண்டி பதவி விலகக்கோரி கம்யூனிஸ்டு கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் கண்ணூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உம்மன்சாண்டி கலந்து கொள்ள வந்தபோது, கம்யூனிஸ்டு கட்சியினர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™