Tamil Star |
- வேட்புமனுவில் திருமண விவகாரம்: மோடி எஸ்கேப்
- பெல்ஜியம் இளவரசி இன்று இந்தியா வருகை
- அரசாங்கத்திற்கு எதிரானவர்களை மட்டுமே கமரூன் சந்தித்தார் – சந்திரசிறி
- இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக வழக்கு?
- ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை கடும் சவால்களை எதிர்நோக்க நேரிடும்
- புலனாய்வாளர் அடாவடியை வடக்கில் உடன் நிறுத்துங்கள்; மன்னார் ஆயர்
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகின்றதா ?
- நடிகரும் கவிஞருமான ஆடுகளம் ஜெயபாலன் வவுனியாவில் கைது
- துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்க வேண்டும் – ப. சிதம்பரம்
- லைக்கா மொபைல்காரர்களுக்கும் ராஜபக்சே குடும்பத்துக்கும் என்ன தொடர்பு?
| வேட்புமனுவில் திருமண விவகாரம்: மோடி எஸ்கேப் Posted: 22 Nov 2013 10:26 PM PST குஜராத் சட்டசபை தேர்தலில் நரேந்திர மோடி தாக்கல் செய்த வேட்புமனுவில் தமது திருமணம் தொடர்பான இடத்தில் எதுவும் பதிவு செய்யாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. 2012ம் ஆண்டு குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது வேட்புமனுவை தாக்கல் செய்த நரேந்திர மோடி, திருமணம் தொடர்பான இடத்தில் ஆம் என்றோ இல்லையோ என்று பதிவு செய்யவில்லை. அந்த இடத்தில் எதுவும் நிரப்பாமல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதனால் இந்த வேட்புமனுவை ஏற்ற தேர்தல் […] |
| பெல்ஜியம் இளவரசி இன்று இந்தியா வருகை Posted: 22 Nov 2013 10:23 PM PST இந்தியா – பெல்ஜியம் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்தும் நோக்கில் பெல்ஜியம் இளவரசி அஸ்ட்ரிட் இன்று புதுடெல்லி வருகிறார். இளவரசியுடன் பெல்ஜியத்தில் உள்ள 10 பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் சுமார் 300 தொழிலதிபர்கள் வருகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங், மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேசும் இளவரசி தலைமையிலான பெல்ஜியம் குழுவினர் மும்பை மற்றும் சென்னை நகரங்களுக்கும் சென்று பிரபல தொழிலதிபர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். கடந்த (2012) […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| அரசாங்கத்திற்கு எதிரானவர்களை மட்டுமே கமரூன் சந்தித்தார் – சந்திரசிறி Posted: 22 Nov 2013 09:46 PM PST அரசாங்கத்திற்கு எதிரான தரப்பினரை மட்டுமே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் சந்தித்தார் என வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். குறிப்பாக யாழ்ப்hணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஒரு அரசாங்க அதிகாரியையேனும் கமரூன் சந்திக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட தரப்பினரை மட்டுமே கமரூன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கின் அபிவிருத்தி குறித்து அறிந்து கொள்ள கமரூன் மெய்யாகவே விரும்பியிருந்தால் குறைந்தபட்சம் ஒரு அரசாங்க அதிகரியையேனும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக வழக்கு? Posted: 22 Nov 2013 09:33 PM PST பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க ஆகியோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராணுவப் படையைச் சேர்ந்தவர்களே இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். யுத்தத்தின் போது உடல் உறுப்புக்களை இழந்த அல்லது ஊனமுற்ற படைவீரர்களினால் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. யுத்தத்தில் ஈடுபட்ட போது ஊனமுற்ற தமக்கு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நட்டஈடோ அல்லது உதவு தொகையோ இதுவரையில் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து […] |
| ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை கடும் சவால்களை எதிர்நோக்க நேரிடும் Posted: 22 Nov 2013 09:28 PM PST ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை கடும் சவால்களை எதிர்நோக்க நேரிடும் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது, எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா மீளவும் உறுப்புரிமை பெற்றுக்கொண்டுள்ளதுடன், பிரித்தானியா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்பில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. மனித உரிமை மீறல்கள் […] |
| புலனாய்வாளர் அடாவடியை வடக்கில் உடன் நிறுத்துங்கள்; மன்னார் ஆயர் Posted: 22 Nov 2013 09:22 PM PST வடக்கில் இராணுவப் புலனாய்வாளர்களின் அடாவடியை உடன் நிறுத்தி அங்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசிடம் மன்னார் ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு யோசப் வேண்டுகோள் விடுத்தார். மனிதாபிமானப் பணியாளர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களைக் கண்டித்து மன்னாரில் நேற்று நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காணாமல்போன உறவுகளைத் தேடி அவர்களின் குடும்பத்தினர் நடத்தும் போராட்டங்களில் முன்னின்று செயற்படும் மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை என்பவருடைய வீட்டிற்கு […] |
| ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகின்றதா ? Posted: 22 Nov 2013 09:18 PM PST ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகின்றதா என்பது குறித்து இலங்கை பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர். அமெரிக்க பாதுகாப்பு முகவர் நிறுவனம், இலங்கை ஜனாதிபதியின் தொலைபேசியை ஒட்டுக் கேட்கின்றார்களா என்பது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சீனாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வரும் இலங்கை தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது. ஜனாதிபதி மஹிந்த, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 35 நாடுகளின் அரச தலைவர்களது தொலைபேசி உரையாடல் ஒட்டுக் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| நடிகரும் கவிஞருமான ஆடுகளம் ஜெயபாலன் வவுனியாவில் கைது Posted: 22 Nov 2013 09:00 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்க வேண்டும் – ப. சிதம்பரம் Posted: 22 Nov 2013 07:59 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| லைக்கா மொபைல்காரர்களுக்கும் ராஜபக்சே குடும்பத்துக்கும் என்ன தொடர்பு? Posted: 22 Nov 2013 08:42 AM PST
இது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இலங்கை அரசு மற்றும் அதன் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக அடுத்தடுத்து சவுக்கைச் சுழற்றி வருகிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன். யாழ்ப்பாண விஜயம், தமிழர்கள்பால் பரிவு, போர்க்குற்ற விசாரணை கோரல், ராஜபக்சேயை இம்மியளவுக்கும் நம்ப முடியாது என பகிரங்கமாக அறிவித்தது என கேமரூனின் ஒவ்வொரு நடவடிக்கையும், காயம்பட்ட தமிழர் மனதுக்கு ரொம்பவே ஆறுதலைத் தந்து வருகிறது. தமிழர்கள் தங்கள் பிரதமர் என இப்போது கொண்டாடி வருவது டேவிட் கேமரூனைத்தான்! அவர்களின் நம்பிக்கையை உயர்த்தும் விதமாக நேற்று இரு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் டேவிட் கேமரூன். ஒன்று, ராஜபக்சே அரசின் போர்க்குற்ற விசாரணைகளை ஏற்க முடியாது என்பது. அடுத்து ராஜபக்சேயை அலற வைத்திருக்கும் அதி முக்கியமான உத்தரவு. ராஜபக்சே குடும்பத்தினருக்கும், லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நிறுவனமான லைக்கா மொபைல்ஸ் உடனான தொடர்புகளை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். கேமரூனின் கட்சிக்கு 420000 பவுண்டுகள் இந்த லைக்கா மொபைல் நிறுவனம் மூலம் வந்துள்ளது. லைக்கா மொபைலை நடத்தும் சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கைத் தமிழர். ராஜபக்சேவுக்கு நெருக்கானவர் என்றும், அதனால்தான் அந்த நிறுவனம் கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக நியமிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து எப்படி அவ்வளவு பணத்தை ஆளுங்கட்சி பெறலாம் என ஆளுங்கட்சி எம்பி டாம் பென்கின்சோப் கேமரூனுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் லைக்காமொபைல் நிறுவனம் பிரிட்டனில் பெரும் அளவில் வரிமோசடியில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், இது குறித்த முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் கேமரூன். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




