Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய தொழிற் கட்சி கோரிக்கை

Posted: 02 Nov 2013 10:25 PM PDT

இலங்கையில் இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியாவின் தொழிற் கட்சியின் தலைவர் மிலிபேண்ட் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மாத நடுப் பகுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும், அவருக்கும் இடையில் லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை கூறினார். இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்கு […]

பொதுநலவாய ஆரம்ப நிகழ்வுக்கு மாத்திரம் 50 மில்லியன் ரூபாய் செலவு

Posted: 02 Nov 2013 10:09 PM PDT

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி பொதுநலவாய நாடுகளின் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வுக்கு மாத்திரம் இலங்கை அரசாங்கம் 50 மில்லியன் ரூபாய்களை செலவிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர, எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் பத்தரமுல்ல என்ற இடத்தில் நான்கு நாட்களாக களியாட்ட நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. இதற்கும் புறம்பாக 50 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் 2013 ஆம் ஆண்டின் பொதுநலவாய அமர்வு நிகழ்வுகள் எதிர்வரும் 10 […]

இந்தியாவின் திட்டத்தை நிராகரித்தது சிறிலங்கா

Posted: 02 Nov 2013 10:00 PM PDT

தமிழ்நாடு மீனவர்களை வாரத்தில் ஒருநாள் சிறிலங்கா கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பாக, இந்தியா முன்வைத்த திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்து விட்டது. சிறிலங்கா கடற்றொழில் அமைச்சு அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, இந்தியத் தூதரக அதிகாரிகளால் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது. புதுடெல்லியின் இந்தத் திட்டம் குறித்து, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவோ, இந்தியத் தூதரக அதிகாரியோ கருத்து வெளியிட மறுத்து விட்டனர். தற்போது, தமிழ்நாட்டு மீனவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழைந்து […]

நாம் நேசக் கரத்தை நீட்டியுள்ளோம் முடிவெடுக்க வேண்டியது அரசுதான்: சம்பந்தன்

Posted: 02 Nov 2013 09:48 PM PDT

வட மாகாண சபைத்தேர்தலின் பின் நாங்கள் நல்ல சமிஞ்ஞையை அரசாங்கத்துக்கு காட்டியுள்ளோம். நேசக்கரத்தை நீட்டியுள்ளோம். முடிவு எடுக்க வேண்டியது இனி அரசாங்கமே. இருந்த போதிலும் அண்மைக் காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலைமை உண்மையான விசுவாசமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் அளித்த விசேட பேட்டியில் தொடர்ந்து கூறியதாவது, மக்களுடைய ஜனநாயக தீர்வை மதித்து நடக்க […]

வடக்கே செல்ல எந்த நாடும் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை

Posted: 02 Nov 2013 09:41 PM PDT

கொமன்வெல்த் மாநாட்டுக்கு வரும் தமது நாட்டுக் குழுவினர், வடக்குப் பகுதிக்குச் செல்ல விரும்புவதாக இதுவரை எந்த நாடும் கோரிக்கை விடுக்கவில்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, "கொமன்வெல்த் மாநாட்டுக்கு வரும் தமது நாட்டின் தலைவர் அல்லது உயர்நிலைப் பிரதிநிதிகள், வடபகுதிக்குச் செல்ல விரும்புவதாக எந்தவொரு நாடும் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை. ஆனால் அவர்கள் அத்தகைய கோரிக்கையை முன்வைப்பார்களேயானால், அதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

தலைவரை கொன்றவர்களை பழிவாங்குவோம்

Posted: 02 Nov 2013 09:19 PM PDT

பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின பகுதியில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில், தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹக்கீமுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டார். அவனுடன் அப்துல்லா, தாரிக் மெஹ்சூத் மற்றும் ஹக்கீமுல்லா மெஹ்சூத்தின் மெய்காப்பாளன் ஆகியோரும் கொல்லப்பட்டனர். தங்கள் தலைவனை கொன்றதால் கடும் ஆத்திரமடைந்துள்ள தலிபான் இயக்கம், இதற்கு பழிவாங்குவதாக மிரட்டல் விடுத்துள்ளது. "முன்னெப்போதும் இல்லாத வகையில் எங்கள் பழிவாங்கும் நடவடிக்கை இருக்கும். ஆளில்லா விமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு முழு உடந்தையாக இருக்கும் என்று நாங்கள் […]

அமெரிக்காவுக்காக உளவு பார்க்கும் அவுஸ்திரேலியா

Posted: 02 Nov 2013 09:11 PM PDT

australian_flag_3

australian_flag_3அவுஸ்திரேலியா அமெரிக்காவின் சர்ர்பில் ஆசிய நாடுகளில் உளவுப் பணியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் உளவுப் பணிகளை மேற்கொள்வதற்கான களமாக அந்தந்த நாடுகளுக்கான அவுஸ்திரேலிய தூதரகங்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிக்குமாறு சீனா அமெரிக்காவிடம் கோரியுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய தூதுவரை இந்தோனேஷிய அதிகாரிகள் அழைத்து இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கோரியுள்ளனர்.

அமெரிக்காவின் புலனாய்வு முகவர் நிறுவனம் பற்றி அண்மையில் அமெரிக்க சீ.ஐ.ஏ உளவுப் பிரிவின் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டன் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

உலக உளவுப் பணிகளுக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலிய தூதரகங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தியா, இந்தோனேஷியா, சீனா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இவ்வாறு உளவு பார்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தூதரகங்கள் உயர்ஸ்தானிகராலயங்களில் பணியாற்றி வருவோருக்கே தெரியாத வகையில் உளவாளிகளை கடமையில் அமர்த்தி தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் டிஜிட்டல் கரன்சிக்கான ஏ.டி.எம். மையம் ஆரம்பம்

Posted: 02 Nov 2013 08:48 PM PDT

atm

atmஉலகின் முதலாவது டிஜிட்டல் கரன்சிக்கான ஏ.டி.எம். மையம் கனடாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கரன்சி என்பது, நாம் செலுத்தும் பணத்தின் மதிப்பிற்கேற்ப ஒரு ஏ.டி.எம். அட்டை வெளிவரும் அதன் மதிப்பைக் கூட்ட, பணத்தை மீண்டும் செலுத்துவதன் மூலம் அட்டையை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள், தங்களுடைய ஸ்மார்ட் போன் மூலமும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

கடந்த 2009ல் சடோஷி நாகாமோட்டோ என்பவரால், "பிட்காயின்' எனப்படும் டிஜிட்டல் கரன்சி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அதிகாரப்பூர்வ ஏ.டி.எம். மையம், கனடா தலைநகர் வான்கூவரில் உள்ள ஒரு காபி ஷாப்பில் துவக்கப்பட்டுள்ளது.

இந்த ஏ.டி.எம். இயந்திரத்தில், உள்ளூர் பணத்தை செலுத்தினால், அதன் மதிப்பிற்கு ஏற்ற டிஜிட்டல் கரன்சி வெளிவரும். கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அட்டையைக் கொண்டு உள்ளூரில், காபி முதல் நிலம் வாங்குவது வரையிலான, 15 வர்த்தகங்களை செய்ய முடியும்.

கனடாவில், நான்கு இடங்களில் துவக்கப்பட்ட ஏ.டி.எம்., மையங்களில் அதன் செயல்பாட்டை அறிந்து கொள்ளவும், தங்களுடைய பணத்தை மாற்றிக் கொள்ளவும், உள்ளூர் மக்கள் குவிந்தனர்.

அமெரிக்கா, ஜெர்மனி, அர்ஜென்டினா போன்ற நாடுகளில் இந்த டிஜிட்டல் கரன்சியைக் கொண்டு, "வேர்டுபிரஸ்' உள்ளிட்ட இணையதள நிறுவனங்களில் பொருட்களை வாங்கவும், விற்கவும் முடியும்.

இந்த பண பரிவர்த்தனைக்கு, வாடிக்கையாளர்கள், தங்கள் உள்ளங்கையை ஏ.டி.எம். இயந்திரத்தில் வைத்து, ஸ்கேன் செய்ய வேண்டும். ஏ.டி.எம்., கார்டு இல்லாதவர்களும், இந்த டிஜிட்டல் கரன்சியை வைத்து பணத்தை பெறுவதற்கும், செலுத்துவதற்கும் பயன்படுத்த முடியும்.

வான்கூவரிலுள்ள பிட்காயினெக்ஸ் நிறுவனமும், நெவாடாவில் உள்ள "ரோபோகாயின்' நிறுவனமும் இந்த ஏ.டி.எம். மையங்களை நிர்வகிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிமுக உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது ஊடுறுவல்

Posted: 02 Nov 2013 08:39 PM PDT

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உத்தியோகபூர்வ இணையளத்தளம் மீது ஊடுறுவல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் பாகிஸ்தானிலிருந்து செயற்படும் குழு ஒன்றினால் ஊடுறுவப்பட்டு தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்டை ஓட்டின் படம் ஒன்றை இணையத்தளத்தில் பொறித்துள்ளதுடன் பாகிஸ்தானின் தேசியக் கொடியையும் இணைத்துள்ளனர். அத்துடன் பாகிஸ்தானுடன் சம்பந்தப்பட்ட சில வாசகங்களையும் அதில் இணைத்துக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக இணையத்தளத்தின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தமிழகத்தின் முக்கிய கட்சிகளுள் ஒன்றான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், முதலமைச்சர் ஜெயலலிதாவின் கட்சி […]

சஹாரா பாலைவனத்தில் 92 பேர் இறப்பு : அகதிகள் முகாமை மூட நைகர் அரசு உத்தரவு

Posted: 02 Nov 2013 05:46 PM PDT

photo_verybig_101947

photo_verybig_101947மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் வறுமையில் வாடும் மக்கள் ஆண்டுதோறும் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபுக எண்ணி தங்கள் பயணத்தை மேற்கொள்ளுகின்றனர். இந்தப் பயணத்தில் இவர்கள் வடக்கு நைகர் பகுதி அமைந்துள்ள சஹாரா பாலைவனத்தைக் கடந்து அல்ஜீரியா அல்லது லிபியா நாட்டை அடைந்து அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவேண்டும்.

இவ்வாறு இரண்டு லாரிகளில் கடந்த அக்டோபர் மாதம் நூற்றுக்கணக்கான மக்கள் சஹாரா பாலைவனத்தைக் கடந்து செல்ல முற்பட்டுள்ளனர். அந்த முயற்சியில் இவர்கள் சென்ற லாரிகள் பழுதடைந்து வழியில் நின்றுவிட்டதால் பாலைவனத்தில் இறங்கி நடக்க முற்பட்ட மக்கள் வழியிலேயே தண்ணீர் வறட்சியினால் இறக்க நேரிட்டது.

இவ்வாறு இறந்து சிதைந்து கிடந்த 52 குழந்தைகள், 33 பெண்கள் மற்றும் 7 ஆண்களின் உடல்களை கடந்த புதன்கிழமை அன்று நைகர் அரசு கண்டுபிடித்தது. இதன் விளைவாக வடக்கு நைஜீரியாவின் அகடெஸ் நகரில் உள்ள கெட்டோஸ் எனப்படும் அகதிகள் முகாமை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.

மனிதக் கடத்தலில் ஈடுபடும் வலைத்தளங்களின் குற்றவியல் நடவடிக்கைகளே இந்தத் துயர சம்பவத்திற்குக் காரணம் என்று அறிவித்துள்ள அரசு இதற்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவிப்பு செய்துள்ளது.

நைகரின் வடக்குப் பகுதியில் இருந்த வந்த பெண் ஒருவரே இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் என்று தெரிய வந்ததை முன்னிட்டு பாலைவன நகரமான தமன்ரசெட்டில் கைது செய்யப்பட்ட அவர் போலீஸ் காவலில் உள்ளார்.

நைகரின் தெற்குப் பகுதியில் உள்ள கன்ட்சே மாவட்டத்திலிருந்து வந்தவர்களில் பெரும்பான்மையானோர் இறந்துள்ளனர். எனவே அந்நாட்டின் பிரதமரான பிரிகி ரபினி அம்மாவட்டத்திற்கு சென்று இந்தத் துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் சார்பாக வருத்தத்தைத் தெரிவிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று நாட்களுக்கு அரசு துக்கம் அனுஷ்டிக்கும் என்றும் அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™