மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மும்பை அருகே தண்டவாளத்தில் வேலை பார்த்த 4 ஊழியர்கள் ரெயில் மோதி பலி
- மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: திக்விஜய்சிங் மகன் போட்டி
- ஆந்திராவில் ரெயிலில் தீ பிடித்ததாக வதந்தி: பயந்து கீழே குதித்த 10 பயணிகள் பலி
- டெல்லியில் ஜவுளி தொழிற்சாலையில் தீ விபத்து: 6 பேர் பலி
- மிசோரம் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்கள் பெயரை அறிவித்தது காங்கிரஸ்
- பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒடிசா, ஆந்திர பயணம் ரத்து
- ஆந்திராவில் முதல்வர் அலுவலகம் முன்பு தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
- பாட்னா தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்கள் குடும்பத்துக்கு மோடி நேரில் ஆறுதல்
- உ.பி.: லாரி டிரைவர், கிளீனரைக் கொன்று வெங்காயம் ஏற்றி வந்த லாரியை கடத்திய கும்பல்
| மும்பை அருகே தண்டவாளத்தில் வேலை பார்த்த 4 ஊழியர்கள் ரெயில் மோதி பலி Posted: 02 Nov 2013 11:13 PM PDT மும்பை- கோலாபூர் விரைவு ரெயில் இன்று காலை 8.40-க்கு மும்பையில் இருந்து புறப்பட்டுச் சென்றது. காலை 9.35 மணியளவில் அந்த ரெயில் கல்யாண் என்ற ரெயில் நிலையம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் தண்டவாளத்தில் 4 ஊழியர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். வேகமாக வந்த ரெயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். |
| மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: திக்விஜய்சிங் மகன் போட்டி Posted: 02 Nov 2013 11:10 PM PDT மத்திய பிரதேச மாநில முன்னாள் மந்திரியாக இருந்தவர் திக்விஜய்சிங். காங்கிரஸ் மூத்த தலைவரான இவர் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கிப் பேசி சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து இவரது மகனும் அரசியலில் குதித்தார். அவர் மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் 115 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. அதல் திக்வஜய்சிங் மகன் ஜெயவர்தன்சிங் |
| ஆந்திராவில் ரெயிலில் தீ பிடித்ததாக வதந்தி: பயந்து கீழே குதித்த 10 பயணிகள் பலி Posted: 02 Nov 2013 10:56 PM PDT இந்தியாவின் ஸ்டீல் நகரம் என்றழைக்கப்படும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பொகாரோவுக்கு கேரள மாநிலம் ஆலப்புழையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. 'தன்பாத் எக்ஸ்பிரஸ்' (நம்பர் 13352) என்று அழைக்கப்படும் அந்த ரெயில் ஆலப்புழையில் இருந்து சென்னை வந்து பிறகு ஆந்திரா, ஒடிசா வழியாக ஜார்க்கண்ட்டுக்கு செல்லும். நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு அந்த ரெயில் ஆலப்புழையில் இருந்து புறப்பட்டது. அன்றிரவு சுமார் 10.30 மணிக்கு அந்த ரெயில் சென்னை சென்டிரல் நிலையத்துக்கு வந்தது. சென்னையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த ரெயில் தன்பாத் நோக்கிப் புறப்பட்டது. நேற்று பகலில் ஆந்திர மாநிலம் நெல்லூர், ஓங்கோல், |
| டெல்லியில் ஜவுளி தொழிற்சாலையில் தீ விபத்து: 6 பேர் பலி Posted: 02 Nov 2013 09:58 PM PDT மத்திய டெல்லி நியூ ரஞ்சித் நகர் பகுதியில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலை 2–வது மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நேற்று மாலை 5.50 மணி அளவில் தொழிற்சாலையில் வேலை நடந்து கொண்டு இருந்த |
| மிசோரம் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்கள் பெயரை அறிவித்தது காங்கிரஸ் Posted: 02 Nov 2013 08:16 AM PDT மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் |
| பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒடிசா, ஆந்திர பயணம் ரத்து Posted: 02 Nov 2013 07:16 AM PDT கடந்த 12–ந்தேதி, ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை 'பைலின்' புயல் தாக்கி, பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. இரு மாநிலங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஹெலிகாப்டரில் |
| ஆந்திராவில் முதல்வர் அலுவலகம் முன்பு தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் Posted: 02 Nov 2013 06:10 AM PDT ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் முதல்வரின் முகாம் அலுவலகம் முன்பு தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் தர்ணா போராட்டத்தல் ஈடுபட்டனர். பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பிற பிரிவைச் சேர்ந்த மக்களின் |
| பாட்னா தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்கள் குடும்பத்துக்கு மோடி நேரில் ஆறுதல் Posted: 02 Nov 2013 12:14 AM PDT வரும் பாராளுன்ற தேர்தலுக்கான பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்- மந்திரி நரேந்திர மோடி கடந்த 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஏற்பாடு செய்த பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பேசினார். அவர் அந்த மைதானத்திற்கு வரும் சில நிமிடங்களுக்கு முன் பல்வேறு இடங்களில் குண்டு வெடித்தது. இதில் வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக பலியானார்கள். அவர்கள் குடும்பத்திற்கு மோடி நேரில் சென்று ஆறுதல் கூறினார். |
| உ.பி.: லாரி டிரைவர், கிளீனரைக் கொன்று வெங்காயம் ஏற்றி வந்த லாரியை கடத்திய கும்பல் Posted: 01 Nov 2013 11:21 PM PDT வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது கண்ணீரை வரவழைப்பதாக இருந்தாலும் இதற்காக வெங்காய மூட்டைகளை ஏற்றிவந்த லாரி டிரைவரும், கிளீனரும் உயிரை விடுவது அதிர்ச்சியையே ஏற்படுத்துகின்றது. கடந்த மாதம் உத்திரப் பிரதேசத்திற்கு வெங்காய மூட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று காணாமல் போனது பற்றி சிறப்புக் காவல் பிரிவினருக்குத் தகவல் வந்ததை அடுத்து அவர்கள் அம்மாநிலத்தின் குற்றவாளிகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |