Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னரே இலங்கை மாநாடு நடத்தப்படுகிறது: பொதுநலவாய செயலகம்

Posted: 15 Nov 2013 07:59 PM PST

பல்வேறுப்பட்ட ஆய்வுகளுக்கு பின்னரே இலங்கையில் மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டதாக பொதுநலவாய நாடுகளின் செயலகம் தெரிவித்துள்ளது. செயலகத்தின் பேச்சாளர் ரிச்சட் உகு இந்த கருத்தை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார். இந்த தீர்மானத்துக்கு முன்னர் பல்வேறு காரணங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் உகு குறிப்பிட்டுள்ளார். இதில் பொதுநலவாய விழுமியங்களும் அடங்கியிருந்தன. இதன்போது ஏதாவது குறைகள் இருக்குமாயின் அவற்றை கலந்துரையாடி தீர்த்துக் கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதியின் வெளிநாட்டு […]

வடக்கு நோக்கிய எங்கள் பயணத்தை தடுத்தது யார்!- கெலும் மக்ரே கேள்வி

Posted: 15 Nov 2013 07:49 PM PST

வடக்கு நோக்கி சென்ற தமது பயணத்தை நிறுத்தியது யார் என்று சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே கேள்வி எழுப்பியுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊடக நிலையத்தில் நேற்று அவரிடம் கேள்விகளை எழுப்பிய ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டார். வடக்கில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறுகிறது. அதன் உண்மையான நிலைமையை அறிந்து கொள்ளவே நாங்கள் வடக்கு நோக்கி சென்றோம். எனினும் அது தடுக்கப்பட்டது. எங்களை அங்கு செல்ல விடாது […]

மயக்கம் போட்டு விழுந்த அப்துல் கலாம்

Posted: 15 Nov 2013 07:45 PM PST

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் திடீரென மயக்கம் போட்டு விழுந்தமையால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் தனது இல்லத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரது உதவியாளர்கள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து, இரவு 10 மணிக்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

பளபளவென ஜொலிக்க வேண்டுமா?

Posted: 15 Nov 2013 04:37 AM PST

the beauty

Beautiful Make Upஅனைவருக்கு பிடித்த ஒன்றான நெல்லிக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மென்மையான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொடுப்பது கொலாஜன் செல்கள் தான்.

ஆனால் வயதாக வயதாக அந்த செல்களின் உற்பத்தி குறைவதால் தான், முதுமைத் தோற்றத்தை அனைவரும் பெறுகிறோம்.

ஆனால் இந்த கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் நெல்லிக்காய்க்கு உள்ளது.

முதுமையை தடுக்கும்

நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும சுருக்கம் நீங்கி, இளமையுடன் காட்சியளிக்கும்.

குறிப்பாக மிருதுவான, பொலிவுடன் கூடிய சருமத்தை பெறலாம்.

கருமை திட்டுக்கள்

ஒருசிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு கருமையான திட்டுக்கள் காணப்படும். இது வயதான தோற்றத்தைத் தரும். ஆகவே தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுக்கள் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாக காணப்படும்.

அழகான உடல் வடிவம்

அழகைக் கெடுக்கும் வகையில் உடல் எடை அதிகமாக உள்ளதா? அப்படியானால் தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், நெல்லிக்காய் சாற்றினையும் பருகி வர வேண்டும்.

இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.

ஆரோக்கியமான கூந்தல்

நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாற்றினை பருகி வந்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் நல்லது.

அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி சத்தினால், முடியின் வலிமை அதிகரித்து, முடி வெடிப்பு, பொலிவிழந்த காணப்படும் கூந்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.

மேலும் நரைமுடி, பொடுகு போன்ற தொல்லைகளுக்கும் சிறந்த நிவாரணத்தை பெறலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

யுத்தத்தில் 1982 முதல் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் சேகரிக்க முடிவு

Posted: 15 Nov 2013 04:26 AM PST

jaffna_war_flight01

jaffna_war_flight01இலங்கை 1982 ம் ஆண்டுக்கு பின்பு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் சொத்துகள் சம்பந்தமான விபரங்களை சேகரிப்பதற்கு இலங்கை குடிசன புள்ளிவிபரத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரையொன்றுக்கு அமையவே இந்தத் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக இலங்கை குடிசன புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் டீ. ஸீ. எஸ். குணவர்தன தெரிவித்தார்.

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்த வேண்டுமானால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் மரணமடைந்த நபர்கள் மற்றும் சொத்துகள் சம்பந்தமான விபரங்களை சேகரிப்பது அவசியம் என நல்லிணக்க அணைக்குழுவினால் பரிந்துரையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாகவே தாம் இந்தப் புள்ளி விபர மதிப்பீட்டை நடத்தத் தாம் தீர்மானித்துள்ளதாகவும், இந்த மதிப்பீடு எதிர்வரும் 25 ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கிராம சேவகர்கள் ஊடாக நாடு பூராவும் அமைந்துள்ள வீடுகள் மற்றும் அகதி முகாம்களுக்குச் சென்று தாம் இந்த மதிப்பீட்டை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் இலங்கைக் குடிசன புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் டீ.ஸீ. எஸ். குணவர்தன கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

குழந்தைகளின் ஆபாசப்படங்களை வெளியிட்டமை தொடர்பில் 348 பேர் கைது

Posted: 15 Nov 2013 04:18 AM PST

arrest2

arrest2கனடாவில் செயல்பட்டுவரும் அசோவ்பிலிம்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில், குழந்தைகளின் ஆபாசப்படங்கள் வௌியிடப்படுவதாக வந்த தகவலின் பேரில், 2010 ஆம் ஆண்டு முதல் பொலிஸார் அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தனர்.

அமெரிக்காவின் தபால் புலனாய்வு சேவை இவர்களுக்கு தகவல்கள் அளித்து உதவி புரிந்தது.

கடந்த மூன்று வருட விசாரணையைத் தொடர்ந்து டொராண்டோ பொலிஸார் இந்தக் குற்றம் தொடர்பாக கனடாவில் 108 பேர், அமெரிக்காவில் 76 பேர், ஸ்பெயின், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 164 பேர் என்று மொத்தம் 348 பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்தத் தகவல் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் 40 பாடசாலை ஆசிரியர்கள் ,9 மருத்துவர்கள், 32செவிலியர்கள், 6 சட்ட அமலாக்க அதிகாரிகள், 9 மத போதகர்கள், 3 வளர்ப்பு பெற்றோர்கள் போன்றவர்களும் இதில் அடங்குவர் என்று பாலியல் குற்றவியல் பிரிவின் தலைவரான இன்ஸ்பெக்டர் சோனா பெவன் டெஸ்ஜார்டின்ஸ் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா, ஸ்பெயின், அயர்லாந்து, கிரீஸ்,தென்னாபிரிக்கா, ஹாங்காங், மெக்சிகோ, நோர்வே மற்றும் அமெரிக்காவில் இருந்து 30 காவல்துறைப் படையினர் இந்த விசாரணையில் ஈடுபட்டனர்.

3,50,00 இலட்சத்திற்கு மேற்பட்ட புகைப்படங்களும், 9,000 வீடியோக்களும் இந்த விசாரணையில் சிக்கியுள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்த இணையதள நிறுவனம் மூடப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாகக் கூறிய டெஸ்ஜார்டின்ஸ் இதுவரை 386 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் இந்த நடவடிக்கை மூலம் காப்பாற்றப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சச்சினுக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும்

Posted: 15 Nov 2013 04:14 AM PST

sachin

sachinஇந்தியாவின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரதரத்னா விருதை வழங்க வேண்டும் என இந்திய மத்திய இணை அமைச்சர் ஆர்.பி.என்., சிங் கோரி உள்ளார். சச்சினின் தீவிர இரசிகர் என்ற வகையில் தான் இந்த கோரிக்கையை வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், ´மக்கள் சச்சின் மீது வைத்துள்ள அன்பு, பாசம் ஆகியவை பாரதரத்னாவை விட மேலானது´ என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பார்வையாளர்கள் அதிர்ச்சி நிமிடம்

Posted: 15 Nov 2013 04:08 AM PST

2013ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக வெனிசுலா அழகி கேப்ரியலா இஸ்லர் மகுடம் சூட்டினார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 2013ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி நடந்தது. இந்த போட்டியில் 86 நாடுகளைச் சேர்ந்த அழகிககள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பிரபஞ்ச அழகி பட்டத்தை வெனிசுலா அழகி கேப்ரியலா இஸ்லர் வென்றார். 25 வயதாகும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். இவருக்கு கடந்தாண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஒலிவியா கல்போ கிரீடத்தை சூட்டினார். அப்போது […]

This posting includes an audio/video/photo media file: Download Now

தாய்ப்பால் கொடுத்தால் பரிசு!

Posted: 15 Nov 2013 04:03 AM PST

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை ஊக்குவிக்கும் வகையில் பரிசுக் கூப்பன்களை இங்கிலாந்து அரசு வழங்கி வருகிறது. இங்கிலாந்திலேயே டெர்பிஷெரி, சவுத் யார்க்ஷெரி போன்ற இடங்களில் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் குறைவாக உள்ளது. இதற்கு காரணம், தங்களது அழகு குறைந்து விடுமோ என தாய்மார்கள் தயங்குவது தான். ஆனால் தாய்ப்பால் தருவதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி, தாய்க்கும் நன்மை பயக்கும் என அவர்களுக்கு தெரிவதில்லை. எனவே புதிதாக திட்டமொன்றை அறிமுகப்படுத்தியது, அதாவது […]

பிலிப்பைன்ஸ் சென்றது அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்

Posted: 15 Nov 2013 03:56 AM PST

us_aircraft_carrier_001

us_aircraft_carrier_001பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவித்தது. இதையடுத்து அமெரிக்க விமானம்தாங்கி கப்பலான ஜார்ஜ் வாஷிங்டன் லெய்தே தீவுக்கு சென்றடைந்தது. 21 ஹெலிகாப்டர்களுடன் சென்றுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் கப்பலில் மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மற்றும் மருந்து பொருள்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களுக்கு தேவையான பொருள்கள் வழங்கப்படும் என்றும் கடல் நீரைக் குடிநீராக மாற்றும் தனது இயந்திரத்தைப் பயன்படுத்தி அது, தானே சுத்தமான குடிநீரையும் வழங்கும் என்றும் அமெரிக்க கடற்படை செய்திதொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் எமது இந்த உதவி நடவடிக்கை மூலம் பிலிப்பைன்ஸில் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என நம்புவதாகவும் தெரிவித்தார். இதே போல் பிலிப்பைன்ஸ் நாட்டில் புயலால் பாதித்த மக்களுக்காக ஒரு லட்சம் டாலர் நிவாரண நிதி கொடுப்பதாக சீனா அறிவித்திருந்தது.

இந்நிலையில் இது போதாது என்று விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, அந்த நாடு மேலும் 16 லட்சம் டாலர்களை வழங்க முன்வந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™