Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


வதந்தி– பதுக்கல்: 7 மாநிலங்களை உலுக்கும் உப்பு- கிலோ ரூ. 300 வரை விற்பனை

Posted: 15 Nov 2013 09:48 PM PST

வெங்கயாத்தை தொடர்ந்து உப்பும் இப்போது வட மாநிலங்களை உலுக்கி உள்ளது. வெங்காய தட்டுப்பாடு காரணமாக வட மாநிலங்களில் கிலோ ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டதால் வெங்காய விலை அரசியல் ஆக்கப்பட்டது. தற்போது உப்பு விலையும் 7 வட மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார், மிசோராம், மேகாலயா, மேற்கு வங்காளம், அசாம், நாகலாந்து, அருணாசலம் மாநிலங்களில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இதையடுத்து, பதுக்கல் மற்றும் கடத்தல் காரணமாக உப்பு அதிக விலைக்கு விற்கப்பட்டது.

நெல்லூர் அருகே லாரி விபத்தில் சிக்கி 8 பக்தர்கள் பலி

Posted: 15 Nov 2013 09:36 PM PST

ஆந்திரமாநிலம் கடப்பாவில் இருந்து ஒரு லாரியில் ஏராளமான பக்தர்கள் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை இந்த லாரி நெல்லூர் அருகே வந்த போது, எதிரே வந்த வாகனத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பக்தர்கள் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டனர்.

ஷீலா தீட்சித்துக்கு சொந்த கார் இல்லை: பா.ஜனதா முதல்– மந்திரி வேட்பாளர் வீட்டுக்கடன் கட்டுகிறார்

Posted: 15 Nov 2013 09:27 PM PST

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் முதல்– மந்திரி ஷீலா தீட்சித் 2–வது முறையாக புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ஜனதா முதல்– மந்திரி வேட்பாளர் ஹர்ஷ்வர்தன், கிருஷ்ணாநகர் தொகுதியில் 4–வது முறையாக போட்டியிடுகிறார். ஷீலாதீட்சித், ஹர்ஷ்வர்தன் ஆகியோர் மனு தாக்கல் செய்தபோது தங்களது சொத்துக் கணக்கை தெரிவித்துள்ளனர். அதில் அசையும், அசையா சொத்துக்கள் சேமிப்பு பற்றிய விவரங்கள் உள்ளன.

தமிழ்நாட்டுக்கு காவிரியில் கூடுதலாக தண்ணீர் விடப்பட்டுள்ளது: கர்நாடக மந்திரி சொல்கிறார்

Posted: 15 Nov 2013 09:18 PM PST

காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் டெல்லியில் கடந்த 8–ந்தேதி கூடியது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக அதிகாரிகள், ''காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு படி இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 டி.எம்.சி. தண்ணீரும், டிசம்பர் மாதம் 8 டி.எம்.சி. தண்ணீரும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3 டி.எம்.சி. தண்ணீரும் கர்நாடகம் திறந்து விட உத்தரவிட வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று கர்நாடக அரசு காவிரியில் 26 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி

கர்நாடகத்தில் லாரி கவிழ்ந்து 21 தொழிலாளர்கள் பலி: 13 பேர் படுகாயம்

Posted: 15 Nov 2013 09:08 PM PST

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் பழங்குடியின காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 30–க்கும் மேற்பட்டவர்கள் ஒரு மினி லாரியில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வேலைக்கு சென்றனர். அந்த லாரி கல்கி என்ற இடத்தில் சாலை வளைவில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் லாரியில்பயணம் செய்த 13 பெண்கள் உள்பட 21 பேர் உடல் நசுங்கி

மண்டல பூஜைக்காக நடை திறப்பு: சபரிமலையில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்

Posted: 15 Nov 2013 08:55 PM PST

பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரூ மகேஷ்வரரூ முன்னிலையில் மேல்சாந்தி தாமோதரன் போற்றி குத்து விளக்கேற்றி நடையை திறந்து வைத்தார். நடை திறப்பின்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் எழுப்பிய 'சாமியே சரணம் அய்யப்பா' என்ற சரண கோஷம் சபரிமலை எங்கும் எதிரொலித்தது.

தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கோரிக்கை

Posted: 15 Nov 2013 08:01 PM PST

மாநில சட்டசபை தேர்தல்கள், பாராளுமன்ற தேர்தல்கள் ஆகியவற்றை நாடு எதிர்கொள்ள உள்ள நிலையில், தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்க தேர்தல் கமிஷன் விரும்பியது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அதைப் பெற்று பரிசீலித்த மத்திய அரசு, கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிப்பது, கட்டுப்பாடுகளை கொண்டுவருவது பற்றி அரசியல் கட்சிகளுடன் விவாதித்து மீண்டும் எழுதுங்கள் என்று தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்

காங்கிரஸ் தலைவர்கள் போகும் இடங்களில் எல்லாம் மக்கள் செருப்பை தூக்கி காட்டுகிறார்கள்: மோடி பேச்சு

Posted: 15 Nov 2013 02:16 PM PST

சத்தீஸ்கர் மாநில ராய்பூரில் இருந்து சுமார் 200 கி.மீட்டர் தூரமுள்ள கோர்பா தொகுதியில் பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திரமோடி பேசியதாவது:-

சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி பரிதாப பலி

Posted: 15 Nov 2013 10:37 AM PST

குஜராத் மாநிலம் வடோடரா அருகே உள்ள பாரா கிராமத்தை சேர்ந்தவள் வைஷாலி (6). வழக்கும் போல் காலை கடன்களை கழிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள புதர் மறைவுக்கு சென்ற வைஷாலியை அங்கே பதுங்கி இருந்த சிறுத்தை புலி பாய்ந்து வந்து கவ்வியது.

ஆந்திராவை பிரிக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கிரண் குமார் ரெட்டி

Posted: 15 Nov 2013 08:15 AM PST

ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்களும் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் தொடர வேண்டும் என்று முதல்வர் கிரண் குமார் ரெட்டி வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில்

முசாபநகர் கலவர வழக்கில் மற்றொரு பா.ஜனதா எம்.எல்.ஏ. ரானாவுக்கும் ஜாமின்

Posted: 15 Nov 2013 05:24 AM PST

உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பா.ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சங்கீத் சோம், சுரேஷ் ரானா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கலவரத்தை தூண்டியதாக இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது

மத்திய பிரதேசத்திற்கான மத்திய நிதி யாருடைய பாக்கெட்டுகளை நிரப்பியுள்ளது என மக்கள் கேட்கவேண்டும்: சோனியா

Posted: 15 Nov 2013 03:59 AM PST

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, ராஜஸ்தான், மிசோரம், ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் ஒன்றை ஒன்று தாக்கி வருகின்றன.

நாட்டை விற்பதைக் காட்டிலும் டீ விற்பது மேல்: சமாஜ்வாடி தலைவருக்கு மோடி பதில்

Posted: 15 Nov 2013 02:20 AM PST

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பீகார் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஏழை குடும்பத்தில் பிறந்த நான், ரெயில்வே நிலையம் மற்றும் ஓடும் ரெயிலிலும் டீ விற்று இருக்கிறேன் என்று கூறினார். இதற்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவர், ஒரு கான்ஸ்டபிள் எஸ்.பி.யாக நடந்துகொள்ள முடியாது, டீ விற்றவரெல்லாம் பிரதமராக முடியாது என்று சாடியிருந்தார்.

கணவனின் மருத்துவ சான்றிதழ்களை ஏற்க மனைவி மறுப்பு: விவாகரத்து பெற அனுமதி அளித்தது கர்நாடக ஐகோர்ட்

Posted: 15 Nov 2013 01:34 AM PST

கணவனின் மருத்துவ தகுதிச் சான்றிதழ்களை ஏற்க மனைவி மறுத்ததால் அந்த தம்பதியர் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ, கர்நாடக ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. 2006-ம் ஆண்டில் திருமணமான இந்த தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால்

நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் இந்திய பொருளாதாரம் மேம்பாட்டை எட்டும்: ப.சிதம்பரம்

Posted: 14 Nov 2013 11:55 PM PST

மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் இன்று காலை மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:– இந்திய பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 முதல் 5.5 சதவீதம் வரையிலான நிலையை எட்டும். நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் இந்திய பொருளாதாரம் நிச்சயம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™