Tamil Star |
- குடும்பமாக இணைந்து முன்னோக்கிச் செல்வதே நோக்கம்
- உலகின் பிரச்சினைகளுக்கு ஒரு சிகிச்சை முறையாக பொதுநலவாயம் அமைய வேண்டும்
- அசத்தல் என்ட்ரி கொடுத்த சச்சின்
- அரைசதம் அடித்தார் சச்சின்: 16 ஆயிரம் ஓட்டங்களை தாண்டுவாரா?
- ஒபாமாவின் வெள்ளை மாளிகை போல் வீட்டை மாற்றிய ஆசாமி
- தெரு நாய்க்கு கிடைத்த அதிர்ஷ்டம்!
- செல்வாக்கு மிகுந்த இளம் வயதினர் பட்டியலில் ஒபாமா மகள், மலாலா!
- காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா : பெரியார் திடலில் கறுப்புக் கொடி!
- மூதாட்டியை கொலை செய்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்த கொடூரம்!
- காமன்வெல்த் தொடர்பில் இந்தியாவின் முடிவை மதிக்கிறேன் : கெமரூன்
| குடும்பமாக இணைந்து முன்னோக்கிச் செல்வதே நோக்கம் Posted: 14 Nov 2013 11:06 PM PST பொதுநலவாய அமைப்பின் நோக்கம் ஒரு குடும்பமாக இணைந்து முன்னோக்கிச் செல்வது என பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்தார். தாமரை தடாக அரங்கில் இன்று (15) அரம்பமான 23வது பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப உரையில் கமலேஷ் சர்மா இவ்வாறு தெரிவித்தார். பொதுநலவாய அமைப்பு அதன் உறுப்பு நாடுகளிடையே ஒரு உறவுப்பாலமாக காணப்படுகிறதென அவர் குறிப்பிட்டார். பொதுநலவாய அமைப்பு உறுப்பு நாடுகளுக்கு இடையேயான இடைவெளியை குறைத்துள்ளதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் […] |
| உலகின் பிரச்சினைகளுக்கு ஒரு சிகிச்சை முறையாக பொதுநலவாயம் அமைய வேண்டும் Posted: 14 Nov 2013 11:01 PM PST உலகில் உள்ள பிரச்சினைகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கத் தேவையில்லை எனவும் மாறாக அவற்றுக்கு தீர்வினை பெற பொதுநலவாய அமைப்பு முயற்சிக்க வேண்டும் என பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். தாமரை தடாக அரங்கில் இன்று (15) அரம்பமான 23வது பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப உரையில் இளவரசர் இவ்வாறு தெரிவித்தார். உலகின் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறையாக பொதுநலவாயம் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2005ம் ஆண்டு சுனாமியின் பின்னர் இலங்கை பல கஸ்டங்களை எதிர்கொண்டதாகவும் […] |
| அசத்தல் என்ட்ரி கொடுத்த சச்சின் Posted: 14 Nov 2013 10:57 PM PST சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 200வது டெஸ்ட் மற்றும் கடைசி போட்டியில் களமிறங்கினார்.போட்டியில் மைதானத்தில் நுழைந்த சச்சினை ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர். |
| அரைசதம் அடித்தார் சச்சின்: 16 ஆயிரம் ஓட்டங்களை தாண்டுவாரா? Posted: 14 Nov 2013 09:35 PM PST மும்பையில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதன் மூலம், 200 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்ற முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார் சச்சின். இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் அரைச்சதம் அடித்து சிறப்பாக விளையாடி வருகிறார். சச்சின் டெண்டுல்கர் 91 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்களை எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 68வது […] |
| ஒபாமாவின் வெள்ளை மாளிகை போல் வீட்டை மாற்றிய ஆசாமி Posted: 14 Nov 2013 04:25 AM PST
இவருக்கு லாரா (36) என்ற மனைவியும், வாலன்டினா (16), லாரா (10) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக தனது வீட்டில் ரூ.1.5 கோடி செலவு செய்து ஒரு குட்டி வெள்ளை மாளிகை போல் மாற்றியுள்ளார். இதனை காண அமெரிக்கர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து ரோன் வாடோ கூறுகையில், எனக்கு 13 வயதாக இருக்கும் போது சீனியர் புஷ் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது முதல் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு, முன்னாள் ஜனாதிபதிகளை பற்றியும், வெள்ளை மாளிகை பற்றியும் தெரிந்து கொண்டேன். கடந்த 40 ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதிகளான இரண்டு புஷ்களும் எனக்கு நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். நான் எனது வீட்டை ஒரு குட்டி வெள்ளை மாளிகைபோல் மாற்றிய புகைப்படத்தை புஷ்ஷிடம் காண்பித்த போது அச்சு அசலாக இருப்பதாக பாராட்டினார் என்று தெரிவித்தார். இவர் வீட்டையே ஒரு குட்டி அருங்காட்சியகமாக மாற்றிவிட்டார். எப்போதும் மியூசியத்தில் வசிப்பது போல் உள்ளது என அவரது மகள்கள் கேலி செய்கின்றனர். முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய நாற்காலி, பேனா, போட்டோ என ஏராளமான பொருட்களை தனது சேகரிப்பில் வைத்திருக்கிறார். இவரது சேகரிப்பிலேயே முதன்மையானது முன்னாள் ஜனாதிபதி கென்னடி பயன்படுத்தி பின்னர் லிங்கன் வைத்திருந்த காரை தற்போது இவர் வைத்துள்ளார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது என்கிறார் தனது கணவர் குறித்து பெருமையுடன் அவரது மனைவி லாரா. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தெரு நாய்க்கு கிடைத்த அதிர்ஷ்டம்! Posted: 14 Nov 2013 04:22 AM PST தெருவில் அனாதரவாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த நாய் ஒன்றிற்கு திடீர் அதிர்ஷ்டமாக எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட முதல் நாய் என்ற பெருமை கிடைத்துள்ளது. காஷ்மீரில் லே எனும் இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்த நாயை முன்னாள் கோப்ல் வீராங்கனையான ஜோன் லெப்சன் என்பவர் கண்டு, இரக்கப் பட்டு தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார். அந்த நாய்க்கு ரூபி எனப் பெயரிட்ட வீராங்கனை, அதனை தன்னுடன் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். ரூபியின் எவரெஸ்ட் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| செல்வாக்கு மிகுந்த இளம் வயதினர் பட்டியலில் ஒபாமா மகள், மலாலா! Posted: 14 Nov 2013 04:19 AM PST அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மாலியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலரான மலாலா ஆகியோர் 2013ஆம் ஆண்டுக்கான “செல்வாக்கு மிகுந்த இளம் வயதினர்´ பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அமெரிக்காவின் டைம் பத்திரிகை செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் உலக அளவில் தங்கள் பணி மற்றும் சேவை மூலம் பிரமிக்கத்தக்க சாதனைகள் புரிந்த விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 16 பேர் இடம் பெற்றுள்ளனர். இளம் வயதினருக்கான திடத்துடன் நடந்துகொண்டதற்காக ஒபாமா […] |
| காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா : பெரியார் திடலில் கறுப்புக் கொடி! Posted: 14 Nov 2013 04:16 AM PST தமிழர்களின் உணர்வுகளை புறக்கணித்து காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைக் கண்டிக்கும் வகையில் அனைவரது வீடுகளிலும், பணிமனைகளிலும் 15ஆம் திகதி வரை கறுப்புக் கொடிகளை ஏற்றுமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று அறிவித்தார். இதனையொட்டி சென்னை பெரியார்திடலில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. |
| மூதாட்டியை கொலை செய்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்த கொடூரம்! Posted: 14 Nov 2013 04:13 AM PST மூதாட்டியை கொலை செய்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்த மளிகை கடைக்காரரை சாகும்வரை தூக்கிலிட வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மதுரை மாவட்டம், விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் முத்துசெல்வன் (24). இவர் 2009ம் ஆண்டு குடும்பத்துடன் சென்னையில் குடியேறினார். மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் சக்தி நகரில், முத்துசெல்வன் மளிகை கடை நடத்தியதுடன் தண்ணீர் போத்தல்களும் விற்பனை செய்தார். தீபாவளி சீட்டும் பிடித்தார்.சீட்டு கட்டியவர்களின் பணத்தை ஆடம்பர செலவு செய்ததால் சீட்டு கட்டியவர்களுக்கு பணம் […] |
| காமன்வெல்த் தொடர்பில் இந்தியாவின் முடிவை மதிக்கிறேன் : கெமரூன் Posted: 14 Nov 2013 04:10 AM PST பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் புது டில்லியில் இன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். இந்தியாவிலிருந்து இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் இவர், அதற்கு முன்பு கல்கத்தா செல்கிறார். பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக இந்தியாவுக்கு சுற்றுபயனத்தை மேற்கொண்டுள்ள டேவிட் கெமரூன் நேற்று புதுடில்லி வந்தடைந்தார். பின்னர் இன்று மன்மோகன் சிங்குடன் நடைபெற்ற சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையான வர்த்தகம், தொடர்புகள், பாதுகாப்பு, சர்வதேச பிரச்சினைகள் மற்றும் […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

