Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பேச மாட்டோம்; கடமையைச் செய்வோம் - சோனியா: பேசாமல் செய்தது 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் - மோடி

Posted:

பஸ்தார் : "நாங்கள் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல. அமைதியாக இருந்து மக்களுக்காக கடமை ஆற்றுகிறோம்,'' என, சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், பா.ஜ.,வை, காங்கிரஸ் தலைவர் சோனியா கடுமையாக விமர்சித்தார். அடுத்த இரண்டு மணி நேரத்தில், அதே மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய, பா.ஜ,,வின் பிரதமர் வேட்பாளர் மோடி, ""அவர், சரியாகத்தான் பேசி இருக்கிறார். எதுவுமே சொல்லாமல் அவர்கள் ஏராளமாக செய்துள்ளனர்! ஆம்... பேசாமலேயே அவர்கள் செய்தது, "2ஜி' ஊழல், நிலக்கரி ஊழல், நிலத்திற்கு அடியில் ஊழல், ஆகாயத்தில் ஊழல்! எல்லா ஊழல்களுமே மிகவும் அமைதியாக, பேசாமல் செய்யப்பட்டுள்ளன,'' என, ...

இலங்கைக்கு போவாரா பிரதமர்? டில்லியில் காங்கிரஸ் இன்று முடிவு

Posted:

மிகுந்த எதிர்பார்ப்புடன், டில்லியில் நேற்று கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் செல்வது குறித்து, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், இலங்கை விவகாரத்தில், மத்திய அரசின் நிலை குறித்த கேள்விக்குறி நீடிக்கிறது. காங்கிரசின் உயர்மட்டக் குழு அனேகமாக இன்று கூடி, இந்த பிரச்னையில் முடிவு எடுக்கும் என தெரிகிறது.காங்கிரஸ் உயர்மட்டக் குழு:இலங்கையில், வரும், 15ம் தேதி துவங்கி நடபைெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் கலந்து கொள்ள, கடந்த வாரம் நடந்த காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஒப்புதல் ...

காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்ப மறுத்த நேரு : அத்வானி தகவல்

Posted:

புதுடில்லி : 'காஷ்மீரை, முஸ்லிம் பழங்குடியினர் தாக்க வந்த போது, அவர்களை தடுத்து நிறுத்த, ராணுவத்தை அனுப்ப, அப்போதைய பிரதமர், நேரு மறுத்தார்' என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி, தன் இணைய பக்கத்தில் கூறியுள்ளார்.நாடு சுதந்திரம் அடைந்திருந்த நேரத்தில், பிரிந்து கிடந்த மாகாணங்களை, உள்துறை அமைச்சர், சர்தார் படேல், இந்தியாவுடன் இணைக்க முயற்சித்த வேளையில், ஐதராபாத் நிஜாம் எதிர்ப்பு தெரிவித்து, ஐதராபாத்தை, பாகிஸ்தானுடன் இணைக்க முயற்சித்தார்.இதை அறிந்த, சர்தார் வல்லபாய் படேல், 'ஐதராபாத்திற்கு, ராணுவத்தை அனுப்ப வேண்டும்' என, பிரதமர், நேருவிடம் வலியுறுத்திய போது, ...

அரசு பங்களாக்களை இடித்து மாளிகை கட்டினார் மாயாவதி

Posted:

புதுடில்லி : உ.பி., முன்னாள் முதல்வரும், மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இடர்பாடு வரும் நேரமெல்லாம் காப்பாற்றும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான, மாயாவதிக்கு, சட்ட விதிகளை மீறி, டில்லி, வி.வி.ஐ.பி., பகுதியில், மூன்று பெரிய பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.நாட்டின் அதிக பாதுகாப்பு மிக்க பகுதியான, டில்லியின், லுட்யன்ஸ் பங்களா பகுதியில், மாயாவதிக்கு ஏற்கனவே, குருத்வாரா ரகாப்கஞ்ச் சாலையில், 4ம் எண் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி., அந்தஸ்தில் உள்ள அந்த பங்களாவிற்கு, பாதுகாவலர்கள், வேலையாட்கள், ...

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு யார் காரணகர்த்தா?கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை: 'மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, தாங்கள் காரணகர்த்தா என்பதை போல, பெருமை தேடிக்கொள்ள முயற்சிக்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை:சென்னையில், மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்துள்ளார். அங்கே அவர் பேசவில்லை என்றாலும், அந்த திட்டத்தை பற்றிய குறிப்பு, அரசினால் தரப்பட்டுள்ளது. அதில் அந்த திட்டத்தை பற்றிய குறிப்புகள் விவரிக்கப்பட்ட போதிலும், கவனமாக, அது எந்த ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்டது என்பதை மறைத்து விட்டனர். அந்த திட்டம் தி.மு.க., ஆட்சியில, நான் முதல்வராக இருந்த போது துவக்கப்பட்ட ...

குட்பை டூ ஏற்காடு: விஜயகாந்த்தின் "டில்லி சலோ!'

Posted:

ஏற்காடு இடைத்தேர்தலை புறக்கணித்து விட்டு, டில்லி மாநில சட்டசபை தேர்தலில் தீவிர கவனம் செலுத்தலாம் என்ற, முடிவில் தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் இருப்பதாக, அக்கட்சி வட்டாரம் தெரிவித்தது. அதன் காரணமாக, டில்லியில், தமிழர்கள் வாழும், 20 தொகுதிகளை தேர்ந்தெடுத்துள்ள தே.மு.தி.க., அதில், முதல்கட்டமாக, நேற்று முன்தினம், ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. நேற்று, இரண்டாவது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு உள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஏற்காடு இடைத்தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடுவதற்கான வாய்ப்பு குறைந்து ...

நூறு ஆண்டு ஓடிய ரயில் நிறுத்தம்: மக்கள் வேதனை

Posted:

செங்கோட்டை - புனலுார் அகல ரயில்பாதை திட்டத்திற்கு, போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தின் நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் இருந்து, கேரள மாநிலம், புனலுாருக்கு, 49 கி.மீ., தூர ரயில் பாதையை ஏற்படுத்த, 1873ல், அப்போதைய ஆங்கில அரசால் முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு, சென்னை மாகாண அரசு, 17 லட்சம் ரூபாய்; ரயில்வே துறை, 7 லட்சம் ரூபாய், திருவிதாங்கூர் அரசு, 6 லட்சம் ரூபாய் வழங்கின. இந்த ரயில் பாதையை ஏற்படுத்த, 21 ஆண்டுகள் ஆனது. 1902 ஆண்டு முதல் ரயில் பாதை, மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.இந்த ரயில் பாதை, தமிழக பகுதிக்குள், 13 கி.மீ., கேரள ...

ஆடிட்டர் ரமேஷை பின் தொடர்ந்து கொன்றது எப்படி?

Posted:

'சேலத்தில், ஆடிட்டர் ரமேஷை, பின் தொடர்ந்து சென்று, கொலை செய்தது எப்படி' என, போலீஸ் அதிகாரிகளிடம், பயங்கரவாதி பிலால் மாலிக் விவரித்தான்.தமிழகத்தில், இந்து அமபை்பு தலைவர்கள் கொலையில் தொடர்புடையதாக கைதான, 'போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரிடம், சேலம், சூரமங்கலம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், சிறப்பு புலனாய்வு பிரிவான, எஸ்.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையின் எட்டாவது நாளான நேற்று, எஸ்.ஐ.டி., போலீசார், அதிகாலை, 4:45 மணிக்கு, பிலால் மாலிக்கை, சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.நோட்டை கபை்பற்றினர்:அங்குள்ள, சைக்கிள் ...

நோய் பாதித்த மாடுகளுக்கு "சரக்கு' தீவனம் சாப்பிட "முரட்டு' முயற்சி

Posted:

நோய் பாதித்த மாடுகளை தீவனம் சாப்பிட வைத்து விட்டால், காப்பாற்ற முடியும் என்பதற்காக, மது பானங்களை கொடுத்து, தீவனம் சாப்பிட வைக்கும் முயற்சியில், சிலர் ஈடுபடுகின்றனர்.தமிழகத்தில், பல மாவட்டங்களில் விவசாயிகள் வளர்க்கும் மாடுகளுக்கு, கோமாரி நோய் தாக்குதல் தென்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, 10க்கும் மேற்பட்ட மாடுகள், நோய் தாக்கி இறந்துள்ளன. நோய் பாதித்த மாடுகளுக்கு, கால்நடைத் துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று, பெருந்துறை, மேட்டுக்கடை பகுதி விவசாயிகள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, மாடுகளை பாதிக்கும் கோமாரியை ...

காவிரி கண்காணிப்பு கூட்டம் டில்லியில் கூடுகிறது

Posted:

ஐந்து மாதங்கள் இடைவெளிக்கு பிறகு, டில்லியில் இன்று, காவிரி கண்காணிப்புக் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம், இன்னமும் அமைக்கப்படாமல் இருப்பது குறித்து, தமிழக அரசு, பிரச்னையை கிளப்ப, திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.காவிரி இறுதி தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், மத்திய அரசின் சார்பில், காவிரி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. தலைவராக மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலரும், உறுப்பினர்களாக, மாநில அரசின் தலைமைச் செயலர்களும் அங்கம் வகிக்கின்றனர். இந்த குழுவின் ஆலோசனை கூட்டம், இன்று டில்லியில், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™