Tamil News | Online Tamil News |
- ஏ.டி.எம்., இயந்திரங்களில் பொதுமக்கள் பணம் எடுக்க அச்சம்
- மருத்துவ சிகிச்சை கடனாளி ஆக்குகிறது: சசி தரூர்
- சென்னை அருகே " ஹெலன்'புயல் இன்று இரவு தாக்கும் அபாயம் : ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி தளத்தில் உஷார் நடவடிக்கை
- மதுரையில் தொடருது மாணவர்களின் தற்கொலை மிரட்டல்: அலறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
- 'பெரிய வாய்ப்பு உங்களை தேடி வரும்!': முதல்வர் அறிவுரை
- அமைச்சர்கள் இல்ல திருமண விழாவால் கலகலத்தது சென்னை
- 'காங்., துரோகம் செய்து விட்டது': ம.பி.,யில் நரேந்திர மோடி ஆவேசம்
- 'சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்?' ராகுல் கேள்வி
- ஏவுதளம் அமைக்க ஏன் கோரிக்கை வைக்கவில்லை: கருணாநிதி கேள்வி
| ஏ.டி.எம்., இயந்திரங்களில் பொதுமக்கள் பணம் எடுக்க அச்சம் Posted: பெங்களூரு : பெங்களூரில், ஏ.டி.எம்., மையத்தில், வங்கி பெண் அதிகாரி, மர்ம நபரால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம், பொதுமக்களிடையே, அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபரை பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 'ஏ.டி.எம்., மையங்களுக்கு பாதுகாவலர்களை நியமியுங்கள் அல்லது, ஏ.டி.எம்.,களை மூடுங்கள்' என, வங்கிகளுக்கு, கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.மாநகராட்சி அலுவலகம்:பெங்களூரு, மிஷன் ரோட்டில் உள்ள, கார்ப்பரேஷன் வங்கியில், மேலாளராக பணியாற்றுபவர், ஜோதி உதய், 38. இவர், நேற்று முன்தினம் காலை, 7:10 மணிக்கு, பெங்களூரு, மாநகராட்சி அலுவலகம் அருகில் ... |
| மருத்துவ சிகிச்சை கடனாளி ஆக்குகிறது: சசி தரூர் Posted: சென்னை : ''மருத்துவ சிகிச்சைக்காக, கடனாளிகளாகும் நிலை, இந்தியாவில் நிலவு கிறது. எனவே, குறைந்த செலவில், தரமான மருத்துவ சிகிச்சையை வழங்க, மருத்துவர்கள் முன்வர வேண்டும்,'' என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர், சசி தரூர் கேட்டுக் கொண்டு உள்ளார்.51 மாணவர்கள்:ராமச்சந்திரா பல்கலைக் கழகத்தின், 18வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள், டிப்ளமோ படிப்புகளில், சிறப்பிடம் பெற்ற, 51 மாணவ, மாணவியருக்கு தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கி, சசி தரூர் ... |
| Posted: சென்னை : வங்கக்கடலில் உருவான, "ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை, சென்னை அடுத்த, ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில், கரையை கடக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வங்கக்கடலில், கடந்த,17ம் தேதி உருவான, காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மேற்கு மத்திய வங்கக் கடலில், நிலை கொண்டிருந்தது. இது, வலுப்பெற்று, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, 19ம் தேதி, சென்னை அருகில், 650 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டிருந்தது.இந்த தீவிர ... |
| மதுரையில் தொடருது மாணவர்களின் தற்கொலை மிரட்டல்: அலறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் Posted: மதுரை : வகுப்பறையில் கண்டிப்பதால், தற்கொலைக்கு முயற்சிக்கும் மாணவர்களால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அலறுகின்றனர். மதுரையில் நேற்று, சமயநல்லூர் அரசு இருபாலர் பள்ளியின் பிளஸ் 1 மாணவர், அரளி விதையை மென்று, தற்கொலைக்கு முயன்றார்.நேற்று முன்தினம், சக மாணவியை மாணவன் மதுசூதனன் கேலி செய்ததால், அம்மாணவி தலைமையாசிரியரிடம் புகார் செய்தார். பெற்றோரை அழைத்து வருமாறு, ஆசிரியை தெரிவித்துள்ளார். பெற்றோர் இல்லாமல், நேற்று பள்ளிக்கு வந்த மதுசூதனன், பையில் வைத்திருந்த அரளிவிதையை மென்று துப்பியுள்ளார். சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்கவே, மதுரை அரசு ... |
| 'பெரிய வாய்ப்பு உங்களை தேடி வரும்!': முதல்வர் அறிவுரை Posted: சென்னை : "வாய்ப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லும்போது வருத்தப்படாதீர்; முயற்சி செய்யுங்கள். அதைவிட பெரிய வாய்ப்பு, உங்களைத் தேடி வரும்,'' என, முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தொண்டர்களுக்கு, அறிவுரை வழங்கினார்.சென்னையில், மூன்று அமைச்சர்கள் மற்றும் புதுச்சேரி எம்.எல்.ஏ., இல்லத் திருமண விழா, நேற்று நடந்தது. விழாவில், முதல்வர் ஜெயலலிதா, மணமக்களை வாழ்த்தி பேசும்போது, கதை கூறி, அனைவருக்கும் அறிவுரை வழங்கினார். அதன் விவரம்:ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில், தரை துடைக்கும் பணியாளராக, ஒருவர் பணி புரிந்து வந்தார். அந்த நிறுவனத்திற்கு, ... |
| அமைச்சர்கள் இல்ல திருமண விழாவால் கலகலத்தது சென்னை Posted: சென்னை : சென்னையில், மூன்று அமைச்சர்கள் மற்றும் புதுச்சேரி எம்.எல்.ஏ., இல்லத் திருமண விழா நடந்ததால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் வாகனங்களை திருப்பி விட்டதால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைப் பெற வந்தவர்கள், பெரிதும் அவதிப்பட்டனர்.சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நேற்று காலை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், புதுச்சேரி எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் ஆகியோரின், இல்லத் திருமண விழா, ... |
| 'காங்., துரோகம் செய்து விட்டது': ம.பி.,யில் நரேந்திர மோடி ஆவேசம் Posted: போபால்: "காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்களுக்கு, நம்பிக்கை துரோகம் செய்து விட்டது. அந்த கட்சியை, நாட்டிலிருந்து, அடியோடு அகற்ற வேண்டும்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, பேசினார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, ம.பி., மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, சக்தால் என்ற இடத்தில் நடந்த, பிரசார கூட்டத்தில், நேற்று பேசினார். அவர் பேசியதாவது:தொடர்ச்சியான ஊழல்களால், காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து விட்டது. மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. மக்களுக்கு இடையே, பிரிவினையை ... |
| 'சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்?' ராகுல் கேள்வி Posted: போபால் : "மத்திய பிரதேச மாநில பா.ஜ., அரசு, சாலை வசதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறது. சாலை வசதியை ஏற்படுத்தினால் மட்டும், ஏழைகளுக்கு உணவு கிடைத்து விடுமா?'' என, காங்., துணை தலைவர் ராகுல், கேள்வி எழுப்பினார்.ம.பி., மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும், காங்., வேட்பாளர்களை ஆதரித்து, அந்த கட்சியின் துணை தலைவர் ராகுல், தார் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், நேற்று பேசியதாவது:மத்திய பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும், அந்த ... |
| ஏவுதளம் அமைக்க ஏன் கோரிக்கை வைக்கவில்லை: கருணாநிதி கேள்வி Posted: சென்னை : 'குலசேகரபட்டனத்தில், இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க, பிரதமரிடம், தமிழக அரசு ஏன் கோரிக்கை வைக்கவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் இந்திய வான்வெளி, திரவ வாயு மையம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதன் மூலம், அந்த மண்டலமே வளர்ச்சி பெற்றதாக நிச்சயம் மாற்றமடையும். நம் நாட்டில் தொழில் நுட்ப புரட்சிக்கு வித்திடும் பகுதியாகவும் அது உருவாகும். "இந்த, இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை அமைப்பது ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 21,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |