Tamil News | Online Tamil News |
- கூட்டணி பேரத்திற்கு காங்கிரசுக்கு தி.மு.க., நிபந்தனை: தே.மு.தி.க.,வை இழுத்து வர வேண்டுமாம்
- 'எப்படி பேசுவது என்பதை ராகுலுக்கு முதலில் கற்றுக் கொடுங்கள்': நரேந்திர மோடி ஆவேசம்
- மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு: சோனியாவுக்கு ம.பி., முதல்வர் சவுகான் 'நோட்டீஸ்'
- சென்னை பி.ஆர்.டி.எஸ்., திட்டத்துக்கு ரூ.1,110 கோடி தேவை: ஐ.டி.டி.பி., பரிந்துரை மீது அரசு பரிசீலனை
- '4,900 ரூபாய் மதிப்பு சாக்லெட் தான் வேண்டும்': ஆயுத கப்பலுடன் சிக்கிய வெளிநாட்டவர்கள் அடம்
- 75 குவாரிகள் மூடப்பட்டதால் மணல் தட்டுப்பாடு: "கிடுகிடு' விலை உயர்வால் மக்கள் அவதி
- வேட்டி அணிவரா அறநிலைய துறை அதிகாரிகள்?
- 'இடியட்ஸ்' என்று கூறவில்லை: விஞ்ஞானி ராவ் திட்டவட்டம்
- ராகுல் கூட்டத்துக்கு வந்தவர்கள் பாதியிலேயே வெளியேறியது ஏன்: ஷீலா தீட்ஷித் புது விளக்கம்
- புத்தாண்டில் தெலுங்கானா உதயம்? : உயர்மட்டகுழு ஆலோசனை
| கூட்டணி பேரத்திற்கு காங்கிரசுக்கு தி.மு.க., நிபந்தனை: தே.மு.தி.க.,வை இழுத்து வர வேண்டுமாம் Posted: ஏற்காடு இடைத்தேர்தல் ஒருபுறம் இருக்க, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் இடையே, லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, பெரும் இழுபறி நீடித்து வருகிறது. "தே.மு.தி.க., வந்தால் மட்டுமே காங்கிரசுடன் கூட்டணி சேர வேண்டும்; வராமல் போனால், தற்போது கைவசம் இருக்கும் கட்சிகளின் துணையோடு லோக்சபா தேர்தலை சந்திக்கலாம்' என, தி.மு.க., தலைமைக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.லோக்சபா தேர்தலில், வலுவான கூட்டணி ஏற்படுத்த முயற்சித்து வரும் தி.மு.க., அதில், காங்., தே.மு.தி.க., சேர வேண்டும் என, விரும்புகிறது. ஆனால், தே.மு.தி.க., அதற்கு உடன்படுமா என்ற ... |
| 'எப்படி பேசுவது என்பதை ராகுலுக்கு முதலில் கற்றுக் கொடுங்கள்': நரேந்திர மோடி ஆவேசம் Posted: போபால்: ''மரியாதையாக பேசுவது எப்படி என்பதை, முதலில், உங்கள் கட்சியின் துணை தலைவர் ராகுலுக்கு கற்றுக் கொடுங்கள். அப்புறம், எங்களுக்கு அறிவுரை கூறலாம்,'' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, பதிலடி கொடுத்துள்ளார்.'நான்சென்ஸ்' சொன்னது யார்? மத்திய பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும், 25ல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, சத்ரபூர் ... |
| மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு: சோனியாவுக்கு ம.பி., முதல்வர் சவுகான் 'நோட்டீஸ்' Posted: போபால்: ''என் குடும்பத்தார் மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்த, காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையேல், 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடருவேன்,'' என, ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.ம.பி., உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்காக, தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. எப்போதும் இல்லாத வகையில், அரசியல் கட்சிகள், பரஸ்பரம் தாக்கி பேசி வருகின்றன. ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மூன்றாவது முறையாக, முதல்வர் பதவியில் அமர்ந்து விட வேண்டும் என, கங்கணம் கட்டி, தீவிர பிரசாரம் செய்து வருகிறார். முதல்வர் சிவராஜ் சிங் ... |
| சென்னை பி.ஆர்.டி.எஸ்., திட்டத்துக்கு ரூ.1,110 கோடி தேவை: ஐ.டி.டி.பி., பரிந்துரை மீது அரசு பரிசீலனை Posted: சென்னையில் ஆறு பிரதான சாலைகளில், பி.ஆர்.டி.எஸ்., (பேருந்துகளுக்கான பிரத்யேக பாதை) திட்டத்தை செயல்படுத்த, 1,110 கோடி ரூபாய் தேவை என, போக்குவரத்து மேம்பாட்டுக்கான கொள்கை ஆய்வு நிறுவனம் (ஐ.டி.டி.பி.,) தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பான அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது.சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து சிக்கல்களுக்கு தீர்வுகாணும் வகையில், 'சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம்' (சி.யு.எம்.டி.ஏ.,) 2010ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. சர்வதேச தன்னார்வ அமைப்பான, ஐ.டி.டி.பி., உடன் இணைந்து, சென்னை பெருநகர் பகுதிக்கான ஒருங்கிணைந்த ... |
| '4,900 ரூபாய் மதிப்பு சாக்லெட் தான் வேண்டும்': ஆயுத கப்பலுடன் சிக்கிய வெளிநாட்டவர்கள் அடம் Posted: புழல்: இந்திய கடல் பகுதிக்குள், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த குற்றம் தொடர்பாக கைதாகி, புழல் மத்திய சிறையில் உள்ள, வெளிநாட்டு கைதிகள், விலை உயர்ந்த சாக்லெட் மற்றும் சிகரெட் கேட்டு, சிறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.தூத்துக்குடி அருகே, அமெரிக்காவின், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான, 'சீமேன் கார்டு ஓகியோ' என்ற கப்பல், கடந்த அக்., 12ம் தேதி, இந்திய கடல் எல்லைக்குள் வந்தது.35 பேர்: ஆயுதங்களோடு, உரிய அனுமதியின்றி இருந்த அந்த கப்பல், கடலோர காவல் படையிடம் சிக்கியது. அதில் இருந்த கேப்டன் உட்பட, 35 பேர் கைது செய்யப்பட்டனர். ... |
| 75 குவாரிகள் மூடப்பட்டதால் மணல் தட்டுப்பாடு: "கிடுகிடு' விலை உயர்வால் மக்கள் அவதி Posted: சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி, தமிழகம் முழுவதும், 75க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டதன் எதிரொலியாக, மணல் விலை, "கிடு கிடு'வென உயர்ந்துள்ளது. இதனால், புதிய வீடு கட்டுவோர் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள குவாரிகளில் இருந்து, மணல் அள்ளுவதற்காக வந்த ஒப்பந்ததாரர்களால், முறைகேடுகள் அதிகரித்ததாக புகார்கள் வந்தன. இது தொடர்பான வழக்கில், உயர்நீதி மன்றத்தின் கிடுக்கிப்பிடியால், காஞ்சிபுரத்தில், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட சில அதிகாரிகள், அண்மையில், பணி இடை நீக்கம் ... |
| வேட்டி அணிவரா அறநிலைய துறை அதிகாரிகள்? Posted: 'கோவில்களில், நம் நாட்டின் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வண்ணம், அறநிலையத் துறை அதிகாரிகள் வேட்டி கட்ட வேண்டும்' என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும், 39 ஆயிரம் கோவில்கள் உள்ளன. 'இவற்றில் பணிபுரியும் அர்ச்சகர், பூசாரி, பாரம்பரிய உடையான வேட்டி கட்ட வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது. அதே போல், கோவில்களை நிர்வகிக்கும், அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளும், வேட்டி அணிந்து வர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: நம் நாட்டின் பாரம்பரிய வழக்கங்கள், ... |
| 'இடியட்ஸ்' என்று கூறவில்லை: விஞ்ஞானி ராவ் திட்டவட்டம் Posted: பெங்களூரு: "அரசியல்வாதிகளை, 'இடியட்ஸ்' என்று கூறவே இல்லை. என் வார்த்தை தவறாக அர்த்தம் செய்யப்பட்டுள்ளது," என்று, 'பாரத ரத்னா' விருது பெற்ற விஞ்ஞானி ராவ் தெரிவித்தார்.தவறானதல்ல: 'அறிவியல் ஆராய்ச்சிக்கு மிகவும் குறைந்த அளவு நிதியுதவியை, அரசியல்வாதிகள் வழங்குகின்றனர். இவர்களை, 'இடியட்ஸ்' என்று தான் சொல்ல வேண்டும். 'இப்படியிருந்தும் விஞ்ஞானிகள், அறிவியலில் பல சாதனைகள் செய்து வருகின்றனர்' என, பாரத ரத்னா விருது பெற்ற, பெங்களூருவை சேர்ந்த, விஞ்ஞானி ராவ் தெரிவித்திருந்தார். இந்த பேச்சு, அரசியல் தலைவர்களிடையே, சலசலப்பை ... |
| ராகுல் கூட்டத்துக்கு வந்தவர்கள் பாதியிலேயே வெளியேறியது ஏன்: ஷீலா தீட்ஷித் புது விளக்கம் Posted: புதுடில்லி: ராகுல் பங்கேற்ற கூட்டத்துக்கு வந்திருந்த தொண்டர்களுக்கு, குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் தான், தொண்டர்கள், கூட்டம் முடிவடைவதற்குள், எழுந்து சென்றனர்,'' என, டில்லி முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, ஷீலா தீட்ஷித் கூறியுள்ளார்.டில்லியில், முதல்வர் ஷீலா தீட்ஷித் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த மாதம், 4ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், பா.ஜ., அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு இடையே, மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், டில்லியின், தக்சின்புரியில், காங்., வேட்பாளர்களை ஆதரித்து, ... |
| புத்தாண்டில் தெலுங்கானா உதயம்? : உயர்மட்டகுழு ஆலோசனை Posted: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான ஆலோசனைகள் அனைத்தும், முடிவுக்கு வந்துவிட்டன. வரும் டிசம்பர் மாதம், ஆந்திர சட்டசபையில் இயற்றப்படும் தீர்மானம், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக, வரும் புத்தாண்டில், தெலுங்கானா உருவாகப்போகிறது.ஆந்திராவை பிரித்து, தனி மாநிலம் அமைக்கும் முடிவை, மத்திய அரசு எடுத்து, அதற்கான பணிகளில், தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக, ஆதரவு எதிர்ப்பு என இரண்டுமே, வலுவாக இருந்து வந்தாலும், எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல், தெலுங்கானா உருவாக்கத்தில், மத்திய அமைச்சர்கள் அடங்கிய, உயர்மட்டக்குழு ஈடுபட்டு வருகிறது. ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 19,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |