Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பிளஸ் 2 மாணவர்களுக்கு தனியார் இன்ஜி., கல்லூரிகள் வலை: அடுத்த ஆண்டு சேர்க்கைக்கு இப்போதே 'வேலை' துவங்கியது

Posted:

அடுத்த கல்வி ஆண்டில், பொறியியல் கல்லூரிகளில் இடங்களை நிரப்ப, தனியார் கல்லூரிகள், இப்போதே, மாணவர்களுக்கு, வலை விரித்து வருகின்றன. தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியரை, தங்கள் கல்லூரிகளுக்கு, 'டூர்' அழைத்துச் சென்று, கல்லூரிகளைப் பற்றி, 'ஆஹா... ஓஹோ...' என, புகழ்பாடுகின்றனர். இதில், எத்தனை மாணவர், 'சிக்குவர்' என, தெரியவில்லை.தமிழகத்தில், 560 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில், அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், இரண்டு லட்சம் இடங்கள் இருந்தன. இதில், 1.4 லட்சம் இடங்கள் மட்டுமே நிரம்பின; 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ...

களைகட்டுகிறது ஏற்காடு இடைத்தேர்தல்: ஜெ., கருணாநிதி, ஸ்டாலின் பிரசாரம்

Posted:

ஏற்காடு இடைத் தேர்தலில், இம்மாதம், 30ம் தேதி முதல், மூன்று நாட்கள், முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். தொகுதி முழுவதும் வலம் வந்து, பொது மக்களை சந்தித்து, அ.தி.மு.க., வேட்பாளர் சரோஜாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.அதற்கு முன், தி.மு.க., வேட்பாளர் மாறனை ஆதரித்து, 20ம் தேதிக்கு மேல், இரண்டு கட்டமாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தீவிர பிரசாரம் செய்கிறார். இம்மாத இறுதியில், ஏற்காட்டில் நடக்கும், தி.மு.க., பிரசாரப் பொதுக்கூட்டம் ஒன்றில் மட்டும், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, பங்கேற்றுப் பேச உள்ளார்.தீவிர ஓட்டு சேகரிப்பு: ஏற்காடு ...

தேர்தல் கமிஷன் நோட்டீசுக்கு பதிலளிப்பாரா ராகுல்?

Posted:

புதுடில்லி: சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலுக்கு, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. இதற்கு, ராகுல் எந்தப் பதிலும் தெரிவிக்காததால், 'தன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது' என, அவர் அலட்சியமாக இருப்பது போல் தெரிகிறது.தேர்தல் நடத்தை விதிமுறைகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், டில்லி, மிசோரம் ஆகிய, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை, கண்டிப்புடன் ...

'குஜராத் கலவரத்துக்கு மோடி காரணமல்ல!': சொல்கிறார் பஞ்சாப் 'மாஜி' டி.ஜி.பி., கில்

Posted:

புதுடில்லி: ''குஜராத்தில் நடந்த கலவரத்துக்கு, முதல்வர் நரேந்திர மோடி மீது பழி சுமத்துவது தவறு,'' என, பஞ்சாப் மாநில முன்னாள் போலீஸ், டி.ஜி.பி., - கே.பி.எஸ்.கில் கூறியுள்ளார்.பஞ்சாப் மாநில, முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.,யும், 2002ல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்தவருமான, கே.பி.எஸ். கில் கூறியுள்ளதாவது: குஜராத்தில், 2002ல், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில், ஏராளமானோர் இறந்தனர். இந்த கலவரத்துக்கு பின், முதல்வர் நரேந்திர மோடியின், பாதுகாப்பு ஆலோசகராக, நான் நியமிக்கப் பட்டேன். கலவரம் நடந்த அனைத்து ...

காங்., அரசு தூக்கி எறியப்படும்: புனேயில் நரேந்திர மோடி ஆவேசம்

Posted:

புதுடில்லி: "மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றாமல், கர்வத்துடன் செயல்படும், காங்., தலைமயிலான மத்திய அரசு, அடுத்த லோக்சபா தேர்தலில், தூக்கி ஏறியப்படும்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம், புனேயில், நேற்று நடந்த, பா.ஜ., கூட்டத்தில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசியதாவது: ஜனநாயக நடைமுறையில், அரசாங்கம், மக்களுக்கு கடமைப்பட்டது. ஆனால், மத்தியில், தற்போதுள்ள, காங்., தலைமையிலான அரசு, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றாமல், கர்வத்துடன் செயல்படுகிறது. இப்படிப்பட்ட அரசை, அடுத்த லோக்சபா தேர்தலில், மக்கள், ...

தமிழக சார்-பதிவாளர் அலுவலகங்களில் "வெப்கேமரா' பொருத்தம்

Posted:

சென்னை: தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், "வெப்கேமரா, "ஐபி' கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி, துவங்கியுள்ளது. சென்னை பத்திரப்பதிவு தலைமை அலுவலகத்தில் இருந்தபடியே தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலங்களின் பணிகளை கண்காணிக்க முடியும். இதன் மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களில், முறைகேடு தடுக்கப்படுவதுடன், புரோக்கர்களின் நடமாட்டத்துக்கும், கிடுக்கிப் பிடி போடப்பட்டுள்ளது.தமிழக பத்திரப்பதிவுத்துறை, சென்னை, கோவை, கடலூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர் ஆகிய மண்டலங்களின் கட்டுப்பாட்டில், 578 ...

பெரியாறு அணை நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் தமிழகத்திற்கு இழப்பு எவ்வளவு

Posted:

தேனி: முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 152 அடியில் இருந்து, 136 ஆக, குறைக்கப்பட்டதால், தென் மாவட்டங்களில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறி உள்ளது.ஆங்கில பொறியாளர் பென்னி குவிக் கட்டிய இந்த அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 155 அடி. அணையின் பாதுகாப்பு கருதி, நீர் மட்டத்தை 152 அடியாக பென்னி குவிக் நிலை நிறுத்தினார். அணையின் குறைந்தபட்ச நீர் மட்ட உயரம் 136 அடி. இதற்கு மேல் வரும் நீர் மட்டுமே, மதகுகள் வழியாக கேரளாவிற்கு வெளியேறும் வகையில், அணை அமைந்துள்ளது. அணையில் எப்போதும் தேங்கும் நீரின் அளவு 104 அடி. ஆக, அணையில் 104 அடிக்கு மேல் உள்ள நீரை மட்டுமே ...

இசைபிரியா கொல்லப்பட்ட வீடியோ வெளியீடு

Posted:

லண்டன்: விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த,"டிவி' செய்தி வாசிப்பாளர், இசைப்பிரியா, அந்நாட்டு ராணுவத்தால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வீடியோ காட்சியை, லண்டனை சேர்ந்த, "சேனல்4 நிறுவனம் வெளியிட்டுள்ளது.இலங்கையில், பத்திரிகையாளராகவும், "டிவி' செய்தி வாசிப்பாளராகவும், பாடகியாகவும் இருந்தவர், ஷோபா என்ற இசைபிரியா, 27. விடுதலை புலிகள் இயக்கத்தில், தகவல் தொடர்பு பிரிவில் இவர் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இறுதி கட்ட சண்டையின் போது, இசைபிரியா கொல்லப்பட்டதாக, அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதற்கிடையே, லண்டனில் உள்ள, "சேனல்4 நிறுவனம் இசைபிரியா ...

டீசல் விலை உயர்வுக்கு முதல்வர் கடும் கண்டனம்

Posted:

சென்னை: டீசல் விலை உயர்வுக்கு, முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "நாட்டை சீரழிக்கும் அரசுக்கு எதிராக, ஓட்டு எனும் அம்பை எய்ய, மக்கள் தயாராகி விட்டனர். இதன் மூலம், ஆட்சி மாறும்; மக்களின் நிலை உயரும்' என, முதல்வர் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: வெங்காயத்தை உரிக்கும்போது வரும் கண்ணீரை விட, அதன் விலையை கேட்கும்போது வரும் கண்ணீரே அதிகம் என, மக்கள் கூறும் அளவிற்கு, வெங்காயம் உட்பட அனைத்து பொருட்களின் விலையும், விஷம் போல் உயர்ந்து வருகிறது.கண்டனம்: இந்த சூழ்நிலையில், நாட்டு மக்களுக்கு, தீபாவளிப் பரிசாக, டீசல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™