Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பிரதமர் பங்கேற்காவிட்டால் காரணத்தை துணிச்சலுடன் தெரிவிக்க வேண்டும்

Posted: 09 Nov 2013 01:16 PM PST

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காவிட்டால், "அது இலங்கைக்கு நெருக்குதல் கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை' என்பதை அவர் துணிச்சலுடன் தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா வலியுறுத்தினார்.

காமன்வெல்த் மாநாடு: பிரதமர் பங்கேற்காததே ஆறுதல்

Posted: 09 Nov 2013 01:15 PM PST

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காதது ஆறுதல் அளிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

கால்நடை மருந்தகங்களுக்கு ரூ.42.37 கோடியில் 164 புதிய கட்டடங்கள்

Posted: 09 Nov 2013 01:12 PM PST

ரூ.42.37 கோடி செலவில் கால்நடை மருந்தகங்களுக்கான 164 புதிய கட்டடங்களையும், ரூ.43.50 கோடியில் உறைவிந்து வங்கிக் கட்டடத்தையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

ஒடிஸாவில் 12 கோடி மரம் நட இலக்கு

Posted: 09 Nov 2013 01:07 PM PST

ஒடிஸாவில் பாய்லின் புயல் தாக்குதலில் அழிந்த மரங்களுக்குப் பதிலாக மாநிலம் முழுவதும் 12 கோடி மரங்களை நட ஒடிஸா அரசு திட்டமிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் தேர்தலுக்கு "நோட்டா' தேவையில்லை

Posted: 09 Nov 2013 01:07 PM PST

தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு எந்திரத்தில் இடம் பெற்றுள்ள "வாக்களிக்க விருப்பமில்லை' (நோட்டா) பொத்தான், பிரிவினைவாதிகளுக்கே சாதகமாக அமையும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தாஜ் முஹைதீன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கருத்துக் கணிப்புகளுக்கு டிசம்பர் 4 வரை தடை

Posted: 09 Nov 2013 01:06 PM PST

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் வரும் 11 ஆம் தேதி முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

ஆந்திரம், ஒடிஸாவுக்கு தலா ரூ.1,000 கோடி புயல் நிவாரண நிதி

Posted: 09 Nov 2013 01:06 PM PST

"பாய்லின்' புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரம், ஒடிஸா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தலா ரூ.1,000 கோடி இடைக்கால நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

பிரதமர் மீது வி.கே. சிங் புதிய புகார்

Posted: 09 Nov 2013 01:05 PM PST

பல்வேறு தருணங்களில் பிரதமர் மன்மோகன் சிங் தனது இயலாமையை வெளிப்படுத்தினார் என்று ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங் தனது சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தவறான வார்த்தைப் பிரயோகம்: மோடி மீது மன்மோகன் சிங் மறைமுக தாக்கு

Posted: 09 Nov 2013 01:04 PM PST

கோவா: உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட நைஜீரியர்கள்

Posted: 09 Nov 2013 12:59 PM PST

கோவா மனித உரிமை ஆணையம் தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நைஜீரியர்கள் 3 பேர், தங்களது உண்ணாவிரதத்தை வெள்ளிக்கிழமை முடித்துக்கொண்டனர்.

காஷ்மீர் வானொலி இயக்குநருக்கு பிடிவாரண்ட்

Posted: 09 Nov 2013 12:59 PM PST

செய்தி வாசிப்பாளர் தொடர்ந்த அவதூறு வழக்கில் காஷ்மீர் வானொலி இயக்குநருக்கு ஸ்ரீநகர் நீதிமன்றம் சனிக்கிழமை பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது.

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்க மக்கள் உதவினர்

Posted: 09 Nov 2013 12:58 PM PST

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்க மக்கள் உதவியதால், மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வளர்ச்சிப்பணிகள், நிலைகுலைந்திருந்த பொருளாதாரம் உயிர்பெற்றுள்ளன என்று முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார். தீய சக்திகள் களை எடுக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் "பத்ம' விருதுகள் அளிக்க பரிந்துரை

Posted: 09 Nov 2013 12:58 PM PST

பத்ம விருதுகளுக்கு முக்கிய பிரமுகர்கள் சிலர் தங்களது உறவினர்களையும், நண்பர்களையும் பரிந்துரை செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

விமானப் பயணியிடமிருந்து 2 கிலோ தங்கம் பறிமுதல்

Posted: 09 Nov 2013 12:54 PM PST

சவூதி அரேபியாவிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு பயணி ஒருவர் விமானத்தில் கடத்தி வந்த 2 கிலோ தங்கத்தை கரிபூர் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி: பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு

Posted: 09 Nov 2013 12:53 PM PST

நாடாளுமன்ற தேர்தலில், எந்தக் கட்சியுடனும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடாது என்றும், தேர்தலில் தனித்தே போட்டியிடும் என்றும் அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சார்லஸ், கமீலா அஞ்சலி

Posted: 09 Nov 2013 12:52 PM PST

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸýம், அவரது மனைவி கமீலாவும் அஞ்சலி செலுத்தினர்.

கடுமையான காயங்களுடன் பெண் உயிரிழப்பு: ஓய்வு பெற்ற நீதிபதி, மகன் கைது

Posted: 09 Nov 2013 12:49 PM PST

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் கடுமையான தீக்காயங்களுடன் செரோலினா மசி (40) என்ற பெண் உயிரிழந்த சம்பவத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ஆர். பரத்வாஜ், அவரது மகன் தேவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அறந்தாங்கியில்அரசின் விலையில்லா கறவைமாட்டை விற்றவர் மீது வழக்கு

Posted: 09 Nov 2013 12:45 PM PST

அறந்தாங்கியில் அரசின் விலையில்லா கறவைமாட்டை விற்றவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். அறந்தாங்கி அருகேயுள்ள சிதம்பரவிடுதி கால்நடை மருத்துவர் முருகராஜ், அவரது பகுதியில் அரசு வழங்கிய விலையில்லா மாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

"அடிப்படை சட்ட விழிப்புணர்வை பாமர மக்களும் பெற வேண்டும்'

Posted: 09 Nov 2013 12:44 PM PST

அடிப்படை சட்டம் பற்றிய விழிப்புணர்வை பாமர மக்களும் பெற வேண்டும் என்றார் திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி பி. வேல்முருகன்.

பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 09 Nov 2013 12:44 PM PST

திருச்சி பொன்மலை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை விரைந்து அமைக்க வலியுறுத்தல்

Posted: 09 Nov 2013 12:44 PM PST

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை விரைவில் அமைக்க வேண்டும் என சமூக நீதிப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

தனியார் நிறுவன ஊழியர் மர்மச் சாவு:உறவினர்கள் மறியல்

Posted: 09 Nov 2013 12:44 PM PST

தனியார் நிறுவன ஊழியர் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மிளகாயில் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை

Posted: 09 Nov 2013 12:44 PM PST

மிளகாய் பயிரில் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த தோகைமலை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன் யோசனை தெரிவித்துள்ளார்.

விராலிமலையில் ரூ. 12 லட்சத்தில் விஷம் முறிவு சிகிச்சை மையம் திறப்பு

Posted: 09 Nov 2013 12:44 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஷம் முறிவு சிகிச்சை மையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

112 அங்கன்வாடிகளுக்கு குடிநீர்த் தொட்டிகள்

Posted: 09 Nov 2013 12:44 PM PST

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 112 அங்கன்வாடி மையங்களுக்கு ரூ. 44 லட்சத்து 80 ஆயிரத்தில் தரைமட்ட குடிநீர்த் தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர்   எ. சரவணவேல்ராஜ்.

கடனளித்தவர் மிரட்டுவதாகப் புகார்

Posted: 09 Nov 2013 12:44 PM PST

கடன் கொடுத்தவர் தற்போது கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் ஒருவர், திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை புகார் அளித்தார்.

வி.களத்தூர் ஊராட்சியில் பகுதிநேர ரேஷன்கடை

Posted: 09 Nov 2013 12:44 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வி. களத்தூர் ஊராட்சியில் உள்ள மேட்டுச்சேரி கிராமத்தில், பகுதிநேர நியாய விலைக்கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமையலின்போது தீ விபத்து: மூதாட்டி சாவு

Posted: 09 Nov 2013 12:44 PM PST

கரூரில் சமைக்கும் போது நேரிட்ட தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவரது மனைவி சரோஜா (61).

மிளகாய்ப் பயிரில் இலைப்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த யோசனை

Posted: 09 Nov 2013 12:44 PM PST

மிளகாய் பயிரில் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த தோகைமலை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன் யோசனை தெரிவித்துள்ளார்.

கே.பேட்டை ஊராட்சிப் பகுதியில் மஞ்சள் காமாலை: அதிகாரிகள் ஆய்வு

Posted: 09 Nov 2013 12:44 PM PST

கே. பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 பேர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

விசைப் படகில் டீசல் திருடியவர் கைது

Posted: 09 Nov 2013 12:44 PM PST

ஜெகதாபட்டினம் துறைமுகத்தில் படகில் இருந்து டீசல் திருடியவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். மணமேல்குடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மணி மகன் ரெங்கநாதனின் (47) விசைப் படகு, ஜெகதாபட்டினம்

திருச்சி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

Posted: 09 Nov 2013 12:44 PM PST

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

டிப்பர் லாரி மோதி இளைஞர் சாவு

Posted: 09 Nov 2013 12:44 PM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சனிக்கிழமை காலை டிப்பர் லாரி மோதி இளைஞர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

அன்னவாசல் ஒன்றிய விளையாட்டுப் போட்டிகள்

Posted: 09 Nov 2013 12:31 PM PST

அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் இலுப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன.

காய்ச்சலைத் தடுக்க ஒன்றிய அளவில் குழுக்கள்

Posted: 09 Nov 2013 12:31 PM PST

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அளவில் குழுக்கள் அமைக்கப்படும் என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்.

பதிவறை அலுவலக கட்டடத்துக்கு பூமி பூஜை

Posted: 09 Nov 2013 12:31 PM PST

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் புதிய பதிவறை அலுவலகக் கட்டடத்துக்கான பூமி பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கி அரபி பள்ளியில் 29 மாணவர்களுக்கு சைக்கிள்

Posted: 09 Nov 2013 12:31 PM PST

அறந்தாங்கி அலி ஜைனம் ஜமாஅத் ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளி முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கந்தர்வகோட்டையில் 77 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை

Posted: 09 Nov 2013 12:30 PM PST

கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 77 பேருக்கு விரைவு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

வட்டாட்சியர் பணியிடத்தை நிரப்ப வலியுறுத்தல்

Posted: 09 Nov 2013 12:30 PM PST

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நிரந்தர வட்டாட்சியர் நியமிக்கப்படாததால் பணிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நவ. 12-ல் கடையடைப்பு

Posted: 09 Nov 2013 12:30 PM PST

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நவ. 12-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன்.

"வங்கி ஊழியர்கள் டிச. 11-ல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி'

Posted: 09 Nov 2013 12:30 PM PST

தேவையற்ற வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட  வலியுறுத்தி, புதுதில்லியில் டிச. 11-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படவுள்ளது என்றார் தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன மாநிலச் செயலர் ஆர். விஜயகுமார்.

பட்டாசு ஆலை விபத்தில் இறந்தோருக்கு ரூ. 10 லட்சம் வழங்க வலியுறுத்தல்

Posted: 09 Nov 2013 12:29 PM PST

கும்பகோணம் அருகே ஒழுகச்சேரி பட்டாசு தீ விபத்தில் தீயில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

919 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை

Posted: 09 Nov 2013 12:29 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஆர்டிபி கல்லூரி வளாகத்தில் பட்டா மாறுதல் ஆணை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன்

Posted: 09 Nov 2013 12:28 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்  கூட்டுறவு நகர வங்கி வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுவுக்கு வங்கிக் கடன் வழங்கும் விழா  அண்மையில் நடைபெற்றது.

கால்நடைகளுக்கு மர்ம காய்ச்சல்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

Posted: 09 Nov 2013 12:28 PM PST

தஞ்சைப் பகுதி கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள மர்ம காய்ச்சலுக்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பாமக வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி:தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் அணிகள் வெற்றி

Posted: 09 Nov 2013 12:28 PM PST

தஞ்சாவூரில் சனிக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் அணிகள் வெற்றி பெற்றன.

சுப்பிரமணியர் கோவிலில் சூரசம்ஹாரம்

Posted: 09 Nov 2013 12:27 PM PST

திருத்துறைப்பூண்டி ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலில் கந்தசஷ்டி விழாவில் வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.

வீடு புகுந்து 3 பெண்களை குத்தியவர் தலைமறைவு

Posted: 09 Nov 2013 12:27 PM PST

காரைக்காலில் வீடு புகுந்து பெண்கள் மூவரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸார் தேடிவருகின்றனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவது: காரைக்கால் கணபதி நகர் விரிவாக்கத்தைச் சேர்ந்த ஷியாம்

காரைக்காலில் வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு "எண் பலகை' அறிமுகம்

Posted: 09 Nov 2013 12:27 PM PST

காரைக்கால் பகுதியில் வாகனங்களுக்கு போக்குவரத்துத் துறை சார்பில் உயர் பாதுகாப்பு பெயர் எண் பலகை பொருத்தும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

ஓவியப் போட்டி: 300 குழந்தைகள் பங்கேற்பு

Posted: 09 Nov 2013 12:26 PM PST

திருவாரூர் தியாகராஜர் கோயில் வளாகத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி அண்மையில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

காரைக்காலில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

Posted: 09 Nov 2013 12:26 PM PST

"காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. புதுச்சேரி, மேட்டுப்பாளையும் தொழிற்பேட்டையில்  அமைந்துள்ள யூகால் பிவல் சிஸ்டம் நிறுவ

மயிலாடுதுறை உணவகத்தில் தீ விபத்து

Posted: 09 Nov 2013 12:26 PM PST

மயிலாடுதுறையில் உணவகத்தில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலைய முகப்பில் நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் தனியார்

"நாகை மாவட்டத்தில் மாடுகளின் இறப்பு விரைவில் கட்டுப்படுத்தப்படும்

Posted: 09 Nov 2013 12:25 PM PST

நாகை மாவட்டத்தில் கோமாரி மற்றும் தொண்டை அடைப்பான் நோயால் மாடுகள் உயிரிழப்பது விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்றார் கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் ஆர். பழனிசாமி.

மத்தியில் ஆட்சி மாற்றம் அவசியம்

Posted: 09 Nov 2013 12:25 PM PST

மத்தியில் ஊழலில் திளைத்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மாற்றப்பட வேண்டியது அவசியம் என்றார் பாரதியஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.

தடுப்புக் காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

Posted: 09 Nov 2013 12:25 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள கள்ளப்பட்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமாரசாமி மகன் தேவராஜன் (43). இவர், அரும்பாவூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்தாராம். இதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸார் கடந்த மாதம் அவரைக் கைது செய்து, திருச்சி   சிறையில் அடைத்தனர்.

அகல் விளக்கு தயாரிப்புப் பணிகள் தீவிரம்

Posted: 09 Nov 2013 12:24 PM PST

பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

டிப்பர் லாரி மோதி இளைஞர் சாவு

Posted: 09 Nov 2013 12:24 PM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சனிக்கிழமை காலை டிப்பர் லாரி மோதி இளைஞர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

சுகாதார அலுவலர்களுக்கு வாக்கி - டாக்கி

Posted: 09 Nov 2013 12:24 PM PST

அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வசதியாக சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு வாக்கி - டாக்கி கருவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

நாளை தேசிய மகளிர் விளையாட்டுப் போட்டி

Posted: 09 Nov 2013 12:24 PM PST

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கில், மாவட்ட அளவிலான 39-வது தேசிய மகளிர் விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை (நவ.11)  நடைபெற உள்ளன.

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர் சாவு

Posted: 09 Nov 2013 12:23 PM PST

திருமானூர் அருகே விபத்தில் காயமடைந்த இளைஞர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

போக்குவரத்து நெரிசலில் ஜயங்கொண்டம்

Posted: 09 Nov 2013 12:23 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகரானது கண்ட இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களாலும், வியாபாரிகளின் ஆக்கிரமிப்புகளாலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. மாவட்டத்தின் பெரிய நகரான ஜயங்கொண்டம் நகராட்சி தலைநகரைவிட அதிக மக்கள்

2-ம் திருமணம்: கணவர் உள்பட 3 பேர் கைது

Posted: 09 Nov 2013 12:23 PM PST

அரியலூர் அருகே முதல் மனைவிக்குத் தெரியாமல் 2-ம் திருமணம் செய்தவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மகளிர் கைப்பந்துப் போட்டி தொடக்கம்

Posted: 09 Nov 2013 12:22 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை , அறிவியல் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது.  கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர். ரகுநாதன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர்

ஊர்க்காவல் படை அலுவலகத்துக்கு பூமிபூஜை

Posted: 09 Nov 2013 12:22 PM PST

அரியலூரில் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகக் கட்டடத்துக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

திருமயத்தில் விரைவு பட்டா மாறுதல் முகாம்:314 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை

Posted: 09 Nov 2013 12:22 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விரைவுப்பட்டா மாறுதல் முகாமில் மனு அளித்த 314 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகளை ஆட்சியர் செ. மனோகரன் வழங்கினார்.

"இழப்புகளைத் தவிர்க்க பயிர், கால்நடை காப்பீடு அவசியம்'

Posted: 09 Nov 2013 12:21 PM PST

இழப்புகளைத் தவிர்க்க விவசாயிகள் தங்களது பயிர் மற்றும் கால்நடைகளை காப்பீடு செய்வது அவசியம் என்றார் வம்பன் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் மு. அசோகன்.

குப்பைகளை அப்புறப்படுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Nov 2013 12:21 PM PST

பொன்னமராவதியில் காந்தி சிலை அருகே கொட்டப்படும் குப்பைகளை அகற்றக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விராலிமலையில் ரூ. 12 லட்சத்தில் விஷம் முறிவு சிகிச்சை மையம் திறப்பு

Posted: 09 Nov 2013 12:20 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஷம் முறிவு சிகிச்சை மையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

புதுகை நகராட்சியைக் கண்டித்து நூதன போராட்டம்: 54 பேர் கைது

Posted: 09 Nov 2013 12:20 PM PST

புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேடுகளைக் கண்டித்து, பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 54 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

இலுப்பூரில் டெங்குகாய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 09 Nov 2013 12:20 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம் அண்மையில் நடைபெற்றது.

லோக் அதாலத்:ரூ. 12 லட்சம் கடன் வசூல்

Posted: 09 Nov 2013 12:19 PM PST

ஆலங்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 12 லட்சம் வராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது.

அரசின் விலையில்லாகறவைமாட்டை விற்றவர் மீது வழக்கு

Posted: 09 Nov 2013 12:19 PM PST

அறந்தாங்கியில் அரசின் விலையில்லா கறவைமாட்டை விற்றவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். அறந்தாங்கி அருகேயுள்ள சிதம்பரவிடுதி கால்நடை மருத்துவர் முருகராஜ், அவரது பகுதியில் அரசு வழங்கிய

நவ. 11, 16-ல் மாவட்ட மகளிர் விளையாட்டுப் போட்டிகள்

Posted: 09 Nov 2013 12:19 PM PST

புதுக்கோட்டை மாவட்ட மகளிர் விளையாட்டுப் போட்டிகள் நவ. 11, 16-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. நவ. 11-ம் தேதி  மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தடகளம், மேசைப்பந்து, கபடி, கோ-கோ, கையுந்து

நவ. 15-ல் விவசாயிகள்குறைக்கேட்பு முகாம்

Posted: 09 Nov 2013 12:19 PM PST

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கான குறைக்கேட்பு முகாம் நவ. 15-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் சாவு

Posted: 09 Nov 2013 12:18 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஒழுகச்சேரி கிராமத்தில் பட்டாசு ஆலையில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

16 மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்

Posted: 09 Nov 2013 12:18 PM PST

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் விழாவில், 16 பேருக்கு மாநில  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் ஸ்கூட்டர் வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகளை அரசு உருவாக்க வலியுறுத்தல்

Posted: 09 Nov 2013 12:18 PM PST

மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகளை அரசே உருவாக்க வேண்டும்  எனத் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்  உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியது. தஞ்சாவூரில் இந்தச் சங்கத்தின் மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

ஜீப் கவிழ்ந்ததில் டி.எஸ்.பி உள்பட 4 பேர் காயம்

Posted: 09 Nov 2013 12:17 PM PST

தஞ்சாவூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு ஜீப் கவிழ்ந்ததில் காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

விஷம் குடித்து பெண் தற்கொலை

Posted: 09 Nov 2013 12:17 PM PST

திருவாரூர் அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

கடன் கொடுத்தவர் கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்

Posted: 09 Nov 2013 12:17 PM PST

கடன் கொடுத்தவர் தற்போது கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் ஒருவர், திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை புகார் அளித்தார்.

சீர்காழியில் கடையடைப்பு

Posted: 09 Nov 2013 12:16 PM PST

சீர்காழியில் காவல் துறையை கண்டித்து, வர்த்தகர்களில் ஒருபிரிவினர் சனிக்கிழமை கடையடைப்பில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Nov 2013 12:16 PM PST

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி, தஞ்சாவூர் ரயிலடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்  சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்

Posted: 09 Nov 2013 12:15 PM PST

854 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

Posted: 09 Nov 2013 12:04 PM PST

குளச்சல், ஒற்றையால்விளை, குமாரபுரம், தோப்பூர் உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் 854 மாணவர், மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை அமைச்சர் கே.டி. பச்சைமால் சனிக்கிழமை வழங்கினார்.

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியக் கூட்டம்: உறுப்பினர்கள் வெளிநடப்பு

Posted: 09 Nov 2013 12:03 PM PST

நட்டாலம் ஊராட்சியில் அனுமதியின்றி கேஸ் குடோன் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்,தேமுதிகவைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளுக்கு இன்று ஆறாட்டு

Posted: 09 Nov 2013 12:03 PM PST

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆறாட்டு நடைபெறுகிறது. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை

கடனைக் கேட்டு கடைக்காரர் வீட்டு முன் பெண் தர்னா

Posted: 09 Nov 2013 12:02 PM PST

நித்திரவிளை அருகே கடனைத் திருப்பிக் கேட்டு வியாபாரி வீட்டு முன் இளம்பெண் சனிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டார்.

விவசாயி மர்மச் சாவு: மனைவி காயம்

Posted: 09 Nov 2013 12:02 PM PST

நாகர்கோவில் அருகே சனிக்கிழமை வீட்டில் தீக்காயங்களுடன் விவசாயி இறந்து கிடந்தார். அவரது மனைவி தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காமன்வெல்த் மாநாடு: குமரி மாவட்டத்தில் 12-ல் கடையடைப்பு

Posted: 09 Nov 2013 12:02 PM PST

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் உள்ளிட்ட இந்தியப் பிரதிநிதிகள்  கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.12) பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல்: 11 பேர் மீது வழக்கு

Posted: 09 Nov 2013 12:02 PM PST

: கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியரை கொலை செய்ய முயன்றதாக 11 பேர் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.

கிணற்றில் குதித்துபெண் தற்கொலை

Posted: 09 Nov 2013 12:01 PM PST

மார்த்தாண்டம் அருகே பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார்.

பொறியியல் கல்லூரி மாணவர் திடீர் சாவு: வகுப்பறைகளைச் சேதப்படுத்திய மாணவர்கள்

Posted: 09 Nov 2013 12:01 PM PST

அஞ்சுகிராமம் அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் திடீரென இறந்ததால் அக்கல்லூரி மாணவர்கள் வகுப்பறைகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை வெள்ளிக்கிழமை இரவு சேதப்படுத்தினர்.

தக்கலை பள்ளியில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள்

Posted: 09 Nov 2013 12:01 PM PST

கன்னியாகுமரி மாவட்ட திருவருள்பேரவை மற்றும் பத்மநாபபுரம் நகர திருவருள்பேரவை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரைப் போட்டிகள் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி பள்ளியில் விளையாட்டு விழா

Posted: 09 Nov 2013 12:01 PM PST

கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் 92-வது விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகர்கோவிலில் நாளை மகளிர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

Posted: 09 Nov 2013 12:00 PM PST

மாநிலப் போட்டியில் தேர்வு பெறுவதற்கான கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டிகள் நாகர்கோவிலில் நவ.11ஆம் தேதி தொடங்குகிறது.

பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ. 15 லட்சத்தில் வாங்கப்பட்ட புதிய டிப்பர் லாரியை சுகாதாரப் பணிக்காக நகர்மன்றத் தலைவர் எஸ். சத்தியாதேவி  கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

Posted: 09 Nov 2013 11:59 AM PST

பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ. 15 லட்சத்தில் வாங்கப்பட்ட புதிய டிப்பர் லாரியை சுகாதாரப் பணிக்காக நகர்மன்றத் தலைவர் எஸ். சத்தியாதேவி  கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

குலசேகரன்பட்டினம் கோவிலில் சூரசம்ஹாரம்

Posted: 09 Nov 2013 11:58 AM PST

குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி உடனுறை காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவிலில் வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரம்  நடைபெற்றது.

பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Posted: 09 Nov 2013 11:58 AM PST

காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோருக்காக மனநலம், பணித்திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

சாத்தான்குளம் பள்ளி ஆண்டு விழா

Posted: 09 Nov 2013 11:58 AM PST

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 35-ம் ஆண்டு விழா நடைபெற்றது.

முன்னாள் ஊராட்சித் தலைவரை தாக்கியதாக இருவர் மீது வழக்கு

Posted: 09 Nov 2013 11:57 AM PST

கோவில்பட்டியில் முன்னாள் ஊராட்சித் தலைவரை சனிக்கிழமை தாக்கியதாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.            


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™