Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சாலையோர வியாபாரிகள் சங்கக் கூட்டம்

Posted: 28 Nov 2013 01:18 PM PST

புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட சாலையோர சிறு வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கக் கூட்டம் பு.புளியம்பட்டியில் பி.எஸ்.கே.நிஜாம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

குழாய் வழியாக எரிவாயு கொண்டுசெல்லும் திட்டத்திற்கு காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

Posted: 28 Nov 2013 01:18 PM PST

குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்துக்கு காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

"அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்'

Posted: 28 Nov 2013 01:18 PM PST

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் க.குருநாதன் கூறினார்.

பவானிசாகரில் 26 மாடுகள் பறிமுதல்

Posted: 28 Nov 2013 01:17 PM PST

கர்நாடக மாநிலத்திலிருந்து புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் மாடுகளை விற்க, பவானிசாகரில் முகாமிட்டிருந்த 5 பேரை  பிடித்து பவானிசாகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 67.85 அடி

Posted: 28 Nov 2013 01:17 PM PST

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 67.85 அடியாக இருந்தது.

பார்த்தீனிய செடிகளை அழிக்கக் கோரிக்கை

Posted: 28 Nov 2013 01:17 PM PST

திருப்பூர் மாவட்டத்தின் பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக வளர்ந்துள்ள பார்த்தீனிய செடிகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டியன்கோவில் ஊராட்சியின் முன்னாள் தலைவர் டி.கோபால் வலியுறுத்தியுள்ளார்

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம்

Posted: 28 Nov 2013 01:16 PM PST

அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும். இல்லையெனில், இடைக்கால நிவாரணமாக ஊதியத்துடன் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திருப்பூரில் நடைபெற்ற அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க(சி.ஐ.டி.யு) மண்டலப் பேரவைக் கூட்டத்தில்

நள்ளிரவில் தொலைபேசியில் தொல்லை கொடுத்த மாணவர்களுக்கு ஆசிரியர் பிரம்படி

Posted: 28 Nov 2013 01:16 PM PST

நள்ளிரவில் ஆசிரியருக்கு தொலைபேசி மூலமாக தொல்லை கொடுத்த மாணவர்களை, அடுத்தநாள் பள்ளிக்குச் சென்ற அந்த ஆசிரியர் தன் ஆத்திரம் தீர மாணவர்களை பிரம்பால் அடித்ததில், ஒரு மாணவர் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை சேர்க்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் போலி ஆவணம் கொடுத்த 4 பேர் கைது

Posted: 28 Nov 2013 01:16 PM PST

நீதிமன்றத்தில் ஜாமீன் தொடர்பாக போலி ஆவணங்களைக் கொடுத்ததாக 4 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர்கள், முதல்வர்களுக்கு பயிலரங்கம்

Posted: 28 Nov 2013 01:15 PM PST

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் 5 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் கல்வி கற்றுத்தருவது குறித்து அப்பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்களுக்கான பயிலரங்கம் திருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புருட்டோனியா புழுத் தாக்குதலால் விவசாயம் பாதிப்பு

Posted: 28 Nov 2013 01:15 PM PST

பல்லடம் அருகே உள்ள விவசாய பயிர்களில் புருட்டோனியா புழுத் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு தொழில் மானியம் மாதந்தோறும் கிடைக்க ஏற்பாடு

Posted: 28 Nov 2013 01:15 PM PST

வெளிமாநில பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் அரசுக்குச் செலுத்தும் 5 சதவீத விற்பனை வரித் தொகையில் 4 சதவீதத் தொகையை தமிழக அரசின் சிறப்பு தொழில் மானியமாக வருட முடிவில் திரும்பப் பெறலாம் என்ற நடைமுறை இருந்தது. இத்தொகையை இனி மாதந்தோறும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய அலுவலகம் முற்றுகை

Posted: 28 Nov 2013 01:15 PM PST

மும்முனை மின்சாரம் வழங்கும் நேரத்தை குறைக்கக் கூடாது என வலியுறுத்தி மடத்துக்குளம் மின்வாரிய அலுவலகத்தை வியாழக்கிழமை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க கூட்டம்

Posted: 28 Nov 2013 01:14 PM PST

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க கூட்டம் பல்லடம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் அபுபக்கர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது

மின்வெட்டுக்கு பிரச்னைக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பதிலடி கிடைக்கும்

Posted: 28 Nov 2013 01:14 PM PST

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்னைக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிலடி கிடைக்கும் என்று தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரக்குமார் வியாழக்கிழமை கூறினார்.

விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம் 1511 மனுக்கள் குவிந்தன

Posted: 28 Nov 2013 01:14 PM PST

அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் 1511 மனுக்கள் பெறப்பட்டன

ரூ.16 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

Posted: 28 Nov 2013 01:13 PM PST

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ரூ.16 லட்சத்து 46 ஆயிரத்து 820-க்கு கொப்பரை தேங்காய் விற்பனை செய்யப்பட்டது.

மின்வெட்டு: டிச.2 இல் திருப்பூர்தொழில்துறை கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 28 Nov 2013 01:13 PM PST

கடுமையான மின்வெட்டு காரணமாக பாதிப்புகுள்ளாகி வரும்  பின்னலாடைத் தொழில் குறித்து விவாதிக்க பின்னலாடைத் தொழில் கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை(டிச.2) நடைபெற உள்ளது.

சென்னிமலையில் 15-ல் உண்ணாவிரதம் கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் தீர்மானம்

Posted: 28 Nov 2013 01:13 PM PST

கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் போடும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, டிச.15-ஆம் தேதி சென்னிமலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாக கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் தீர்மானம் இயற்றியுள்ளது.

கொலை மிரட்டல் புகார்:அதிமுக நகர்மன்ற உறுப்பினர் தர்ணா

Posted: 28 Nov 2013 01:12 PM PST

உடுமலை நகராட்சித் தலைவர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி அதிமுக நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் நகர்மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது .

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு

Posted: 28 Nov 2013 01:12 PM PST

உடுமலை நகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி புதன்கிழமை நடைபெற்றது .

நவம்பர் 30 மின் தடை

Posted: 28 Nov 2013 01:12 PM PST

காளி வேலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை (நவ.30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்

பன்னா இஸ்மாயிலுக்கு டிசம்பர் 20 வரை நீதிமன்றக் காவல்

Posted: 28 Nov 2013 01:12 PM PST

தீவிரவாதி பன்னா இஸ்மாயிலை டிசம்பர் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வேலூர் சிறையில் அடைக்கும்படி வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 3-ன் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

தந்தையை கொன்ற மகன் கைது

Posted: 28 Nov 2013 01:11 PM PST

உடுமலை அருகே தளி கிராமத்தில் மனநிலை சரியில்லாமல் இருந்த தந்தையை அவரது மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடு மேய்க்கச் சென்றவர் பாறையில் மோதி சாவு

Posted: 28 Nov 2013 01:11 PM PST

உடுமலை அருகே ஆடு மேய்க்கச் சென்றவர் பாறையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். உடுமலையை அடுத்துள்ள அமராவதி வனச்சரகத்திற்கு உள்பட்ட கரட்டுப்பதி செட்டி ல்மெண்ட்டைச்

இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 28 Nov 2013 01:11 PM PST

செம்மிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பூர் ஐ பவுண்டேசன் மருத்துவமனை, அன்னை சந்தியா கண் தான கழகம் மற்றும் யு.என்.எப். கொசவம்பாளையம் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கூட்டமைப்பு

தொழிற்சங்க  கட்டடத் திறப்பு விழா

Posted: 28 Nov 2013 01:11 PM PST

மக்கள் தேசம் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்க பேரவை கட்டடத்திறப்பு விழா பல்லடம் கிளை முன்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

"கெயில் திட்டம்: விளை நிலங்கள் பாதித்தால் எதிர்ப்போம்'

Posted: 28 Nov 2013 01:11 PM PST

கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்களைப் பதிப்பதில் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவிக்கும் என்று அத்துறையின் இணைஅமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறினார்.

ஆட்டுக் குட்டிகள் இறப்பு எதிரொலி:  வெள்ளங்குளியில் ஆடுகளுக்கு தடுப்பூசி

Posted: 28 Nov 2013 01:10 PM PST

அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் ஆட்டுக் குட்டிகள் இறந்து வருவதை அடுத்து வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

ஓய்வூதியர் சங்கக் கூட்டம்

Posted: 28 Nov 2013 01:09 PM PST

திருநெல்வேலி மாவட்ட பொது நூலகத் துறை ஓய்வூதியர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

Posted: 28 Nov 2013 01:09 PM PST

இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

"டிச. 10-க்குள் கைவினைக் கலைஞர்கள் தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்'

Posted: 28 Nov 2013 01:09 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கைவினைக் கலைஞர்கள் தேசிய விருது பெற டிச. 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

நெல்லை மாவட்டத்துக்கு அடுத்தாண்டு ரூ.4,784 கோடி வங்கிக் கடன்: ஆட்சியர்

Posted: 28 Nov 2013 01:09 PM PST

திருநெல்வேலி மாவட்டத்துக்கு 2014-15ஆம் ஆண்டுக்கான முன்னுரிமைக் கடனாக வங்கிகள் மூலம் ரூ. 4,784.19 கோடி வழங்கப்படும் என ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.

டி.டி.மருத்துவக் கல்லூரியை ஏற்று நடத்த பரிசீலனை

Posted: 28 Nov 2013 01:09 PM PST

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படாமல் உள்ள டி.டி. மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்று நடத்துவதற்கான பரிசீலனை நடைபெற்று வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

பண்பொழியில் ஏர்கன் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம்

Posted: 28 Nov 2013 01:09 PM PST

திருநெல்வேலி மாவட்டம், பண்பொழியில் ஏர்கன் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்தார்.

"உணவுத் தொழில் செய்வோர் பிப். 4-க்குள் உரிமச் சான்றிதழ் பெறுவது கட்டாயம்'

Posted: 28 Nov 2013 01:08 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் உணவுத் தொழில் செய்வோர், 2014 பிப்.  4-ஆம் தேதிக்குள் உரிமச் சான்றிதழ் பெறுவது கட்டாயமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடியை பிரதமராக்க விரும்பும் கட்சிகளுடன் கூட்டணி

Posted: 28 Nov 2013 01:08 PM PST

நரேந்திர மோடியை நாட்டின் பிரதமராக்க விரும்பும் கட்சிகளுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைக்கும் என அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

நெல்லையில் மின்வாரிய கணக்கீட்டாளர் பணிக்கு நேர்காணல்

Posted: 28 Nov 2013 01:08 PM PST

திருநெல்வேலியில் மின்வாரிய கணக்கீட்டாளர் பணிக்கான நேர்காணல் நடைபெற்றது.

ரௌடிகள், கூலிப்படையினர் அராஜகம் ஒழிக்கப்படும்: புதிய துணை ஆணையர்

Posted: 28 Nov 2013 01:08 PM PST

திருநெல்வேலி மாநகரில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ரௌடிகள், கூலிப்படையினரின் செயல்பாடுகள் முழுவதுமாக ஒழிக்கப்படும் என சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராகப் பொறுப்பேற்ற து.

சுந்தரனார் பல்கலை. நெல்லை சந்திப்பு கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை

Posted: 28 Nov 2013 01:07 PM PST

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின், திருநெல்வேலி சந்திப்பு கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா: சுடர்ஒளிப் பயணம் தொடக்கம்

Posted: 28 Nov 2013 01:07 PM PST

தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தில் இருந்து சுடர்ஒளிப் பயணம் வியாழக்கிழமை தொடங்கியது.

சார் பதிவாளர் அலுவலகத்தில் திருட்டு: அலுவலக உதவியாளர் கைது; ரூ. 50 ஆயிரம் பறிமுதல்

Posted: 28 Nov 2013 01:07 PM PST

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும், பாளையங்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ. 4.12 லட்சம் திருடுபோன சம்பவத்தில், அலுவலக உதவியாளரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

7 இடங்களில் மின்வாரிய குறைதீர் கூட்டம்

Posted: 28 Nov 2013 01:07 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்வாரிய குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள், டிசம்பர் மாதத்தில் 7 இடங்களில் நடைபெற உள்ளது.

விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு

Posted: 28 Nov 2013 01:06 PM PST

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

மாநில யோகா, ஸ்கேட்டிங்: தச்சை பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 28 Nov 2013 01:06 PM PST

மாநில அளவிலான யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டியில் தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்றனர்.

சபரிமலை: விசாகப்பட்டினம் - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

Posted: 28 Nov 2013 01:06 PM PST

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலப் பூஜை நடைபெறுவதையொட்டி விசாகப்பட்டினம் - கொல்லம் இடையே காட்பாடி, கோவை வழியாக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

செங்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் மோதலில் 4 பேர் சஸ்பெண்ட்; சாலை மறியல்

Posted: 28 Nov 2013 01:06 PM PST

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மோதலில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கடப்பாக்கத்தில் சூரிய ஒளியில் இயங்கும் புதிய கலங்கரை விளக்கம்

Posted: 28 Nov 2013 01:05 PM PST

கடப்பாக்கத்தில் சூரிய ஒளியில் இயங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய கலங்கரை விளக்கத்தை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சனிக்கிழமை (நவம்பர் 30) தொடங்கி வைக்கிறார்.

விஜயகாந்த் மீதான கொலை முயற்சி வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை

Posted: 28 Nov 2013 01:03 PM PST

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது நாகர்கோவில் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.

திருச்செந்தூர் கோயிலில் ஜயேந்திரர் வழிபாடு

Posted: 28 Nov 2013 01:03 PM PST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை வழிபாடு (படம்) செய்தார்.

தெஹல்கா நிர்வாக ஆசிரியர் ஷோமா செளத்ரி ராஜிநாமா

Posted: 28 Nov 2013 01:02 PM PST

பெண் நிருபர் சுமத்திய பாலியல் புகார் விவகாரம் எதிரொலியாக,    தெஹல்கா பத்திரிகை நிர்வாக ஆசிரியர் பொறுப்பிலிருந்து ஷோமா சௌத்ரி வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.

பிரசாரத்தின் போது இழிவாக பேசினால் கடும் நடவடிக்கை

Posted: 28 Nov 2013 01:01 PM PST

தேர்தல் பிரசாரத்தின் போது இழிவாகப் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:

ரூ.24.61 லட்சத்தில் பிளாஸ்டிக் சாலை

Posted: 28 Nov 2013 01:01 PM PST

போளூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கிராமப்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தில் போளூரில் உள்ள அல்லிநகர் - திருசூர் வரை சுமார் 2 கிலோ மீட்டர் வரை பொதுமக்கள் பயன்படுத்திய பயனற்ற வேஸ்ட்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழுக் கூட்டம்

Posted: 28 Nov 2013 01:01 PM PST

திருவண்ணாமலை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

ரூ.34 லட்சத்தில் போடப்பட்டு 3 மாதத்துக்குள் சேதமடைந்த தார் சாலை

Posted: 28 Nov 2013 01:00 PM PST

செய்யாறு அருகே ரூ.34 லட்சத்தில் போடப்பட்ட தார் சாலை 3 மாதங்கள் கூட ஆகாத நிலையில் பல்லாங்குழி சாலையாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பசு, கன்று இறந்ததால் மாட்டு உரிமையாளர்கள் அச்சம்

Posted: 28 Nov 2013 01:00 PM PST

போளூரை அடுத்த மாம்பட்டு ஊராட்சியில் உள்ள விவசாயி ஒருவரின் பசு கோமாரி நோய் தாக்கி வியாழக்கிழமை இறந்தது.

68 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு

Posted: 28 Nov 2013 01:00 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வை 19,950 பேர் எழுதுகின்றனர்.

வாழ்வியல் திறன் பயிற்சி

Posted: 28 Nov 2013 01:00 PM PST

தொற்றா நோய் கருத்தரங்கம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

பனையூர் அரசுப் பள்ளியில் முப்பெரும் கூட்டம்

Posted: 28 Nov 2013 12:59 PM PST

ஆரணியை அடுத்த பனையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உடல்நலச்சங்கம், கிராமக்கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக்குழு என முப்பெரும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மருந்து வணிகர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted: 28 Nov 2013 12:59 PM PST

திருவண்ணாமலை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் புதிய மாவட்ட நிர்வாகிகள் அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான கணினிப் பயிற்சி நிறைவு

Posted: 28 Nov 2013 12:59 PM PST

திருவண்ணாமலையில் நடைபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான 2 நாள் கணினிப் பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது

தேர்ச்சி குறைந்த பள்ளிகள் இன்று தத்தெடுப்பு

Posted: 28 Nov 2013 12:58 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளை தத்து கொடுக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

கலசப்பாக்கத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 28 Nov 2013 12:58 PM PST

கோமாரி நோயால் இறந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

வினாத் தாள் கிடைக்காததால் திருவள்ளுவர் பல்கலை. தனித் தேர்வர்கள் ஏமாற்றம்

Posted: 28 Nov 2013 12:58 PM PST

செய்யாறு அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில், தேர்வு எழுத வியாழக்கிழமை வந்த இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு தனித் தேர்வர்களுக்கு வினாத் தாள் வழங்காததை அடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழர் பகுதிகளில் வாசன், விஜயகாந்த் பிரசாரம்

Posted: 28 Nov 2013 12:57 PM PST

வரும் டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தில்லியில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ், தேமுதிக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் வியாழக்கிழமை பிரசாரம் செய்தனர்.  தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் தமிழகத்தைச் சேர்ந்த

திருச்சானூரில் இன்று பிரம்மோற்சவம் தொடக்கம்

Posted: 28 Nov 2013 12:57 PM PST

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் இன்று தொடங்குகிறது. இதற்காக நேற்று முளைவிடுதல் உற்சவம் நடத்தப்பட்டது.

திருநெல்வேலி

Posted: 28 Nov 2013 12:57 PM PST

வெள்ளக்கோவில்

Posted: 28 Nov 2013 12:57 PM PST

ஈரோடு

Posted: 28 Nov 2013 12:56 PM PST

சென்னை பக்தர் 50 லட்சம் நன்கொடை

Posted: 28 Nov 2013 12:54 PM PST

திருமலை ஏழுமலையானுக்கு சென்னையைச் சேர்ந்த பக்தர் டிஜி ராவ் என்பவர் நன்கொடையாக 50 லட்சம் ரூபாயை அளித்தார்.

ஏழுமலையானை வழிபட்டார் ஆந்திர முதல்வர்

Posted: 28 Nov 2013 12:54 PM PST

திருமலை ஏழுமலையானை ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி வியாழக்கிழமை வழிபட்டார்.

அரசு ஊழியருக்கான கட்டண சலுகையில் 50% குறைப்பு

Posted: 28 Nov 2013 12:53 PM PST

அரசு ஊழியர்களுக்கு பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் வழங்கி வந்த தொலைபேசி கட்டணச் சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளன. முன்னறிவிப்பின்றி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மவுசு குறைந்தது: 19 கல்லூரிகளில் கைவிடப்பட்ட ஐ.டி. படிப்பு

Posted: 28 Nov 2013 12:49 PM PST

தகவல் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு மதிப்பு குறைந்து வருவதால் 2013-14 கல்வியாண்டில் 19 கல்லூரிகளில் பி.டெக். தகவல் தொழில்நுட்ப படிப்பு கைவிடப்பட்டது.

ஓட்டுநர்கள் பற்றாக்குறை: திண்டாடும் தீயணைப்புத்துறை

Posted: 28 Nov 2013 12:48 PM PST

தீயணைப்புத்துறையில் நிலவும் ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மாணவிகள் சஸ்பெண்ட் விவகாரம்: துணைவேந்தரிடம் முறையிட நீதிமன்றம் உத்தரவு

Posted: 28 Nov 2013 12:47 PM PST

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ராகிங் பற்றி புகார் அளித்த ஆறு மாணவிகளை சஸ்பெண்ட் செய்ததற்கு விதித்த இடைக்காலத் தடையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தரிடம் முறையீடுமாறு உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் பிடிபட்ட மேலும் 2 மாலுமிகளுக்கு சிகிச்சை

Posted: 28 Nov 2013 12:46 PM PST

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டவர்களில் மேலும் 2 மாலுமிகள், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை (நவ.28) சிகிச்சை பெற்றனர்.

பள்ளியில் ஆபாசப் படம்: 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

Posted: 28 Nov 2013 12:45 PM PST

அரும்பார்த்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கணினியில் ஆபாசப் படம் காண்பித்ததாக எழுந்த புகாரையடுத்து 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜீவ்காந்தி கொலை: சதிகாரர்களை கண்டுபிடிக்க சிபிஐ ரூ. 100 கோடி செலவு

Posted: 28 Nov 2013 12:45 PM PST

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சதிகாரர்களை அம்பலப்படுத்துவதற்காக சிபிஐ இதுவரை ரூ. 100 கோடி செலவழித்துள்ளதாக பேரறிவாளனின் வழக்குரைஞர் என்.சந்திரேசகரன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

மதுரையில் 100 வயது மூதாட்டிக்கு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை!

Posted: 28 Nov 2013 12:30 PM PST

மதுரை ப்ரீதி மருத்துவமனையில் 100 வயது மூதாட்டிக்கு இடுப்பு எலும்பு பந்து கிண்ண மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். தற்போது மூதாட்டி நலமாக உள்ளார்.

மனித மாண்புகளைப் பெறுவதே கல்வியின் குறிக்கோள்

Posted: 28 Nov 2013 12:30 PM PST

உயர்ந்த மனித மாண்புகளை அடையச் செய்வதே கல்வியின் இறுதி நோக்கமாக அமைய வேண்டும் என்று ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுவாமி ஆத்மப்பிரியானந்தர் தெரிவித்தார்.

குறிச்சி குளத்தில் நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு

Posted: 28 Nov 2013 12:29 PM PST

குறிச்சி குளத்தில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கே.பனீந்திர ரெட்டி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மாணவர்கள் முற்றுகையால் போக்குவரத்து பாதிப்பு

Posted: 28 Nov 2013 12:29 PM PST

சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த கணினியியல் துறைத் தலைவரை காவல் சிறப்பு துணை ஆய்வாளர் தாக்கியதால் வெகுண்ட மாணவர்கள் காவ்துறையினரை முற்றுகையிட்டனர். இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கோவை - திருச்சி

ஏற்காடு தொகுதியில் இன்று பிரசாரம் தொடக்கம்

Posted: 28 Nov 2013 12:29 PM PST

ஏற்காடு தொகுதியில் 4 நாள்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை சேலம் வந்தார். கட்சி நிர்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை காலை ஆலோசனை நடத்தும் அவர், மாலையில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

வெள்ளியங்காடு பள்ளிக்கு தமிழக அரசு ஒரு லட்சம் பரிசு

Posted: 28 Nov 2013 12:29 PM PST

வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கியுள்ளது.

திருவாரூர் மத்திய பல்கலை.யுடன் வேளாண் பல்கலை. இன்று ஒப்பந்தம்

Posted: 28 Nov 2013 12:29 PM PST

மண்வள மேலாண்மை, நீர்ப்பாசன மேலாண்மை குறித்த சான்றிதழ் படிப்புகளை வழங்க திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகமும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் வெள்ளிக்கிழமை (இன்று) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளன.

மணப்பாட்டில் போலீஸார் சோதனை: 6 பெட்ரோல் குண்டுகள், ஆயுதங்கள் சிக்கின

Posted: 28 Nov 2013 12:28 PM PST

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் போலீஸார், அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில், ஆறு பெட்ரோல் குண்டுகள், ஆயுதங்கள் சிக்கின.

வழிப்பறிகொள்ளையர்கள் 4 பேர் கைது

Posted: 28 Nov 2013 12:28 PM PST

வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனியைச் சேர்ந்தவர் பாபுகண்ணன்(26). இவர் மதுரையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிகின்றார். புதன்கிழமை இரவு இவர் பணி முடிந்து வீடு திரும்பும் போது 4 பேர்

3 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பப் பதிவு சேவை துவக்கம்

Posted: 28 Nov 2013 12:28 PM PST

மதுரை தலைமை தபால் அலுவலகம், தல்லாகுளம், அரசரடி தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்ப பதிவு சேவை துவங்கப்பட்டுள்ளது.

மதுரை நீதிமன்றத்தில் வேலூர் ஆட்சியர் ஆஜர்

Posted: 28 Nov 2013 12:27 PM PST

விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் கடந்த 2004-ல் பட்டாசுத் தொழில் செய்ய விரும்பி முறைப்படி மனுச் செய்தார். காக்கிவாடன்பட்டியில் பட்டாசு குடோன் வைக்க கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுச் செய்துள்ளார். அப்போது கோட்டாட்சியராக (தற்போதைய வேலூர் மாவட்ட ஆட்சியர்) ஆர்.நந்தகோபால் இருந்துள்ளார்.

திருவொற்றியூரில் ரூ.6 கோடியில் வாகன நிறுத்த மையம்

Posted: 28 Nov 2013 12:27 PM PST

சென்னைத் துறைமுகம் சார்பில் திருவொற்றியூரில் சுமார் 11 ஏக்கர் பரப்பளவில் ரூ.5.80 கோடி செலவில் அமைக்கப்பட்ட வாகன நிறுத்த மையத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கிறார்.

100 வயது மூதாட்டிக்கு எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை

Posted: 28 Nov 2013 12:27 PM PST

மதுரை ப்ரீதி மருத்துவமனையில் 100 வயது மூதாட்டிக்கு இடுப்பு எலும்பு பந்து கிண்ண மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். தற்போது மூதாட்டி நலமாக உள்ளார்.

விஜயகாந்த் மீதான கொலை முயற்சி வழக்கு நாகர்கோவில் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை

Posted: 28 Nov 2013 12:27 PM PST

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது நாகர்கோவில் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.

சொத்துக் குவிப்பு வழக்கு: திமுகமுன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள்  நீதிமன்றத்தில் ஆஜர்

Posted: 28 Nov 2013 12:27 PM PST

வருவாய்க்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள் மதுரை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராயினர்.

முதுமக்கள் தாழிகள் அழிப்பு?

Posted: 28 Nov 2013 12:26 PM PST

   மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பகுதியில் ஆற்றோர படுகையில் உள்ள முதுமக்கள் தாழிகள் என கூறப்படும் ஏராளமான பானைகள், புதையல் தேடும் மர்ம கும்பலால் தோண்டப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

பொதிகை விரைவு ரயில் என்ஜினில் பழுது: தென் மாவட்ட ரயில்கள் 2 மணி நேரம் தாமதம்

Posted: 28 Nov 2013 12:26 PM PST

பொதிகை விரைவு ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மேலும் 4 விரைவு ரயில்கள் சுமார் 2 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

அரியலூர் நகரில் ஷேர் ஆட்டோ இயக்க வலியுறுத்தல்

Posted: 28 Nov 2013 12:25 PM PST

அரியலூர் நகரில் ஷேர் ஆட்டோ இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு பேருந்து மோதி கட்டட தொழிலாளி சாவு

Posted: 28 Nov 2013 12:25 PM PST

ஜயங்கொண்டம் அருகே அரசு பேருந்து மோதியதில் கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.

நிர்வாகிகள் தேர்வு

Posted: 28 Nov 2013 12:25 PM PST

அரியலூர் நகர செங்குந்தர் மகாஜன நலச் சங்க நிர்வாகிகள் தேர்வு அண்மையில் நடைபெற்றது.

கட்டட கலைஞர்களுக்கு பயிற்சி

Posted: 28 Nov 2013 12:24 PM PST

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்தின் சார்பில் கட்டட கலைஞர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

"53 சதவீத குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்'

Posted: 28 Nov 2013 12:24 PM PST

இந்தியாவில் பத்து வயதுக்குள்பட்ட குழந்தைகளில் 53 சதவீதத்தினர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ரேணுகா தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™