Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தில்லியில் 11 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு: விஜயகாந்த்

Posted: 27 Nov 2013 01:31 PM PST

தில்லி பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 11 தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

இன்று வீடு திரும்புகிறார் நல்லகண்ணு

Posted: 27 Nov 2013 01:30 PM PST

உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு (88) வியாழக்கிழமை (நவம்பர் 28) வீடு திரும்புகிறார்.

பணியின் போது உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி

Posted: 27 Nov 2013 01:30 PM PST

பணியின் போது உயிரிழந்த 10 போலீஸாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் குறைபாடுகள் 10 நாளில் சரி செய்யப்படும்

Posted: 27 Nov 2013 01:29 PM PST

மின்சாரம் உற்பத்தி செய்யும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் குறைபாடுகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த குறைபாடுகள் பத்து நாள்களில் சரி செய்யப்படும் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

மாணவிகளுக்கு ஆபாசப் படம்: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

Posted: 27 Nov 2013 01:27 PM PST

புதுச்சேரியை அடுத்த அரும்பார்த்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளுக்கு ஆபாசப் படம் காண்பித்ததாகக் புகார் தெரிவித்து, மாணவிகளின் பெற்றோர் புதன்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அனுமதியை மீறி ஒலிபெருக்கி பயன்படுத்திய வழக்கில் நெடுமாறனுக்கு முன்ஜாமீன்

Posted: 27 Nov 2013 01:26 PM PST

முதல்வர் வாகனம் மீது கார் மோதி விபத்து: ஜாமீன் கேட்டு 4 பேர் மனு

Posted: 27 Nov 2013 01:25 PM PST

சென்னையில் புதுச்சேரி முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மினிலாரி - கன்டெய்னர் லாரி மோதல்: 3 பேர் சாவு

Posted: 27 Nov 2013 01:24 PM PST

வேலூர் மாவட்டம், ஆற்காடு பைபாஸ் சாலையில் மினிலாரியும், கன்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர்.

அணு உலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்கை திரும்பப் பெறக் கோரி மனு: உச்ச நீதிமன்றத்தை அணுக உத்தரவு

Posted: 27 Nov 2013 01:23 PM PST

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்த வழக்குகளை திரும்பப் பெறக் கோரிய மனுவுக்கு உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க.வை சார்ந்தே கூட்டணி அமையும்

Posted: 27 Nov 2013 01:22 PM PST

தமிழகத்தில் தேர்தல் கூட்டணி பாரதீய ஜனதா கட்சியை சார்ந்தே அமையும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சங்கராச்சாரியார்கள் விடுதலை: காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

Posted: 27 Nov 2013 01:16 PM PST

காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து சங்கராச்சாரியார்கள் விடுதலையானதைத் தொடர்ந்து காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆதரவும், எதிர்ப்பும்

Posted: 27 Nov 2013 01:15 PM PST

புதுவை நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்புக்கு ஆதரவாக சிலர் தேங்காய் உடைத்து வழிபட்டதாலும், எதிராக சிலர் கண்டன கோஷமிட்டதாலும் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது

Posted: 27 Nov 2013 01:12 PM PST

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக அவரது மகன் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

பரபரப்புடன் காணப்பட்ட புதுவை நீதிமன்றம்

Posted: 27 Nov 2013 01:10 PM PST

சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக புதுவை நீதிமன்றத்தில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டது.

துறையூர் அருகேடெங்கு காய்ச்சல்:சிறுமி சாவு

Posted: 27 Nov 2013 01:03 PM PST

துறையூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

திருச்சி மாநகரில் இதுவரை 52 பேருக்கு டெங்கு!

Posted: 27 Nov 2013 01:02 PM PST

திருச்சி மாநகரில் இதுவரை 52 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற மாநகராட்சிகளை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் நகர்நல அலுவலர் டாக்டர் மாரியப்பன் தெரிவித்தார்.

மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை

Posted: 27 Nov 2013 01:01 PM PST

திருச்சியில் மகனை கத்தியால் குத்திக் கொன்ற ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.

மூதாட்டியிடம் 8 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு

Posted: 27 Nov 2013 01:01 PM PST

திருச்சி திருவெறும்பூர் அருகே புதன்கிழமை காலை வாசலில் நின்று கொண்டிருந்த மூதாட்டியிடம் 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மனவளர்ச்சி குன்றிய, நடக்க இயலாத 90 குழந்தைகளுக்கு காற்று மெத்தைகள்

Posted: 27 Nov 2013 01:01 PM PST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மன வளர்ச்சி குன்றிய, நடக்க இயலாத நிலையில் உள்ள 90 குழந்தைகளுக்கு காற்று மெத்தைகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது புதன்கிழமை வழங்கினார்.

ஐசான் வால்நட்சத்திர விழிப்புணர்வு முகாம்

Posted: 27 Nov 2013 01:00 PM PST

உடல் பருமன் எதிர்ப்பு தினம்: அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு ரங்கோலி

Posted: 27 Nov 2013 12:59 PM PST

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உலக உடல் பருமன் எதிர்ப்பு நாளையொட்டி விழிப்புணர்வு ரங்கோலி புதன்கிழமை வரையப்பட்டது.

பள்ளி மாணவர்களைக் கவர்ந்த புத்தகக் கண்காட்சி

Posted: 27 Nov 2013 12:59 PM PST

புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் புத்தகக்கண்காட்சியில் கல்வி தொடர்பான குறுந்தகடுகள் பள்ளி மாணவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று சிகிச்சை

Posted: 27 Nov 2013 12:59 PM PST

புதுக்கோட்டையில் நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ள நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் திட்டத்தை சர்வஜித் மக்கள் சேவை அறக்கட்டளை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

போக்குவரத்துஊழியர் சங்க சிறப்புப் பேரவைகூட்டம்

Posted: 27 Nov 2013 12:59 PM PST

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம், திருச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய மண்டலங்களை உள்ளடக்கிய சிஐடியு சங்கத்தின் முன்னணி ஊழியர்களுக்கான சிறப்புப் பேரவைக் கூட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேன் மோதி சாய்ந்த சிக்னல் கம்பம்

Posted: 27 Nov 2013 12:58 PM PST

கோவையில் தனியார் வேன் மோதி சிக்னல் கம்பம் சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

தொழிலதிபர் கொலை வழக்கில் சரணடைந்தவரிடம் காவல் விசாரணை முடிவு

Posted: 27 Nov 2013 12:58 PM PST

கோவையில் தொழிலதிபர் கொலை வழக்கில் சென்னையில் சரணடைந்தவரிடம் காவல் விசாரணை முடிந்து, அவரை புதன்கிழமை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். கோவை, ராமநாதபுரம் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட நஞ்சுண்டாபுரம் சாலை  தேவே

நீராதாரங்கள் பாதிக்காமல் புறவழிச் சாலை அமைக்க வேண்டும்

Posted: 27 Nov 2013 12:58 PM PST

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கணுவாய், பன்னிமடை கிராமங்களில் உள்ள மிகப்பெரிய நீராதாரங்களை பாதிக்காமல் மேற்குப் புறவழிச் சாலையை அமைக்க வேண்டும் என கோவை மாவட்ட வடக்கு

பள்ளி மாணவர் மாயம்

Posted: 27 Nov 2013 12:57 PM PST

கோவையில் பள்ளி செல்ல விருப்பமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய மாணவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனர், அவரது தாயார் கைது

Posted: 27 Nov 2013 12:57 PM PST

முதல் மனைவிக்குத் தெரியாமல் கல்லூரி மாணவியை இரண்டாவது திருமணம் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர், அவரது தாயார் ஆகியோர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நாளை ஆண்களுக்கான கருத்தடை முகாம்

Posted: 27 Nov 2013 12:57 PM PST

கோவை மாவட்ட குடும்ப நல செயலகத்தின் சார்பில் ஆண்களுக்கான நவீன கருத்தடை (வாசக்டமி) முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

ஃபைன் ஃபியூச்சர் மோசடி: செந்தில்குமார் மீண்டும் கைது

Posted: 27 Nov 2013 12:57 PM PST

ஈரோடு மாவட்டக் குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கு தொடர்பாக, ஃபைன் ஃபியூச்சர் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான செந்தில்குமார் புதன்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டார்.

செப்பு கலசத்தை காட்டி மோசடி: 3 பேர் கைது

Posted: 27 Nov 2013 12:56 PM PST

செப்புக் கலசத்தை காட்டி நூதன மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் கைது செய்தனர்.

தேயிலைத் தோட்டத்தில் இறந்து கிடந்த குட்டி யானை

Posted: 27 Nov 2013 12:56 PM PST

பிறந்து சில தினங்களே ஆன குட்டியானை ஒன்று வால்பாறை அருகே தேயிலைத் தோட்டத்தில் புதன்கிழமை இறந்து கிடந்தது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே யானைகள் அட்டகாசம்

Posted: 27 Nov 2013 12:55 PM PST

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மலையடிவாரக் கிராமங்களில் உணவு மற்றும் குடிநீர் தேடி வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள்  அச்சமடைந்துள்ளனர்.

சிவாஜி கணேசன் சிலை விவகாரம்: டிசம்பர் 5-இல் ஆர்ப்பாட்டம்

Posted: 27 Nov 2013 12:55 PM PST

நடிகர் சிவாஜி கணேசன் சிலையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக நீதிமன்றத்தில் தகவல் அளித்த தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு காமராஜ், இந்திரா காந்தி, சிவாஜி கணேசன் பொதுநலச் சங்கம் சார்பில் டிசம்பர் 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

விமான நிலையத்தில் பறவைகளை கட்டுப்படுத்த ஆய்வு

Posted: 27 Nov 2013 12:55 PM PST

கோவை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் தரையிரங்கும் விமானங்களுக்கு பறவைகளால் அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

பால்காரர் கொலை நடந்த இடத்தில் போலீஸ் பக்ருதீன், மாலிக்கிடம் விசாரணை

Posted: 27 Nov 2013 12:54 PM PST

மதுரையில் பால்காரர் சுரேஷ் கொலை நடந்த இடத்தில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரைத் தனித்தனியாக அழைத்துவந்து சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted: 27 Nov 2013 12:54 PM PST

வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள ஜாதிச் சான்று சர்ச்சை தொடர்பாக, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோமாரி நோய் தாக்கி பசு மாடு சாவு

Posted: 27 Nov 2013 12:54 PM PST

: திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் கோமாரி நோய் தாக்கி பசுமாடு புதன்கிழமையன்று இறந்து போனது. இதையடுத்து கால்நடைத்துறை மருத்துவர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாநகராட்சியில் முடக்கப்பட்டுள்ள ரூ.200 கோடி வரி வருவாய்

Posted: 27 Nov 2013 12:53 PM PST

மதுரை மாநகராட்சிக்கான பல்வேறு வகையிலான வரி வருவாயில், சில அதிகாரிகள் துணையுடன் முடக்கப்பட்டுள்ள ரூ.200 கோடி வருவாயை மீட்க ஆணையர் கிரண் குராலா நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலவளவு அருகே மோதல்: 10 பேர் மீது வழக்கு

Posted: 27 Nov 2013 12:53 PM PST

மேலவளவு போலீஸ் சரகம் தனக்கம்பட்டி கிராமத்தில் நடந்த மோதல் சம்பவத்தில் 6 பேரை ஆயுதங்களால் தாக்கிய 10-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

அரசு போக்குவரத்து பணிமனைக்கு குண்டு மிரட்டல்: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கைது

Posted: 27 Nov 2013 12:53 PM PST

மதுரையில் கடந்த 13-ஆம் தேதி அரசு விரைவு பஸ் பணிமனை மற்றும் முன்பதிவு மையங்களுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கால்வாயில் காவலாளி பிணம்

Posted: 27 Nov 2013 12:52 PM PST

விளாச்சேரி அண்ணாதெருவை சேர்ந்தவர் வேலு(55). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணி செய்து வந்தாராம். கடந்த இரண்டு நாட்களாக இவரை காணவில்லை என இவரது குடும்பத்தினர் தேடி

மதுரை விமான நிலையத்தில் 401 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

Posted: 27 Nov 2013 12:52 PM PST

 இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 401 கிராம் தங்கத்தை மதுரை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

கணவருடன் சென்ற பெண் டாக்டரிடம் நகை பறிப்பு

Posted: 27 Nov 2013 12:52 PM PST

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் விக்கிரவாண்டி. இவரது மனைவி விஜயலட்சுமி. அய்யங்கோட்டை ஆரம்பசுகாதார நிலைய டாக்டர். கணவருடன் மோட்டார் சைக்கிளில் விக்கிரமங்கலத்துக்கு சென்றபோது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை

மின்தடை நேரத்தில் ரயில் நிலைய எஸ்கலேட்டர்கள் நிறுத்தம்

Posted: 27 Nov 2013 12:51 PM PST

தொடர் மின்வெட்டு காரணமாக ரயில்நிலைய எஸ்கலேட்டர்கள் நிறுத்தப்பட்டுவிடுவதால் வயதான பயணிகள் படிகளில் ஏறி அவதிப்படுகின்றனர்.

ஆட்டோ மோதி அரசு பஸ் நடத்துநர் சாவு

Posted: 27 Nov 2013 12:51 PM PST

ராமநாதபுரம் மாவட்டம் காட்டுப்பரமக்குடி தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (40). அரசு பஸ் நடத்துநர். இவர் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நடந்து சென்றபோது டீஸல் ஆட்டோ மோதியதாகத் தெரிகிறது.

மேலூரில் காணைநோயால் கால்நடைகள் சாவு

Posted: 27 Nov 2013 12:51 PM PST

மேலூர் அருகே உள்ள எட்டிமங்கலம் கிராமத்தில் காணைநோய் பாதிப்பு காரணமாக பசு மற்றும் இரு கன்றுகள் புதன்கிழமை இறந்தன.

காவல் நிலையத்தில் இளைஞர் மர்மச் சாவு:சிபிசிஐடி விசாரணை கோரி மனு தாக்கல்

Posted: 27 Nov 2013 12:51 PM PST

காவல் நிலையத்தில் இளைஞர் மர்மமான முறையில் இறந்த சம்பவத்துக்கு, சிபிசிஐடி விசாரணை கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் சணல் பொருள்கள் கண்காட்சி துவக்கம்

Posted: 27 Nov 2013 12:50 PM PST

தேசிய சணல் வாரியத்தின் சார்பில் மதுரையில் நடைபெறும் சணல் பொருள்கள் கண்காட்சியில் ரூ.20 முதல் ரூ.1000 வரையிலான பல்வேறு கைவினைப் பொருள்கள் விற்பனைக்கு உள்ளன.

கோவை பைனான்ஷியர்களிடம் ரூ.5 லட்சம் கொள்ளை

Posted: 27 Nov 2013 12:50 PM PST

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் புதன்கிழமை அதிகாலை காரில் சென்றவர்களிடம் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பட்டாமாறுதல் சிறப்பு முகாம்:347 பட்டா ஆணைகள் வழங்கல்

Posted: 27 Nov 2013 12:50 PM PST

வாடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடந்த பட்டாமாறுதல் சிறப்புமுகாமில் 347பேருக்கு உட்பிரிவு பட்டா ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் சிற்றரசு வழங்கினார்.

வாடிப்பட்டி பகுதியில் மானிய விலையில் இடுபொருள்கள்

Posted: 27 Nov 2013 12:50 PM PST

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கோட்ட வேளாண்மை உதவி இயக்குநர் ப.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: வாடிப்பட்டி வட்டத்தில் மானிய விலையில் விதைகள் மற்றும் வேளாண்மை கருவிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மணல் திருட்டு: ஒருவர் கைது

Posted: 27 Nov 2013 12:49 PM PST

பேரையூர் காவல்துறை உதவி ஆய்வாளர் காசிராஜன் மற்றும் காவல்துறையினர் மணல் திருட்டு நடவடிக்கை சம்பந்தமாக தும்மநாயக்கன்பட்டி - கவரிமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது

தென்னை மரங்களை காப்பீடு செய்ய அனுமதி

Posted: 27 Nov 2013 12:49 PM PST

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் கடந்த ஆண்டு வறட்சியின் காரணமாக தென்னை மரங்கள் பட்டுப் போனது. இதனால் இந்த ஆண்டு தென்னை மரங்களை காப்பீடு செய்வதற்கு அரசு அனுமதித்துள்ளது.

பெண் தற்கொலை

Posted: 27 Nov 2013 12:49 PM PST

உசிலம்பட்டி, மதுரை சாலையில் உள்ள கட்டக்கருப்பன்பட்டியை சேர்ந்த ஜெயராஜ் மனைவி தெய்வக்கனி(28). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகின்றன. குடும்பப் பிரச்னை காரணமாக செவ்வாய்க்கிழமை

வழக்குரைஞர் அலுவலகத்தில் பொரித்த மயில் குஞ்சுகள்

Posted: 27 Nov 2013 12:49 PM PST

பிறப்பு } வழக்குரைஞர் அலுவலகம், உணவு } திரவ குளுக்கோஸ். ஏழு பேர் குழுவின் நேரடி கண்காணிப்பு. இவையெல்லாம் ஏதோ அசாதாரண சூழலில் பிறந்த குழந்தைக்கு அல்ல.

வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணிக்கக் கூடாது

Posted: 27 Nov 2013 12:48 PM PST

வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்வு காண வசதியாக நீதிமன்றங்களை புறக்கணிப்பதை வழக்குரைஞர்கள் கைவிடவேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி வி.தனபாலன் வலியுறுத்தினார்.

பழனி அருகே கார்-லாரி மோதல்காரில் சென்ற கேரளத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

Posted: 27 Nov 2013 12:48 PM PST

பழனி அருகே காரும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில், காரில் பயணம் செய்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

மதுரை

Posted: 27 Nov 2013 12:47 PM PST

கோவை

Posted: 27 Nov 2013 12:47 PM PST

மாணவரை காணவில்லை

Posted: 27 Nov 2013 12:46 PM PST

கும்பகோணத்தில் டியூஷனுக்கு சென்ற மாணவரைக் காணவில்லை எனப் புகார் செய்யப்பட்டுள்ளது.

காலமானார் சி. கிருஷ்ணசாமி சோழகர்

Posted: 27 Nov 2013 12:46 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சோழகன்குடிக்காடு கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கர்ணம் சி. கிருஷ்ணசாமி சோழகர் (89) அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

சாராயம் கடத்தியவர் கைது

Posted: 27 Nov 2013 12:46 PM PST

காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி காலனித் தெருவைச் சேர்ந்த சாமிதாஸ் மகன் பாலு (25). இவர் புதன்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் காரைக்காலிலிருந்து பொறையாறு நோக்கி  வந்துள்ளார்.

வேதாரண்யத்தில் ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு

Posted: 27 Nov 2013 12:46 PM PST

தாமரைப்புலம், காலனித் தெருவில் வசிப்பவர் கண்ணன் (36). விவசாயக் கூலித் தொழிலாளி.

வீரவணக்க நிகழ்ச்சி

Posted: 27 Nov 2013 12:46 PM PST

தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நவபாரத் பள்ளி ஆண்டு விழா

Posted: 27 Nov 2013 12:46 PM PST

தஞ்சாவூர் நவபாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 37 ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் நவபாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 37 ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

Posted: 27 Nov 2013 12:46 PM PST

தஞ்சாவூர் நவபாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 37 ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

தீக்குளித்து இறந்த ஆதித் தமிழர் பேரவைபெண் நிர்வாகி சடலத்துடன் சாலை மறியல்

Posted: 27 Nov 2013 12:46 PM PST

  திருச்சியில் தீக்குளித்து இறந்த ஆதித்தமிழர் பேரவையின் மாநில மகளிரணி  நிர்வாகி சடலத்துடன் அவ்வமைப்பினர் புதன்கிழமை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நவம்பர் 29 மின் தடை

Posted: 27 Nov 2013 12:46 PM PST

ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.29) மின்சாரம் இருக்காது.

மூதாட்டியிடம் சங்கிலியை பறித்த இளைஞர் கைது

Posted: 27 Nov 2013 12:31 PM PST

சீர்காழி காவல் ஆய்வாளர் அப்துல் கபூர், உதவி ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் மற்றும் போலீஸார் தென்பாதி பகுதியில் புதன்கிழமை பிற்பகல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்தபோது அவ

வெற்றிலை வியாபாரிசாவில் துப்பு துலங்கியது: இளைஞர் கைது

Posted: 27 Nov 2013 12:31 PM PST

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே வெற்றிலை வியாபாரி மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

பெங்களூர்- நாகர்கோவில் விரைவு ரயில் ஜன. 25 வரை நீட்டிப்பு

Posted: 27 Nov 2013 12:31 PM PST

இந்த மாதத்துடன் (நவம்பர்) நிறுத்தப்படுவதாக இருந்த பெங்களூர்-நாகர் கோவில் வாராந்திர விரைவு ரயில், வருகிற ஜன. 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாநில இறகுப் பந்து போட்டி:டிஎன்பிஎல் பள்ளி தேர்வு

Posted: 27 Nov 2013 12:30 PM PST

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற மண்டல இறகுப் பந்து போட்டியில் கரூர் டிஎன்பிஎல் பள்ளி வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

மக்கள் தொடர்பு முகாம்: 119 பேருக்கு நலத் திட்ட உதவி

Posted: 27 Nov 2013 12:30 PM PST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கார்வழி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 119 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ. 7.39 கோடி நிதி: ஆட்சியர்

Posted: 27 Nov 2013 12:30 PM PST

கரூர் மாவட்டத்தில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு ரூ. 7.39 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார்.

ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

Posted: 27 Nov 2013 12:29 PM PST

கரூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோருக்கு சான்றிதழ்

Posted: 27 Nov 2013 12:29 PM PST

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களது தகுதிச் சான்றிதழை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

ரயிலில் அனுமதியின்றி திண்பண்டம் விற்ற 25 பேர் கைது

Posted: 27 Nov 2013 12:29 PM PST

கரூர் ரயிலில் அனுமதியின்றி திண்பண்டங்களை விற்ற 25 பேரை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்தனர்.

பணியிடங்களை நிரப்பக் கோரி சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

Posted: 27 Nov 2013 12:28 PM PST

பணியிடங்களை நிரப்பக் கோரி, கரூரில் சத்துணவு ஊழியர்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மத்திய மண்டலத்தில் தடுப்புக்காவல் சட்டத்தில் 221 பேர் கைது

Posted: 27 Nov 2013 12:28 PM PST

திருச்சி மத்திய மண்டலத்தில் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் நிகழாண்டில் 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர் ராமசுப்பிரமணி.

நகராட்சி உறுப்பினரை திட்டிய பெண் கைது

Posted: 27 Nov 2013 12:28 PM PST

கரூரில் நகராட்சி உறுப்பினரை தகாத வார்த்தையால் திட்டிய பெண்ணை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கரூர் நகராட்சியின் 35-வது வார்டு உறுப்பினராக இருப்பவர் தீபா. இவர் செவ்வாய்க்கிழமை

மானாவாரி பருத்தி வயல்களில் வேளாண் அலுவலர்கள் ஆய்வு

Posted: 27 Nov 2013 12:27 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் பருத்தியில் ஏற்பட்டுள்ள நோய்கள் குறித்து வேளாண் அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனர்.

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 27 Nov 2013 12:27 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சட்ட பட்டதாரிகளுக்குசுய தொழில் தொடங்க கடனுதவி

Posted: 27 Nov 2013 12:27 PM PST

சட்டம் பயின்ற பட்டதாரிகள் சுய தொழில் தொடங்குவதற்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கடனுதவி வழங்கப்பட்டது.

மனுநீதி நிறைவு நாள்முகாம்: 70 பேருக்கு ரூ. 6.67 லட்சம் நலத் திட்ட உதவிகள்

Posted: 27 Nov 2013 12:26 PM PST

பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் ரூ. 6.67 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதிமுகவிற்கு மக்கள் நீதிப்பேரவை ஆதரவு

Posted: 27 Nov 2013 12:26 PM PST

ஏற்காடு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில், அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க மக்கள் நீதிப்பேரவை முடிவு செய்துள்ளதாக அதன் மாநில அமைப்பாளர் ஆதிதமிழ்ச்செல்வன் தலைமையில் பெரம்பலூரில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசுக்கு சொந்தமானமரங்களை வெட்டிய2 பேர் கைதுஹக்ஷ்

Posted: 27 Nov 2013 12:26 PM PST

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டியதாக 2 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

திருமானூரில் மணல் திருட்டு:லாரிகள், டிராக்டர் பறிமுதல்

Posted: 27 Nov 2013 12:25 PM PST

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 லாரிகள், 1 டிராக்டர் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

மீன்சுருட்டி அருகேஏரியில் முழ்கி இளைஞர் சாவு

Posted: 27 Nov 2013 12:25 PM PST

மீன்சுருட்டி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் முழ்கி செவ்வாய்க்கிழமை இறந்தார்.

குவாகம் அருகே இருதரப்பினர் மோதல்: 2 பேர் காயம்

Posted: 27 Nov 2013 12:25 PM PST

அரியலூர் மாவட்டம், குவாகம் அருகே முன்விரோதத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயமடைந்தனர்.

பள்ளிகளில் எய்ட்ஸ் வாழ்வியல் திறன் பயிற்சி

Posted: 27 Nov 2013 12:24 PM PST

பொன்னமராவதியில் உள்ள பள்ளிகளில் எய்ட்ஸ் குறித்த வாழ்வியல் திறன் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சிக்கு தலைமையாசிரியர்

காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டத்தின் நிலை என்ன?

Posted: 27 Nov 2013 12:24 PM PST

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டத்தின் நிலை என்ன என்பது குறித்து புதன்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நவ. 30-ல் தென்னை கருத்தரங்கம், கண்காட்சி

Posted: 27 Nov 2013 12:24 PM PST

அறந்தாங்கியில் மாநில அளவிலான தென்னைசார் பொருட்களின் உற்பத்தி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சனிக்கிழமை (நவ. 30) நடைபெறுகிறது.

பொன்னமராவதி ஒன்றியத்தில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

Posted: 27 Nov 2013 12:23 PM PST

பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயை தடுப்பது குறித்த சிறப்பு கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆசிரியர்களுக்கு புத்துணர்வு முகாம்

Posted: 27 Nov 2013 12:23 PM PST

அறந்தாங்கி அருகே இராஜேந்திரபுரம் நைனா முகமது கல்வியியல் கல்லூரியில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ண சேவாலயா இயக்கத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான அறநெறிக் கல்வி சார்ந்த புத்துணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

செவிலியர் கல்லூரியில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி

Posted: 27 Nov 2013 12:23 PM PST

புதுக்கோட்டை அருகே லெனாவிலக்கு மவுன்ட்சீயோன் செவிலியர் கல்லூரி சார்பில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி திருமயத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் ஊராட்சிச் செயலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 27 Nov 2013 12:23 PM PST

ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சித் தலைவர்களுக்கு கணினி பயிற்சி சான்றிதழ்

Posted: 27 Nov 2013 12:22 PM PST

ஆலங்குடியில் ஊராட்சித் தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கு கணினி பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

Posted: 27 Nov 2013 12:22 PM PST

கோமாரி நோயால் மாடுகள் இறப்பதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் சிலர் வெளிநடப்பு செய்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™