Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சாகர் பள்ளியில் யோகா போட்டி

Posted: 24 Nov 2013 01:26 PM PST

பெருந்துறை சாகர் இன்டர்நேஷனல் பள்ளியில் மாவட்ட அளவிலான யோகா போட்டி அண்மையில் நடைபெற்றது.

காலிங்கராயனுக்கு மணி மண்டபம்: வேட்டுவ கவுண்டர் சங்கம் பாராட்டு

Posted: 24 Nov 2013 01:26 PM PST

காலிங்கராயனுக்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்துள்ளதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் முன்னேற்ற சங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

சந்தைக்கு கொண்டு வரப்பட்ட ஆடுகள் பறிமுதல்

Posted: 24 Nov 2013 01:25 PM PST

கோபி அருகே மொடச்சூரில் உள்ள சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகளை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

வாய்க்காலில் விழுந்து முதியவர் தற்கொலை

Posted: 24 Nov 2013 01:25 PM PST

வாய்க்காலில் விழுந்து முதியவர் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாளை.யில் பேராசிரியர்கள் போராட்டம்

Posted: 24 Nov 2013 01:24 PM PST

பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் கல்லூரி பேராசிரியர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

கிருஷ்ணாபுரத்தில் கூட்டுறவு விழா

Posted: 24 Nov 2013 01:23 PM PST

கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியில் கூட்டுறவு விழா மற்றும் உறுப்பினர் சந்திப்பு முகாம் நடைபெற்றது.

தியாகராஜன் மறைவு அஞ்சலிக் கூட்டம்

Posted: 24 Nov 2013 01:23 PM PST

திருநெல்வேலியில் ஏஐடியூசி அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் எஸ்.எஸ். தியாகராஜன் மறைவையொட்டி அஞ்சலிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அடவிநயினார், கருப்பாநதி அணைகள் நீர்மட்டம் உயர்வு

Posted: 24 Nov 2013 01:20 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மிதமான மழை காரணமாக அடவிநயினார், கருப்பாநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

சமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 24 Nov 2013 01:20 PM PST

திருநெல்வேலியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி: மாணவி முதலிடம்

Posted: 24 Nov 2013 01:19 PM PST

தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவையொட்டி, திருநெல்வேலி மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நடுவர்களாக பேர

16 மையங்களில் தேசிய திறனாய்வுத் தேர்வு: 5,541 பேர் எழுதினர்

Posted: 24 Nov 2013 01:19 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் 16 மையங்களில் தேசிய திறனாய்வுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத் தேர்வை 5,541 பேர் எழுதினர்.

6 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

Posted: 24 Nov 2013 01:19 PM PST

வாருங்கள் இறைவனைக் காணலாம்' என்ற அமைப்பு சார்பில் இலவச திருமண நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 6 ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனர்.

மாநில முதியோர் தடகளப் போட்டி: கோவை அணி ஒட்டுமொத்த சாம்பியன்

Posted: 24 Nov 2013 01:19 PM PST

திருநெல்வேலியில் 2 நாள்கள் நடைபெற்ற 32-வது மாநில அளவிலான முதியோர் தடகளப் போட்டியில், கோவை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை அணி 2-ம் இடம் பெற்றது.

ம.தி.மு.க. மாணவர் அணி சார்பில் பேச்சுப் போட்டி

Posted: 24 Nov 2013 01:18 PM PST

ம.தி.மு.க. மாணவர் அணி சார்பில், திருநெல்வேலி மண்டல அளவிலான பேச்சுப் போட்டி திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தியன் வங்கி ஒரே நாளில் ரூ. 23.44 கோடி கடனுதவி அளிப்பு

Posted: 24 Nov 2013 01:18 PM PST

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் 58 இந்தியன் வங்கி கிளைகள் மூலம் 142 பயனாளிகளுக்கு ரூ. 23.44 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

அம்பை ஆட்டோ டிரைவர் கொலை: 8 மாதத்திற்கு பிறகு 5 பேர் கைது

Posted: 24 Nov 2013 01:18 PM PST

அம்பாசமுத்திரத்தில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 மாதத்திற்கு பிறகு 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மூன்றடைப்பு அருகே மூதாட்டி கொலை: பேரன் கைது

Posted: 24 Nov 2013 01:18 PM PST

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது பேரனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் ஆட்டுச் சந்தைக்குத் தடை

Posted: 24 Nov 2013 01:17 PM PST

கோமாரி நோய் தாக்குதல் அச்சம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டுச் சந்தைக்கு தாற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

Posted: 24 Nov 2013 01:15 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் 11 குளங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் அரிவாள் மூக்கன், கூழைக்கடா, செங்கல்நாரை போன்ற பறவைகள் பதிவு செய்யப்பட்டன.

"சிவகாசியில் ஆண்டுக்கு ரூ.1000 கோடி பட்டாசு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு'

Posted: 24 Nov 2013 01:15 PM PST

சிவகாசியிலிருந்து ஆண்டுக்கு ரூ.1000 கோடி மதிப்பிலான பட்டாசு ஏற்றுமதிக்கான வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளர்கள் முன்னாள் சங்கத் தலைவர் ஜி. அசோகன் தெரிவித்தார்.

திமுக பிரமுகரை தாக்கியதாக தம்பிதுரை எம்.பி. மீது வழக்கு

Posted: 24 Nov 2013 01:14 PM PST

அதிமுக எம்.பி. தம்பிதுரை தன்னைத் தாக்கியதாக வாழப்பாடி காவல் நிலையத்தில் சேலம் திமுக பிரமுகர் புகார் அளித்தார்.

வெறிச்சோடியது ஏற்காடு ஏரி

Posted: 24 Nov 2013 01:14 PM PST

ஏற்காடு இடைத் தேர்தல் கட்டுப்பாடுகள், சோதனைகள் காரணமாக விடுமுறை நாளிலும் ஏற்காடு ஏரி, சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

மதுரையில் நாய் கண்காட்சி

Posted: 24 Nov 2013 01:12 PM PST

மதுரையில் 29 இனத்தைச் சேர்ந்த 164 நாய்கள் பங்கேற்ற கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த 8 நாய்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர், கட்டுனர்கள் பணி

Posted: 24 Nov 2013 01:12 PM PST

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுனர்கள் பணியிடங்களை நிரப்ப தகுதியும்

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாற்று வழிப்பாதை

Posted: 24 Nov 2013 01:09 PM PST

மேட்டுப்பாளையம், கல்லாறு மலைப்பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக, மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் தாற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மாற்று வழிப்பாதை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இச் சாலையில் 12 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

திருநெல்வேலி

Posted: 24 Nov 2013 01:07 PM PST

ஈரோடு

Posted: 24 Nov 2013 01:07 PM PST

மத்திய கோல்பீல்டு நிறுவனத்தில் பணி

Posted: 24 Nov 2013 01:07 PM PST

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் பிரசித்தி பெற்று விளங்கும் மினிரத்னா நிறுவனங்களில் ஒன்றான சென்ட்ரல் கோல்பீல்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக

ஆந்திரப் பிரிவினை முயற்சி தெலங்கானா மக்கள் நலனுக்காக அல்ல

Posted: 24 Nov 2013 01:03 PM PST

ஆந்திரப் பிரிவினை முயற்சி தெலங்கானா மக்கள் நலனுக்காக அல்ல என்று, அந்த மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியா-மியான்மர் எல்லைப் பாதுகாப்புக்கு 41,000 வீரர்கள்?

Posted: 24 Nov 2013 01:02 PM PST

இந்திய-மியான்மர் எல்லையை வலுப்படுத்த, அங்கு பாதுகாப்புப் பணியிலிருக்கும் அசாம் ரைஃபிள்ஸ் படையினருக்கு பதிலாக, 41,000 எல்லைப் பாதுகாப்பு படையினரை (பிஎஸ்எப்) ஈடுபடுத்துவது குறித்து மத்திய அரசு இந்த வாரம் முடிவெடுக்க உள்ளதாகத் தெரிகிறது.

"இந்திய கடல் எல்லை வழியாக மீன்பிடிப் படகுகளை அனுமதியுங்கள்'

Posted: 24 Nov 2013 12:59 PM PST

அரபிக் கடலில் உள்ள மீன்பிடிப் பகுதிகளுக்கு இந்தியக் கடல் எல்லை வழியாக தங்கள் மீன்பிடி படகுகள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்தியாவிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அசாமில் காவல் நிலையம் மீது தாக்குதல்: ஊரடங்கு உத்தரவு அமல்

Posted: 24 Nov 2013 12:58 PM PST

அசாம் மாநிலம் சிரங் மாவட்டத்தில் உள்ள புறக்காவல் நிலையம் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தெஹல்கா பெண் நிருபர் பலாத்காரம்: 3 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Posted: 24 Nov 2013 12:58 PM PST

தெஹல்கா பெண் நிருபர் பாலியல் பலாத்கார வழக்கில் கோவா போலீஸார் 3 சாட்சிகளிடம் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: பஞ்சாப் அரசுக்கு மணீஷ் திவாரி கண்டனம்

Posted: 24 Nov 2013 12:57 PM PST

பஞ்சாப் மாநிலத்தில் தொழிற்சாலை அமைப்பதற்காக அங்குள்ள விவசாய நிலங்களை வலுகட்டாயமாக கையகப்படுத்தும் அந்த மாநில அரசின் செயலுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடலோரப் பாதுகாப்பு மாநாடு: இலங்கை சென்றார் கடற்படை தளபதி

Posted: 24 Nov 2013 12:56 PM PST

சர்வதேச கடலோரப் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய கடற்படை தளபதி டி.கே. ஜோஷி இலங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார்.

இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்

Posted: 24 Nov 2013 12:54 PM PST

சூலூர் ஒன்றியம் சோமனூரில் இந்து முன்னணியின் திருப்பூர் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

குப்பையில் கிடந்த விலையில்லா புத்தகப் பைகள்: கல்வி அதிகாரிகள் ஆய்வு

Posted: 24 Nov 2013 12:54 PM PST

தமிழக அரசால் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் விலையில்லா புத்தகப் பைகள் குப்பையில் கிடந்த சம்பவம் குறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினர்.

"விவசாயிகள் பிரச்னைக்காக போராட முன்வர வேண்டும்

Posted: 24 Nov 2013 12:54 PM PST

விவசாயிகள் பிரச்னைக்காக குரல் கொடுக்கவும், போராடவும் அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தினார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்கூட்டம், பொள்ளாச்சியில் சனிக்கிழமை நடைபெற்

துடியலூரில் காணாமல் போன சிலைகள்

Posted: 24 Nov 2013 12:53 PM PST

துடியலூர் அருகே உள்ள ஒரு கோவிலில் வைக்கப்பட்டிருந்த கன்னிமார் சிலைகள் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 24 Nov 2013 12:53 PM PST

கோவை நடுநகர் ரோட்டரி சங்கம் சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இலவச அனிமேஷன் பயிற்சிக்கு ஸ்காலர்ஷிப் பெற தேர்வு: டிச.31க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 24 Nov 2013 12:53 PM PST

மாக் அனிமேஷன் நிறுவனத்தில் இலவச அனிமேஷன் பயிற்சிக்கு ஸ்காலர்ஷிப் பெற டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரி பெண் 2-ஆம் நாளாக தர்ணா

Posted: 24 Nov 2013 12:53 PM PST

கணவரைத் தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி, பட்டதாரி பெண் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தர்ணா போராட்டம் நடத்தினார்.

ஓடும் பேருந்தில் மூதாட்டி சாவு

Posted: 24 Nov 2013 12:52 PM PST

கோவையில் ஞாயிற்றுக்கிழமை மூதாட்டி ஒருவர், ஓடும் பேருந்தில் உயிரிழந்தார். இது குறித்துப் போலீஸார் கூறியது: கோவை, துடியலூரைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது ம

மூட்டு தேய்மான மருத்துவ முகாம்

Posted: 24 Nov 2013 12:52 PM PST

சூலூர் அருகே உள்ள அரசூர் ஊராட்சியில், கண்ணம்பாளையம் அரிமா சங்கம், அரசூர் ஊராட்சி மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து மூட்டு தேய்மான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது

மதிமுக சார்பில் பேச்சுப் போட்டி

Posted: 24 Nov 2013 12:52 PM PST

மதிமுக மாணவரணி சார்பில் மண்டல அளவிலான பேச்சுப் போட்டி, கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் வளர்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்

Posted: 24 Nov 2013 12:52 PM PST

தாங்கள் சார்ந்த துறைகளின் சிறப்பான செயல்பாடுகளின் வாயிலாக ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும் என கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் கேட்டுக் கொண்டார்.

வியாபாரிக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது

Posted: 24 Nov 2013 12:51 PM PST

சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி ஊராட்சியில் வியாபாரியிடம்  பணம் கேட்டு கொலை மிரட்டல்விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 24 Nov 2013 12:51 PM PST

கேரள வனப்பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,600 கனஅடியாக அதிகரித்துள்ளது.

உடுமலையில் தென்னிந்திய அளவிலான பைக் ரேஸ்

Posted: 24 Nov 2013 12:50 PM PST

உடுமலையில் தென்னிந்திய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . உடுமலை பி.எம்.டபிள்யூ. நண்பர்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் "டெட் ரேஸ்-2013" என்ற பெயரில்

அரசு மருத்துவர்களைக் கண்டித்து இன்று தொழில் பாதுகாப்புக் குழு ஆர்ப்பாட்டம்

Posted: 24 Nov 2013 12:50 PM PST

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ரூ.32 கோடி தராமல் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட தில்லி ஆடைகள் விற்பனை நிதிநிர்வாக இயக்குநருக்கு நெஞ்சுவலி இருப்பதாக சான்றிதழ் கொடுத்த அரசு மருத்துவமனையின் 2 டாக்டர்களை கண்டித்து திங்கள்கிழமை(நவ.25) ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தொழில் பாதுகாப்புக் குழு அறிவித்துள்ளது.

நாட்டுக் கோழிகளை முறையாகப் பராமரிக்க ஆலோசனை

Posted: 24 Nov 2013 12:50 PM PST

வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளை நோய்த் தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டுமென கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.

 ஸ்பெக்ட்ரம்-13 விளையாட்டு விழா

Posted: 24 Nov 2013 12:49 PM PST

உடுமலையை அடுத்த கோமங்கலம்புதூர் வித்ய நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்பெக்ட்ரம்-13 விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காலாவதி பர்மிட்டுடன் மணல் ஏற்றி சென்ற6 லாரிகள் பறிமுதல்

Posted: 24 Nov 2013 12:49 PM PST

பல்லடம் பகுதியில் காலாவதி பர்மிட்டுடன் மணல் ஏற்றி சென்ற 6 லாரிகளை வருவாய்த்துறையினர் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

பல்லடத்தில் மினி பஸ்களின் கண்ணாடி உடைப்பு

Posted: 24 Nov 2013 12:49 PM PST

பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் இரண்டு மினி பஸ்களுக்கிடையே நேரப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் பஸ்களின் கண்ணாடிகள் ஓட்டுநர்களால் சனிக்கிழமை அடித்து உடைக்கப்பட்டன.  பல்லடத்தில் இருந்து நடுவேலம்பாளையத்திற்கு தனியார் மினி பஸ் ஒன்றும், பல்லடத்தில் இரு

பாரத் மக்கள் கட்சி கூட்டம்

Posted: 24 Nov 2013 12:49 PM PST

பாரத் மக்கள் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கணித அடிப்படைத் திறன் மேம்பாட்டு பயிற்சி

Posted: 24 Nov 2013 12:48 PM PST

கணித அடிப்படைத் திறனில் பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துவது குறித்த உயர்நிலை தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கோமாரி நோய்க்கு இழப்பீட்டுத் தொகை:பா.ஜ.க. கோரிக்கை

Posted: 24 Nov 2013 12:48 PM PST

கோமாரி நோயினால், கால்நடைகள் இழப்பு ஏற்பட்டவர்களுக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என பா.ஜ.க.  கோரிக்கை விடுத்துள்ளது.

நமது முன்னோர் குறித்து பெருமிதம் வேண்டும்

Posted: 24 Nov 2013 12:47 PM PST

நமது கலாச்சாரம், பண்பாட்டிலும், நமது முன்னோர் அறிவார்ந்தவர்கள் என்பதிலும் பெருமிதம் வேண்டும் என்று, விஸ்வ ஹிந்து பரிஷத்  மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசினார்

நவம்பர் 26 மின் தடை

Posted: 24 Nov 2013 12:46 PM PST

உடுமலை துணை மின் நிலையத்தில் (நவ.26) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 8 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

Posted: 24 Nov 2013 12:46 PM PST

 இந்து முன்னணியின் திருப்பூர் மாநகர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கரட்டாங்காடு மாகாளியம்மன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதற்கு இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்க விழா

Posted: 24 Nov 2013 12:46 PM PST

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா, மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நவம்பர் 25 மின் தடை

Posted: 24 Nov 2013 12:45 PM PST

பொங்கலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவ. 25)  காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும்

Posted: 24 Nov 2013 12:45 PM PST

மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மீண்டும் மாநில அரசுகளின் பட்டியலுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கல்வி மேம்பாட்டுக் குழு நடத்திய கருத்தரங்கில் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தப்பட்டது.

கனரா வங்கியின் கார், வீட்டுக்கடன் முகாம்

Posted: 24 Nov 2013 12:45 PM PST

திருப்பூர் கனரா வங்கி கிளைகள் சார்பில் நடைபெற்ற வீட்டுக் கடன், கார் கடன் வழங்கும் முகாமில் 10 நபர்களுக்கு வீட்டுக் கடனாக ரூ.5 கோடி, 5 நபர்களுக்கு கார் கடனாக ரூ.50 லட்சம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

 ஊருக்குள் வராத பேருந்துகள் சிறைப் பிடிப்பு

Posted: 24 Nov 2013 12:45 PM PST

பெருமாநல்லூர், வலசுபாளையம் பகுதிக்கு வராத அரசு பேருந்தை அப்பகுதி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைப்பிடித்தனர்.

பொன்னிவாடியில் அம்மா திட்ட முகாம்

Posted: 24 Nov 2013 12:44 PM PST

தாராபுரம் அருகே பொன்னிவாடி கிராமத்தில் அம்மா திட்ட முகாம்  நடைபெற்றது.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

Posted: 24 Nov 2013 12:44 PM PST

வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது . காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சிக்கு தாராபுரம் கோட்டாட்சியர்

வாவிபாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 24 Nov 2013 12:44 PM PST

பல்லடம் அருகேயுள்ள வாவிபாளையம் கிராம மக்கள் நல அமைப்பு, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது .

கோவை

Posted: 24 Nov 2013 12:43 PM PST

குழந்தைகளும் திரைப்படமும்

Posted: 24 Nov 2013 12:31 PM PST

ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் 18ஆவது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா முடிந்த சில நாள்களிலேயே கோவாவில் 44ஆவது சர்வதேச இந்தியத் திரைப்பட விழா தொடங்கிவிட்டது.

கூடாது, கூடவே கூடாது!

Posted: 24 Nov 2013 12:30 PM PST

நம் நாட்டில் உயர் பதவிகளை வகித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் 83 பேர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்து, அதில் நமது நிர்வாகத்தின் உயர் அங்கமான ஐஏஎஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் தலையிட்டு சீர்குலைக்கக் கூடாது என வாதிட்டனர்.

மாலத்தீவும் தேர்தல் முடிவும்!

Posted: 24 Nov 2013 12:29 PM PST

ஓரு வழியாக மாலத்தீவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மாலத்தீவின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாக 30 ஆண்டுகள் கோலோச்சிய மாமூன் அப்துல் கயூமின் மாற்றாந்தாய் மகனான அப்துல்லா யாமீன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்தியத் துறைமுகங்களை தரம் உயர்த்த நடவடிக்கை

Posted: 24 Nov 2013 12:27 PM PST

இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுகங்களும் சர்வதேச அளவில் தரம் உயர்த்துவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்துவதா?

Posted: 24 Nov 2013 12:26 PM PST

இலங்கைத் தமிழர்களை பகடைக்காய்களாக சில அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன என மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை போர்க்குற்றம்: சுதந்திரமான அமைப்பு விசாரிக்க வேண்டும்

Posted: 24 Nov 2013 12:25 PM PST

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரணை நடத்தக் கோரி, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

நடுக்கடலில் மீன்பிடிக்க விடாமல் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

Posted: 24 Nov 2013 12:24 PM PST

ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் மீன் பிடிக்கவிடாமல் நடுக்கடலில் வைத்து விரட்டியடித்துள்ளனர்.

கருணாநிதி, ராமதாஸ் கண்டனம்

Posted: 24 Nov 2013 12:24 PM PST

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனின் வாக்குமூலம் திரிக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"சுற்றுச்சூழல் மாசடைந்தால் வாழ முடியாது

Posted: 24 Nov 2013 12:23 PM PST

சுற்றுச்சூழல் மாசடைந்தால் உயிர்கள் வாழ முடியாது என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் கூறினார்.

பேரறிவாளனின் வாக்குமூலம் திருத்தி பதிவு செய்யப்பட்டது

Posted: 24 Nov 2013 12:22 PM PST

ராஜீவ் கொலைவழக்கில் பேரறிவாளனின் வாக்குமூலத்தை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் திருத்திப் பதிவு செய்ததாக ஓய்வு பெற்ற சி.பி.ஐ. அதிகாரியும், வழக்கை விசாரித்தவருமான வி.தியாகராஜன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் ஆய்வு

Posted: 24 Nov 2013 12:22 PM PST

வாணியம்பாடி நகராட்சியில் நடைபெறும் ரூ. 1.32 கோடி மதிப்பிலான நலத் திட்டப் பணிகளை நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

வாணியம்பாடியில்  ஜி.கே.வாசனுக்கு வரவேற்பு

Posted: 24 Nov 2013 12:22 PM PST

வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் வாணியம்பாடி பகுதிக்கு வந்தார்.

நவம்பர் 26 மின் தடை

Posted: 24 Nov 2013 12:21 PM PST

ராணிப்பேட்டை துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது

உற்பத்தி நிலையங்களை சரியாக பராமரிக்காததே மின் வெட்டுக்கு காரணம்

Posted: 24 Nov 2013 12:21 PM PST

மின் உற்பத்தி நிலையங்களைச் சரியாக பராமரிக்காததே மின்வெட்டுக்கு காரணம் என, தமிழக அரசு மீது தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார்.

பட்டதாரிகளுக்கு முப்படைகளில் பணி

Posted: 24 Nov 2013 12:21 PM PST

இந்திய ராணுவ அகாடமி, கப்பல்படை அகாடமி, விமானப்படை அகாடமி மற்றும் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயிற்சி பெற்று பணியில் சேருவதற்கு

மஹா பைரவாஷ்டமி விழா

Posted: 24 Nov 2013 12:21 PM PST

ஆம்பூர் அருள்மிகு சமயவல்லி சமேத சுயம்பு ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயிலில் மஹா பைரவாஷ்டமி விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.

ராணிப்பேட்டை மக்கள் நீதிமன்றத்தில் 392 வழக்குகளுக்குத் தீர்வு: ரூ.2.60 கோடி இழப்பீடு

Posted: 24 Nov 2013 12:20 PM PST

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் விபத்து உள்பட 392 வழக்குகளில் ரூ.2 கோடியே 60 லட்சத்து 13 ஆயிரத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

22 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.67.75 லட்சம் கடனுதவி

Posted: 24 Nov 2013 12:20 PM PST

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் 22 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ரூ.67.75 லட்சம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

ரூ.53 லட்சத்தில் கட்டப்படும் பத்திரப்பதிவு அலுவலகம்: எம்எல்ஏ ஆய்வு

Posted: 24 Nov 2013 12:20 PM PST

ஆம்பூரில் ரூ.53 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பத்திரப்பதிவு அலுவலகத்தை எம்எல்ஏ அ.அஸ்லம் பாஷா சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மொபெட் திருடியதாக 2 பேர் கைது

Posted: 24 Nov 2013 12:20 PM PST

மொபெட் திருடியதாக 2 பேர் ஜோலார்பேட்டையில் கைது செய்யப்பட்டனர்.  ஜோலார்பேட்டை போலீஸார் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது,

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்குப் பதிவு

Posted: 24 Nov 2013 12:19 PM PST

அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது காரிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

வாலாஜாவில் தேசிய அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் பணி மீண்டும்  தொடக்கம்

Posted: 24 Nov 2013 12:19 PM PST

தேசிய அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் பணி வாலாஜா வட்டத்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

காவனூரில் தேசிய நூலக வார விழா

Posted: 24 Nov 2013 12:19 PM PST

ஆற்காடு தாலுகா காவனூர் கிராமப்புற நூலகத்தில் தேசிய நூலக வார விழா அண்மையில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஜெ.பிரபு தலைமை தாங்கினார். இதில் திமிரி தமிழ்

ஏற்காட்டில் பிரசாரம்

Posted: 24 Nov 2013 12:19 PM PST

ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரோஜாவுக்கு ஆதரவாக  சிங்கிபுரம் ஊராட்சியில் வாக்கு சேகரிக்கும் வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை, திரைப்பட

காசோலையை திருத்தி ரூ.10 லட்சம் மோசடி: குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை

Posted: 24 Nov 2013 12:18 PM PST

காட்பாடியில் உள்ள வங்கியில் காசோலையை திருத்தி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக வடமாநிலத்தைச் சேர்ந்த நபரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.

மக்கள் நீதிமன்றத்தில் 906 வழக்குகளுக்கு தீர்வு

Posted: 24 Nov 2013 12:18 PM PST

வாணியம்பாடியில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் வாணியம்பாடி சார்பு நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

பாஜகவுடன் கூட்டணி சேர மாநிலக் கட்சிகள் ஆர்வம்

Posted: 24 Nov 2013 12:18 PM PST

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர மாநிலக் கட்சிகள் ஆர்வத்துடன் இருப்பதாக, பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

கால்நடைகளுக்கு தடுப்பூசி

Posted: 24 Nov 2013 12:18 PM PST

திருப்பத்தூரை அடுத்த ராச்சமங்கலத்தில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவுவதை தடுப்பது குறித்த  கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் சனிக்கிழமை நடைப்பெற்றது.

டிராபிக் வார்டன் பணிவாய்ப்பு

Posted: 24 Nov 2013 12:18 PM PST

திருப்பத்தூர் போக்குவரத்து பிரிவில் காக்கி சீருடையில் டிராபிக் வார்டனாக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள், திருப்பத்தூர் டிராபிக் ஆய்வாளரை 9487664191 எனும் செல்போனில் தொடர்பு கொண்டு

சிறையில் செல்போன் பறிமுதல்

Posted: 24 Nov 2013 12:18 PM PST

வேலூர் ஆண்கள் மத்தியச் சிறையில் கைதியிடம் இருந்து செல்போன் ஒன்றை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இடி தாக்கி தாய், மகன் சாவு

Posted: 24 Nov 2013 12:17 PM PST

சேத்துப்பட்டு அருகே ராஜம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தாய், மகன் ஆகிய இருவரும் இடி தாக்கி இறந்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™