ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தாகூர் நினைவு கூர்ந்த ஒரு சம்பவம்
- பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
- சூப்பர் ஃபிகர் அணி, சுமார் ஃபிகர் அணி…!
- சோளக்காடுகளெங்கும் ஆண் பொம்மைகள் ! -
- இஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி
- 70,000 (எழுபதாயிரம்) பதிவுகள்
- கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்)
- தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
- இதை பாருங்களேன் - மதுமிதா
- தாய் தந்தை இருந்தும் அனாதை
- குடும்பம் - ஒரு பக்க கதை
- வேலன்:-ஒரே மாதத்தில் 37 பவுண்ட் எடையை குறைக்க
- சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
- ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4
- விருதுகள் சராசரிகளைச் சிறப்பிக்கிறது, உயர்ந்தவர்களை வெட்கமடைய வைக்கிறது, தாழ்ந்தவர்களால் அவமானத்துக்குள்ளாகிறது
- அடையாறில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது
- காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை
- கருணைக்கு பேதமில்லை-சத்குரு ஜக்கி வாசுதேவ்
- ஆத்தோரம் ஆலமரம்..........
- காதல் அழகே அழகு!
- அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை
- அச்சம் தவிர்
- லெஹர் புயல்: காரைக்கால் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
- எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3
- திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்?
- பாஜக தலைமையில் உருவாகிறது புதிய அணி!
- இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!
- கவிதையில் யாப்பு
- பாலாறு
- இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்!
- சங்கப்பலகை
- நம்பி - நங்கை
- தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன்
- ஆன்ற குடிப்பிறப்பு!
- நிலவும் நினைவும்...
- நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
- நீச்சல் பயணம்..............
- இறைவன் எழுதிய திருமுகம்!
- சுட்ட கத்திரிக்காய் சம்பல்
- வானமழை நீ எனக்கு -ஜெய்சக்தி நாவல்
- புன்னகை மட்டும் கொடு-ஜெய்சக்தி நாவல்
- திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம்
- லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது
| தாகூர் நினைவு கூர்ந்த ஒரு சம்பவம் Posted: 24 Nov 2013 02:28 PM PST - ரவீந்திரநாத் தாகூர் தன்னுடைய வங்காளம் குறித்த கடிதம் ஒன்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார். ஒருநாள் தன் பணியாளர் வராமல் போனதற்கு தாகூர் மிகுந்த கோபம் அடைந்தார். நாள் முழுவதும் பணியாளர் வராததால் அவர் செய்ய வேண்டிய பணிகளை அவரே மேற்கொள்ள நேர்ந்தது. - மறுநாள் அவர் பணிக்கு வந்தபோது ""ஏன் இவ்வளவு தாமதம்?" என்றார். பணியாளர் மிகுந்த வருத்தத்துடன், ""என் மகன் நேற்று இறந்துவிட்டான். ஈமக்கிரியைகள் செய்ய வேண்டியிருந்ததால் என்னால் வர முடியவில்லை" என்றார். - தாகூர் தொடர்ந்து எழுதுகிறார்: ... |
| பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Posted: 24 Nov 2013 02:26 PM PST - BIRTH DATE: August 18, 1900 DEATH DATE: December 01, 1990 ========================================= - ஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் - விஜய லட்சுமி பண்டிட் - --------------------- அவரது வாழ்க்கை வரலாறு நூல் - The Scope of Happiness: A Personal Memoir (1979) 'ஸ்கோப் ஆப் ஹேப்பினஸ் ஏ பெர்சனல் மிமோயர்' ஆகும் |
| சூப்பர் ஃபிகர் அணி, சுமார் ஃபிகர் அணி…! Posted: 24 Nov 2013 02:22 PM PST - மகளிர் அணியை ரெண்டா பிரிச்சதுக்கா நம்ம தலைவர கொடும்பாவியை எரிச்சாங்க..? - மகளிர் அணியை, சூப்பர் ஃபிகர் அணி, சுமார் ஃபிகர் அணி'னு ரெண்டா பிரிச்சாராம்..! - >க.கலைவாணன் - ——————————————— - சொந்தமா பள்ளிக்கூடம் கட்டி நூலு காசு பார்த்ததும்,தலைவருக்கு தலைகால் புரியலைன்னு எதை வச்சு சொல்றே..? - அடுத்து போலீஸ் ஸ்டேஷன் கட்டப்போறதா சொல்றார்…! - >கவின் - ————————————————– - எங்க தலைவருக்கு வீட்டு சாப்பாடு பிடிக்கலை..! - இப்போ எங்கே சாப்பிடுகிறார்…? - ஜெயிலில்…! - >கலையரசன் - ——————————————— நன்றி: ... |
| சோளக்காடுகளெங்கும் ஆண் பொம்மைகள் ! - Posted: 24 Nov 2013 02:20 PM PST எவ்வளவு இரை வைத்தாலும் முட்டைதான் போடுகின்றன கோழிகள் ! - ——————— -. கல்லால் அடித்தும் கோபம் இல்லை சிணுங்கிச் சிரிக்கும் குளம் ! - ——————— - . வெட்டுக்கத்தி பயமின்றி உட்கார்ந்திருக்கின்றன கறிக்கடை ஈக்கள் ! - ———————- - இலை கிள்ளிய மாணவனுக்குத் தண்டனை மரத்தில் குச்சி ஒடிக்கும் ஆசிரியர் ! - ———————– - காட்டுக்குள்ளும் ஆணாதிக்கம் சோளக்காடுகளெங்கும் ஆண் பொம்மைகள் ! - ———————– - பத்திரமாய் வைத்திருக்கிறாள் மகனின் புகைப்படத்தை தாயொருத்தி முதியோர் இல்லத்தில் ! - ———————- - ஏழைச் ... |
| இஸ்லாமிய வன்முறைகளுக்குகிடையே இன்று பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் மாலி Posted: 24 Nov 2013 10:12 AM PST மாலி நாட்டின் அரசியல் நெருக்கடி 2012-ம் ஆண்டில் தொடங்கியது. அந்நாட்டின் பிரிவினைவாதிகளான துராக் புரட்சியாளர்கள் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் இணைந்து மேற்கொண்ட வன்முறையில் கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டுப் புலம் பெயர்ந்தார்கள். அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புரட்சியாளர்களை அடக்கத் திறனில்லாத ராணுவத்தினரை எதிர்த்து அரசின் இளநிலை அதிகாரிகளே மேற்கொண்ட சதியில் மாலியின் அதிபர் அமாடோ டுமானி பதவி இழக்க நேரிட்டது. இதனைத் தொடர்ந்து போராளிகள் 2013-ம் ஆண்டு ஜனவரிக்குள் மாலியில் மூன்றில் ... |
| Posted: 24 Nov 2013 10:11 AM PST எழுபதாயிரம் பதிவுகளை தாண்டி இன்னும் அதே ஆர்வத்துடனும் உத்வேகத்துடன் பயணிக்கும் தலைவரை வாழ்த்தலாம் வாங்க. 70 ஆயிரங்கள் என்பது இலட்சங்களையும் தாண்டி கோடிகளை தொட வாழ்த்துகள் தல |
| கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்) Posted: 24 Nov 2013 08:31 AM PST உதவி - தெரியாத நபருக்கு செய்த உதவி தெரியாமல் இருப்பதற்காக தெரியாத நபரிடம் தெரியாமல் கூட சொல்ல வேண்டாம் என்று தெரியாமல் சொல்லி விட்டேன் அந்தத் தெரியாத நபர் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக அவருக்குத் தெரியாத ஊரில் எனக்குத் தெரியாமல் குடியிருக்கிறார்..! - ------------------------- >கவி கண்மணி, கட்டுமாவடி |
| தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு Posted: 24 Nov 2013 08:28 AM PST தஞ்சாவூர் ரெட்டி பாளையம் சாலையில் உள்ள ராகவேந்திராநகர் விரிவாக்கத்தில் ஒருதனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்க குழி தோண்டப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் மிகுந்த பாதிப்பு ஏற்படும். 1 ½ கி.மீ. தூரத்துக்கு ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு உருவாகும், எனவே செல்போன் டவர் அமைக்க கூடாது என்று கூறி மாவட்ட கலெக்டர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனு கொடுத்தனர். இருந்த போதிலும் செல்போன் டவர் ... |
| Posted: 24 Nov 2013 08:26 AM PST ![]() |
| Posted: 24 Nov 2013 08:17 AM PST அப்பாவும் அம்மாவும் எதிர் எதிரே இருந்தும் இருவரையும் ஒன்றாய் கொஞ்ச முடியவில்லை அந்த அழகான குழந்தையால்! தாய், தந்தை பாசத்தை இருவரிடத்தும் தலா ஆறு மாதம் என காலக்கெடு கொடுத்து பிரித்து வைத்தது குடும்ப நல நீதிமன்றம் ! சாப்பாடு சமைக்க தெரியவில்லை சொன்னவன் கணவன் – எனது விலை உயர்ந்த புடவையை துவைக்கும்போது கிழித்துவிட்டான் சொன்னவள் மனைவி ! சண்டை வந்தது - இருவரும் தன்னிலை மறந்தார்கள் தங்கள் செல்ல மகளையும் மறந்தார்கள் இதோ இப்போது விவாகரத்து வேண்டி படியேறினார்கள் !! அம்மி ... |
| Posted: 24 Nov 2013 08:09 AM PST - ''ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வர்றேன்...'' என்றவாறே அம்மா வெளியேறியதும் வாசு கோபத்தோடு மனைவி பானுவிடம் சத்தம் போட்டான்... - காலங்காத்தால வயசனவங்களை பட்டினியாவா வெளியே அனுப்பறது...டிபன் சாப்பிட்டுப் போங்கன்னு ஒரு வார்த்தை கேட்டியா..? - வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியாம ஒரு ஆம்பிளை கத்தக் கூடாது...டாக்டர் அவங்களை வெறும் வயித்தோடதான் வரச் சொல்லியிருக்கிறார்... ஏதோ டெஸ்ட் எடுக்கணுமாம்.அதான் சாப்பிடாம போறாங்க...'' - இதைக் கேட்டதும் வாசுவின் கோபம் இன்னும் வீரியம் ஏறியது. - வெளியே எட்டிப் ... |
| வேலன்:-ஒரே மாதத்தில் 37 பவுண்ட் எடையை குறைக்க Posted: 24 Nov 2013 07:09 AM PST உடல் பருமன் உள்ளவர்கள் ஒரே மாதத்தில் தங்களது எடையை 37 பவுண்ட வரை குறைக்க எளிய முறையில் உணவு முறை கொடுக்கப்பட்டுள்ளது. 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட பிடிஎப் புத்தகமான இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்திட்டு ஓப்பன் செய்தபின்னர் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். தினம் தினம் நாம் உட்கொள்ளவேண்டிய உணவு வகைகளின் அளவுமற்றும் வகைகளை விவரமாக வெளியிட்டுள்ளார்கள். ஒரு மாதம் இந்த உணவு முறையை பயன்படுத்திப்பாருங்கள்.சில விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள்.நீங்கள் ... |
| சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் Posted: 24 Nov 2013 06:30 AM PST சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15–ந்தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட பல்வேறு வழிபாடுகள் நடந்து வருகிறது. முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் பல இடங்களில் கயிறுகள் கட்டப்பட்டு பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு மலை ஏறிச்சென்று அய்யப்பனை தரிசிக்க அனுப்பி வைக்கப்படுகிறார்கள். பக்தர்கள் கூட்டம் ... |
| ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4 Posted: 24 Nov 2013 06:25 AM PST தொடர்-3 மற்றும் 4 ''பரதேசி' ( தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) தொடர்-3 'பரதேசி' (தெலுங்கு) வெளி வந்த நாள்: 14.01.1953 தொடர்-4 'பூங்கோதை'(தமிழ்) வெளி வந்த நாள்: 31.01.1953 உரையாடல் - சக்தி கிருஷ்ணசாமி இசை: ஆதிநாராயண ராவ் ஒளிப்பதிவு: கமால் கோஷ் தயாரிப்பு: அஞ்சலி பிக்சர்ஸ் கம்பைன்ஸ் (நடிகை அஞ்சலி தேவி மாறும் அவர் கணவர் ஆதிநாராயண ராவ்) இயக்கம்: எல்.வி. பிரசாத் நடிக, நடிகையர் : நடிகர் திலகம், 'அக்கினேனி' நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவி, எஸ்.வி.ரங்காராவ், ... |
| Posted: 24 Nov 2013 03:35 AM PST விருதுகளின் அடிப்படை என்ன? விருதுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் அப்படி என்னதான் உறவோ? ''விருதுகள் சராசரிகளைச் சிறப்பிக்கிறது, உயர்ந்தவர்களை வெட்கமடைய வைக்கிறது, தாழ்ந்தவர்களால் அவமானத்துக்குள்ளாகிறது'' என்ற ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் வரிகளைவிட விருதுகளின் 'பெருமையை' சிறப்பாகக் கூறிவிட முடியாது. விருதுகள் மனிதர்களைக் கௌரவிப்பதைவிட, மனிதர்கள்தான் (சில சமயங்களில்) விருதுகளைக் கௌரவிக்கிறார்கள். மகத்தான மனிதர்கள் யாரும் அவர்கள் பெற்ற விருதுகளுக்காக மக்களால் போற்றப்படுவதோ, நினைவுகூரப்படுவதோ இல்லை. சொல்லப்போனால், ... |
| அடையாறில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது Posted: 24 Nov 2013 03:33 AM PST செங்குன்றம் அருகேயுள்ள சோழவரத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகள் சுதா(16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவள் புதுச்சேரியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறாள். சென்னை அடையார் இந்திரா நகரை சேர்ந்தவர் வினோத்(25). தனியார் கம்பெனியில் ஊழியராக பணி புரிகிறார். மாணவி சுதாவின் உறவினர் ஆவார். இவர்கள் இருவருக்கும் இன்று காலை 7.30 மணிக்கு அடையார் வெங்கடேசுவரா நகரில் உள்ள ஒரு மகாலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக பத்திரிகை அச்சிட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. எனவே ... |
| காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை Posted: 24 Nov 2013 03:23 AM PST திருவனந்தபுரம் அருகே உள்ள ஆலப்புழாவை அடுத்த அரிபரம்பு என்ற இடத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில், மத்திய காங்கிரஸ் அரசின் சாதனை விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ஏராளமான கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு அரசின் சாதனைகளை விளக்கி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பிரபல மலையாள சிரிப்பு நடிகர் அனூப் சந்திரன் அங்கு வந்தார். அவர் அடிக்கடி சத்தம் போட்டு சிரித்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது இளைஞர் காங்கிரசாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் பலமுறை எச்சரித்தும் அனூப் சந்திரன் கண்டுகொள்ளவில்லை. ... |
| கருணைக்கு பேதமில்லை-சத்குரு ஜக்கி வாசுதேவ் Posted: 24 Nov 2013 03:20 AM PST கருணைக்கு பேதமில்லை-சத்குரு ஜக்கி வாசுதேவ் http://www.mediafire.com/download/39oii5o9cg6sqef/karunaiku+pethamilai+Sadhguru-Tamil%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 24 Nov 2013 03:15 AM PST ஆத்தோரம் ஆலமரம் ஆண்டாண்டா வளர்ந்தமரம்! நீர் நிறைய போகும்போது நீண்டகரை காத்த மரம்! நீடித்த வெயில் அடிக்கயில நிழல் தந்து காத்த மரம்! புயல் காற்று அடிக்கும் போதும் பூ தூவி நின்ற மரம்! தானே புயல் வந்த போதும் தாங்கி நின்ற மரம்! மாய்ந்து போகும் மண்வளம் காத்து நின்ற மாபெரும் மரம்! பறவைகள் பல பாடுத்துறங்கி சென்ற மரம்! ஊர்காரன் வெட்டினான் தேர்செய்ய தேவையினு உன் அருமை பெருமை தெரியாத அரக்கர்கள் மரமே..... நீ மாய்ந்தால் என்ன உன் உடல் தானே தேர் தாங்குது! இன்றும் உன் வேர் தானே ஆற்றங்கரை தாங்குது! மரமே..... நீ ... |
| Posted: 24 Nov 2013 02:51 AM PST - பருவ பயணத்தின் பல்லக்கு, காதல்... பயணிப்பவன் பல்லக்கை சுமக்க, பதவிசமாய் பயணிக்கிறது காதல்! - சுமப்பவர்களை அது சும்மா விடுவதில்லை... - தவமெதுவும் இருக்காமல் தரப்படும் வரம், காதல்! அதை தருகிற தேவதை வருகிற வழி தான் புரியாத புதிராய் இன்றும் இருக்கிறது! - இந்த வரம் தரும் தேவதைகள் வரத்தை தந்து விட்டு, கணப் பொழுதில் காணாமல் போய் விடுகின்றனர்... தந்து போன வரமோ வந்து வந்து வதைக்கிறது! - வரம் பெற்றவர்கள் வாழ்வில் சுபம் பெற்றவர்கள்! - கண்களை மறைப்பதல்ல காதல்... அது, ... |
| அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை Posted: 24 Nov 2013 02:05 AM PST தமிழ்நாடு ஓய்வூதிய சங்க மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் அண்மையில் நடந்தது. - இக் கூட்டத்தில், ஓய்வூதியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.50,000-மாக உயர்த்தியதற்கும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிதும் தீர்மானம ஃநிறைவேற்றப்பட்டது - மேலும் தற்போது வழங்கப்பட்டு வரும் 90 சத அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும். முழு ஓய்வூதியம் பெற்றிட தகுதியாக உள்ள 30 ஆண்டு பணிக் காலத்தை ... |
| Posted: 24 Nov 2013 02:00 AM PST கூகிள் தேடுபொறியில் இன்று ஆங்கிலத்தில் Kamal Haasan என்று தட்டச்சுச் செய்தால் அது நாம் அடித்து முடிப்பதற்கு முன்பே கமல் ஹாசன் எனத் தமிழில், தமிழ் வரிவடிவில், காட்டிவிடுகிறது. இதுபோலவே பல சொற்களும் தேடுபொறியில் தமிழ் வரிவடிவில் தாமாகவே தோன்றுகின்றன. இணையத் தொழில்நுட்பத்தில் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட அதிசயம் எதுவும் கிடையாது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ் வரிவடிவில் எண்ணற்ற தமிழ்ச் சொற்களை ஏற்கனவே உள்ளிட்டு வைத்திருந்தால்தான் இப்படித் தோன்றுவது சாத்தியமாகும். தமிழுக்காக, தமிழருக்காக கூகிள் ... |
| லெஹர் புயல்: காரைக்கால் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் Posted: 24 Nov 2013 01:55 AM PST - வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக காரைக்கால் துறைமுகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணியளவில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. - இப்புயல் (இன்று) ஞாயிற்றுக்கிழமை இரவு கரையை கடக்குமென கூறப்பட்டாலும், தொடர்ந்த 4 நாள்கள் தமிழக கடலோர மாவட்டங்கள் மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. |
| எதிர்பார்ப்பின் உச்சத்தில் தூம் 3 Posted: 24 Nov 2013 01:49 AM PST டிசம்பர் 20 தூம் சீரிஸின் 3 ஆம் பாகம் வெளியாகிறது. அமீர் கான் தூம் 3-யில் நடிக்கிறார், அதுவும் வில்லனாக என்றதும் விஷம் மாதிரி ஏறியது படத்தின் மதிப்பு. அதற்காக தூம் சீரிஸை சாதாரணமாக எடைபோட முடியாது. அது அமீர் கான் வரும் முன்பே இரண்டு மெகா ரேஸ்களில் பட்டையை கிளப்பிய பந்தயக் குதிரை. யாஷ் சோப்ராவின் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தொடர்ந்து படங்கள் தயாரித்தாலும் ஆக்சன் கதைகளின் பக்கம் அது செல்லவேயில்லை. 1988-ல் தயாரித்த விஜய் என்ற படம்தான் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் கடைசி ஆக்சன் படம். இந்நிலையில் ... |
| திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்? Posted: 24 Nov 2013 01:45 AM PST கடல் சீற்றத்தைக் காரணம் காட்டி, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகுப் போக்குவரத்து தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துக்கு ஆளாகின்றனர். இதில், அரசியல் சாயம் பூசப்படுவதாக, முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் குற்றம்சாட்டுகிறார். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிசயித்து பார்க்கும் விஷயம் விவேகானந்தர் பாறையும், திருவள்ளுவர் சிலையும்தான். சீறும் கடல் அலைகளுக்கு மத்தியில், கம்பீரமாக காட்சி தரும் வள்ளுவர் சிலை கன்னியாகுமரியின் முக்கிய ... |
| பாஜக தலைமையில் உருவாகிறது புதிய அணி! Posted: 24 Nov 2013 01:43 AM PST சென்னை: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அணியில் பரமவைரிகளான தேமுதிகவும் பாமகவும் இடம்பெறுவதற்கு ஒப்புதல் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய அணியை உருவாக்கும் முயற்சிகள் பல தரப்பில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலில் பாஜக, தேமுதிக, மதிமுக ஆகியவற்றை இணைத்து ஒரு அணியை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்கெனவே பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கியிருக்கும் சமூக ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் ... |
| இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்! Posted: 24 Nov 2013 01:40 AM PST தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும். அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா? அப்படி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டும். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள ... |
| Posted: 23 Nov 2013 11:40 PM PST யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| Posted: 23 Nov 2013 10:40 PM PST முன்பு "சரஸ்வதி - ஒரு நதியின் மறைவு' பற்றி எழுதி இருந்தேன். சரஸ்வதி மட்டுமல்ல, உலகின் பல்வேறு நதிகள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டிருக்கின்றன. காணாமல்போன நதிகள், அழிந்துபோன நகரங்கள் என்று பட்டியலிடத் தொடங்கினால், கணக்கு வழக்கே இருக்காது. தமிழகத்திலும் அதுபோல பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது மா. இராசமாணிக்கனாரின் "பத்துப்பாட்டு ஆராய்ச்சி'. தென்னிந்திய வரலாற்றிலும், கல்வெட்டுகளிலும் பயிற்சி பெற்றிருந்த மா. இராசமாணிக்கனாரை "பத்துப்பாட்டு' பற்றிய விரிவான ஆராய்ச்சி நூலை ... |
| இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Posted: 23 Nov 2013 10:30 PM PST இறைவழிபாடு தொடர்பான அனைத்தும் முன்னர் தமிழிலேயே இருந்தன. பின்னர் வேற்றவர் மொழியாலும், வேற்றவர் ஆட்சியாலும், வேற்றுச் சமயங்களின் நுழைவாலும் தமிழ்வழிபாடு பாதிக்கப்பட்டது. அதை மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. வழிபாடு தொடர்பான தமிழ்ப்பெயர்களை இந்தத் திரியில் பதிவு செய்ய உள்ளேன். தமிழ் வழிபாடு இருந்ததைப்பற்றி திருஞானசம்பந்தரும் பின்வரும் பாடல்களில் தெரிவிக்கிறார். "செந்தமிழர் தெய்வமறை நாவர் செழுநற்சுவை தெரிந்த அவரோடு அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர்" என்ற பாடலால் ... |
| Posted: 23 Nov 2013 10:26 PM PST "சங்கப்பலகை' - என்ற இப்புதிய பகுதிக்கு, தமிழ் இலக்கியத்தை முதன்மைப் பாடமாக (இளங்கலை, முதுகலை, இளம் முனைவர், முனைவர்) எடுத்துப் படிக்கும் மாணவர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. மாணவர் பெயர், முழு முகவரி, தொ.பே.எண், படிக்கும் கல்லூரி / பல்கலைக்கழகத்தின் பெயர், அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றை இணைத்து மூன்று பக்கங்களுக்கு மிகாமல் (500 சொற்களுக்குள்) எழுதி அனுப்பவும். மின்னஞ்சலில் அனுப்புவோர் ஜ்ர்ழ்க் மற்றும் ல்க்ச் ஃபைல் இணைத்து அனுப்ப வேண்டும். - -ஆசிரியர் - தினமணி ******************************************************************************************************************* சங்கப்பலகை: ... |
| Posted: 23 Nov 2013 10:09 PM PST தமிழிலக்கண இலக்கியங்களில் நம்பி நங்கை என்னும் சொல் ஆளப்பெற்றுள்ள நிலையை ஆராய்வோம். ஆணிற் சிறந்தவரை நம்பி என்றும், பெண்ணிற் சிறந்தவரை நங்கை என்றும் அழைப்பது தமிழர் மரபு. தொல்காப்பிய எழுத்ததிகாரத் தொகை மரபில் உயர்திணைப் பெயர்க்குச் சிறப்பு விதி கூறும் போது அவற்றுள், இகர ஈற்றுப் பெயர் திரிபிடன் உடைத்தே (13) என்னும் நூற்பா இடம்பெற்றுள்ளது. இதற்கு இளம்பூரணர் "நம்பிப்பூ, நம்பிப்பேறு' என்று சான்று காட்டியுள்ளார். சங்க இலக்கியங்கள் "அறிவுடைநம்பி' முதலான பெயர்களைக் குறிப்பிட்டுள்ளது. மாணிக்கவாசகர் ... |
| தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Posted: 23 Nov 2013 10:05 PM PST தமிழ்ச் செல்வங்கள்: அம்மா- 1 - நன்றி : தினமணி குழந்தைகளுக்குப் "பிறந்த நாள்' கொண்டாடுகிறோம். "பெயர்சூட்டு நாள்' என ஒரு விழாக் கொண்டாடுகிறோம். இவ்விரண்டு விழாக்களையும், குழந்தை பிறந்த சில நாள்களிலேயே, தன் தாய்க்குச் சூட்டிக் கொண்டாடிவிடுகிறது குழந்தை! பேசாக் குழந்தையா? பிறந்த சில நாள்களிலேயா? வியப்பின் மேல் வியப்பாக இருக்கிறது! ஆனால், உண்மைதான் என்பதைக் குழந்தைகள், தொடர் விழாவாகக் கொண்டாடிக்கொண்டே உள்ளன! நாம்தான் கண்டு கொள்ளவில்லை. குழந்தை தாயிடம் பால் பருகுகின்றது; பசித்த குழந்தை, பசி ... |
| Posted: 23 Nov 2013 10:01 PM PST ""சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற குலம் பற்றி வாழ்தும் என்பர்'' (குறள்-956) மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனை கொண்டு தகுதியில்லாதவற்றைச் செய்யமாட்டார் என்பது குறள் விளக்கம். வள்ளுவன் வழிவந்த தலைவி ஒருத்தி, வஞ்சமில்லா நெஞ்சோடு ஒழுகும் காட்சி ஒன்றைக் குறுந்தொகை சித்திரிக்கிறது. பரத்தையின் பால் சென்று மீண்ட தலைவன், தலைவியுடன் சேர, தோழியிடம் தூது அனுப்புகிறான். தலைவனின் செய்கை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றெனினும், தலைவி நற்குடிப் பிறந்த காரணத்தால் சம்மதிக்கிறாள். தலைவி ... |
| Posted: 23 Nov 2013 09:58 PM PST வானில் முழுமதி வலம்வந்து கொண்டிருக்கிறது. ஒரு மாடி வீட்டின் மேல் முற்றத்தில் வெள்ளிக் கிண்ணம் வைக்கப்பட்டுள்ளது. அதனுள் ஏதும் வைக்கப்படாமல், வெற்றுக் கிண்ணமாகக் காட்சி அளிக்கிறது. முழு மதியின் பூரண ஒளி அந்தக் கிண்ணத்தின் மீது விழுகிறது. வெள்ளிக் கிண்ணத்தின் உள்ளே முழு நிலவின் பிம்பம் படிகிறது. அக்காட்சியைக் கண்ட பைங்கிளிகள் கிண்ணத்தினுள் சுவை மிகுந்த பால் வைக்கப்பட்டுள்ளதாகக் கருதி, தனது அலகுகளால் கிண்ணத்துள் உள்ள பாலை அருந்த முற்படுகின்றன. கிண்ணத்துள் உள்ள பாலைச் சுவைக்க வாய் மடுக்கும் சமயம்தான் ... |
| நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Posted: 23 Nov 2013 09:58 PM PST கவிதையின் ஆசிரியர் ஜேம்ஸ்வெல்டன் ஜான்ஸன்.கவிதையின் தலைப்பு "Sence You Went Away" நீ என்னை விட்டுச் சென்றதிலிருந்து, தோன்றுகினது எனக்கு, விண்மீண்கள் அவ்வளவாக மின்னுவதில்லை என, கதிரவன் ஒளியினை இழந்துவிட்டான் என், ஒன்றும் சரியாக நிகழ்வதில்லை என. நீ என்னை விட்டுச்சென்றதிலிருந்து தோன்றுகிறது எனக்கு, வானம் வெளிர் நீலமாய்கூட இல்லை என, எல்லாம் உன்னை விரும்புகின்றன என, நான் என்ன செய்யவேண்டும் எனதெ தெரியவில்லை என. நீ என்னை விட்டுச் சென்றதிலிருந்து, தோன்றுகிறது எனக்கு, எல்லாம் தவறு ... |
| Posted: 23 Nov 2013 09:55 PM PST நடிகைகள் மட்டுமின்றி, நடிகர்களும் தமது வாரிசு களை சினிமாவில் களமிறக்கும் காலமிது. நடிகர் 'தலைவாசல்' விஜய்யும் அப்படி நினைத்திருந்தால் இன்று நாம் ஒரு உலக சாதனையாளரை இழந்திருப்போம். யெஸ்... தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணா, உலகமே கவனிக்கும் இடத்தில் இருக்கும் நீச்சல் சாம்பியன்! செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிற ஜெயவீணாவுக்கு ஒவ்வொரு விடியலிலும் வெற்றி! 2012 டிசம்பரில் இஸ்தான்புல்லில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பாக பங்குகொண்ட இளவயது சாதனையாளர் என்பது இவரது லேட்டஸ்ட் ... |
| Posted: 23 Nov 2013 09:47 PM PST 'கடிதம்' என்பதற்கு முடங்கல், திருமுகம், மடங்கல், ஓலை எனப் பல பெயர்கள் உண்டு. எந்தக் கடிதத்திற்கும் மூன்று முக்கிய பகுதிகள் இருக்க வேண்டும். முதலில் கடிதம் எங்கிருந்து (ஊழ்ர்ம்) என்பதையும், அடுத்து, இக்கடிதம் இன்னாருக்கு (பர்) எழுதப்படுகிறது என்பதையும், அதன் பின்னர் செய்திகளையும் அறிவிக்க வேண்டும். "இக்கடித முறை மேனாட்டு அறிஞர்களின் போக்கைத் தழுவியது' எனச் சிலர் கூறுவர். ஆனால், பண்டைத் தமிழர்கள் இம்முறைப்படியே கடிதம் எழுதினர் என்பதை பதினோராம் திருமுறையில் உள்ள திருவாலவாயுடையாரின் திருமுகப் பாசுரத்திலிருந்து ... |
| Posted: 23 Nov 2013 08:50 PM PST தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் - 1 தக்காளி - 2 வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 1 கேரட், வெள்ளரிக்காய் - விரும்பினால் உப்பு - தேவைக்கு செய்முறை: நெருப்பில் கத்திரிக்காயும் தக்காளியும் சுட்டு எடுக்கவும் (மிதமான தீயில்) ஆறியதும் தோல் நீக்கி பிசைந்து கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட் துருவி வைக்கவும். பிசைந்து வைத்திருக்கும் கலவையுடன் மீதம் இருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். சுட்ட கத்திரிக்காய் சம்பல் தயார். இதில் ... |
| வானமழை நீ எனக்கு -ஜெய்சக்தி நாவல் Posted: 23 Nov 2013 08:36 PM PST வானமழை நீ எனக்கு -ஜெய்சக்தி நாவல் http://www.mediafire.com/download/05u1o9w3x22gqc7/vana+mazhai+nee+enakku-js%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| புன்னகை மட்டும் கொடு-ஜெய்சக்தி நாவல் Posted: 23 Nov 2013 08:34 PM PST புன்னகை மட்டும் கொடு-ஜெய்சக்தி நாவல் http://www.mediafire.com/download/nyvww6ac41aqv5n/Jaisakthi+Punnagai+Mattum+Kodu%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம் Posted: 23 Nov 2013 07:53 PM PST திண்டுக்கல் நீதிமன்றம் முன்பு விளம்பர பலகை வைப்பதில் ஏற்பட்ட போட்டியில் அதிமுக மற்றும் திமுக-வினர் நேற்று கற்களை வீசியும், தடிகளால் தாக்கியும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் 21 பேர் காயம் அடைந்தனர். திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் சில மாதங்களுக்கு முன் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியபோது முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்று மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் ... |
| லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Posted: 23 Nov 2013 06:27 PM PST சென்னை:சுப்ரீம் கோர்ட் முதல், கீழமை கோர்ட்கள் வரை, "லோக் அதாலத்' மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது. தமிழகத்தில் மட்டும், ஒன்பது லட்சம் வழக்குகளில், 500 கோடி ரூபாய் அளவுக்கு, தீர்வு காணப்பட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, அனைத்து நீதிமன்றங்களிலும், "லோக் அதாலத்' என அழைக்கப்படும், மக்கள் நீதிமன்றம் மூலம், நிலுவையில் உள்ள வழக்குகள் நேற்று ஒரே நாளில் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. விபத்து, காசோலை மோசடி, திருமண பந்தம், வங்கி கடன் என, பலதரப்பட்ட ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
