மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சித்தூர் அருகே ஓடும் ரெயிலில் பயணியை தாக்கி கீழே தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு வலைவீச்சு
- சத்தீஷ்கரில் முதல் கட்ட தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது
- காமன்வெல்த் மாநாடு: தமிழ்மக்களின் எதிர்ப்பால் பிரதமர் பங்கேற்கவில்லை- சல்மான் குர்ஷித்
- பீகாரில் 3 பேரை சுட்டுக்கொன்ற மாவோயிஸ்டு தீவிரவாதிகள்
- தெலுங்கானா காங்.எம்.பி.க்கள் சோனியாவுடன் சந்திப்பு
- கவுகாத்தி தீர்ப்பை மீறி 9 ஆயிரம் வழக்குகளை சி.பி.ஐ. நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
- மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 15-ந் தேதி திறப்பு
- மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ: 4 பேர் கருகி சாவு
- மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்கும்: முலாயம்சிங் சொல்கிறார்
- சி.பி.ஐ.க்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்: உள்துறை மந்திரி ஷிண்டே பேட்டி
- ‘காங்கிரசுக்கு சவாலாக விளங்குகிறார் நரேந்திரமோடி’: ப.சிதம்பரம் ஒப்புதல்
- உச்சகட்ட பாதுகாப்புடன் சத்தீஸ்கரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு
- மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு அமெரிக்கா விசா கொடுத்தே தான் தீர வேண்டும்: சத்ருகன் சின்கா பேட்டி
- டெல்லி தேர்தல் செலவுக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.19 கோடி நன்கொடை குவிந்தது
- நாட்டை துண்டாடிய பாவத்தை செய்தது காங்கிரஸ் கட்சிதான்: மோடி பகிரங்க குற்றச்சாட்டு
- ஜம்மு எல்லையில் போதைப்பொருள் கடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு: 10 கோடி ஹெராயின் பறிமுதல்
- தமிழர்கள் மீதான தொடர் அடக்குமுறையே, பிரதமர் இலங்கை செல்லாததற்கு காரணம்: நாராயணசாமி
- 12 கோடி மரங்களை வளர்க்க ஒடிஷா அரசு திட்டம்
- பாகிஸ்தான் அஜிஸ்-காஷ்மீர் பிரிவினைவாதிகள் சந்திப்பிற்கு அனுமதித்து மத்திய அரசு தவறிழைத்துவிட்டது: ராஜ்நாத் சிங்
- விடுமுறைகளை ஒட்டி டிசம்பரில் உயரும் விமானக் கட்டணங்கள்
| சித்தூர் அருகே ஓடும் ரெயிலில் பயணியை தாக்கி கீழே தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு வலைவீச்சு Posted: 10 Nov 2013 10:44 PM PST கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புதுடெல்லிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று கடந்த மாதம் 30–ந்தேதி புறப்பட்டது. 31–ந்தேதி நள்ளிரவு சுமார் 2 மணியளவில் ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த சித்தூர் ரெயில் நிலையத்துக்கு அந்த ரெயில் வந்தது. அதில், ஒரு ரெயில் பெட்டியில் இருந்த டெல்லி ஆக்ராவை சேர்ந்த ஹரிசிங் (வயது 59) என்பவரை சரமாரியாக அடித்து உதைத்து வெளியே தள்ளி விட்டனர். அவர் ரெயிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் தானாகவே எழுந்து சென்று சித்தூர் அரசு |
| சத்தீஷ்கரில் முதல் கட்ட தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது Posted: 10 Nov 2013 10:05 PM PST சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிக அதிகமாக இருப்பதால் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்த தலைமை தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி இன்றும் (திங்கட்கிழமை) வரும் 19–ந்தேதியும் ஓட்டுப் பதிவு நடக்கிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 18 தொகுதிகளில் இன்று முதல்கட்ட |
| காமன்வெல்த் மாநாடு: தமிழ்மக்களின் எதிர்ப்பால் பிரதமர் பங்கேற்கவில்லை- சல்மான் குர்ஷித் Posted: 10 Nov 2013 09:22 PM PST 'இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகளுக்கும், மனித உரிமை மீறலுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அங்கு நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று அனைத்து தமிழக கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மாநாட்டில் பிரதமர் |
| பீகாரில் 3 பேரை சுட்டுக்கொன்ற மாவோயிஸ்டு தீவிரவாதிகள் Posted: 10 Nov 2013 09:13 PM PST பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள அம் கோலா எனும் கிராமத்துக்குள் நேற்றிரவு திடீரென மாவோயிஸ்டு தீவிரவாதிகள் புகுந்தனர். அப்போது அந்த கிராமத்தில் கலை நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. ஏராளமானவர்கள் கலை நிகழ்ச்சியை பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். கிராம மக்களை முற்றுகையிட்ட மாவோயிஸ்டுகள் 7 பேரை மட்டும் கடத்திச் சென்றனர். அடர்ந்த காட்டுக்குள் அவர்களை கொண்டு சென்றனர். |
| தெலுங்கானா காங்.எம்.பி.க்கள் சோனியாவுடன் சந்திப்பு Posted: 10 Nov 2013 09:05 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தனி தெலுங்கானாவுக்கு சீமாந்திரா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தெலுங்கானா பகுதி காங்கிரஸ் கட்சியினர் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி தலைமையில் டெல்லி சென்று மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணியை சந்தித்து தெலுங்கானா மாநிலத்தை விரைவில் உருவாக்க வற்புறுத்தினார்கள். |
| கவுகாத்தி தீர்ப்பை மீறி 9 ஆயிரம் வழக்குகளை சி.பி.ஐ. நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட்டு அனுமதி Posted: 10 Nov 2013 08:54 PM PST சி.பி.ஐ. சட்டப்பூர்வ மானதல்ல என்று கவுகாத்தி ஐகோர்ட்டு கடந்த வியாழக் கிழமை பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டது. இதனால் சி.பி.ஐ. அமைப்பே முடங்கும் நிலை ஏற்பட்டது. சி.பி.ஐ. நடத்தி வரும் வழக்குகள் என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்தது |
| மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 15-ந் தேதி திறப்பு Posted: 10 Nov 2013 08:14 PM PST மண்டல - மகரவிளக்கு பூஜை திருவிழாவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல- மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடுவார்கள். |
| மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ: 4 பேர் கருகி சாவு Posted: 10 Nov 2013 08:07 PM PST மும்பை விக்ரோலி பகுதியில் குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சுமார் நூறுக்கும் மேற்பட்டவர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இன்று (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் முக்கிய மின்சார பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. |
| மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்கும்: முலாயம்சிங் சொல்கிறார் Posted: 10 Nov 2013 07:36 PM PST மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்கும் என்று சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ் கூறினார். உத்தரபிரதேச மாநிலம் கர்டாய் நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஆளும் சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாரதீய ஜனதா கட்சிக்கோ அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கோ உத்தரபிரதேசத்தில் செல்வாக்கு இல்லை. அவர்கள் சமாஜ்வாடி கட்சியை பார்த்து பயப்படுகிறார்கள். அதனால்தான் மாநில |
| சி.பி.ஐ.க்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்: உள்துறை மந்திரி ஷிண்டே பேட்டி Posted: 10 Nov 2013 07:20 PM PST பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திரமோடி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் சி.பி.ஐ. அமைப்பை குறை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கவுகாத்தி ஐகோர்ட்டும், சி.பி.ஐ. அங்கீகாரமற்ற அமைப்பு என்று தீர்ப்பு கூறியுள்ளது. திர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே மறுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் முதல் முறையாக அமைக்கப்பட்ட கலவரத்தடுப்பு போலீஸ் தனி பயிற்சி மையத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு |
| ‘காங்கிரசுக்கு சவாலாக விளங்குகிறார் நரேந்திரமோடி’: ப.சிதம்பரம் ஒப்புதல் Posted: 10 Nov 2013 07:13 PM PST பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, காங்கிரசுக்கு சவாலாக விளங்கி வருவதாக, மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஒப்புக்கொண்டார். கோவா மாநிலம், பனாஜியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது நரேந்திரமோடி குறித்து கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்து அவர் கூறியதாவது- "ஒரு அரசியல் கட்சி என்ற முறையில், காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி சவாலாக விளங்குகிறார் |
| உச்சகட்ட பாதுகாப்புடன் சத்தீஸ்கரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு Posted: 10 Nov 2013 03:54 PM PST நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பஸ்தர் மற்றும் ரஞ்சன்ட்கன் மாகாணத்திற்குட்பட்ட 18 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு |
| மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு அமெரிக்கா விசா கொடுத்தே தான் தீர வேண்டும்: சத்ருகன் சின்கா பேட்டி Posted: 10 Nov 2013 02:47 PM PST ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க தலைநகர் நியூ யார்க் சென்றிருக்கும் பா.ஜ.க. எம்.பி.யும், நடிகருமான சத்ருகன் சின்காவிடம் மோடிக்கு அமெரிக்கா விசா வழங்காதது தொடர்பாக நிருபர்கள் கேள்வி |
| டெல்லி தேர்தல் செலவுக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.19 கோடி நன்கொடை குவிந்தது Posted: 10 Nov 2013 01:03 PM PST டெல்லி சட்டசபைத் தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து முதல்வர் |
| நாட்டை துண்டாடிய பாவத்தை செய்தது காங்கிரஸ் கட்சிதான்: மோடி பகிரங்க குற்றச்சாட்டு Posted: 10 Nov 2013 12:22 PM PST நாட்டை துண்டாடியதன் மூலம் இந்தியாவின் புவியில் அமைப்பை மாற்றிய பாவத்தை காங்கிரஸ் கட்சி தான் செய்தது என்று குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத்தின் கேடா மாவட்டத்தில் முஸ்லிம் அறக்கட்டளை சார்பில் |
| ஜம்மு எல்லையில் போதைப்பொருள் கடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு: 10 கோடி ஹெராயின் பறிமுதல் Posted: 10 Nov 2013 07:15 AM PST ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள அர்னியா செக்டர் எல்லை வேலியை கடந்து நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஆட்கள் நடமாடுவதை எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்தனர். அப்போது அவர்கள் ஏதோ பொருட்களை இந்தியப்பகுதியில் வீசி எறிவதையும் |
| தமிழர்கள் மீதான தொடர் அடக்குமுறையே, பிரதமர் இலங்கை செல்லாததற்கு காரணம்: நாராயணசாமி Posted: 10 Nov 2013 06:32 AM PST இலங்கை தலைநகர் கொழும்புவில் காமன்வெல்த் மாநாடு நடந்துகொண்டிருக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் ஒரு குழு 15-ம் தேதி கலந்துகொள்கிறது. இது பிரச்சினையை எழுப்பியுள்ளது. |
| 12 கோடி மரங்களை வளர்க்க ஒடிஷா அரசு திட்டம் Posted: 10 Nov 2013 03:49 AM PST ஒடிஷா மாநிலத்தில் சமீபத்தில் வீசிய பைலின் புயலில் 26 லட்சம் மரங்கள் சாய்ந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன. எனவே அம்மாநில அரசு வரும் 2014-15-ம் ஆண்டிற்குள் 12 கோடி மரங்களை வளர்க்கத் திட்டமிட்டுள்ளதாக நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இவற்றுள் 6.5 கோடி மரக்கன்றுகள் வெவ்வேறு வகையான மத்திய, மாநிலத் திட்டங்கள் மூலமும், மீதி 5.5 கோடி கன்றுகள் விவசாயிகளின் சொந்த நிலங்களில் பயிரிடுவதற்கும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 10 Nov 2013 03:24 AM PST காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாதிகளை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் அறிவுரையாளர் சர்தார் அஜிஸுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| விடுமுறைகளை ஒட்டி டிசம்பரில் உயரும் விமானக் கட்டணங்கள் Posted: 10 Nov 2013 03:14 AM PST கிறிஸ்துமஸ், புது வருடம் விடுமுறைக் காலங்களை ஒட்டி, வரும் டிசம்பர் மாதம் உள்நாட்டு, வெளிநாட்டு விமானக் கட்டணங்கள் உயரக்கூடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த சமயத்தில் தங்களின் பயணங்களை மேற்கொள்ள விரும்புவோர் இப்போதே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் அல்லது இதற்காகாக அதிகப்படியான கட்டணத்தை அவர்கள் செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் 30 சதவிகிதம் அதிகரிக்கும் இந்தக் கட்டணம் கிறிஸ்துமஸை ஒட்டி இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. உள்நாட்டுப் பயணக் கட்டணங்களில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |