Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருப்பதியிலிருந்து தமிழகத்துக்கு 140 புதிய பஸ்கள்: போக்குவரத்து அதிகாரி தகவல்

Posted: 19 Nov 2013 09:43 PM PST

திருப்பதியிலிருந்து தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்கு புதிதாக 140 பஸ்களை சாலைப் போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளது. சித்தூர் மாவட்டம் பி.கொத்தகோட்டாவில் புதிதாக பஸ்நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக நெல்லூர் அரசு போக்குவரத்து கழக முதன்மை இயக்குனர் சூரிய சந்திரராவ் வந்தார்.

கலவரத்தில் கைதாகி சிறை சென்ற பா.ஜனதா எம்.எல்.ஏக்களுக்கு நரேந்திரமோடி பாராட்டு

Posted: 19 Nov 2013 09:29 PM PST

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாளை ஆக்ராவில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பேசுகிறார். இதையொட்டி அங்கு பிரமாண்ட ஏற்பாடுகளை மாநில பாரதீய ஜனதா செய்து வருகிறது. மாநாட்டில் லட்சக் கணக்கில் தொண்டர்களை திரட்டவும் முடிவு செய்துள்ளது. பாரதீய ஜனதா சார்பில் தொண்டர்கள் வருகைக்கு விசேஷ பஸ்கள் விடப்படுகிறது. இந்த கூட்டத்தில் உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் நடந்த கலவரம்

வயிற்றில் விழுங்கி கொண்டு வந்த போதை மருந்து மாத்திரை வெடித்து கடத்தல்காரன் பலி

Posted: 19 Nov 2013 09:17 PM PST

ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டைச் சேர்ந்த 2 வாலிபர்கள் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு விமானம் மூலம் மும்பை வந்தனர். அவர்கள் இருவரும் போதை மருந்து கடத்தி வருவதாக மும்பை குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உஷார் ஆன அதிகாரிகள் இருவரையும் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அவர்களது உடமைகளை

சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள்: புதிய மேல்சாந்தி அறிவிப்பு

Posted: 19 Nov 2013 08:34 PM PST

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கோவில் நடைதிறக்கப்பட்டு அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது. தற்போது சபரிமலையில் மிதமான காலசூழ்நிலை நிலவுவதால் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

திருவனந்தபுரத்தில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக ‘மகளிர் டாக்சி’: நடிகை மஞ்சுவாரியர் தொடங்கி வைத்தார்

Posted: 19 Nov 2013 08:13 PM PST

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தனியாக பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்காக 'மகளிர் டாக்சி' அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சி ஏற்பாட்டில் இந்த புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையம் அருகே இந்த 'மகளிர் டாக்சி'கள் செயல்படும். மேலும் இந்த டாக்சிகளில் பெண் டிரைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தனியாக பயணம் செய்யும் பெண்கள் மட்டும் இந்த டாக்சியை பயன்படுத்தலாம். இதற்கு வழக்கமான கட்டணம் வசூல் செயல்படும். இந்த மகளிர் டாக்சியை மலையாள நடிகை மஞ்சுவாரியார் தொடங்கி வைத்தார். மேலும் அந்த டாக்சியில் அவர் பயணம் செய்தார். இந்த மகளிர் டாக்சி வசதி பற்றி

ஜெயலலிதா மீதான வழக்கில் நீதிபதியாக நீடிக்க பாலகிருஷ்ணா விரும்பவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு பதில்

Posted: 19 Nov 2013 07:47 PM PST

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக்காலம் கடந்த செப்டம்பர் 30–ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் புதிய நீதிபதியை நியமனம் செய்தால் மேலும் தீர்ப்பு வெளியாக காலதாமதம் ஏற்படலாம். எனவே, நீதிபதி பாலகிருஷ்ணாவின்

அமித் ஷா இளம்பெண்ணை கண்காணித்த விவகாரம்: நரேந்திர மோடி மீது ப.சிதம்பரம் தாக்கு

Posted: 19 Nov 2013 07:34 PM PST

குஜராத் முதல்–மந்திரியும், பா.ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் அமித் ஷா. இவர் கடந்த 2009–ம் குஜராத்தின் உள்துறை மந்திரியாக பதவி வகித்தபோது அந்த மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகளை போலீசார் மூலம் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதன் பேரிலேயே உள்துறை மந்திரி அந்த இளம்பெண்ணை கண்காணித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமித் ஷாவுக்கும், ஐ.பி.எஸ். அதிகாரி ஜி.எல்.சிங்காலுக்கும் இடையே

ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கக்கூடாது என வழக்கு: மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

Posted: 19 Nov 2013 07:29 PM PST

எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தொகையை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை, கடந்த ஜூன் 1-ந்தேதி, 19 மாவட்டங்களில் மத்திய அரசு தொடங்கியது. 'ஆதார்' அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே இந்த மானியத்தை பெற முடியும் என்று கூறியது. 'ஆதார்' அட்டை பெறாதவர்களுக்கு 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்குள் 'ஆதார்' அட்டை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

‘பாரத ரத்னா’ விருது விவகாரம்: மன்மோகன்சிங், தெண்டுல்கருக்கு எதிராக வழக்கு - டிசம்பர் 10-ந்தேதி விசாரணை

Posted: 19 Nov 2013 07:21 PM PST

நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது, கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. தெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சற்று நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்குவதற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெங்களூரில் ஏ.டி.எம்.மில் பெண் அதிகாரியை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளை

Posted: 19 Nov 2013 04:37 PM PST

பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஜோதி உதய் (வயது 37). இவர் ஒரு தனியார் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 7.10 மணி அளவில் இவர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம்

குஜராத்தில் இளம்பெண்ணை உளவு பார்த்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது

Posted: 19 Nov 2013 04:27 PM PST

குஜராத் மாநிலத்தில், முதல்-மந்திரி நரேந்திரமோடி உத்தரவின் பேரில், இளம்பெண்ணை போலீசார் உளவு பார்த்த விவகாரம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிடும்படி

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு இந்திரா காந்தி அமைதி விருது

Posted: 19 Nov 2013 03:15 PM PST

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் சர்வதேச அமைதி விருது ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. உலகளவில் அமைதிக்காகவும், ஆயுத கைவிடலுக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிற தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது

வீரப்பன் கூட்டாளிகளுக்கு விதித்த தூக்கு தண்டனைக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடங்கியது

Posted: 19 Nov 2013 02:46 PM PST

1993-ம் ஆண்டு தமிழக, கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறு அருகே வீரப்பனை தேடிச்சென்ற போலீஸ் வாகனம் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசார் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக 50 பேர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன

'ரத்தக்கறை படிந்த கை'கள் பேச்சுக்கு நரேந்திர மோடி விளக்கம்

Posted: 19 Nov 2013 01:16 PM PST

5 மாநில சட்டசபை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரசின் கை சின்னத்தை குறிக்கும் வகையில், ரத்தக்கறை படிந்த கைகள் என்று வர்ணித்து இருந்தார். இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று கூறி, தலைமை தேர்தல் கமிஷன்

பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களில் விசாரணை கைதிகள் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Posted: 19 Nov 2013 10:21 AM PST

போலீஸ் காவலில் உள்ளவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாது என பாட்னா ஐகோர்ட்டு ஒரு தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து தலைமை தேர்தல் கமிஷனரும் மற்றும் சிலரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர்

ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவு திரட்ட மம்தா பானர்ஜி-முலாயம் சிங்கை சந்திக்கிறார் ஜெகன்

Posted: 19 Nov 2013 08:13 AM PST

ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒன்றுபட்ட ஆந்திராவுக்காக ஆதரவு திரட்டி வருகிறார்.

ஜெய்ப்பூரில் நாளை மறுநாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரச்சாரம்

Posted: 19 Nov 2013 07:27 AM PST

ராஜஸ்தானில் வரும் டிசம்பர் 1-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியைத் தக்க வைக்க அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மன்மோகன்

வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல்: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு

Posted: 19 Nov 2013 06:45 AM PST

ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3600 கோடி மதிப்பில் 12 விவிஐபி ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு ரூ.362 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.

உத்தர பிரதேசத்தில் இலவச லேப்டாப் வழங்கும் விழாவிற்கு வந்து சென்ற மாணவி கற்பழிப்பு

Posted: 19 Nov 2013 04:53 AM PST

உத்தர பிரதேச மாநிலம் பைசாபாத் நகரில் நேற்று மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு விழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் சீக்கிரமாகவே விழா அரங்கிற்கு வந்திருந்தனர்.

சபரிமலை அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக 90 சிறப்பு ரெயில்கள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Posted: 19 Nov 2013 04:25 AM PST

சபரிமலையில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல- மகரவிளக்கு திருவிழா சீசனில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை வழிபடுவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல - மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை 15-ந்தேதி திறக்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™