மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பா.ஜனதாவில் சேரும் காங்கிரஸ் எம்.பி.: ராகுலை எதிர்த்து போட்டி
- தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமாக நடக்கிறது: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
- உத்தரபிரதேசத்தில் நரேந்திரமோடி போட்டியிட 4 தொகுதிகளில் பா.ஜ.க. ஆய்வு
- திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ.2 கோடியே 25 லட்சம் உண்டியல் வருமானம்
- சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
- பாராளுமன்ற தேர்தல்: தமிழகம் உள்பட 84 தொகுதிகளை ‘குறி’ வைக்கும் காங்கிரஸ்
- கேரளாவில் மீண்டும் கனமழை
- கர்நாடகத்தில் ஆம்னி பஸ் தீப்பிடித்து 7 பேர் கருகி சாவு
- அலுவல் சாரா அதிகாரங்களை சி.பி.ஐ. இயக்குனருக்கு தர முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
- மேற்கு வங்காளத்தில் ரெயில் மோதி 6 யானைகள் பலி
- கிராமப்புறங்களில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களின் நிலையை உயர்த்த மத்திய அமைச்சரவை திட்டம்
- காங்கிரஸ் கட்சியை நடத்த ‘போபர்ஸ்’ லஞ்சப் பணம் தேவைப்படுவதாக ராஜீவ் காந்தி கருதினாரா ?
- கொள்ளைக்காரி பூலான்தேவி கொலை வழக்கில் கைதானவன் திகார் சிறையில் மரணம்
- தனித்தெலுங்கானா உருவாக்கப்பட்டால் ஆந்திராவில் ரத்த ஆறு பாயும்: முன்னாள் மந்திரி எச்சரிக்கை
- பஞ்சாப் மாநிலத்திற்கு காங்கிரஸ் தந்த பரிசு தீவிரவாதம் மட்டும் தான்: பிரகாஷ் சிங் பாதல் கடும் தாக்கு
- மத்திய பிரதேசம்: ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பரிதாப பலி
- கற்பழிப்பு தொடர்பாக கூறிய கருத்துகளுக்காக சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா வருத்தம் தெரிவித்தார்
- ‘ரத்தக்கறை படிந்த கை’: மோடியின் பேச்சுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
- சோனியா காந்திக்கு கோவில் கட்டுகிறார் தெலுங்கானா எம்.எல்.ஏ.
- டீ விற்றவரெல்லாம் பிரதமராக வர முடியாது: மோடி மீது சமாஜ்வாடி தலைவர் சாடல்
| பா.ஜனதாவில் சேரும் காங்கிரஸ் எம்.பி.: ராகுலை எதிர்த்து போட்டி Posted: 13 Nov 2013 11:24 PM PST உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சஞ்சய்சிங். இவரது சொந்த ஊர் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள அமேதி ஆகும். சஞ்சய்சிங் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை சுல்தான்பூரில் நடத்தாமல் பிறந்த ஊரான அமேதியில் நடத்தினார். இந்த பிறந்த நாள் விழாவில் பாரதீய ஜனதா தலைவர்கள் கலந்துகொண்டனர். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் சஞ்சய்சிங்கின் பிறந்த நாள் |
| தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமாக நடக்கிறது: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு Posted: 13 Nov 2013 09:59 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கனா மாநிலம் அமைக்கும் ஏற்பாட்டை மத்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது. தெலுங்கானா அமைப்பது தொடர்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது |
| உத்தரபிரதேசத்தில் நரேந்திரமோடி போட்டியிட 4 தொகுதிகளில் பா.ஜ.க. ஆய்வு Posted: 13 Nov 2013 09:56 PM PST பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் இப்போதே ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டன. இந்த நிலையில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தை விட்டு வேறு எங்கும் சென்று போட்டியிட வேண்டாம் |
| திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ.2 கோடியே 25 லட்சம் உண்டியல் வருமானம் Posted: 13 Nov 2013 09:16 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொகரம் பண்டிகை சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருந்தனர். நேற்று மட்டும் 55 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.2 கோடியே 25 லட்சம் உண்டியல் வருமானம் கிடைத்தது. இன்னும் 50 ஆயிரம் பக்தர்கள் |
| சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு Posted: 13 Nov 2013 09:05 PM PST புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1–ந்தேதி மண்டல பூஜை தொடங்கி 41 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டின் மண்டல காலம், நாளை மறுநாள் (16ந் தேதி) தொடங்குகிறது. இதை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் |
| பாராளுமன்ற தேர்தல்: தமிழகம் உள்பட 84 தொகுதிகளை ‘குறி’ வைக்கும் காங்கிரஸ் Posted: 13 Nov 2013 08:41 PM PST பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. கடந்த 2009–ம் ஆண்டு தேர்தல் முடிவுகளை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்து எந்தெந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் ஆய்வு செய்து வருகிறது. பாராளுமன்றத்தில் உள்ள 545 இடங்களில் 84 தொகுதிகளில் தனி தொகுதிகளாகும். கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 24 தனி தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. |
| Posted: 13 Nov 2013 08:30 PM PST கேரளாவில் மீண்டும் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் வெள்ளச் சேதமும் ஏற்பட்டது. தலைநகரான திருவனந்தபுரத்தில் தான் அதிக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருவனந்தபுரம் தம்பனூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியது |
| கர்நாடகத்தில் ஆம்னி பஸ் தீப்பிடித்து 7 பேர் கருகி சாவு Posted: 13 Nov 2013 08:08 PM PST பெங்களூரில் இருந்து நேற்று இரவு மும்பைக்கு ஒரு 'வால்வோ' ஆம்னி சொகுசு குளிர்சாதன பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 2 டிரைவர்கள், கிளீனர் உள்பட 52 பேர் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் பஸ் கர்நாடக மாநிலத்தின் வடபகுதியான ஹவேரியில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குமிளி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் எதிர் பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. அப் |
| Posted: 13 Nov 2013 08:01 PM PST சி.பி.ஐ.க்கு தன்னாட்சி வழங்குவது குறித்து ஆராய மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. அதைத்தொடர்ந்து சி.பி.ஐ.க்கு கூடுதல் அதிகாரங்கள், தன்னாட்சி அதிகாரம் வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசும், சி.பி.ஐ.யும் மாறி, மாறி பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்து வருகின்றன. அந்த வகையில், தன்னாட்சி வழங்கக் கோரும் சி.பி.ஐ., அதன் இயக்குனருக்கு மத்திய அரசு துறை செயலாளர் அந்தஸ்துக்குரிய |
| மேற்கு வங்காளத்தில் ரெயில் மோதி 6 யானைகள் பலி Posted: 13 Nov 2013 07:48 PM PST மேற்கு வங்காள மாநிலத்தில் சப்ராமாரி வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சரணாலய பகுதி வழியாக கவுகாத்தி செல்லும் பாசஞ்சர் ரெயில் நேற்று வேகமாக சென்று கொண்டு இருந்த போது, சுமார் 40 யானைகள் தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது ரெயில் மோதியதில் 6 யானைகள் உடல் நசுங்கி பரிதாபமாக செத்தன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்த இடத்துக்கு அதிகாரிகள் |
| கிராமப்புறங்களில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களின் நிலையை உயர்த்த மத்திய அமைச்சரவை திட்டம் Posted: 13 Nov 2013 07:31 PM PST கிராமப்புறங்களில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கான மூன்றாண்டு பட்டப்படிப்பு திட்டத்திற்கான ஒப்புதலை நேற்று மத்திய அமைச்சரவை அளித்தது.சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் பட்டம் பெறும் ஊழியர்கள்,துணை செவிலியர் மருத்துவச்சி மற்றும் மருத்துவர்களிடையே ஒரு பாலமாக செயல்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் மூலம் இந்தத் திட்டம் குறித்து பாராளுமன்றக் குழு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் எழுப்பியுள்ள ஆட்சேபணைகள் மத்திய |
| காங்கிரஸ் கட்சியை நடத்த ‘போபர்ஸ்’ லஞ்சப் பணம் தேவைப்படுவதாக ராஜீவ் காந்தி கருதினாரா ? Posted: 13 Nov 2013 02:07 PM PST 1986ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது ஸ்வீடன் நாட்டில் இருந்து 285 மில்லியன் டாலர் விலையில் போபர்ஸ் ரக பீரங்கிகளை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த இத்தாலிய ஆயுத தரகரான ஒட்டாலவியோ குவாத்ரோச்சி லஞ்சம் பெற்றதாகவும், அந்த தொகையில் சுமார் 64 கோடி |
| கொள்ளைக்காரி பூலான்தேவி கொலை வழக்கில் கைதானவன் திகார் சிறையில் மரணம் Posted: 13 Nov 2013 12:44 PM PST சம்பல் பள்ளத்தாக்கு பகுதியை ஒருகாலத்தில் கலக்கிய முன்னாள் கொள்ளைக்காரி பூலான்தேவி சிறையை விட்டு விடுதலை ஆனதும் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார். |
| தனித்தெலுங்கானா உருவாக்கப்பட்டால் ஆந்திராவில் ரத்த ஆறு பாயும்: முன்னாள் மந்திரி எச்சரிக்கை Posted: 13 Nov 2013 12:19 PM PST ஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தனித்தெலுங்கானாவுக்கு சீமாந்திரா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். |
| பஞ்சாப் மாநிலத்திற்கு காங்கிரஸ் தந்த பரிசு தீவிரவாதம் மட்டும் தான்: பிரகாஷ் சிங் பாதல் கடும் தாக்கு Posted: 13 Nov 2013 11:35 AM PST முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 31-10-1984 அன்று சீக்கிய மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து, நாடு முழுவதும் சீக்கியர்களை குறி வைத்து வன்முறை தாக்குதல்கள் நடந்தன. பலர் கொல்லப்பட்டனர். |
| மத்திய பிரதேசம்: ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பரிதாப பலி Posted: 13 Nov 2013 11:13 AM PST மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள வைன்கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மெகாடி மாவட்டத்தில் உள்ள தும்சர் கிராமத்தை சேர்ந்த 30 பேர் வைன்கங்கை ஆற்றின் வழியாக திரோரா மாவட்டம் நோக்கி நேற்று படகில் சென்றனர். |
| கற்பழிப்பு தொடர்பாக கூறிய கருத்துகளுக்காக சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா வருத்தம் தெரிவித்தார் Posted: 13 Nov 2013 09:30 AM PST கற்பழிப்பு மற்றும் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கூறிய கருத்துகளுக்காக சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா வருத்தம் தெரிவித்துள்ளார். டெல்லியில் சி.பி.ஐ.யின் பொன் விழா மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா சூதாட்டம், கற்பழிப்பு, லாட்டரி |
| ‘ரத்தக்கறை படிந்த கை’: மோடியின் பேச்சுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் Posted: 13 Nov 2013 09:07 AM PST சத்தீஸ்கரில் கடந்த வாரம் பேசிய பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ரத்தக்கறை படிந்த கையிலிருந்து சத்தீஸ்கரை காப்பாற்ற தாமரைக்கு வாக்களியுங்கள் என்று கூறினார். காங்கிரஸ் கட்சியின் சின்னமாக கை இருப்பதால், மோடியின் இந்த |
| சோனியா காந்திக்கு கோவில் கட்டுகிறார் தெலுங்கானா எம்.எல்.ஏ. Posted: 13 Nov 2013 07:45 AM PST ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பி.சங்கர்ராவ் அவரது தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கோவில் ஒன்று கட்டப்போவதாகக் கூறியுள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற |
| டீ விற்றவரெல்லாம் பிரதமராக வர முடியாது: மோடி மீது சமாஜ்வாடி தலைவர் சாடல் Posted: 13 Nov 2013 07:44 AM PST பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பீகார் தலைநகர் பாட்னா பொதுக்கூட்டத்தில் சமீபத்தில் பேசினார். அப்போது, ஏழைக்குடும்பத்தில் பிறந்த நான், வறுமையை பற்றி நன்கு அறிந்தவன். ரெயில் நிலையத்திலும், ஓடும் ரெயிலிலும் நான் டீ விற்று இருக்கிறேன். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |